அமெரிக்காவுக்குள் நுழையும்போது செடி, கறிவேப்பிலை, காய்கறி, பழங்கள் இவற்றைக் கொண்டு வரக் கூடாது. உங்கள் பெட்டிகளை சுங்கத்தில் எக்ஸ்ரேயில் பார்ப்பார்கள். ஏதாவது இருந்தால் அபராதம் கட்டச் சொல்வார்கள். தொல்லைதான். அதனால் இமிக்ரேஷன் முன்னாடியே விமானத்தில் சாப்பிட பழங்கள் கொண்டு வந்திருந்தால் கூட எறிந்து விடுங்கள். விதைகள், பொடி வகைகள் அனுமதிக்கப்படும்.
* வெளியில் எங்கே போனாலும் வீட்டருகேயே வாக் போனால் கூட நீங்கள் யார் என்பதை தெரிவிக்கும் ஐடி கார்ட் இல்லாமல் போகாதீர்கள். பாஸ்போர்ட்டிலிருந்து உங்கள் புகைப்படத்தோடு கூடிய பக்கத்தை ஜெராக்ஸ் பண்ணி வைத்துக் கொள்ளலாம். அல்லது இண்டர்நேஷனல் டிரைவிங் லைசன்ஸ் போன்றவை கூடவே இருக்கட்டும்.
* தெருக்களில் நடக்கும் போது நம்மூர் மாதிரி நினைத்த இடத்தில் தெருவைக் கடக்க முடியாது. பாதசாரிகளுக்கு என்றிருக்கும் கோட்டில் தான் கடக்க வேண்டும். நடுத் தெருவில் கிராஸ் பண்ணினால் ‘ஜே வாக்’ என்று ஃபைன் போட்டு விடுவார்கள். போலீஸ் எங்கே காத்திருப்பார்கள் என்று தெரியாது. ஜாக்கிரதை!
* என்னை போல் நீங்களும் முழு வெஜிடேரியனாக இருந்தால், ரெஸ்டாரண்டுகளில் வெஜிடேரியன் சூப் என்று அவர்கள் சொன்னாலும் ப்ராத்?" என்ன என்று கேட்டுக் கொள்ளுங்கள். அதில் சிக்கன் அல்லது பீஃப் ப்ராத் போட்டு பண்ணியிருப்பார்கள். ‘வெஜிடேரியன்’ என்பதற்கு நமக்கு அர்த்தம் ஒன்று. அமெரிக்கர்களுக்கு வேறு.
* குளிர்க் காலங்களில் கதவுப் பிடி போன்ற உலோகம் எதைத் தொட்டாலும் முதல் தடவை சட்டென்று ஷாக் அடிக்கும். அதற்கு முதலில் மிக வேகமாக ஒரு தடவை விரல் நுனியால் தொட்டு விட்டு மறுபடியும் நன்றாகப் பிடித்துக் கொள்ளலாம். சிந்தெடிக் புடவை, சுடிதார் உடுத்தினாலும் ஸ்டாடிக் அதிகமாக இருக்கும். அத்தோடு குளிரினால் தூசு, தும்பு எல்லாம் வேறு உடையில் ஒட்டிக் கொள்ளும். பருத்தி அல்லது பட்டுதான் நலம்.
* கோடைக் காலங்களில் பல இடங்களில் ‘ஃபார்மர்ஸ் மார்க்கெட் (Farmers Market)’ உண்டு. வாரத்திற்கு ஒரு நாள் டௌன் டவுனில் (மெயின் ரோட்) நாலைந்து தெருக்களில் போக்குவரத்தை நிறுத்தி விட்டு நம்மூர் மாதிரியே தெருவில் ஸ்டாண்ட் போடுவார்கள். விவசாயிகள் தங்கள் நிலத்திலிருந்து மிகவும் ஃப்ரெஷ்ஷாக காய்கறிகள் கொண்டு வந்து விற்கும்போது விலை கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் க்ரோசரி கடைகளில் விற்கப்படும் காய்கறிகள் மாதிரி வதங்கி இருக்காது.
* இந்தியாவில் ஃபேஷியல், மானிக்யூர், பெடிக்யூர், ஹேர் கலர் போன்றவற்றை அடிக்கடி செய்துக் கொள்பவர்கள் அமெரிக்கா வந்தால் ஸலூன்களில் விலையைப் பார்த்து மயக்கம் அடைவீர்கள். உங்கள் மகன், மகள் வாழும் இடத்தில் ப்யூட்டி ஸ்கூல் இருந்தால் தொலைப்பேசியில் கூப்பிட்டு விசாரியுங்கள். படிப்பு முடிக்கும் மாணவ மாணவிகள் அவற்றை ‘ப்ரொஃபஷனல்’ ஆகச் செய்வார்கள். விலையும் குறைவாக இருக்கும்.
* உங்கள் செல்லத்துக்குக் குழந்தைகள் இருந்து அவர்கள் பள்ளியிலிருந்து வீட்டிற்கு வரும்போதுதான் உங்களுக்குப் பிடித்தமான தமிழ் சீரியல் டீவியில் போய்க் கொண்டிருக்கும். அவர்களுக்காக உங்கள் சீரியலைத் தியாகம் பண்ணத் தேவையில்லை. டிஷ் நெட் வொர்க்கில் இப்போது டிவிஆர் (DVR) கொடுக்கிறார்கள். வேறு நிகழ்ச்சியை ‘லைவ்’ டீவியில் பார்க்கும்போதே தமிழ் சேனலில் வரும் உங்கள் சீரியலை நீங்கள் டீவிஆரில் ரிகார்ட் பண்ணி வைத்துக் கொள்ளலாம். மறுநாள் பெரியவர்கள் வேலைக்கும், குழந்தைகள் பள்ளிக்கும் போன பிறகு அக்கடா என்று உட்காரும்போது ஆற அமரப் பார்க்கலாம். இதில் கூடுதல் போனஸ் என்னவென்றால் விளம்பரங்களை நொடியில் தள்ளி விடலாம்.
* வீட்டில் டிஷ் நெட்டில் அல்லது கேபிளில் தமிழ் சேனல்கள் இல்லையென்றாலும் இப்போதெல்லாம் எல்லா நிகழ்ச்சிகளையுமே கம்ப்யூட்டர் ஆன் லைனில் பார்த்து விடலாம். அத்தோடு நீங்கள் இந்தியாவிலிருந்து வெளி வரும் தமிழ், ஆங்கில தினசரிகளையும் அதன் அசல் வடிவத்திலேயே படிக்கவும் இயலும்.
* டெலிவிஷனில் அமெரிக்க நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது சில சமயம் அவர்கள் வேகமாகப் பேசும் ஆங்கிலம் புரியாமல் போகலாம். அதற்கு ‘க்ளோஸ்ட் காப்ஷன் (Closed Captions)' ’ போட்டுக் கொண்டால் அவர்கள் பேசுவது அப்படியே எழுத்து வடிவத்திலும் கூடவே வரும். புரிவது சுலபமாக இருக்கும்.
* எங்கள் வீட்டில் ‘நெட் ஃப்ளிக்ஸ் (Netflix)'’ என்ற மெயில் ஆர்டர் கம்பெனியிலிருந்து தான் படங்களின் டிவிடி எடுத்துப் பார்ப்போம். ஆன் லைனில் உங்களுக்கு வேண்டிய டிவிடிகளை ஆர்டர் பண்ணலாம். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என்று நிறைய டிவிடிகள் (சட்டபடி வெளிவந்தவை மட்டுமே) சொற்ப மாதக் கட்டணத்திற்கு உங்கள் வீட்டிற்கே தபால் மூலம் அனுப்பப்படும். அதை பார்த்த பின், தபால் மூலம் அவர்கள் கொடுக்கும் கவரிலேயே வைத்து திருப்பி அனுப்பினால் க்யூவில் இருக்கும் அடுத்த படம் மறுநாளே வந்து விடும்.
* அமெரிக்காவில் ஒரு சௌகரியம். உங்கள் வீட்டு மெயில் பாக்ஸில் அனுப்ப வேண்டியதை வைத்து பெட்டியில் செருகி இருக்கும் ஒரு சிவப்பு நிறக்கொடியை ஏற்றி வைத்து விட்டால் தபால்காரரே எடுத்துக் கொண்டு போய் போஸ்ட் செய்து விடுவார். தபால் நிலையத்திற்குப் போக வேண்டிய அவசியம் கூட இல்லை. அல்லது கம்ப்யூட்டரில் டவுன் லோட் பண்ணிக் கொள்ளலாம்.
* பல ஊர்களில் சனிக்கிழமை, ஞாயிறு காலைகளில் ‘கராஜ் சேல் (Garage Sale)’என்று வீட்டு வாசல்களில் வைத்திருப்பது சுவாரசியமாக இருக்கும். ‘யார்ட் சேல் (Yard Sale)’ என்றும் சில இடங்களில் சொல்வார்கள். இனி தேவையில்லை என்று நினைக்கும் பொருட்களை நல்ல கண்டிஷனில் இருந்தால், தங்கள் வீட்டு வாசலில் கடைப் பரத்தி ஒவ்வொன்றிற்கும் விலையையும் போட்டு விற்பார்கள். நெயில் பாலிஷிலிருந்து ஃபர்னீச்சர் வரை எது வேண்டுமானாலும் கிடைக்கும். சில சமயம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மலிவாகக் கிடைக்கும்.
Monday, August 8, 2011
வகை வகையான சமையல் பற்றிய குறிப்புகள்
மல்டி கடலை உருண்டை
தேவையானவை: வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை, பொட்டுக்கடலை - தலா 100 கிராம், பாதாம், பிஸ்தா, முந்திரி - தலா 10, வெல்லம் - 250 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
செய்முறை: வெல்லத்தை தண்ணீரில் கரைத்து, வடிகட்டி, அடுப்பில் வைத்துக் காய்ச்சி, உருட்டும் பதம் வந்ததும் (தண்ணீரில் போட்டால் உருட்டும் பதம்) இறக்கவும். பாதாம், பிஸ்தாவை சிறு துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும். முந்திரியைப் பொன்னிறமாக வறுத்து... உடைத்த பாதாம், பிஸ்தா, பொட்டுக்கடலை, வறுத்த வேர்க்கடலையுடன் சேர்த்து, பாகுடன் கலக்கவும். ஏலக்காய்த்தூள் தூவி, சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும்.
குறிப்பு: பள்ளிக் குழந்தைகளுக்கு மாலை வேளைக்கேற்ற சத்தான உருண்டை இது.
வெஜிடபிள் கலவைக் கூட்டு
தேவையானவை: பாசிப்பருப்பு - ஒரு கப், கேரட், சிறிய புடலங்காய், பச்சை மிளகாய் - தலா 1, பீன்ஸ் - 10, பச்சைப் பட்டாணி - 100 கிராம், தேங்காய் துருவல் - ஒரு கப், சீரகம் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: கேரட்டை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கவும். புடலங்காய், பீன்ஸையும் தனித்தனியே சிறு துண்டுகளாக நறுக்கவும். கேரட், பீன்ஸ், புடலங்காய், பச்சைப் பட்டாணி ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு, உப்பு சேர்த்து வேகவிடவும். பச்சை மிளகாய், தேங்காய் துருவல், சீரகத்தை தண்ணீர் விட்டு அரைத்துச் சேர்க்கவும். பாசிப்பருப்பை வேக வைத்து கூட்டுடன் சேர்த்துக் கலந்து, தாளிக்கும் பொருட்களைத் தாளித்து சேர்த்து இறக்கவும்.
குறிப்பு: சூடான சாதத்தில் இந்தக் கூட்டை கலந்து சாப்பிடலாம் சைட் டிஷ் தேவை இல்லை.
மேத்தி ரொட்டி
தேவையானவை: கோதுமை மாவு - 200 கிராம், வெந்தயக்கீரை - ஒரு கட்டு, பால் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு,
செய்முறை: கோதுமை மாவுடன் உப்பு, பால் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும். வெந்தயக் கீரையை ஆய்ந்து, பொடியாக நறுக்கி, மாவுடன் சேர்த்துப் பிசைந்து, சப்பாத்திகளாக இட்டு வாட்டி எடுக்கவும்.
குறிப்பு: பால் சேர்ப்பதால் எண்ணெய், நெய் எதுவும் வேண்டாம். இதற்கு ஆனியன் ரெய்தா சிறந்த காம்பினேஷன்.
தேன் நெல்லிக்காய்
தேவையானவை: பெரிய நெல்லிக்காய் - 10, தேன் - 100 மில்லி, சர்க்கரை - 200 கிராம்.
செய்முறை: நெல்லிக்காயை வில்லை வடிவமாக சீவவும். அதனுடன் சர்க்கரை சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கிளறி பாகு காய்ச்சி நெல்லிக்காயும் சுருங்கும் சமயம் அடுப்பை நிறுத்தவும். நன்கு ஆறியவுடன் தேன் விடவும்.
குறிப்பு: தினமும் இரு துண்டு சாப்பிட்டால்... ரத்த சோகையைத் தடுக்கும்.
நீர்க் கொழுக்கட்டை
தேவையானவை: புழுங்கல் அரிசி - கால் கிலோ, தேங்காய் துருவல் - ஒரு கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புழுங்கல் அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து, தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும். இதில் உப்பு சேர்த்துக் கிளறி, கொதிக்கும் நீரில் சிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு, வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: தேங்காய் சேர்த்து அரைத்து இருப்பதால், சுவையாக இருக்கும். ஊறுகாய், இட்லி மிளகாய்ப்பொடி ஆகியவை இதற்கு சிறந்த காம்பினேஷன். சட்னியும் நன்றாக இருக்கும்.
வெஜிடபிள் குருமா
தேவையானவை: தக்காளி - ஒன்று, கேரட் - ஒன்று, பச்சைப் பட்டாணி - 100 கிராம், உருளைக்கிழங்கு - 2, கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன். உப்பு - தேவையான அளவு.
செய்முறை: உருளைக்கிழங்கை தோல் சீவி நறுக்கி.... பச்சைப் பட்டாணி, நறுக்கிய கேரட், தக்காளி, உப்பு சேர்த்து வேகவிடவும், தனியாத்தூள், கரம் மசாலாதூள் சேர்த்துக் கலந்து, மிளகாய், தேங்காய் துருவலை அரைத்துச் சேர்த்து, கொதிக்கவிட்டு இறக்கவும். தேங்காய்க்கு பதில் தேங்காய்ப்பாலும் சேர்க்கலாம்.
குறிப்பு: கரம் மசாலா பிடிக்காதவர்கள்... புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சிறிதளவு சேர்த்து அரைத்து கொதிக்கவிடலாம்.
எள் உருண்டை
தேவையானவை: கறுப்பு எள் - 100 கிராம், வெள்ளை எள் - 100 கிராம், வெல்லம் - கால் கிலோ, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
செய்முறை: கறுப்பு எள், வெள்ளை எள் இரண்டையும் தனித்தனியாக வெறும் வாணலியில் வறுக்கவும். வெல்லத்தை கரைத்து கடாயில் விட்டு கெட்டியாக வரும் பதத்தில் பாகு காய்ச்சவும். வறுத்த எள்ளை தனித்தனியாக பாகுடன் சேர்த்து, ஏலக்காய்த்தூள் சேர்த்து சிறு உருண்டைகளாக உருட்டவும்.
குறிப்பு: எள் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. பருவ வயது வரும்போது எள்ளை பெண் குழந்தைகளுக்கு கொடுத்து அவர்களை வலுவடைய செய்யலாம். எள்ளை துவையல், பொடி என்று சமையலில் பலவிதமாக பயன்படுத்தலாம்.
வெஜிடபிள் இடியாப்பம்
தேவையானவை: இட்லி அரிசி - அரை கிலோ, பொடியாக துருவிய கேரட் - அரை கப், பொடியாக நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன் - ஒரு கப், கோஸ் (துருவியது) - அரை கப், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, தேங்காய்ப்பால் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு,
செய்முறை: அரிசியை நன்கு ஊற வைத்து, கெட்டியாக அரைத்து, உப்பு சேர்த்துக் கிளறவும். மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, கொதிக்கும் நீரில் போட்டு, உருண்டைகள் வெந்து மேலே மிதந்துவரும் சமயத்தில் எடுத்து சேவை அச்சில் போட்டுப் பிழியவும். நன்றாக சுத்தம் செய்து துருவிய மற்றும் நறுக்கிய காய்கள், நறுக்கிய கொத்தமல்லி ஆகியவற்றை அப்படியே சேவையின் மேல் தூவி சாப்பிடலாம். தேங்காய்ப்பாலை மேலே ஊற்றி சாப்பிடால் சூப்பர் டேஸ்ட்டில் இருக்கும்.
குறிப்பு: பச்சைக் காய்களும் வெந்த இடியாப்பமும் தனி ருசிதான்! பச்சையாக சாப்பிடக்கூடிய பயிறு வகைகள், இனிப்பு சோளம் சேர்த்தும் கலந்து கொடுக்கலாம். வேக வைத்த காய்களும் சேர்த்து சாப்பிடலாம்.
வடிகஞ்சி சூப்
தேவையானவை: அரிசி - கால் கிலோ, பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், நறுக்கிய தக்காளி - அரை கப், துருவிய கேரட் - ஒரு கப், மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், சோள மாவு - ஒரு சிட்டிகை, பொடியாக துருவிய கோஸ் - 4 டீஸ்பூன், சீரகத்தூள் - கால் டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, ரஸ்க் - 4, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியைக் களைந்து, தண்ணீரில் கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்து வரும்போது கஞ்சி வடிக்கவும். அதில் தக்காளி, கேரட், கோஸ், வெங்காயம், உப்பு சேர்க்கவும். பிறகு மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து, சிறிது சோள மாவை கரைத்து சேர்த்துக் கொதிக்கவிட்டு, நறுக்கிய கொத்தமல்லி போட்டு இறக்கவும். சாப்பிடும்போது ரஸ்க்கை சிறு துண்டுகளாக உடைத்து சேர்த்துச் சாப்பிடவும்.
குறிப்பு: சூப்பை சூடாக சாப்பிட வேண்டும். கஞ்சி உடலுக்கு குளுமை தரும். சூப்பில் கால் டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்தால் சுவை கூடும். சூப் சாப்பிட்டால் நன்றாக பசி எடுக்கும்.
மல்டி பழ டெஸட்
தேவையானவை: கிர்ணிப்பழத் துண்டுகள் - 6, சப்போட்டா - இரண்டு, ஆரஞ்சு - ஒன்று, ஆப்பிள் - ஒன்று, வாழைப்பழம் - ஒன்று, தேன் - 4 டீஸ்பூன், பைனாப்பிள் - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: எல்லா பழங்களையும் தோல் நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி, ஒரு பிளேட்டில் பரவலாக போட்டு, தேன் ஊற்றி அப்படியே சாப்பிடவும்.
குறிப்பு: குழந்தைகள் பிறந்தநாள், விருந்தினர்களை உபசரிக்க இந்த மல்டி பழ டெஸட் ஒரு சூப்பர் டிஷ். தயாரிப்பது எளிது... கிடைக்கும் பாராட்டு பெரிது!
புரோட்டீன் ரிச் உசிலி
தேவையானவை: முளைகட்டிய பயறு - ஒரு கப், முளைகட்டிய கொண்டைக்கடலை - ஒரு கப், முளைவிட்ட சோளம் - ஒரு கப், முளைகட்டிய கொள்ளு - ஒரு கப், பூண்டு - 2 பல்,
காய்ந்த மிளகாய் - 2, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: முளைகட்டிய பயறு, கொள்ளு, கொண்டைக்கடலை, சோளம், கறிவேப்பிலை, பூண்டுப் பல், காய்ந்த மிளகாய், தோல் சீவிய இஞ்சி எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து... உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துப் பிசைந்து சிறு உருண்டைகளாக அல்லது இட்லி வடிவத்தில் தட்டி, இட்லித் தட்டில் வைத்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். ஆறியவுடன் நன்கு உதிர்க்க வரும்.
குறிப்பு: சூடான சாதத்தில் சிறிதளவு நெய் அல்லது எண்ணெய் விட்டு இந்த உசிலி சேர்த்துச் சாப்பிடலாம்.
ராகி இனிப்பு உருண்டை
தேவையானவை: கேழ்வரகு மாவு - ஒரு கப், சர்க்கரை - ஒரு கப், வறுத்த முந்திரிப்பருப்பு - 10, ஏலக்காய்த்தூள் சிறிதளவு, நெய் - 4 டீஸ்பூன்.
செய்முறை: கேழ்வரகு மாவை வறுத்து, சிறிது தண்ணீர் விட்டு நைஸாக கரைக்கவும். சர்க்கரையை தனியாக அரைத்து, இரண்டையும் ஒன்றாகக் கலந்து, வறுத்த முந்திரிப்பருப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய் கலந்து உருண்டை பிடிக்கவும்.
குறிப்பு: கேழ்வரகு மாவை கொதிக்கும் நீரில் சிறிது சிறிதாக போட்டுக் கிளறி... வெல்லம், தேங்காய் சேர்த்து உருட்டி, ஆவியில் வேக வைத்தும் கொடுக்கலாம்.
வெஜிடபிள் சொதி
தேவையானவை: கேரட் - 1, பீன்ஸ் - 10, குடமிளகாய் - ஒன்று, நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, தேங்காய்ப்பால் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - சிறிதளவு, தேங்காய் எண்ணெய் - அரை ஸ்பூன்.
செய்முறை: கேரட்டை நீளவாக்கில் நறுக்கவும். பீன்ஸ், குடமிளகாயையும் மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கி, சிறிது தண்ணீர் தெளித்து உப்பு சேர்க்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, காய்கறிகளை கடாயில் போட்டு, மூடி வேக வைக்கவும். பின்பு தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துச் சேர்த்து, தேங்காய்ப்பால் விட்டு, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.
குறிப்பு: இடியாப்பத்துக்கு சிறந்த காம்பினேஷனாக இருக்கும் இந்த ரெசிபி, இலங்கையில் வசிப்பவர்களின் ஸ்பெஷல் ரெசிபி.
குழல் புட்டு
தேவையானவை: சிவப்பு அரிசி புட்டு மாவு - 250 கிராம், தேங்காய் துருவல் - ஒரு கப், நேந்திரம்பழம் - ஒன்று.
செய்முறை: புட்டு மாவில் இளம் சூடாக தண்ணீரைத் தெளித்து, நன்கு பிசிறிக் கொள்ளவும். பிறகு புட்டு வேக வைக்கும் குழாயில் சிறிது மாவை நிரப்பி. அதன் மேலே தேங்காய் துருவல், பிறகு மாவு, பிறகு நேந்திரம்பழத் துண்டுகள்... இப்படி மாற்றி மாற்றி அடைத்து, வேக வைத்து எடுக்கவும். குழல் வடிவத்தில் இருக்கும் இந்தப் புட்டை கைகளால் பிசைந்து சாப்பிடலாம்.
குறிப்பு: மாவை மட்டும் தனியே வேக வைத்து எடுத்து... பழத்துண்டுகள், தேங்காய் துருவல் கலந்தும் சாப்பிடலாம்.
பயறு கறி
தேவையானவை: சிவப்பு காராமணி - 200 கிராம், தேங்காய் துருவல் - ஒரு கப், காய்ந்த மிளகாய் - ஒன்று, தனியா - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: காராமணியை லேசாக வறுத்து 2 மணி நேரம் ஊற வைத்து... குக்கரில் வைத்து, இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், தனியா, கடலைப்பருப்பை வறுத்து அரைத்து, வேக வைத்த காராமணியில் சேர்த்து, உப்பு சேர்த்துக் கொதிக்க விட்டு இறக்கவும்.
குறிப்பு: இது, குழல் புட்டுக்கு ஒரு சிறந்த காம்பினேஷன். சப்பாத்திக்கும் நன்றாக இருக்கும்.
வெஜிடபிள் இட்லி
தேவையானவை: இட்லி மாவு - அரை கிலோ, துருவிய கேரட் - ஒரு கப், பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், நறுக்கிய பச்சை மிளகாய் - ஒன்று, பொடியாக துருவிய கோஸ் - ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப்.
செய்முறை: இட்லி மாவுடன் துருவிய கேரட், கோஸ், இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்துக் கலக்கவும். சிறிய இட்லித் தட்டில் எண்ணெய் தடவி, ஒரு ஸ்பூனால் மாவை ஊற்றி, வேக வைத்து எடுக்கவும்.
குறிப்பு: இந்த மினி இட்லிக்கு வெங்காய சாம்பார் சிறந்த காம்பினேஷன். ஒரு பவுலில் சாம்பார் ஊற்றி, இட்லிகளை சற்று ஊறவைத்தும் சாப்பிடலாம்.
அகத்திக்கீரை பொரியல்
தேவையானவை: அகத்திக்கீரை - ஒரு கட்டு, பாசிப்பருப்பு - அரை கப், காய்ந்த மிளகாய்- ஒன்று, கடுகு - அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன், எண்ணெய் - முக்கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அகத்திக்கீரையை ஆய்ந்து, பொடியாக நறுக்கி, பாசிப்பருப்பு சேர்த்து வேகவிடவும். சிறிது வெந்தவுடன் உப்பு சேர்த்து மேலும் வேகவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து, தேங்காய் துருவல், வேகவைத்த கீரை சேர்த்து வதக்கவும்.
குறிப்பு: அகத்திக்கீரை, சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது... குடல் புண்னை ஆற்றும். கீரையை அளவாக தண்ணீர் வைத்து வேகவிடவும். அதிகம் தண்ணீர் வைத்து வடித்தால் சத்துக்கள் குறையும்.
பைனாப்பிள் ரசம்
தேவையானவை: புளி - ஒரு நெல்லிக்காய் அளவு, பைனாப்பிள் துண்டுகள் - 6, சாம்பார் பொடி - ஒரு டீஸ்பூன், வேக வைத்த துவரம்பருப்பு - ஒரு கப், நறுக்கிய கொத்தமல்லி, பெருங்காயத்தூள் - சிறிதளவு, பச்சை மிளகாய் - ஒன்று, உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: கடுகு - அரை ஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: புளியைக் கரைத்து கடாயில் விட்டு, சாம்பார் பொடி உப்பு சேர்த்து, பச்சை மிளகாயை நறுக்கிப் போட்டு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். சிறிது கொதித்ததும் பைனாப்பிள் துண்டுகள் போட்டு, வேக வைத்த பருப்பை கரைத்து விட்டு, கடுகு தாளித்து, பெருங்காயத்தூள், கொத்தமல்லி போட்டு இறக்கவும்.
குறிப்பு: பைனாப்பிள் ஃப்ளேவருடன் வித்தியாசமான டேஸ்ட்டில் இருக்கும் இந்த ரசம்.
நெல்லிக்காய் பச்சடி
தேவையானவை: பெரிய நெல்லிக்காய் - 6, தயிர் - ஒரு கப், பச்சை மிளகாய் - ஒன்று, கடுகு - அரை டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பெரிய நெல்லிக்காயை சீவி... உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து நைஸாக அரைத்து, தயிரில் கலக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்து இதில் கொட்டவும்..
குறிப்பு: நெல்லிக்காயில் விட்டமின் 'சி’ உள்ளது நெல்லிக்காய் சாப்பிட்டால் உடல் குளுமை அடையும்.
முருங்கைக் கீரை கூட்டு
தேவையானவை: முருங்கைக்கீரை (ஆய்ந்தது) - ஒரு கப், தேங்காய் துருவல் - ஒரு கப், சீரகம் - ஒரு டீஸ்பூன், வேக வைத்த பாசிப்பருப்பு - ஒரு கப், பச்சை மிளகாய் - ஒன்று, உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், பெருங்காய்த்தூள்- சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: முருங்கைக் கீரையை உப்பு சேர்த்து வேக வைக்கவும். தேங்காய் துருவல், சீரகம், பச்சை மிளகாயை அரைத்து சேர்த்து கொதிக்கவிடவும். வேக வைத்த பாசிப்பருப்பை சேர்க்கவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து இதில் கொட்டவும். நன்கு கொதித்தவுடன் இறக்கவும்.
குறிப்பு: முருங்கைக் கீரை குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் அடங்கியது.
கத்திரிக்காய் கொத்ஸு
தேவையானவை: கத்திரிக்காய் (பெரியது) - ஒன்று, புளி - ஒரு நெல்லிக்காய் அளவு, தனியா. கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, வெல்லம் - ஒரு சிறு துண்டு, உப்பு - தேவையான அளவு
செய்முறை: தனியா, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு மூன்றையும் வறுத்து பொடித்துக் கொள்ளவும். கத்திரிக்காயை சுட்டு, தோல் உரித்து, நன்கு பிசையவும். புளியைத் தண்ணீர் விட்டு கரைத்து, பிசைந்த கத்திரிக்காய், உப்பு சேர்க்கவும். வறுத்துப் பொடித்த பொடியை சேர்த்து, வெல்லத்தை போட்டு கொதிக்கவிட்டு இறக்கவும்.
குறிப்பு: அரிசி உப்புமாவுக்கும், பொங்கலுக்கும் சிறந்த காம்பினேஷன் இது.
காராமணி சுண்டல்
தேவையானவை: சிவப்பு காராமணி - 200 கிராம், வெல்லம் - 100 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, தேங்காய் துருவல் - ஒரு கப்.
செய்முறை: சிவப்பு காராமணியை வறுத்து, ஊற வைத்து, வேகவிடவும். வெல்லத்தை பாகுகாய்ச்சி, வடிகட்டி, உருட்டும் பதம் வந்ததும் வேக வைத்த காராமணி சேர்த்துக் கிளறவும். ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்து மேலும் கிளறி இறக்கவும்.
குறிப்பு: வெல்லம் சேர்த்திருப்பதால், இந்த சுண்டல் இரும்புச் சத்து மிக்கது. நவராத்திரி கொண்டாட்டத்தில் இதற்கு தனி இடம் உண்டு.
மல்டி பருப்பு பொடி
தேவையானவை: கடலைப்பருப்பு - ஒரு கப், துவரம்பருப்பு - ஒரு கப், மிளகு - ஒரு டீஸ்பூன், பாசிப்பருப்பு - ஒரு கப், காய்ந்த மிளகாய் - ஒன்று, உப்பு - தேவையான அளவு
செய்முறை: கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாய் எல்லாவற்றையும் வெறும் காடயில் வறுத்து, உப்பு சேர்த்து, மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.
குறிப்பு: குழம்பு வைக்காத சமயங்களில் இந்தப் பொடி கைகொடுக்கும்.
மல்டி மாவு கேக்
தேவையானவை: கேழ்வரகு மாவு - ஒரு கப், கோதுமை மாவு - ஒரு கப், அரிசி மாவு - ஒரு கப், உப்பு தேவையான அளவு.
தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன் எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: கேழ்வரகு மாவு, கோதுமை மாவு, அரிசி மாவு எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து... தண்ணீர், உப்பு சேர்த்துக் கரைத்து... அடுப்பில் வைத்து கூழ் பதம் வரும் வரை நன்கு கிளறவும். பிறகு, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்துக் கொட்டவும். கூழ் நன்கு ஆறியவுடன் விருப்பப்பட்ட வடிவத்தில் வெட்டி சாப்பிடலாம். இதை கூழாகவும் சாப்பிடலாம்.
குறிப்பு: விரத நாட்களில் இந்தக் கூழ் பசி தாங்கும். மோர் மிளகாய் தாளித்து சேர்க்கலாம்.
பாசிப்பயறு சுண்டல்
தேவையானவை: பாசிப்பயறு - 200 கிராம், தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 1, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: பாசிப்பயறை பொன்னிறமாக வறுத்து, உப்பு சேர்த்து வேக வைக்கவும். பயறு குழையாமல் வேக வேண்டும். காடயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து... பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து, பயறு, தேங்காய் துருவல் போட்டு நன்கு கிளறி இறக்கவும்.
குறிப்பு: இதே சுண்டலில் மாங்காய் துருவல், கேரட் துருவல் போட்டும் தயாரிக்கலாம்.
மூலிகைப் பொடி
தேவையானவை: சீரகம் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு, வேப்பம்பூ - 4 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், சுண்டைக்காய் வற்றல் - 6, கடுகு - 4 டீஸ்பூன், சுக்கு - ஒரு சிறு துண்டு, மிளகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெறும் வாணலியில் கறிவேப்பிலை, வேப்பம்பூ, சீரகம், உளுத்தம்பருப்பு, சுண்டைக்காய் வற்றல், கடுகு, சுக்கு, மிளகு எல்லாவற்றையும் தனித்தனியாக வறுக்கவும். அவற்றுடன் உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.
குறிப்பு: வயிறு மந்தமாக இருக்கும்போது, இந்தப் பொடியை சூடான சாதத்தில் கலந்து சாப்பிட்டால் குணமாகும். சளித் தொல்லை உள்ளவர்களுக்கும் மிகவும் நல்லது.
பால் அவல்
தேவையானவை: அவல் - 200 கிராம், வெல்லம் - 100 கிராம், பால் - 250 மில்லி, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, தேங்காய் துருவல் - 2 டேபிஸ்பூன்.
செய்முறை: அவலை நன்கு களைந்து தண்ணீரை வடிகட்டவும். வெல்லத்தை தூள் செய்து சேர்த்து, தேங்காய் துருவலையும் சேர்த்து, ஏலக்காய்த்தூள் போட்டுக் கலக்கவும். பாலைக் காய்ச்சி ஆற வைத்து, அவலுடன் சேர்க்கவும்.
குறிப்பு: விரதம் இருப்பவர்களுக்கு இந்த அவல் பசியை அடக்கிவிடும். இந்த அவலும் ஒரு பழமும் போதும்... ஒரு நாள் பசி தாங்கலாம்.
புதினா - சீரக ரைஸ்
தேவையானவை: பாசுமதி அரிசி - 250 கிராம், புதினா - ஒரு கட்டு, சீரகம் - 6 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், பொட்டுக்கடலை - 4 டீஸ்பூன், வறுத்த வேர்க்கடலை - 4 டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், சீரகம் - 6 டீஸ்பூன். எண்ணெய் - அரை டீஸ்பூன்
செய்முறை: அரிசியை ஒரு மடங்குக்கு இரு மடங்கு தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து 2 விசில் வந்ததும் இறக்கவும். புதினாவையும் வெங்காயத்தையும் வதக்கவும். வதக்கிய வெங்காயம், புதினா,பொட்டுக்கடலை, வேர்க்கடலை, நெய் ஆகியவற்றுடன் சாதத்தைச் சேர்க்கவும். கடுகு, சீரகத்தை எண் ணெயில் தாளித்து சாதத்தில் கொட்டி, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
குறிப்பு: கலந்த சாத வகைகளில் இது வித்தியாசமானது. புதினா - சீரகம் தனி ருசி தரும். முந்திரி, பாதாம், பிஸ்தா வறுத்துப் போட்டால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
காரப்பொரி
தேவையானவை: அரிசிப்பொரி - மீடியம் சைஸ் பாக்கெட், வறுத்த வேர்க்கடலை - 100 கிராம், பொட்டுக்கடலை - 100 கிராம், பூண்டுப் பல் - 2, மிளகாய்த்தூள் - முக்கால் டீஸ்பூன், பெருங்காய்த்தூள் - சிறிதளவு. தாளிக்க கடுகு - சிறிதளவு, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 1 டீஸ்பூன்.
செய்முறை: பூண்டை தோல் உரித்து, நசுக்கி வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து, பூண்டு சேர்த்து வதக்கவும். மிளகாய்த்தூள், பெருங்காய்த்துள் போட்டு... பொரி, பொட்டுக்கடலை, வேர்க்கடலை சேர்த்து நன்கு கலக்கவும்.
குறிப்பு: மாலை வேளையிலும் மழைக் காலத்திலும் சாப்பிட இந்தக் காரப்பொரி மிகவும் உகந்தது.
வெஜிடபிள் ஸ்பெகட்டி
தேவையானவை: ஸ்பெகட்டி (சேமியாவில் ஒருவகை) - 100 கிராம் , குடமிளகாய் - ஒன்று, கேரட் - ஒன்று, பச்சை மிளகாய் - ஒன்று, கொத்தமல்லி - சிறிதளவு தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று, பச்சைப் பட்டாணி - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ஸ்பெகடியை உடைத்து வேகவிட்டு தண்ணீரை வடிக்கவும். தக்காளி, குடமிளகாய், கேரட், வெங்காயம், பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கி, பச்சைப் பட்டாணி சேர்த்து எண்ணெயில் வதக்கவும். பிறகு உப்பு போட்டு, வேக வைத்த ஸ்பெகட்டியுடன் சேர்த்து, கொத்தமல்லி தூவவும்.
குறிப்பு: ஸ்பெகட்டி டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் கிடைக்கும். குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸில் கொடுக்க புதுமையானது. கலர் குடமிளகாய் சேர்த்தால் பார்க்கவும் அழகு!

இத்தாலிய முறைப்படி சமையல்
சீனாவின் ஃப்ரைடு ரைஸும், நூடுல்ஸும் இப்போது கிடைக்காத தெருக்களே இல்லை எனும் அளவுக்கு நம்மூரில் அவையெல்லாம் பிரபலமாகிவிட்டன. ஆனால், சீனாக்காரர் ஒருவரிடம் இந்த ஃப்ரைடு ரைஸ் மற்றும் நூடுல்ஸை கொடுத்தால்... 'இது என்ன?’ என்றுதான் கேட்பார். காரணம், நம்முடைய சுவைக்கு ஏற்ப அந்த அயிட்டங்களை முழுக்க முழுக்க இங்கே மாற்றி வைத்திருக்கிறோம். பீட்ஸாவுக்கும் இதே நிலைதான்!
பீட்ஸாவின் தாயகம் இத்தாலி. ஆனால், இங்கே... தடிமனாக... சீஸ் வழிந்தோடும் அளவுக்குக் கொழுப்புச் சக்தி கொண்டதாக இருக்க வேண்டும் என்றெல்லாம் நம்முடைய நாக்குச் சுவைக்கு ஏற்ப... பீட்ஸாவையே மாற்றி வைத்திருக்கிறோம். உண்மையில் இதை 'இந்திய பீட்ஸா' என்றுதான் சொல்ல வேண்டும்.
'அப்படினா... இத்தாலி பீட்ஸா?'
சென்னை, நந்தனம் சேமியர்ஸ் சாலையில் இருக்கும் இத்தாலியன் ரெஸ்டாரன்ட்டான 'டஸ்கானா'வில் இத்தாலி பாரம்பரியப்படி தயாரித்து கொடுக்கிறார்கள். இங்கே பீட்ஸா செய்வதில் எக்ஸ்பர்ட்... வில்லி வில்சன். இவர்தான் இந்த ஹோட்டலின் செஃப், செயல் தலைவர் எல்லாமே!
''இத்தாலியின் புராதன முறைப்படி, விறகை எரித்து நெருப்பு மூட்டித்தான் இங்கே பீட்ஸா தயாரிக்கிறோம். மெல்லியதாக, காய்கறிகள் நிறைந்ததாக இருக்கும் இதுதான் ஒரிஜினல் இத்தாலியன் பீட்ஸா'' என்று சொல்லி, செயல்முறை விளக்கமும் கொடுத்த வில்சன், அடுத்து நமது வாசகிகளுக்காக 'பாஸ்தா அரேபியாட்தா' எனும் ரெசிபியை தயாரித்துக் காட்டினார். இது, '2 மினிட்ஸ் நூடுல்ஸ்' மாதிரி உடனடியாக தயாரிக்கக்கூடிய... இத்தாலி டிஷ்!
பாஸ்தா அரேபியாட்தா
தேவையான பொருட்கள்: பாஸ்தா - 100 கிராம், நறுக்கப்பட்ட பூண்டு - 10 கிராம், ஆலிவ் ஆயில் - 20 கிராம், பழுத்த மிளகாய் - 5 கிராம், பாஸ்தா-டொமாட்டோ சாஸ் - 80 கிராம், துளசி இலை - 5 கிராம் (பெருமாள் கோயில் துளசியல்ல. பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளில் 'சமையல் துளசி' என்று கேட்டால் கிடைக்கும்), கேரட், தக்காளி, புரூக்கோலி துண்டுகள் (மொத்தமாக) - 200 கிராம், உப்பு, வறுத்துப் பொடித்த மிளகு - தேவையான அளவு.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வையுங்கள். முதலில் கேரட், பிறகு புரூக்கோலியை போட்டு வேக வைத்து தனியே எடுத்து வையுங்கள். பிறகு, அந்தத் தண்ணீரில் பாஸ்தாவை வேக வைத்து, வடிகட்டி வையுங்கள். பிறகு, அகலமான ஒரு பேனில்... ஆலிவ் ஆயில் விட்டு, காய்ந்ததும் பூண்டு, பழுத்த மிளகாய், கேரட், தக்காளி, புரூக்கோலி, உப்பு, மிளகுத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள். வேகவைத்த பாஸ்தாவை நிறைவாகச் சேர்த்து கொஞ்ச நேரம் கிளறுங்கள். பூண்டு வாசனை அடங்கியதும், அடுப்பில் இருந்து இறக்கி, பாஸ்தா-டொமாட்டோ சாஸை ஊற்றி, அது நன்றாகப் பரவும்படி செய்யுங்கள். கடைசியாக, துளசி இலைகளைத் தூவி சுடச்சுட உபசரியுங்கள்.

மசாலா காளான் சமையல்
மசாலா மஷ்ரூம்
தேவையானவை: சுத்தம் செய்யப்பட்ட மஷ்ரூம் - 250 கிராம், டோஃபூ பனீர் - 100 கிராம், தயிர் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1, பச்சை மிளகாய் (நீளவாக்கில் நறுக்கியது) - 2, தக்காளி புரீ (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - அரை கப், கெட்டியாக அரைத்த தேங்காய் விழுது - அரை கப், ஃப்ரெஷ் க்ரீம் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், வெண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் மஷ்ரூமைப் போட்டு, எலுமிச்சைச் சாறு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்கு பிசிறி, 5 நிமிடங்கள் வைக்கவும். டோஃபூ பனீர் உடன் தயிர், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து 5 நிமிடங்கள் தனியே வைக்கவும். ஒரு கடாயில் வெண்ணெயை இட்டு உருக்கி, பிசிறி வைத்துள்ள மஷ்ரூம் கலவையை அதில் சேர்த்து வதக்கவும். பிறகு டோஃபூ பனீர் கலவையையும் சேர்த்து வதக்கி எடுக்கவும். இன்னொரு கடாயில் எண்ணெய் விட்டு... சீரகம், கறிவேப்பிலை தாளித்து, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு, அதில் தக்காளி புரீயைச் சேர்த்து நன்கு கிளறவும். வாசனை வந்ததும், தேங்காய் விழுது, உப்பு, கரம் மசாலா சேர்த்துக் கிளறவும். எல்லாம் ஒன்று சேர்ந்து கெட்டியாக வரும்போது, மஷ்ரூம் - டோஃபூ பனீர் கலவையை சேர்த்துக் கிளறி மூடவும். பரிமாறும்போது கொத்தமல்லி, ஃப்ரெஷ் க்ரீம் தூவி அலங்கரிக்கவும்.
- எஸ்.சமந்தகமணி, பெங்களூரூ
லெமன் முறுக்கு
தேவையானவை: பச்சரிசி - 4 கப், உளுத்தம்பருப்பு - ஒரு கப், எலுமிச்சைச் சாறு - கால் கப், எள் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், வெண்ணெய், எண்ணெய், உப்பு - தேவை யான அளவு.
செய்முறை: வெறும் கடாயில் உளுத்தம் பருப்பை வாசனை வரும் வரை வறுத்து, ஆற வைத்து பச்சரிசியுடன் சேர்த்து மெஷினில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். மாவை சல்லடையில் சலித்து, அதனுடன் உப்பு, எள், பெருங்காயத் தூள், வெண்ணெய், எலுமிச்சைச் சாறு சேர்த்து முறுக்கு மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மாவை தேன் குழலாகப் பிழிந்து நன்கு வேகவிட்டு எடுக்கவும். வித்தியாசமான சுவையுடன் கரகரப்பாக இருக்கும்.
-------------------------------------------------------------------------------------
வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்துடுத்து, சமைத்து, ருசித்து, சர்டிஃபிகேட் தந்திருப்பவர் 'சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன். அவருடைய கமென்ட்ஸ்...
மசாலா மஷ்ரூம்: டோஃபூ பனீருடன் சிறிதளவு சீஸ் சேர்த்தால்... கூடுதல் மணத்துடனும், அதிக ருசியுடன் இருக்கும்.
லெமன் முறுக்கு: பச்சை மிளகாயை அரைத்து எடுத்த சாறு சேர்த்தால், காரம் சேர்ந்து சுவையாக இருக்கும்.

Saturday, August 6, 2011
கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா?
கருணாநிதியின் குடும்பத்துக்கு இருக்கும் சொத்துப் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது, டெல்லியில் இருந்து வெளிவரும் 'த அதர் சைடு’ என்ற ஆங்கில மாத இதழ்.
இது ஏதோ, கருணாநிதிக்கு வேண்டாத அரசியல் எதிரிகள் நடத்தும் பத்திரிகை இல்லை. 'எனது நண்பர்... எமர்ஜென்ஸி கொடுமைகளை ஒன்றாகச் சேர்ந்தே எதிர்த்தோம்!’ என்று கருணாநிதியால் வாஞ்சையாகப் புகழப்படும் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸை ஆசிரியர் குழுத் தலைவராகக்கொண்டு இயங்கும் பத்திரிகை. இதன் ஆசிரியர் ஃபெர்னாண்டஸின் தோழி ஜெயா ஜெட்லி. ஜூலை இதழில் மூன்று பக்கங்களுக்கு கருணாநிதி குடும்பத்தின் சொத்துப் பட்டியல் வெளியாகி, டெல்லிப் பிரபலங்களைக் கலக்கி உள்ளது!
'த அதர் சைடு’ பத்திரிகை வெளியிட்ட சொத்துப் பட்டியலைப் பார்த்து அதிர்ந்த பிரதமர் மன்மோகன் சிங், ''ஓ மை காட். கலைஞர்ஜி இந்த அளவுக்கு சொத்து சேர்த்துவைத்து இருக்கிறார் என்ற விவரம் எனக்கே அதிர்ச்சியாக இருக்கிறதே!’ என்று, அந்தப் பட்டியலைப்பற்றி விசாரிக்குமாறு மத்திய உளவுத் துறைக்கு உத்தரவிட்டாராம்.
அந்தக் கட்டுரையின் துவக்கத்தில், 'கருணாநிதிக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும், தமிழகத்திலும் தென் இந்தியாவிலும் இருக்கக்கூடிய முக்கியமான சொத்துகளின் பட்டியல் விவரம். இது முழுமையான பட்டியல் இல்லை. கருணாநிதியின் குடும்பத்தாரால் வெளிநாடுகளில் மறைத்துவைக்கப்பட்டு இருக்கும் சொத்து பற்றிய விவரங்கள் இந்தப் பட்டியலில் இல்லை. வறுமைக் கோட்டுக்குக் கீழே உழன்ற கருணாநிதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் (தங்களது அயராத உழைப்பால்!) கடந்த 60 ஆண்டுகளில் ஈட்டியவை இவை. தமிழகத்தில் வாழும் ஏழை எளியவர்களுக்காகக் காலம் எல்லாம் பாடுபட்ட மஞ்சள் சால்வைக்காரர், இன்று தேர்தல் முடிவுகள் தந்த கட்டாய ஓய்வில் நிலை குத்தி நிற்கிறார்!’ என்று எழுதி இருக்கிறது.
அந்த பத்திரிகை வெளியிட்டு உள்ள பட்டியலை அப்படியே தருகிறோம்!
1. 6,124 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட கருணாநிதியின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு 5 கோடி.
2. முரசொலி மாறனின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு 5 கோடி.
3. 1,200 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட முரசொலி செல்வத்தின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு 2 கோடி.
4. கோபாலபுரத்தில் சொர்ணத்தின் வீடு - மதிப்பு 4 கோடி.
5. கோபாலபுரத்தில் மு.க.முத்துவின் வீடு - மதிப்பு 2 கோடி.
6. கோபாலபுரம் அமிர்தத்தின் வீடு - மதிப்பு 5 கோடி.
7. மகள் செல்வி, எழிலரசியின் கோபாலபுரம் வீடு - மதிப்பு 2 கோடி.
8. சி.ஐ.டி காலனியில் 9,494 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட இடத்தில் 3,500 சதுர அடிகளுக்கு கட்டப்பட்டு இருக்கும் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் வீட்டு மதிப்பு - 12 கோடி.
9. மண்ணிவாக்கம் கிராமத்தில் ராஜாத்தி அம்மாளுக்கும், கனிமொழிக்கும் இருக்கும் 300 ஏக்கரின் மதிப்பு 4.5 கோடி.
10. ராயல் ஃபர்னிச்சர் என்ற பெயரில் இருக்கும் ராஜாத்தி அம்மாளின் ஷாப்பிங் நிறுவனத்தின் மதிப்பு - 10 கோடி.
11. 2,687 சதுர அடிகள்கொண்ட நிலப்பரப்பில் 2,917 சதுர அடியில் கட்டப்பட்டு இருக்கும் மு.க.ஸ்டாலின் வேளச்சேரி வீட்டு மதிப்பு - 2 கோடி.
12. நுங்கம்பாக்கத்தில் இருக்கும் உதயநிதி ஸ்டாலினின் ஸ்னோ ஃபவுலிங் சென்டரின் சொத்து மதிப்பு - 2 கோடி.
13. சென்னை போட் கிளப்பில் இருக்கும் கலாநிதி மாறனின் 16 கிரவுண்ட் மாளிகையின் நில மதிப்பு மட்டும் - 100 கோடி.
14. கொட்டிவாக்கத்தில் இருக்கும் மாறன் சகோதரர்களின் பண்ணை வீட்டின் மதிப்பு - 10 கோடி.
15. போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் எம்.எம் இண்டஸ்ட்ரீஸின் மதிப்பு - 2 கோடி.
16. 6 கிரவுண்ட் பட்டா நிலத்திலும், 1,472 சதுர அடி புறம்போக்கு நிலத்திலும் அமைந்து இருக்கும் கோடம்பாக்கம் 'முரசொலி’ அலுவலகக் கட்டடத்தின் மதிப்பு - 20 கோடி.
17. மகாலிங்கபுரத்தில் 2 கிரவுண்ட் நிலத்தில், சன் கேபிள் விஷன் சொத்து மற்றும் தொலைக்காட்சி உபகரணங்களின் மதிப்பு - 5 கோடி.
18. சன் டி.வி-க்கு எம்.ஆர்.சி. நகரில் இருக்கும் 32 கிரவுண்டின் மதிப்பு - 100 கோடி.
19. கோரமண்டல் சிமென்ட் கம்பெனியில் இருக்கும் 11 சதவிகித பங்குகளின் மதிப்பு - 50 கோடி.
20. பெங்களூருவில் இருக்கும் செல்வத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு - 4 கோடி.
21. பெங்களூரு - மைசூர் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் செல்வியின் ஒரு ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு - 80 கோடி.
22. மாறன் சகோதரர்களின் 1.84 ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு - 120 கோடி.
23. பெங்களூருவில் 10 கிரவுண்டில் அமைந்திருக்கும் உதயா டி.வி. சேனலின் நில மதிப்பு - 108 கோடி.
24. பீட்டர்ஸ் ரோட்டில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 'ரெயின்போ இண்டஸ்ட்ரீஸின்’ மதிப்பு - 48 கோடி.
25. அந்தியூரில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 13 கிரவுண்ட் பண்ணை வீட்டின் மதிப்பு 30 லட்சம்.
26. புது டெல்லியில் இருக்கும் சன் டி.வி. அலுவலகத்தின் மதிப்பு - 50 கோடி.
27. எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில் இருக்கும் பங்குகளின் மதிப்பு - தெரியவில்லை.
28. தினகரன் பப்ளிகேஷன்ஸ் - மதிப்பு தெரியவில்லை.
29. சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் - மதிப்பு தெரியவில்லை
30. முரசொலி அறக்கட்டளை - மதிப்பு தெரியவில்லை
31. ஒரு ஷேர் 48 என்ற கணக்கில் ஸ்பைஸ் ஜெட் ஏர்வேஸில் 37 சதவிகிதப் பங்குகளை கன்ஸாகரா நிறுவனத்திடம் இருந்து அமெரிக்காவின் 'வில்பர் ராஸ் அண்ட் ராயல் ஹோல்டிங்குஸ் சர்வீஸர்’ மூலமாக வாங்கப்பட்டது. இதை வாங்கிய சமயத்தில் 13,384 கோடிக்கு வாங்கியதாக கலாநிதி மாறனே பிரகடனம் செய்திருந்தார்.
32. மதுரை, மாடக்குளம் கிராமத்தில் தயாளு அம்மாள் அறக்கட்டளைக்கு இருக்கும் நிலத்தின் மதிப்பு - தெரியவில்லை.
33. தஞ்சாவூர் மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் கருணாநிதிக்கு இருக்கும் 21.30 ஏக்கரின் மதிப்பு - தெரியவில்லை.
34. திருவள்ளூர் மாவட்டத்தில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் 3.84 ஏக்கரின் மதிப்பு - 1 கோடி.
35. துர்கா ஸ்டாலினுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் 3,680 சதுர அடி நிலத்தின் மதிப்பு - 60 லட்சம்
36. மதுரை வடக்கு தாலுக்கா - உத்தன்குடி கிராமத்தில் இருக்கும் அழகிரியின் 2.56 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 2 கோடி.
37. மதுரை வடக்கு தாலுக்கா காலாத்திரி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 7.53 ஏக்கரின் மதிப்பு - 2 கோடி.
38. மதுரை தல்லாகுளத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.5 ஏக்கரின் மதிப்பு - 5 கோடி.
39. மதுரை வடக்கு தாலுக்காவில் சின்னப்பட்டி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.54 ஏக்கரின் மதிப்பு - 40 லட்சம்.
40. மதுரை திருப்பரங்குன்றத்தில் அழகிரிக்கு இருக்கும் 12 சென்ட் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.
41. மதுரை தெற்கு தாலுக்காவில் மாடக்குளம் கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 36 சென்ட் நிலத்தின் மதிப்பு - 1 கோடி.
42. மதுரை தெற்கு பொன்மேனி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 18,535 சதுர அடி நிலத்தின் மதிப்பு - 2 கோடி.
43. மதுரை சத்திய சாய் நகரில் 21 சென்டில் உள்ள அழகிரி வீட்டின் மதிப்பு - 2 கோடி.
44. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுக்காவில் தொகரை கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.6 சென்ட் நிலத்தின் மதிப்பு - 60 லட்சம்.
45. மதுரை மாவட்டம் (நாகமலைப் புதுக்கோட்டை) உலியம்குளம் கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 5.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 20 லட்சம்.
46. மதுரை மாவட்டம் மேலமாத்தூர் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 12.01 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.
47. மதுரை, திருமங்கலம் டி.புதுப்பட்டி கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.
48. கொடைக்கானல் மலையில் 82.3 சென்ட் சூழ இருக்கும் காந்தி அழகிரியின் பண்ணை வீட்டு மதிப்பு - 5 கோடி.
49. மாடக்குளம் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 18.5 சென்ட் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.
50. சென்னைக்கு அருகில் சோழிங்கநல்லூரில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 4,200 சதுர அடியின் மதிப்பு - 2.5 கோடி.
51. சென்னை திருவான்மியூரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 3,912 சதுர அடி நிலத்தின் மதிப்பு -
3 கோடி.
52. மதுரை சத்ய சாய்நகரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 4,378 சதுர அடிகொண்ட கல்யாண மண்டபத்தின் மதிப்பு - 3 கோடி.
53. சென்னை, மாதவரம் பால் பண்ணைக்கு அருகில் உள்ள ஆர்.சி.மேத்தா நகரில் இருக்கும் தயாநிதி அழகிரியின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு - 1 கோடி.
54. சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தின் மதிப்பு - 2 கோடி.
55. மதுரை சிவரக்கோட்டையில் இருக்கும் அழகிரிக்கு சொந்தமான தயா இன்ஜினீயரிங் காலேஜ் மதிப்பு - தெரியவில்லை.
56. மதுரையில் 5 கிரவுண்டில் இருக்கும் தயாநிதி அழகிரியின் 8 மாடிகள்கொண்ட 'தயா சைபர் பார்க்’ மதிப்பு - தெரியவில்லை.
57. மதுரை பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் 'தயா டெக்னாலஜிஸ்’ என்ற நகர்ப்புற சொத்தின் மதிப்பு - 1 கோடி.
58. சென்னை அண்ணா சாலையில் இருக்கும் வணிக வளாகம் (கதவு இலக்க எண்: 271-ஏ) மதிப்பு - 5 கோடி. இது கனிமொழிக்குச் சொந்தமானது.
59. 'வெஸ்ட் கேட் லாஜிஸ்ட்டிக்ஸ்’ என்ற கம்பெனியில் கனிமொழிக்கு இருக்கும் பங்கின் மதிப்பு - 20 கோடி.
60. கலைஞர் டி.வி-யில் கனிமொழிக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு - 30 கோடி.
61. ஊட்டியில், வின்ட்ஸர் எஸ்டேட்டில் இருக்கும் 525 ஏக்கர் தேயிலை தோட்டத்தின் மதிப்பு - 50 கோடி. இது கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது.
62. கலைஞர் டி.வி-யில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு - 90 கோடி.
63. அந்தமான் தீவுகளில் இருக்கும் 400 ஏக்கர் கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை
64. கூர்க் (குடகு மலை) காபி தோட்டம், கலைஞர் குடும்பத்துக்குச் சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை.
65. தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெரிய நகரத்திலும் மல்டிப்ளெக்ஸ் கட்ட கலைஞர் குடும்பத்துக்குத் திட்டம் உள்ளது.
66. எஸ்.டி. கூரியர் என்ற கம்பெனிக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் மாறன் சகோதரர்களுடையதே.
67. தமிழ்நாடு ஹாஸ்பிடல்ஸுக்குப் பின்னால் இருக்கும் 'சன் மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனை’ - மாறனின் மகள் அன்புக்கரசிக்கு சொந்தமானது.
68. சாய்பாபாவுக்கும் கருணாநிதியின் குடும்பத்துக்கும் ஏற்பட்ட ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அடுத்து, ஆபட்ஸ்பரி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை மாறன் சகோதரர்கள் கட்ட இருக்கும் மருத்துவமனைக்காக ஒப்படைக்க உள்ளார்கள்.
69. கோவை (புரூக் பாண்ட் சாலையில் இருக்கும் புரூக் ஃபில்ட்ஸ் வளாகத்தின் ஒரு பகுதியை) ஆர்.எம்.கே.வி. கடை அமைந்திருக்கும் ஒரு சொத்து கனிமொழிக்கு சொந்தமானது என்று பொதுமக்கள் நம்புகிறார்கள்.
- இவ்வாறு அந்தப் பத்திரிகை பட்டியல் இட்டுள்ளது. இதைப் பார்த்துத்தான் பிரதமர் பேஸ்தடித்துவிட்டார் என்கிறார்கள்.
''கோபாலபுரம் வீடும் திருவாரூர் மாவட்டம் காட்டூர் கிராமத்தில் உள்ள இடமும் மட்டும்தான் தலைவர் பெயரில் உள்ளது. இதை தலைவரே பகிரங்கமாகச் சொல்லி இருக்கிறார். அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சொந்தங்கள் பல்வேறு தொழில்களை பல ஆண்டுகளாகச் செய்து வருகிறார்கள். அவை எதையும் கணக்கில் கொள்ளாமல் அரசியல் மூலம்தான் இவை வந்தது என்று பொத்தாம் பொதுவாக கணக்கிடுவது தவறானது. பொதுவாக சொத்துகள் வாங்கும் போது விலை குறைவாக இருந்திருக்கும். காலப்போக்கில் ஏறிய விலையின் மதிப்பை வைத்து தற்போது சம்பாதித்ததாகச் சொல்வது பூதாகாரமாக்கப் பயன்படுமே தவிர உண்மை அல்ல!'' என்று தி.மு.க-வினர் இதற்கு விளக்கம் சொல்கிறார்கள்.

காஞ்சனா-சரத்குமாரைக் கொண்டாடும் அரவாணிகள்.
காஞ்சனா படம் ஓடிக்கொண்டிருக்கிறது.நல்ல கூட்டம்.மூன்று அரவாணிகள் சந்தோஷமாக நடனமாடுகிறார்கள்.போஸ்டரில் உள்ள சரத்குமார் முகத்துக்கு திருஷ்டி கழிக்கிறார்கள்.மூவருக்கும் முகத்தில் ஏக சந்தோஷம்.காஞ்சனா அரவாணிகளை பெருமைப்படுத்திவிட்ட்தாக நினைக்கிறார்கள்.
சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவன் ஒருவனை பற்றிய செய்தியை படித்தேன். தனது உடலில் ஏற்பட்ட மாற்றத்தை அறிந்த பின்பு அவன் இந்த முடிவை எடுத்திருக்கிறான்.வீட்டை விட்டு ஓடிப்போய் அரவாணியாக மாறி வாழ்ந்திருக்க வேண்டும்.ஆனால் அவனுக்கு அப்படி வாழ விருப்பமில்லை.அவனுக்கு நேர்ந்த உடல் மாற்றம் இயற்கையானது.
நான்கு பேர் மத்தியில் ஒரு அரவாணியாக மதிப்புடன் வாழமுடியுமென்றால் அவன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்? கேலி,கிண்டலுக்கும் உள்ளாகி ஒரு செக்ஸ் பொம்மையாக மட்டுமே மதிக்கும் சமூகத்தில் வாழ்வதற்கு கொஞ்சம் துணிவு வேண்டும்.பையனுக்கு அவ்வளவு தைரியமில்லை.
கடைகடையாக பணம் கேட்டுச்செல்வதை கடை கேட்பது என்பார்கள்.தொடர்வண்டிகளிலும் இது சகஜம்.பொது மக்கள் இதை ஒரு பெரும் தொல்லையாகத்தான் கருதுகிறார்கள்.சில இடங்களில் பணம் இல்லை என்றால் மிரட்டுவதும் உண்டு.
அரவாணிகள் கல்லாவில் கை வைத்தால் தொழில் நசிந்து போகும் என்று நம்புபவர்கள் இருக்கிறார்கள்.ஒரு கடையில் தொடர்ந்து நான் பார்க்கும் ஒரு விஷயம்.அரவாணி நேராக கடைக்கு வந்தவுடன் பூஜை அறைக்கு சென்றுஒரு ரூபாயோ,இரண்டு ரூபாயோ பணத்தை வைத்து வணங்குவார்.அப்பணத்தை கொண்டு வந்து கல்லாவில் போடுவார்.பின்னர் கடைக்கார்ர் அரவாணிக்கு பணம் கொடுப்பார்.வியாபாரம் செழிக்கும் என்று நம்பிக்கை.
சினிமா ஒரு மிகப்பெரும் ஊடகம்.அனைத்து மக்களையும் சென்றடையும் கலை.பெரும்பாலான தமிழ் சினிமாக்களிலும் கேலியாகவும்,பாலியல் விளையாட்டு பொருளாகவுமே சித்தரிக்கப்பட்டு வந்தார்கள்.நெகடிவ்வாக சித்தரிக்கப்படுவதுஅரவாணிகளுக்கே தங்கள் மீது வெறுப்பை ஏற்படுத்தக்கூடியது. சில காலம் முன்பு நர்த்தகி படம் வந்த்து.தெனாவெட்டு படமும்,பாசிட்டிவாக காட்டியது.
இப்போது காஞ்சனா பெரிய அளவில் தங்களை பெருமைப்படுத்தி விட்ட்தாக கருதுகிறார்கள்.அதிலும் சரத்குமார் எம்.எல்.ஏ நடிப்பை புகழ்ந்து தள்ளுகிறார்கள்.உண்மையில் சிறப்பாக நடித்திருக்கிறார் என்பதை மறுக்க முடியாது.வசூலில் களைகட்டிக்கொண்டிருப்பதாக கேள்வி.ராகவா லாரன்ஸ்க்கும் நல்ல பெயர்.
இந்தியில் ரீமேக் செய்யப்போவதாக தகவல்.அமீர்கான் அதிகம் விரும்புவதாக படித்தேன்.சல்மானுக்கும் ஆசையாம்.முனி-3 பற்றிய ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறாராம் ராகவா லாரன்ஸ்.ஒரு ரவுண்டு கட்டுவார் போலிருக்கிறது.வாழ்த்துவோம்.

Friday, August 5, 2011
பிழைக்க தெரிந்த விஜய்காந்த்,பிழைக்க தெரியாத குஷ்பூ
2011 தேர்தல் முன்புவரை விஜயகாந்து விஜயகாந்துன்னு ஒரு ரோசக்கார நடிகரும் சுயமரியாதை உடைய அரசியல்கட்சி தலைவருமாய் ஒருத்தர் இருந்தார்.. அந்த மனுசனை 2011 தேர்தலுக்கு பின் காணவில்லை...எதிர்கட்சி தலைவர் அளவுக்கு ஜெயலலிதா தன்னை உயர்த்துவார் என அவர் கனவிலும் நினைத்திருப்பாரா என்ன..? அதனால் விக்கித்து போய் அந்த பிரமிப்பிலேயே மனுசர் படுத்துட்டார் போல..
எத்தனையோ கூட்டத்தில் எத்தனையோ முறை பேசியும் ஒரு சீட்தான் கிடைத்தது.,ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்ததும் 29 சீட்டுக்கள் கிடைதது என்றால் ஜெயாவின் சக்தி இப்போது அவருக்கு புரிந்திருக்கும்.
அதே சமயம் கருணாநிதி ஆட்சியில் சீறி திரியும் சிங்கமாய் அவர் கர்ஜித்தது என் நினைவுக்கு வருகிறது..இன்று இந்த ஆட்சியில் எதிர்கட்சி தலைவராக இருந்தும் ஜெயா வை எதிர்த்து பேசாமல் இருக்கும் மர்மம் என்ன..?கருணாநிதி ஆட்சியில் எப்படி வேணாலும் கூவலாம்..அது தடியெடுத்தவன் தண்டல்காரன் கட்சி .ஆனா இங்க பப்பு வேகாது..ராமதாசே தி.மு.க வை விட்டு அரண்டு போய் ஓடி வந்துவிட்டார்.
ராஜதந்திரத்தில் ஜெயலலிதா வை மிஞ்ச ஆள் இல்லை.ஒருவரை கட்டம் கட்டி அடிப்பதில் கைதேர்ந்தவர்.கூட்டணியில் எவ்வளவு பலமாக இருந்தாலும் கோபம் வந்துவிட்டால் அவர் நடவடிக்கை உக்கிரமாக இருக்கும்.
இதுதான் விஜயகாந்தின் பயத்துக்கு காரணம்....தன் கட்சி வளர வேண்டுமானால் ,ஜெயா ஆட்சியில் மவுனமாக இருப்பதே ஒரே வழி என்பது அவர் தெளிவாக புரிந்திருக்கிறார்.அது மட்டுமில்லாமல் இன்னும் அஞ்சு வருசத்துக்கு ஜெயாவை ஒண்ணும் செய்யமுடியாது என்ற காரணமும் இருக்கலாம்....கருணாநிதி கட்சி மூழ்கும் கப்பல்.இனி நிரந்தர எதிர்கட்சி தலைவர் தாம் தான் என்பதில் கேப்டன் தெளிவாக இருக்கிறார்.
----------------------------------------
கேஸ் சிலிண்டர் விலையையும் இனி எண்ணை நிறுவனங்களே கவனித்துக்கொள்ளும்...என திருவாய் மலர்ந்திருக்கிறார்...மத்திய அமைச்சர் என்ன கொடுமை இது...பெட்ரோல் விலையை மாதம் ஒரு விலை உயர்த்தும் எண்ணை நிறுவனங்கள் கையில் உயிர்நாடியான சிலிண்டர் விலையை உயர்த்தும் உரிமத்தை கொடுத்தால் என்னாகும் 1000 ரூபாய் சொன்னாலும் வாங்க வேண்டி வருமே..இது ஒண்ணு போகும்..காங்கிரஸ் இந்தியா முழுவதும் உள்ள தாய்குலங்களின் வாக்கு வங்கியை பாரதிய ஜனதா வுக்கு மாற்றுவதற்கு....இனி எக்காலத்திலும் தி.மு.க போலவே காங்கிரசும் ஆட்சியை பிடிக்க முடியாது..
---------------------------------------------
ராசாத்தியம்மாளின் கணக்குபிள்ளையை கைது செய்துவிட்டார்கள்...இனி ராசாத்தியம்மாவும் கலைஞர் கூடவேதான் இருப்பார்..அவ்வளவு சோதனையான நேரம் அவருக்கு..சும்மாவா நிலமோசடி வழக்கு என்ன சாதரணமா...அதிலும் அந்தம்மா...ஹிஹி....கலைஞர் வீட்டை சுற்றி சுற்றி வரும் நிலமோசடி வழக்குகள்..எந்த நேரமும் வீட்டுக்குள் நுழையலாம்....
-----------------------------------------
தி.மு.க வின் சத்தில்லாத ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கைது ஆகியிருக்கிறார் முன்னாள் குலுக்கல் நடிகை குஷ்பூ....அரசியல் பாலபாடம் கற்க கருணாநிதியிடம் வந்த அவர் அரசியல் வரலாற்றில் முதன்முறையாக கைது ஆகியிருக்கிறார் என நினைக்கிறேன்..ஆனா அம்மணி நல்ல ராசியானவர் தான் இவர் அந்த கட்சியில் சேர்ந்தபிந்தான் அந்த கட்சி உருப்படாம போச்சி....இப்ப கைது ஆகியிருக்கிறார்..இனி முக்கிய தலைவர்களும் கைது ஆவாங்களோ என்னவோ....

Subscribe to:
Posts (Atom)