டாக்ஸிக் ரைட்டர் என்றொரு வலைப்பதிவர். இந்த வருடம் ஜனவரி பிப்ரவரி மாதங்களில் இவர் பிளாக்கரில் உள்ள தன் வலைப்பதிவில் மும்பையை சேர்ந்த ஒரு கட்டுமான நிறுவனத்தை பற்றி சில குற்றச்சாட்டுகளை எழுதியிருந்தார். இந்த குற்றச்சாட்டுகளை அந்த கட்டுமான நிறுவனத்தால் பொறுத்து கொள்ள முடியவில்லை. அந்த வலைப்பதிவருக்கு எதிராக மான நஷ்ட ஈடு வழக்கு தொடுப்பதாக முடிவு செய்தார்கள். இதற்காக அந்த வலைப்பதிவர் யார் என்கிற தகவல்களை கூகுள் நிறுவனம் தங்களுக்கு தெரிவிக்க வேண்டுமென மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். நீதிபதிகளும் அந்த தகவல்களை சொல்லும்படி கூகுள் நிறுவனத்திற்கு தற்போது உத்தரவிட்டு இருக்கிறார்கள். இப்போது டாக்ஸிக் ரைட்டரின் வலைப்பதிவு ஏற்கெனவே கூகுள் நிறுவனத்தால் அழிக்கப்பட்டு விட்டது என்கிறார்கள். வலைப்பதிவு அழிக்கபட்டது பற்றிய உறுதியான தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இஸ்ரேலில் இதே போன்று ஒரு வழக்கு நடந்தது. ஒரு வலைப்பதிவர் தனது ஊர் முனசிபல் கவுன்சில் தேர்தலுக்கு நிற்பவர்களை பற்றிய குற்றச்சாட்டுகளை தனது வலைப்பதிவில் எழுதியிருக்கிறார். அந்த அரசியல்வாதிகள், சம்பந்தபட்ட வலைப்பதிவர் மீது தங்களது ஊர் நீதிமன்றத்தில் மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்தார்கள். இஸ்ரேல் நீதிமன்றம் அந்த வலைப்பதிவர் யார் என்கிற தகவல்களை கூகுள் நிறுவனத்தார் தெரிவிக்க வேண்டுமென கேட்டது. கூகுள் நிறுவனம் சார்பாக ஆஜரான வக்கீல்கள் வலைப்பதிவர் சம்பந்தமான தகவல்களை கொடுப்பது கருத்துரிமைக்கு எதிரானது என முதலில் வாதிட்டார்கள். இஸ்ரேல் நீதிபதி இந்த பிரச்சனையில் கிரிமினல் நடத்தை இருப்பதாக சந்தேகபடுவதாக சொன்னவுடன் கூகுள் மறுபேச்சு பேசாமல் தன் வலைப்பதிவரின் IP நம்பரை கொடுத்தது மட்டுமல்ல, அந்த வலைப்பதிவினை அழித்தும் விட்டது. இப்போது அந்த வலைப்பதிவின் முகவரியில் வேறு யாரும் பதிவு தொடங்க முடியாது என கூகுள் அறிவித்து இருக்கிறது.
சில நாட்களுக்கு முன்பு மகாராஸ்டிரா அரசியல் தலைவர் பால் தாக்கரேயினை கொல்வதாக இணையத்தில் கருத்து சொன்ன ஓர் ஆர்குட் உறுப்பினரை கேரளாவில் கைது செய்ய காவல்துறையினர் முயற்சித்தார்கள். அதோடு பால் தாக்கரேக்கு எதிராக ஆர்குட்டில் ஏற்படுத்தபட்டு இருக்கும் குழுக்களில் உள்ள உறுப்பினர்களை கண்காணிக்கவும் காவல்துறையினரால் முயற்சிகள் எடுக்கபட்டு வருகின்றன. கருத்தளவில் எனக்கு பால் தாக்கரேயின் மீது கோபம் இருந்து நான் என்றோ ஒரு நாள் பால் தாக்கரேயினை விமர்சிக்கும் குழுவில் உறுப்பினராகி பிறகு அதனை மறந்து விட்டால் கூட இன்று நான் காவல்துறையினரால் கைது செய்யபடும் ஆபத்து இருக்கிறது.
கடந்த ஆண்டு எகிப்தில் 22 வயது மாணவர் அப்துல் கரீம் தனது வலைப்பதிவில் மத உணர்வுகளை புண்படுத்தியதற்காகவும், எகிப்திய ஜனாதிபதியை பற்றி தவறான கருத்துகளை சொன்னதற்காகவும் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கபட்டார் என்பதை இன்னும் பலர் மறந்திருக்க மாட்டார்கள். எகிப்தில் அப்துல் மோனம் மகமூத் என்கிற வலைப்பதிவரும் தன் வலைப்பதிவில் எழுதிய விஷயத்திற்காக 46 நாட்கள் சிறையில் இருந்தார். சீனாவில் அரசாங்கத்தை பற்றி தவறாக எழுதும் வலைப்பதிவர்களின் பக்கங்களை தடை செய்து விட்டார்கள் என கேள்விபட்டிருக்கிறோம். சவுதி அரேபியாவில் தனது உண்மையான பெயரை வெளிப்படையாக சொல்லி வலைப்பதிவு நடத்திய ஃபகுத் அல் ஃபர்கான் கடந்த ஆண்டு மனித உரிமைகள் தினமான டிசம்பர் பத்தாம் நாள் கைது செய்யபட்டார்.
இங்கிலாந்தில் வாழும் 31 வயது பால் ரே என்பவர் லயன் ஹார்ட் என்னும் புனை பெயரில் வலைப்பதிவு எழுதி கொண்டு வந்தார். போதை பொருள் கள்ள வணிகம், இஸ்லாமிய அடிப்படைவாதம், காவல்துறை ஊழல் பற்றி அவரது வலைப்பதிவில் கருத்துகள் எழுதினார். இஸ்லாமியர்களுக்கு எதிரான இவரது எழுத்துகளினால் உண்டான பரபரப்பை அடுத்து இவருக்கு எதிராக இங்கிலாந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு நிருபிக்கபட்டால் அவருக்கு ஏழு வருடம் வரை தண்டனை கிடைக்கலாம். தற்போது அவர் அமெரிக்காவிற்கு குடி பெயர முடிவெடுத்திருக்கிறார்.
இப்போது எழும் கேளவி இது தான்? அரசியல்வாதிகளையோ பெரும் நிறுவனங்களையோ கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கும் தமிழ் வலைப்பதிவர்களுக்கு பாதுகாப்பு உண்டா? நம்மூர் பெருந்தலைகளுக்கு விமர்சனங்களை தாங்கி கொள்ளும் பக்குவம் கிடையாது என்பதை பத்திரிக்கையாளர்கள் அறிவார்கள். அப்படியிருக்க ஒரு குறிப்பிட்ட அமைச்சரை பற்றி, அவரது லஞ்ச லாவண்யத்தை பற்றி தக்க ஆதாரங்களுடன் ஒரு தமிழ் பதிவர் தனது வலைப்பதிவில் எழுதினார் என்றால் அவருக்கு பாதுகாப்பு உண்டா என்பது ஒரு பெரும் கேள்விக்குறி. கூகுள் போன்ற பெரும் இணைய நிறுவனங்கள் தங்கள் உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக அரசாங்கங்களிடம் மோதி தங்களது வியாபார வளத்தை கெடுத்து கொள்ள மாட்டார்கள் என்பதை நினைவில் கொள்க.
தமிழகத்தில் வலைப்பதிவர்களை கைது செய்வதும் அல்லது அவர்கள் மீது மானநஷ்ட வழக்குகளை போடுவதும் வருங்காலத்தில் நடப்பதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளன. அப்படி நடக்கும் பட்சத்தில் இது பற்றிய தெளிவான சட்டங்கள் இல்லை என்கிற விஷயத்தால் வலைப்பதிவருக்கு பாதகம் தான் நிகழும். தீவிரவாதிகள் என்னும் முத்திரை விழுந்து விட்டால் கேள்விகளே கேட்க முடியாது. முக்கியமாக விடுதலை புலிகள், நக்ஸ்லைட்கள், சிமி இயக்கத்தை பற்றி தொட்டும் தொடாமல் எழுதினாலே வலைப்பதிவர் மீது வட்டம் விழுவதற்கு வாய்ப்புகள் அதிகம். நீதி மன்றத்தில் நின்று ஜெயிப்பதல்ல விஷயம். காவல் நிலையம், நீதிமன்றம் என்று இழுத்தடிக்க படுவதே தண்டனை தான்.
வலைப்பதிவர்கள் அனைவரும் தாங்கள் எழுதுவது குறித்து முதலில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். கடும் விமர்சனங்களை எழுதுபவர்கள் ஆதாரபூர்வமாய் எழுதுவதோடு மட்டுமல்லாமல் அவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க யாராவது முனையும் பட்சத்தில் அதனை எப்படி எதிர்கொள்வது என தயாராய் இருக்க வேண்டும்.
மான நஷ்ட ஈடு வழக்கு
பேசப்படும் வார்த்தைகள், எழுதபடும் வார்த்தைகள், சைகையால் பரிமாறப்பட்ட தகவல் அல்லது தெளிவாய் புலப்படும் கருத்து பரிமாற்றம் - இவற்றின் மூலம் ஒரு நபருக்கு பாதிப்பு உண்டாக்கும் என தெரிந்தும் அவரது பெயருக்கு மாசு உண்டாக்குவது மான நஷ்ட ஈடு வழக்கிற்கு கீழ் வரும். எனினும் இதில் விதிவிலக்கு உண்டு
* பொது நன்மைக்காக ஒரு நபரை பற்றிய உண்மையை வெளியிடுவது.
* அரசு ஊழியர் தனது கடமையில் இருந்து தவறியதை பற்றிய உண்மைகளை வெளியிடுவது.
* பொதுவில் விவாதிக்கபடும் விஷயத்திற்காக ஒரு நபரை பற்றிய உண்மையை வெளியிடுவது.
* நீதிமன்றத்தால் ஊர்ஜிதமாக்கபட்ட விஷயங்களை வெளியிடுவது.
* பொது மக்களின் கருத்துகளை பெறுவதற்காக செய்யபடும் பொது காரியங்களை பற்றிய கருத்துகள்.
* சட்டப்படி ஒருவரது நடத்தை விமர்சிக்கும் உரிமை இருக்கும் பட்சத்தில் தவறில்லை.
* தனது பாதுகாப்பிற்கோ அல்லது நலனிற்காக மற்றொருவரின் உண்மைகளை வெளியிடுவது.
* ஆபத்தினை பற்றிய விழிப்புணர்வை உண்டாக்க செய்யபடும் சமூக நலனுக்கான காரியம்.
நான் வழக்கறிஞரோ சட்ட நிபுணரோ அல்ல. மேற்கோள் காட்டபட்டிருப்பது எனது புரிதலினால் எழுதியிருக்கும் சிறு விளக்கமே தவிர இந்த சட்டத்தை பற்றி முழுமையான விளக்கம் அல்ல. ஒருவரின் பெயருக்கு களங்கம் கற்பித்தது நிருபிக்கபட்டால் இரண்டு வருட சிறைதண்டனை கூட கிடைக்கலாம்.
தமிழ் வலைப்பதிவர்கள் மீது வழக்குகள், நடவடிக்கைகள் எடுக்கபட்டு பிறகு வலைப்பதிவுகளிலும் ஊடகங்களிலும் கண்டன குரல்களும் எழுந்து, அவற்றிற்கு பிறகு அரசு அதிகார வட்டங்களில் வலைப்பதிவருக்கான கருத்துரிமை பற்றிய விழிப்புணர்வு ஏற்படும் வரை காத்திருந்தால், அதற்குள் சிலரது தலைகள் உருண்டிருக்கும். வருவதற்கு முன்பே தேவை விழிப்புணர்வு.
Tuesday, August 19, 2008
Monday, August 18, 2008
எதற்கெடுத்தாலும் நேனோ டெக்னாலஜி என்று சொல்கிறார்கள்.
இப்போது எதற்கெடுத்தாலும் நேனோ டெக்னாலஜி என்று சொல்கிறார்கள். வாஷிங் மெஷின் வாங்கப் போனால் நேனோ டெக்னாலஜி, ஏசி வாங்கப் போனால் நேனோ டெக்னாலஜி என்று சொல்கிறார்கள். நேனோ என்றால் என்ன? அதில் என்ன சிறப்பு? இவ்வளவு பில்ட் அப் கொடுக்கிறார்களே, உண்மையிலேயே அதில் அவ்வளவு பயன் இருக்கிறதா?
நேனோ என்பது நீளத்தை அளக்கும் ஒரு அளவு கோல். எப்படி நாம் ஊருக்கு ஊர் இருக்கும் தொலைவை கிலோ மீட்டரிலும், துணியின் நீளத்தை மீட்டரிலும், நகத்தின் தடிமனை மில்லி மீட்டரிலும் சொல்கிறோமோ, அதைப் போல மிகச் சிறிய அளவை நேனோ மீட்டரில் சொல்லலாம். ஒரு மி.மீ.இல் ஆயிரத்தில் ஒரு பங்கை, மைக்ரோ மீட்டர் அல்லத் மைக்ரான் என்று சொல்லலாம். ஒரு மைக்ரோ மீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்கை நேனோ மீட்டர் (நே.மீ.) என்று சொல்லலாம். நேனோ மீட்டர் அளவில் இருக்கும் பொருள்களை வைத்து செய்யும் தொழில் நுட்பத்தை சுருக்கமாக நேனோ டெக்னாலஜி என்று சொல்கிறார்கள்.
நேனோ மீட்டர் அளவுகளில் இருக்கும் பொருள்கள், நம் கண்ணுக்கு தெரியாது. நம் கண்களுக்கு தெரியும் ஒளியின் அலை நீளம் சுமார் 400 முதல் 700 நே.மீ. ஆகும். தற்போது அறிவியல் வழக்கில் ஒரு பொருளின் எந்த அளவாவது (நீளம், அல்லது அகலம் அல்லது தடிமன்) 100 நே.மீ.க்கு குறைந்து இருந்தால், அதை நேனோ அளவு உள்ள பொருள் (nano size material) என்று சொல்லலாம் என்று பலர் கருதுகிறார்கள். சிலர், ஒரு பொருளின் எல்லா அளவுகளுமே 10 நே.மீ.க்கு குறைவாக இருந்தால்தான் அதை நே.மீ. அளவு உள்ள பொருள் என்று சொல்லலாம் என்கிறார்கள். மார்கெட்டிங்கில் இருக்கும் மக்கள், முடிந்த வரை தங்கள் product எல்லாவற்றையுமே நேனோ என்று சொல்லத்தான் விரும்புகிறார்கள்.
நேனோ என்ற அளவானதற்கு என்ன எடுத்துக்காட்டு கொடுக்க முடியும்? நம் கண்ணுக்கு புலப்படாத பாக்டீரியா போன்ற உயிரினங்களே மைக்ரோ மீட்டர் அளவுக்கு (அதாவது நே.மீ. போல் ஆயிரம் பங்கு) இருக்கிறது. அதனால் தினசரி வாழ்க்கையில் நாம் பார்க்கும் அல்லது உணரும் எந்தப் பொருளுமே நேனோ மீட்டர் அளவில் இருக்காது.
ஒரு அணுவின் அளவானது சுமார் 0.1 நே.மீ. இருக்கும். பல அணுக்கள் சேர்ந்த ‘அணுக் கூட்டம்' நே.மீ. அளவு இருக்கும். சில நூறு அல்லது ஆயிரம் அணுக்கள் சேர்ந்தால்தான் அது நே.மீ.அளவு வரும். பொதுவாக காற்றில் இருக்கும் மூலக்கூறுகள் அனைத்தும் நேனோ மீட்டர் அளவில் தான் (அல்லது அதை விடக் குறைவாக) இருக்கிறது. அந்த வகையில் பார்த்தால், உலகு எங்கும் நேனோ டெக்னாலஜி அளவில் இருக்கும் பொருள் (ஆக்சிஜன்) தான் நாம் உயிர் வாழவே உதவுகிறது. அதை நேனோ டெக்னாலஜி என்று சொல்லலாமா?
ஆனால், திடப் பொருளாக நே.மீ.அளவில் இருக்கும் பொருள்களைத்தான் நாம் நேனோ டெக்னாலஜி என்று சொல்வதில் பயன்படுத்துகிறோம். ஒரு பொருள், மிகச் சிறிய துகளாக இருக்கும் பொழுது அதன் மேல் பரப்பளவு (surface area) மிக அதிகமாகும். உதாரணமாக, ஒரு செ.மீ. அகலம் இருக்கும் ஒரு cube எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பரப்பளவு 6 சதுர செ.மீ. ஆகும். இதை நான்கு சம பாகங்களாகப் பிரித்தால்? அவற்றின் மொத்த பருமன் (total volume) அதே அளவு இருக்கும். ஆனால் பரப்பளவு அதிகமாகும். இப்படி மறுபடியும் மறுபடியும் பிரித்தால், அதன் பரப்பளவு மிக அதிகமாகும்.
இப்படி பரப்பளவு அதிகமாவதால் சில பயன்கள் உண்டு. வினை ஊக்கியாக செயல்படும் பொருள்களின் பரப்பளவு அதிகமானால், அதன் வினை ஊக்கும் திறன் அதிகரிக்கும். இந்த வகையில் நேனோ பொருளின் பயன் அதிகம்.
ஆனால், உண்மையில் நேனோ பொருளில் என்ன சிறப்பு? ஒரு அணுவானது தனியாக இருக்கும் பொழுது அதன் பண்புகள் வேறு (atomic properties). அவை கோடிக்கணக்கான அணுக்களுடன் சேர்ந்து இருக்கும் பொழுது அதன் பண்புகள் வேறு (bulk properties). இவை சில நூறு அணுக்கள் அல்லது சில ஆயிரம் அணுக்கள் இருக்கும்பொழுது அதன் பண்பு முற்றிலும் மாறியதாக (அதாவது ஒரு அணுவை போலவும் இருக்காது, கோடிக்கணக்கான அணுக்களைப் போலவும் இருக்காது) இருக்கும். அப்படி மாறி இருக்கும் பண்பு நமக்கு பயன் உள்ளதாக இருந்தால், அது நேனோ டெக்னாலஜி என்று சொல்லலாம்.
எடுத்துக் காட்டாக, தங்கம் ஒரு அணுவாக இருந்தால் அதற்கு நிறம் என்று ஒன்றும் கிடையாது. (ஆவி நிலையில் தங்கம் இருந்தால், அது கண்ணுக்கு தெரியும் ஒளியை உறிஞ்சாது). அதுவே நேனோ அளவில் இருந்தால், அது பச்சை நிறமாக இருக்கும். மி.மீ. அளவில் இருந்தால், அது ஒளியை ஊடுருவி செல்ல விடாது. இங்கு தங்கத்தின் நிறம் பச்சையாக இருந்தால் என்ன பயன்? குறிப்பாக ஒன்றும் இல்லை என்று சொன்னால், “நான் தங்கத்தை நேனோ டெக்னாலஜியில் தயாரித்து இருக்கிறேன்” என்று தண்டோரா போடுவது (உண்மை என்றாலும், வாங்குபவர்க்கு பயனற்றது என்பதால்) ஏமாற்று வேலைதான்.
சில சமயங்களில் சில உலோகங்களால் பாக்டீரியா மற்றும் பல கிருமிகள் கொல்லப்படும். சில்வர் நேனோ என்று சொல்லப்படுவது இந்த வகை. (ஆனால் ஒவ்வொரு நிறுவனமும் இதை ஆராய்சி செய்து ”தங்கள் சாதனத்தில் இவை பயன் தருகின்றனவா?” என்று பார்த்து சொல்கின்றனவா, இல்லை சும்மா சொல்கின்றனவா என்று தெரியவில்லை). சில்வருடன் தாமிரம் (காப்பர்) சேர்த்தால் இன்னமும் நல்லது. வெள்ளியால் சில வகை கிருமிகள் கொல்லப்படும். தாமிரத்தால் இன்னும் சில வகை கொல்லப்படும். இரண்டும் சேர்ந்தால் இந்த இரண்டு வகை தவிர மூன்றாவதாக சில கிருமிகள் கொல்லப் படும். ஏனென்றால், இந்த மூன்றாம் வகை கிருமிகளின் ‘தோலை' திறக்கும் திறன் தாமிரத்திற்கு உண்டு. ஆனால் அவற்றின் உள்ளே தாமிரத்தால் பாதிப்பு இல்லை. வெறும் தாமிரம் மட்டும் இருந்தால், தோல் பாதிக்கப் படும். பிறகு கிருமி அதை சரி செய்து கொள்ளும். வெள்ளியினால், தோலை பாதிக்கவோ ஊடுருவி செல்லவோ முடியாது. ஆனால், உள்ளே சென்று விட்டால், கிருமியை கொல்ல முடியும். தாமிரமும் வெள்ளியும் சேர்ந்து இருந்தால்தான் இந்த வகை கிருமிகளை கொல்ல முடியும்.
சில சமயங்களில் நேனோ வகைப் பொருள்கள் தயார் செய்யப் படும். ஆனால், அவற்றில் 'நேனோப் பண்புகள்' நமக்கு பயன் உள்ளதாக இருப்பதில்லை. சொல்லப்போனால் தொல்லையாகத்தான் இருக்கிறது. இந்த இடங்களில் ‘நாங்கள் நேனோ டெக்னாலஜியில் வேலை செய்கிறோம்' என்று சொல்வது விவரம் தெரியாதவர்களுக்கு தவறான கருத்தை சொல்வதாக நான் நினைக்கிறேன். எடுத்துக் காட்டாக, சிலிக்கன் சில்லு செய்யும் பொழுது, இப்போது 65 நே.மீ. மற்றும் 35 நே.மீ. அளவில் டிரான்ஸிஸ்டர்கள் செய்கிறார்கள். இதனால், டிரான்ஸிஸ்டரில் பெரிய முன்னேற்றம் இல்லை. அளவு சிறிதாக இருந்தால், ஒரு சில்லில் நிறைய டிரான்ஸிஸ்டர்கள் வைக்க முடியும். அவ்வளவே. நேனோ அளவில் இருப்பதால் இதற்கு சிறப்பு எதுவும் கிடையாது. இன்னம் சொல்லப் போனால், இவற்றை இணைக்கும் கம்பிகள் இவ்வளவு சிறிதாக செய்யும் பொழுது இவற்றின் நேனோ பண்புகளால் எதிர்பாராத பாதிப்புகள் தான் வருகின்றன.
இந்த மாதிரி கம்பெனிகள் ‘நாங்கள் நேனோ டெக்னாலஜியில் செய்கிறோம்” என்று புதிய விஷயத்தைப் போல சொல்வது எனக்கு சரி என்று படவில்லை. அது சரி என்றால், ‘நாங்கள் நேனோவை விட சிறிய அளவில் இருக்கும் ஆக்சிஜனை சுவாசித்து, அதைப் போலவே சிறிய அளவில் இருக்கும் கார்பன் டை ஆக்சைடை வெளி விடுகிறோம். இதை தினமும், தூங்கும் போது கூட செய்கிறோம்” என்று நாம் ஒவ்வொருவரும் சொல்லிக் கொள்ளலாம்.
நேனோ டெக்னாலஜி என்று ஒருவர் சொன்னால், “இதை நேனோவில் செய்யாமல், மைக்ரானில் செய்தால், அல்லது மி.மீ.இல் செய்தால் என்ன மாற்றம் இருக்கும்?” என்று கேளுங்கள். அந்த மாற்றம் எளிதில் கணிக்கக் கூடியது என்றால், இந்த டெக்னாலஜி ஒன்றும் பெரியது அல்ல. உதாரணமாக, நே.மீ. இருக்கும் பொருளில் பரப்பளவு அதிகமாக இருக்கும். அந்தப் பொருள் சிறிய அளவில் இருப்பதால், அதன் மொத்த அளவு குறைவாக இருக்கும். இவை இரண்டும் தவிர வேறு வித்தியாசமான, பயனுள்ள பண்பு இருந்தால்தான் அது உண்மையிலேயே நேனோ டெக்னாலஜி. இல்லாவிட்டால் வெறும் மார்கெடிங் தான். இந்த வகையில் ஏசி, வாசிங் மெஷின் இவற்றில் இருக்கும் சில்வர் நேனோ கூட உண்மையிலேயே பயன் உள்ளதா என்று எனக்கு தெரியவில்லை. இவற்றை மைக்ரான் அளவில் செய்தாலும் கிருமிகள் சாகும் என்றுதான் நினைக்கிறேன். மைக்ரான் அளவில் செய்தால் பொருள் செலவு கொஞ்சம் அதிகம், அவ்வளவே.
சில பொருள்கள், நேனோ அளவில் இருக்கும் பொழுது அவற்றிற்கு காந்தப் பண்புகள் வருகின்றன. பெரிய அளவிலிருக்கும் பொழுது காந்தப் பண்புகள் இருப்பதில்லை. இவற்றை குவாண்டம் இயற்பியல் விளக்குகிறது. இம்மாதிரி பொருள்களை நேனோ என்று சொல்வதில் தவறில்லை.

இமெயில் மோசடிக்காரர்கள் - நெட் பேங்க்கிங் மோசடி
சென்னையைச் சேர்ந்த னிவாசனின் வீட்டுக் கதவுகள் மூடிக்கிடக்கின்றன... அடித்துக்கொண்டேயிருக்கும் தொலைபேசியை வெறித்துப் பார்த்துக் கொண்டேயிருக்கிறார்... விடாது ஒலித்தால் வெறுத்துப் போய் எடுத்து, 'எதுவும் கேட்காதீங்க... நொந்து வெந்து போயிருக்கேன்... என்ன விட்டுடுங்க...' என்று குரல் கம்மப் பேசிவிட்டு தொடர்பைத் துண்டிக்கிறார். கண்ணிமைக்கும் நேரத்தில் 21 லட்ச ரூபாயை இழந்துவிட்டு நின்றால் யாரால்தான் பேசமுடியும்! கம்ப்யூட்டரின் மெயின் இணைப்புவரை எல்லாவற்றையும் துண்டித்துவிட்டார். அந்த வழியாகத்தானே கொள்ளையர்கள் அவருடைய பணத்தை அள்ளிச் சென்றுவிட்டார்கள்.
'உங்கள் வங்கிக் கணக்கை அப்டேட் செய்யவேண்டும்... இந்த பட்டனை க்ளிக் செய்யுங்கள்' என்று ஒற்றை வரி இமெயிலாக வந்த தகவலை அடுத்து, னிவாசன் அந்த பட்டனை க்ளிக் செய்ய, அவருடைய வங்கிக் கணக்கு பற்றிய மொத்தத் தகவலும் களவாடப்பட்டுவிட்டது.
அதைத் தொடர்ந்து அவர் தன்னுடைய வங்கிக் கணக்கை செக் பண்ணுவதற்காக முயற்சித்தபோது பாஸ்வேர்டு தவறு என்ற தகவலே தொடர்ந்து வந்திருக்கிறது. வங்கிக்குத் தொலைபேசி மூலமாகக் கேட்டபோதுதான் அவருடைய வங்கிக் கணக்கில் இருந்த 21 லட்ச ரூபாய் மும்பையில் உள்ள ஒரு வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டுவிட்ட விபரீதம் தெரிய வந்தது.
னிவாசன் போலீஸில் புகார் கொடுக்க... விசாரணை ஆரம்பமாகியிருக்கிறது. மும்பையில் உள்ள வங்கிக் கணக்கு ஒரு பெண்ணின் பெயரில் இருக்கிறது. கடந்த சில நாட்களாகவே அந்தப் பெண்மணி தொடர்ந்து வங்கிக்கு வந்து, 'ஒரு நிலம் வாங்குவதற்காக சென்னையில் இருந்து பெரிய தொகையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்... கிரெடிட் ஆகிவிட்டதா?' என்று கேட்டுக்கொண்டே இருந்திருக்கிறார். அதனால், கிரெடிட் ஆனவுடன் அவர் பணத்தை எடுத்துச் சென்றது யாருக்கும் உறுத்தலாக இல்லை. னிவாசனுக்கு அந்த இமெயில் ஆஸ்திரேலியாவில் இருந்து அனுப்பப்பட்டிருக்கிறது.
இதுபோன்ற அடிப்படையான தகவல்களைத் திரட்டியிருக்கும் காவல் துறை, இந்தப் புகாரை ஊன்றிக் கவனித்துக் கொண்டிருக்கிறது. சைபர் க்ரைம் பிரிவின் உதவியோடு விசாரணையில் இறங்கியிருக்கும் சென்னை மத்திய குற்றப் பிரிவின் (வங்கி மோசடி தடுப்புப் பிரிவு) உதவி கமிஷனர் பன்னீர் செல்வம், இவ்விவகாரம் குறித்து விரிவாகப் பேசினார்.
''நெட்பேங்க்கிங் மாதிரியான விஷயங்கள் நம்முடைய வசதிக்காகத்தான் இருக்கின்றன. ஆனால், அதுபோன்ற வசதிகளைப் பயன்படுத்தும்போது ரொம்பவே கவனமாக இருக்கணும். இப்போ 21 லட்சத்தை இழந்துட்டு நிற்கும் னிவாசன் ஒரு ரிட்டயர்ட் வங்கி அதிகாரி. அவருக்கே ஸ்லிப் ஆகிடுச்சு.
அவர் கணக்கு வெச்சிருக்கறது 'பஞ்சாப் நேஷனல் வங்கி'யில். அந்த வில்லங்கமான மெயில் வந்தது 'அட்மின் அட் ஐ.சி.ஐ.சி.ஐ. காம்' (admin@ICICIbank.com) என்கிற மெயில் ஐ.டியில் இருந்து. நம்முடைய வங்கிக் கணக்கை எதற்காக இன்னொரு பேங்க் நிர்வாகம் கேட்கிறதுனு ஒருகணம் யோசிச்சிருந்தா... அது போலியான இமெயில்னு புரிஞ்சிருக்கும். அவசரத்தில் பலர் இதையெல்லாம் கவனிக்கறதில்லை'' என்றார்.
''அவர்கள் எப்படி னிவாசனைக் குறிவைத்தார்கள்?'' என்று கேட்டபோது,
''பொதுவாக, இமெயில் மோசடிக்காரர்கள், எந்த ஒரு தனிநபரையும் குறிவைத்துச் செயல்படுவதில்லை. முதல்கட்டமாக ஆயிரக்கணக்கான இமெயில் முகவரிகளுக்கு ஒரு கடிதத்தை அனுப்புகிறார்கள். அதில் எந்த மீன் பதில் போட்டு சிக்குகிறதோ அதை வலையில் வீழ்த்தி விடுவார்கள். இதுதான் டெக்னிக். அதனால், நாம் இதுபோன்ற இமெயில்களுக்கு பதில் சொல்லாமல் டெலிட் செய்தாலே சிக்கலைத் தவிர்த்துவிடலாம்.
முன்பு, அடுத்தடுத்து கேள்விகள் கேட்டு கடைசியாக பாஸ்வேர்டு போன்ற முக்கியமான தகவலைக் கேட்டு ஏமாற்றினார்கள். இப்போது விஞ்ஞான வளர்ச்சியைப் பயன்படுத்தி, ஒரே க்ளிக்கில் அத்தனை தகவல்களையும் சுருட்டி விடுகிறார்கள். இதைப் பயன்படுத்துபவர்கள் படித்தவர்கள்தான் என்றாலும், ஏமாற்று வேலை மும்முரமாக நடக்கிறது'' என்றார்.
இந்த மோசடியில் ஈடுபடும் சர்வதேச கும்பலின் இலக்கு பெரும்பாலும் இந்தியர்கள்தான். இங்குள்ள பணத்தை நேரடியாக வெளிநாட்டுக்குக் கொண்டு செல்லமுடியாது என்பதால், இந்தியாவில் உள்ள சிலரை அதற்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
அதாவது, மிகச் சுலபமாக வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்க ஒரு வழி என்று சொல்லி அவர்களுடைய வங்கிக் கணக்கை வாங்கிக் கொள்கிறார்கள். ஏமாற்றி சுருட்டப்படும் தொகை அந்த வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். அவர்கள் சிறிய சதவிகிதத்தை கமிஷனாக எடுத்துக்கொண்டு மீதியை வேறு கணக்கிலோ அல்லது நேரடியாகவோ கொடுத்துவிட வேண்டும். ஏதாவது சிக்கலாகி வழக்கு அதுஇதுவென்று வந்தால் ஏமாற்றுக் கும்பல் தப்பிவிடும். கமிஷனுக்கு ஆசைப்பட்டு கணக்கு எண்ணைக் கொடுத்தவர் மாட்டிக் கொள்வார்.
சென்னையைச் சேர்ந்த சந்திரசேகரன் சொல்லும் விஷயம் அதற்குச் சரியான உதாரணம்...
''என் அண்ணன் ராஜ்மோகனின் வங்கிக் கணக்குக்கான நெட்பேங்க்கிங் பாஸ்வேர்டை திருடிய இமெயில் மோசடிக் கும்பல், 12 லட்ச ரூபாயை வேறொரு கணக்குக்கு மாற்றிவிட்டார்கள். என் அண்ணன் சென்னை போலீஸூக்கு புகார் கொடுக்க, அவர்களும் விசாரணையில் இறங்கினார்கள்.
மும்பையில் உள்ள ஒரு ஆப்டிகல்ஸின் கணக்கில் அந்தப் பணம் மாற்றப்பட்டது தெரிந்து போலீஸ் அங்கே போனது. அந்த ஆப்டிகல்ஸ் உரிமையாளருக்கு எதுவும் தெரியவில்லை. அதன்பிறகு விசாரித்தபோது அந்தக் கடையின் மேனேஜர் கமிஷனுக்கு ஆசைப்பட்டு அந்தக் கணக்கு எண்ணை மோசடி கும்பலுக்குக் கொடுத்திருக்கிறார். கடைசியில், அந்த மேனேஜருக்காகக் கடையைச் சேர்ந்தவர்கள் பணத்தைக் கட்டினார்கள்'' என்றார்.
விஞ்ஞானம் நமக்கு புதிதுபுதிதாக பல வசதிகளைக் கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறது. கூடவே, மோசடிப் பேர்வழிகள் அதற்கான குறுக்கு வழிகளையும் கண்டுபிடித்துக்கொண்டே இருக்கிறார்கள். நாம்தான் உஷாராக இருக்கவேண்டும்
இன்னொரு சீட்டிங்!
நெட் பேங்க்கிங் மோசடியைப் போலவே இன்னொரு இமெயில் மோசடி இருக்கிறது. அது உருக்கமான கதைகளைச் சொல்லியோ, அல்லது அதிரடி பரிசுப் போட்டியைச் சொல்லியோ ஏமாற்றுவது.
'அமெரிக்காவில் 300 கோடி டாலர் சொத்து இருக்கிறது. அதை க்ளைம் செய்ய யாருமில்லை. உங்கள் பேர், இனிஷியல் உட்பட எல்லாமே அந்தச் சொத்தின் உரிமையாளருடையதைப் போல இருக்கிறது. அந்தச் சொத்துக்களை உங்கள் பெயரில் மாற்றிவிடலாம். அது வக்கீலாக இருக்கும் என் பொறுப்பு. புதிய டாகுமென்ட்டுகளை எழுதும் செலவு மட்டும்தான்... 1,000 டாலர் அனுப்புங்கள்' என்று மெயில் வரும். அமெரிக்காவில் சுப்பிரமணியோ, கோவிந்தசாமியோ இருக்க வாய்ப்பு இருக்கா என்று யாரும் யோசிப்பதில்லை. 300 கோடி டாலர் யோசிக்க விடாது!
ஆறு மாதம் முன்பு சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு லாட்டரியில் 200 கோடி டாலர் பரிசு விழுந்திருப்பதாகவும், அதற்கு இன்கம்டேக்ஸ், கஸ்டம்ஸ் டியூட்டி ஆகியவற்றைக் கட்டவேண்டும் என்று சொல்லி பணம் கேட்டிருக்கிறது ஒரு கும்பல். அவரும் அனுப்பியிருக்கிறார்.
அதன்பிறகும் விடாமல் அது இதுவென்று சொல்லி சுமார் 18 லட்ச ரூபாய்வரை கறந்திருக்கிறார்கள். கடைசியாக உங்கள் பணமெல்லாம் கன்டெய்னரில் அனுப்பப்பட்டு மும்பையில் இருக்கிறது. கஸ்டம்ஸ் க்ளியரன்ஸூக்காக 3 லட்ச ரூபாய் வேண்டும் என்று கேட்டு வாங்கியிருக்கிறார்கள். எல்லா பணத்தையும் இழந்த பிறகு போலீஸூக்குப் போயிருக்கிறார் அந்தப் பெண்!
நன்றி: நாணயம் விகடன்

Sunday, August 17, 2008
நடிகர்கள், நடிகைகள் ,வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
இதோ உங்களுக்காக நடிகர்களின் சம்பள பட்டியல் முழு விவரம்:-
ரஜினிகாந்த் - ரூ.25 முதல் ரூ.40 கோடி வரை
கமல்ஹாசன் - ரூ.10 கோடி
விஜயகாந்த் - ரூ.4 கோடி
சரத்குமார் - ரூ.2 கோடி
அஜித்குமார் - ரூ.10 கோடி
விஜய் - ரூ.8 கோடி
விக்ரம் - ரூ.6 கோடி
விஷால் - ரூ.6 கோடி
சூர்யா - ரூ.6 கோடி
சிம்பு - ரூ. 4 கோடி
தனுஷ் - ரூ.4 கோடி
ஆர்யா - ரூ.3 கோடி
கார்த்தி - ரூ.3 கோடி
ஜெயம் ரவி - ரூ.3 கோடி
மாதவன் - ரூ.1.5 கோடி
சத்யராஜ் - ரூ.75 லட்சம்
பிரசாந்த் - ரூ.50 லட்சம்
பசுபதி - ரூ.30 லட்சம்
மற்ற நடிகர்கள் ரூ.10 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை சம்பளமாக பெறுகிறார்கள்.
இதோ உங்களுக்காக நடிகைகளின் சம்பள பட்டியல்...!
நயன்தாரா : ஒரு கோடியே 25 லட்சம்
த்ரிஷா : 1 கோடி
அசின் : 85 லட்சம்
ஸ்ரேயா : 50 லட்சம்
ஜெனிலியா : 50 லட்சம்
ப்ரியாமணி : 50 லட்சம்
பாவனா : 50 லட்சம்
நமீதா : 30 முதல் 40 லட்சம் வரை
சினேகா : 35 லட்சம்
பத்மப்ரியா : 30 லட்சம்
பூஜா : 30 லட்சம்
நவ்யா நாயர் : 25 லட்சம்
சந்தியா : 25 லட்சம்
ஸ்னிக்தா : 25 லட்சம்
இவர்கள் தவிர மற்ற நடிகைகளுக்கு 5 முதல் 20 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

சைனா மொபைல் போன்களை உபயோகம் செய்யலாமா?
சைனா மொபைல் போன்களை உபயோகம் செய்யலாமா?
தற்போது சைனா மொபைல்போன்கள் வந்து மார்கெட்களில் சக்கைப்போடு போட்டுக் கொண்டுள்ளன.
அவற்றில் இரண்டு சிம்கார்டுகள் (தமிழில் என்ன வார்த்தை?) போடும் வசதி, மேற்கொண்டு இலவச பேட்டரி ஒன்று, ஆடியோ, வீடியோ, கேமெரா, SD கார்டு மற்றும் பிராண்டடு போன்களில் உள்ள அனைத்துவசதிகளும் உள்ளது
மேலும் புளூடூத்திலிருந்து இணைய வசதி வீடியோ சாட் வரை மேலும் டீவி பார்க்கும் வசதி உள்பட உள்ளது என்றும் விரைவில் பாத்ரூம் மற்றும் டாய்லேட் வசதிகள் கூட சைனா போன்களில் வந்துவிடும் என்கிறார்கள்
ஆனால் ஒரு சாரார் மேற்படி சைனா போன்கள் ஒரு தடவை கீழே போட்டால் சுக்குநூறாக உடைந்துவிடும் என்கிறார்கள். பேட்டரி சீக்கிரம் போய்விடும் அதற்குத்தான் இன்னொரு பேட்டரியும் தருகிறார்கள் எனக்கூறுகின்றனர்.
மேலும் ஒரு சிலர் அந்த போன்களில் கதிரியக்கம் அதிகமாக உள்ளது. அதனால் காதில் உள்ள ஜவ்வு அறையில் உள்ள காது கேட்பதற்கு மிகவும் தேவையான மெல்லிய உணர்வு இழைகளை எரித்துவிடும் என்றும் அதனால் காது கேட்கும் திறன் முற்றிலும் இழந்து விடுவார்கள் என்றும் அதற்கு மருத்துவத்தில் சிகைச்சையே இல்லை என்றும் கூறுகின்றனர்.
இது எந்த அளவு உண்மை என்றும் தெரியவில்லை...
ஒருவேளை சைனாக்காரர்கள் இந்தியா நாடு வல்லரசு ஆக முடியாமல் தடுக்க தனது போன்களை குறைந்தவிலையில் விற்று இந்தியர்களை செவிடர்களாக்க முயற்சிக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.
ஆனால் இதற்காக விற்பனை ஒன்றும் குறைந்ததாக தெரியவில்லை. விற்பனை அதிகரித்துக்கொண்டுதான் உள்ளது.
அனைத்துவசதி கொண்ட கம்பெனீ போன் ஒன்று வாங்கும் விலையில் இப்போன்களை இரண்டுக்கும் மேற்பட்ட போன்களை வாங்கலாம் எனக் கூறுகின்றனர்.
இந்த விசயமெல்லாம் இப்போது எதற்கு என்று கேட்கிறிர்களா? எனக்கும் ஒரு சைனா போன் வாங்கும் ஆசை வந்து கொழுந்துவிட்டு எரிகிறது.... அதை வாங்கி எனது காதும் கருகிவிடுமோ என அச்சம் ஏற்பட்டுவிட்டது....
ஆகவே மேற்படி சைனா போன்களை வாங்கி உபயோகித்து, பயனடைந்து, அடுத்தவர்களை வயிரு எரிய வைத்துகொண்டு,அல்லது அதனால் அவஸ்தைப்பட்டு கொண்டு இருப்பவர்கள் தங்களது அனுபவங்களை பின்னுட்டமாகவோ அல்லது பதிவாகவோ கூறினால் அதை வைத்து என்னைப்போல் பலரும் பயனும் அடைவார்கள்.
உள்ளதை கூறுங்கள்... யான் பெற்ற அவஸ்தை இவ்வையகம் பெறட்டும் என எண்ணம் வேண்டாம்

Saturday, August 16, 2008
காமெடி நடிகர் வடிவேலுக்கு ஒரு நாள் சம்பளம் எட்டு லட்சம் ரூபாய்.
காமெடி நடிகர் வடிவேலுக்கு ஒரு நாள் சம்பளம் எட்டு லட்சம் ரூபாய். காமெடி இல்லீங்க...! உண்மைதான்.
இதோ உங்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமெடி நடிகர்கள் வாங்கும் சம்பள விவரம்:
நடிகர், நடிகைகளைப் பொறுத்தவரை ஒரு படத்துக்கு இவ்வளவு சம்பளம் என்று ஒப்பந்தமாவார்கள். ஆனால் காமெடி நடிகர்கள் ஒரு நாளைக்கு இவ்வளவு என்று சம்பளத்தை நிர்ணயிக்கிறார்கள். எந்த வகையில் இன்றைய தேதியில் முன்னணியில் இருப்பவர் நடிகர் வைகைப்புயல் வடிவேலு. அவர் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? 8 லட்சம் ரூபாய். நண்பர்களே...! இது காமெடி இல்லை. நிஜம்தான்.
வடிவேலுக்கு அடுத்தபடியாக காமெடியில் அதிக சம்பளம் வாங்குபவராக இருப்பவர் சின்னக் கலைவாணர் விவேக். அவர் ஒரு படத்துக்கு ரூ.3 முதல் 4 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறார்.
சந்தானம், கஞ்சா கருப்பு ஆகியோர் ரூ.1 லட்சம் வரை சம்பளம் கேட்கிறார்கள்.
கவுண்டமணி, செந்தில் இப்போது படங்களில் நடிப்பதில்லை. அவர்கள் கரகாட்டக்காரன் போன்ற காமெடியால் ஹிட் ஆன படங்களில் வாங்கிய சம்பளம் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரைதான்.
வில்லன் நடிகர் ஒருவர் ஒரு நாளைக்கு ரூ.10 லட்சம் சம்பளம் வாங்குகிறார்.

ரஜினிகாந்த் சம்பளமாக வாங்கிய தொகை திருப்பிக் கொடுக்க முடிவு
குசேலன் படத்தில் நடிப்பதற்காக சம்பளமாக வாங்கிய தொகையில் ரூ.10 முதல் 15 கோடிகள் வரை திருப்பிக் கொடுக்க ரஜினிகாந்த் முடிவு செய்திருப்பதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் நடிகராகவே நடித்து வெளியான படம் குசேலன். ஆகஸ்ட் 1ம் தேதி வெளியான இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் போர்க்கொடி தூக்கத் தொடங்கியுள்ளனர். ரஜினிகாந்த் படத்தில் ஒரு மணி நேரமே வருவதால் ரசிகர்கள் குசேலனை பார்க்க வரவில்லை என்றும் குற்றம் சாட்டினார்கள். இதையெல்லாம் தெரிந்துதானே கோடிக்கணக்கில் பணம் கொடுத்து குசேலன் படத்தை வாங்கினீர்கள் என்று தயாரிப்பாளர் தரப்பில் இருந்து பதில் வந்ததால், படம் வெளியாகும் நேரத்தில் ரஜினிகாந்த் கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்டதுதான் குசேலன் ஓடாதற்கு காரணம் என்று ரஜினிகாந்த் மீது பழியை தூக்கிப் போட்டார்கள் தியேட்டர்காரர்களும், விநியோகஸ்தரும்.
இந்த தகவல் அமெரிக்காவில் ரோபோ சூட்டிங்கில் இருந்த ரஜினிகாந்துக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் அமெரிக்காவில் இருந்து வந்த பிறகுதான் இப்பிரச்னையில் முடிவு எடுக்கப்படும் என்று தயாரிப்பாளர் தரப்பு கூறியிருந்த நிலையில், ரஜினிகாந்த் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்து விட்டார். குசேலன் பிரச்னைக்கு அவர் என்ன தீர்வு வைத்திருக்கிறார் என்று போயஸ் கார்டன் வட்டாரத்தில் உலாவி விசாரித்தபோது, தான் வாங்கிய ரூ.30 கோடி சம்பளத்தில் ரூ.10 முதல் ரூ.15 கோடிகள் வரை திருப்பிக் கொடுக்க ரஜினி முடிவு செய்திருப்பதாக தெரியவருகிறது.
குசேலன் படத்தை பிரமிட் சாய்மீரா ரூ.60 கோடிக்கு வாங்கி, மினிமம் கியாரண்டி அடிப்படையில் விநியோகித்தது. தயாரிப்பாளர்கள், இயக்குனர் மற்றும் மற்ற கலைஞர்களுக்கு ரூ.30 கோடியும், ரஜினிகாந்த்துக்கு ரூ.30 கோடியும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே பாபா படம் பிளாப் ஆனபோதும் ரஜினிகாந்த் பணத்தை திருப்பிக் கொடுத்து தியேட்டர்காரர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இதில் இன்னொரு சென்டிமென்ட்டும் அடங்கியிருக்கிறது. அதுதான் ஆகஸ்ட் மாத செண்டிமென்ட். பாபா வெளியானதும் ஆகஸ்ட்தான், குசேலன் வெளியானதும் ஆகஸ்ட்தான்.

Subscribe to:
Posts (Atom)