நாளை, ஜூலை 24ம் தேதி மாலை கோவையில் நடக்கும் பொதுக்குழுவின் தீர்மான நகல் தமிழ் லீடருக்கு ரகசியமாக கிடைத்துள்ளது. இதை அனுப்பி வைத்த ‘உடன்பிறப்புக்கு’ நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இத்தீர்மானங்களை பிரத்யேகமாக வெளியிடுவதில் தமிழ் லீடர் பெருமை கொள்கிறது.
தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள்:
1. 120 தொகுதிகளில் திமுக கூட்டணி ஜெயிக்கும் என்றும், 2-ஜி வழக்கில் கனிமொழிக்கு எந்த ஆபத்தும் வராது என்றும் இறுதி வரை நம்பிக்கை அளித்து, இன்று தி.மு.க.வை முச்சந்தியில் நிறுத்தியிருக்கும் கூடுதல் டிஜிபி ஜாபர் சேட்டுக்கு இந்தப் பொதுக்குழு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
தேர்தலில் தி.மு.க. தோற்றதற்கான காரணங்களை நன்றாக ஆராய்ந்த போது, தேர்தல் நெருங்கும் நேரத்தில் பெரும்பாலான ஊடகங்கள் உண்மைச் செய்திகளை வெளியிட்டதே காரணம் என்பது தெரிய வந்தது. நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றமே என்று சொல்லும் இதழைப் போல இல்லாமல், மற்ற ஊடகங்கள் திமுகவின் ஊழல்களைப் பற்றி தொடர்ந்து எழுதி வந்ததால் மக்கள் மனதில் தி.மு.க. மீது வெறுப்பு உண்டாகியது. இதற்கு காரணமான அனைத்து ஊடகங்களையும் இந்தப் பொதுக்குழு கடுமையாக கண்டிக்கிறது.
< நில அபகரிப்பு மோசடி வழக்கில் கைது நடவடிக்கைகள் தொடங்கினால் உத்தேசமாக எடுத்த கணக்கின் படி, வெறும் 18 தி.மு.க. உறுப்பினர்கள் மட்டுமே மிஞ்சுவார்கள் என்பதால், நில அபகரிப்பு பிரிவு சட்டத்தை வாபஸ் வாங்க வேண்டும் அ.தி.மு.க. அரசின் முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களை மன்றாடி மீண்டும் மீண்டும் மன்றாடி இந்த பொதுக் குழு கேட்டுக் கொள்கிறது.
4. நில அபகரிப்பு சட்டப் பிரிவின் கீழ் முன்னாள் அமைச்சர்கள் கோசி.மணி,
வெள்ளக்கோவில் சாமிநாதன், பாளையங்கோட்டை மைதீன்கான் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யாமல் இருந்ததற்காக மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் அம்மா அவர்களுக்கு இந்தப் பொதுக்குழு தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
5. காவல்துறை தனது கடமையை சரிவரச் செய்து, நில அபகரிப்பு மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்திருந்தால், இந்தப் பொதுக்குழுவில், திமுக தலைவரும், பொதுச் செயலாளரும் மட்டுமே இருந்திருப்பார்கள். அவ்வாறு செய்யாத காரணத்தால் தான் இந்தப் பொதுக்குழுவுக்கு இத்தனை உறுப்பினர்கள் வருகை தர முடிந்தது. இதற்காக தமிழக காவல்துறைக்கு பொதுக்குழு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
6. அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரசுடன் சேர்ந்து போட்டியிட்டால் மீண்டும் கடும் தோல்வியை சந்திக்க நேரிடும் என்பதாலும், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடக் கூடிய திமுக வேட்பாளர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் இருப்பதனாலும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடாமல் அதிமுகவுக்கும் அதன் கூட்டணிக்கும் விட்டுக் கொடுக்கிறோம் என்று பொதுக்குழு தீர்மானிக்கிறது.
karunanidhi-in-pattu-vaetti-sattai7. தென் மண்டல அமைப்பை மாற்றக் கூடாது என்று அழகிரிக்கு ஆதரவாக பேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் வேறு கட்சிக்கு போக மாட்டார்கள் என்று உறுதி கொடுத்ததால் தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவியை தொடர்ந்து நீட்டிக்க இந்தப் பொதுக்குழு தீர்மானிக்கிறது.
8. ஒரு குடும்ப ஆதிக்கத்தால் திமுக தோற்கவில்லை என்று பேசிய 1823 பொதுக்குழு உறுப்பினர்களுக்கு திமுக தலைமை நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
9. நமது கட்சித் தொண்டர்கள் மீதும் நமக்கு உறுதுணையாக இருக்கும் சன் டிவி நிறுவனத்தார் மீதும் தொடரப்படும் வழக்குகளுக்கான செலவுகளை மத்திய அமைச்சர் திரு.ஜெகத்ரட்சகன் அவர்களும், கோவை லாட்டரி அதிபர் மார்ட்டின் ஆகியோர் ஏற்றுக் கொள்வதாக அளித்த வாக்குறுதிக்கு நன்றி தெரிவிக்கப்jayafast படுகிறது.
10. திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் பதவி தனக்கு வேண்டாமென்றும் திகார் சிறையில் தொடர்ந்து இருக்க சம்மதம் தெரிவித்தும் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா கடிதம் அனுப்பியிருப்பதால், அப்பதவியில் இருந்து அவர் விலக்கப்படுகிறார்.
தலைவர் கலைஞருக்கு கண்ணுக்கு கண்ணாக இருந்து பணிவிடை செய்து வரும் நித்தி என்கிற நித்யானந்தத்துக்கு அந்தப் பதவியை வழங்க பொதுக்குழு தீர்மானிக்கிறது.
11. தேர்தல் முடிவுகள் வெளியான அன்று திமுகவின் முக்கியத் தலைவர்கள் அனைவரும், கரை வேட்டிகளை அவிழ்த்து வைத்து விட்டு, மாறு வேடத்தில் சுற்றியபோதும், திமுக சார்பாக அன்று தொலைக்காட்சிகளில் பேட்டியளித்த திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் குஷ்பூ அவர்களுக்கு இப்பொதுக்குழு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
12. இந்தியா முழுவதிலும் இருக்கும் கோயில்களை மத்திய அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். பின்னர் அக்கோயில்களை நிர்வகிக்க இந்து அறநிலையத்துறை ஏற்படுத்தி, அதற்கு ஓர் கேபினட் அந்தஸ்தில் அமைச்சர் பதவி உருவாக்க வேண்டும். அப்பதவியை தி.மு.க.வுக்கு தர வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சோனியா காந்தியை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
13. வைகைப் புயல் வடிவேலுவுக்கு சிறப்பு அழைப்பு அனுப்பியும் அவருக்கு அழைப்பிதழ் போய் சேரவில்லை. மேலும், அவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தும் நடிக்க மறுத்து வருவதாக தெரிகிறது. ’தினந்தோறும் வடிவலு’ என்ற தொடர் கலைஞர் டிவியில் அவருக்காக கொண்டு வர வேண்டும் என்றும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.(அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்களின் விசில் சத்தம் விண்ணை பிளக்கிறது)
14. தி.மு.க.வின் தலைவராக இருந்து வரும் கலைஞருக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். அதற்கு பொதுக்குழு உறுப்பினர்கள் ஒருவர் கூட ஆதரவு தெரிவிக்கவில்லை. ஸ்டாலின் மனைவி துர்கா கூட, இதற்கு ஆதரவு தரவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. இதனால் கலைஞரே தொடர்ந்து தலைவராக நீடிப்பார் என்று இந்தப் பொதுக்குழு ஏகமனதாக தீர்மானிப்பதோடு, 2016ல் கருணாநிதியை ஆறாவது முறை முதல்வராக அமர்த்தியே தீர்வது என்று பொதுக்குழு தீர்மானிக்கிறது. (பலத்த கைத்தட்டல். அக்கைத்தட்டல் 27 நிமிடங்கள் 18 வினாடிகள் நீடித்தது).
-இந்த 14 தீர்மானங்கள் உள்பட 20க்கும் மேற்பட்ட தீர்மானங்களை நிறைவேற்ற பொதுக்குழு முடிவு செய்திருப்பதாக நமக்கு ஓர் உடன்பிறப்பு, அதன் விவரங்களை அப்படியே அனுப்பி வைத்திருக்கிறார்.
இத்தீர்மானங்கள், அப்படியே தி.மு.க. இயற்றப்போகும் தீர்மானங்களுடன் ஒத்துப்போனால், அது மகிழ்ச்சி அளிக்கக் கூடியதே. பொதுக்குழுவுக்கு முன்பாக, தீர்மானம் கசிந்துவிட்டதே, என்று நினைத்து தி.மு.க. தலைமை அதை மாற்றிவிட்டாலும் தமிழ் லீடருக்கு மகிழ்ச்சியே.
Sunday, July 24, 2011
விகடன் குழுமத்துக்கு நன்றியுடன்!
ஒரு காம்பவுண்டு கொட்டடிக்குள் இருப்பது ஒன்றைத்தவிர திஹார் சிறையில் வேறு குறை ஏதுமில்லாததனால் ஆ.ராசாவுக்குத் தெனா வெட்டும்,நக்கலும் கொஞ்சம் கூடக் குறையவில்லை போல!
மனிதர் சிறையில் இருப்பதைக் குறித்து எந்த சலனமும் இல்லாமல் இருக்கிறார்!கம்பி எண்ணுவது உறுதியானால், தான் மட்டுமே அல்ல, கூடவே பெட்டிகளை வாங்கிக் கொண்ட பேர்வழிகளும் தன்னுடன் கூடவே வரவேண்டியிருக்கும் என்பதை அவ்வப்போது குறிப்பால் உணர்த்திவிட்டு அமைதியாக இருக்கிறார்.
எல்லாமே பிரதமருக்குத் தெரிந்து, அவருடைய ஒப்புதலுடன் தான் நடந்தது என்று ஸ்பெக்ட்ரம் ஊழலில் பிரதமரையும் மாட்டி விடுகிற மாதிரித் தான், அவருடைய தற்காப்புவாதமாக இருக்கும் என்பதை அடிக்கடி கோடி காட்டி விட்டு அமையாதிவிடுகிறார்.கனிமொழிபோல அழுது புலம்புவதில்லை!
பிரதமரைக் காப்பாற்றுவதற்காகவோ என்னவோ, கடந்த சில நாட்களாக சி பி ஐ எடுத்து வைக்கும் வாதங்கள், ராஜா பிரதமரை நம்ப வைத்து, முடிவுகளைத் தன்னிச்சையாக எடுத்தார், தனக்கு வேண்டப் பட்ட நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்தார், அமைச்சரவைக் குழு கூடி எடுக்கவேண்டிய முடிவுகளைத் தானே தன்னிச்சையாக எடுத்தார், பிரதமரிடமிருந்து உண்மையை மறைத்தார் என்ற ரீதியில் இருக்கின்றன. இரண்டு நாட்களுக்கு முன்னாள் சிபிஐ, நீதிபதி அனுமதியுடன் ஆ.ராசாவை மறுபடி விசாரித்தது. வருமானவரித்துறை மறுபடியும் விசாரிக்க அனுமதிக்கப் பட்டிருக்கிறது.
சம்மரி ஷீட் என்ற ரகத்தில் சிபிஐ, ஆ.ராசா தகுதி இல்லாத நிறுவனங்களுக்கு லைசன்ஸ் அளித்தது , ஸ்வான் நிறுவனம் அனில் அம்பானியின் முகமூடி நிறுவனம்,அரசுக்கு இழப்பு ஏற்படும் விதத்தில் முடிவுகளை மேற்கொண்டது, டிபி ரியாலிடி நிறுவனம் கலைஞர் தொலைக்காட்சிக்குப் பணம் கொடுத்தது, அப்புறம் அது திருப்பிச் செலுத்தப்பட்டதாகக் கூறப்படுவது எல்லாவற்றையும் தொகுத்து ஒரு ஆவணமாகத் தாக்கல் செய்திருக்கிறது.
சிபிஐ விசாரணையை, இன்றைக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்டிருந்தபோது, சந்தடிசாக்கில் நக்கல் செய்திருக்கிறார் ஆ.ராசா! சிபிஐ வழக்கு நாளுக்கு நாள் பலவீனமடைந்து வருகிறதாம்!
சிபிஐ தரப்பு வழக்கறிஞர் லலித் பேசுவது சரியாகக் காதில் விழவில்லை என்று குற்றம் சாட்டப் பட்டவர்கள் சார்பில் சொல்லப் பட்டபோது, சந்தடிசாக்கில் ஆ.ராசா புகுந்து, இந்த கமென்ட் அடித்திருக்கிறார். யுனிடெக் நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "திரு லலித்! நேற்றைக்காவது கொஞ்சம் சத்தமாக பேசினீர்கள் இன்றைக்கு உங்கள் குரல் மிகவும் தணிவாக இருக்கிறது" என்று சொன்னபோது, ஆ.ராசா இடைமறித்து, "அது நாளுக்கு நாள் அவர்கள் தரப்பு பலவீனமாகிக் கொண்டிருப்பதால் தான்!" என்று சொன்னாராம்.
நுணலும் தன் வாயால் கெடும் என்ற கதையாகிவிடப்போகிறது!!
---------------------------------------------------------------------------------------
******
கம்பல்சரி ரிடைர்மென்ட்டில் இருக்கும் சுர்ஜீத் சிங் பர்னாலாவிடம் திமுகவினர் மனுக்கொடுத்து இன்னொரு கேலிக் கூத்தை இன்றைக்கு அரங்கேற்றியிருக்கிறார்கள்!
கோவை ராசியே இல்லை, பொதுக்குழு திருப்பூருக்கு மாற்றப்படுமா, தொடர்ந்து கைதுகள், புறக்கணிக்கப்போவதாக அழகிரி தரப்பில் இருந்து மிரட்டல்,இப்படி வரிசையாக வதந்திகள் கிளம்பிக் கொண்டிருந்தாலும், திமுக பொதுக்குழு நாளை மறுநாள் கோவையில் கூட இருப்பதாகத்தான் இந்த நிமிடம் வரை செய்திகள் சொல்கின்றன.
எப்போதும்போல, காங்கிரசுடன் உறவு முறிவு, ஆட்சிக்கு ஆதரவு வாபஸ், உள்ளாட்சித் தேர்தலைத் தனியாகவே சந்திப்பது (இவர்கள் இப்படி முடிவெடுப்பதற்கு முன்னாலேயே, பாமக உட்பட அத்தனை கூட்டாளிகளும்,உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் கூட்டு இல்லை என்று சொல்லிவிட்டார்கள்!!}என்று டமாரங்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
ஆட்சியில் இருந்தபோது, டமாரங்கள் சத்தத்தில் கேட்பவர் காது கிழியும்!இப்போதோ, டமாரங்களே கிழிந்து கிடக்கின்றன!
இந்த வார ஆனந்தவிகடன் இதழில் வெளியாகியிருக்கும் செய்திக் கட்டுரை நாட்டு நடப்பை நன்றாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறது! விகடன் குழுமத்துக்கு நன்றியுடன்!

Friday, July 22, 2011
இதுதாண்டா ஜெ. போலீஸ்!--------- ஆயிரமாயிரம் புகார்கள்... அதிரடிக் கைதுகள்
அடி உதவுற மாதிரி அண்ணன், தம்பிகூட உதவ மாட்டான்’ என்ற பழமொழிதான் ஜெயலலிதாவின் இன்றைய புது வழி!
இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆளும் கட்சியாக இருந்த தி.மு.க-வை - இன்றும் மத்தியில் ஆளும் கட்சியின் கூட்டணி மந்திரி சபையில் இடம் பெற்றுள்ள தி.மு.க-வை - 'லப்டப்... லப்டப்...’ என்று திகைக்கவைக்க லத்தியே போதும் என்று முடிவெடுத்துவிட்டார் முதல்வர்.
'இன்னும் 30 நாட்களில் போலீஸ் ராஜ்யம்’ ஆரம்பமாகப் போகிறது என்று ரெட் சிக்னல் காட்டுகிறார் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர். இதற்கென இட்டுக்கட்டியோ... பொய்யாகப் புனைந்தோ, வழக்குகளை அவர் பாய்ச்சப்போவது இல்லை.
தி.மு.க-வினர் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி, யார் யாரை எல்லாம் கடந்த ஐந்து ஆண்டுகளில் சீண்டி னார்களோ... அந்த நபர்களைவைத்தே திருப்பி அடிக்கவிடுவதுதான் ஜெயலலிதாவின் திட்டம்.
சன் டி.வி. முதல் நில மோசடி வரையிலான ஜெ... மு.க... ரிலே ரேஸ் இதோ!
சன் நோக்கி 'கன்’!
'சன் டி.வி-க்கும் தி.மு.க-வுக்கும் சம்பந்தம் இல்லை’ என்று கருணாநிதி சொன்னால்கூட, அதை ஜெயலலிதா ஏற்கத் தயாராக இல்லை. கருணாநிதிக்கான ஆக்சிஜனாக சன் டி.வி-யைத்தான் ஜெ. நினைக் கிறார். ஆட்சிக்கு வந்ததுமே அவர் அசைத்துப் பார்க்க நினைத்தது இவர்களைத்தான்.
''போன தடவை, கருணாநிதி கைதைத் தமிழகம் முழுக்கப் பரப்பி, அனுதாபம் தேடவைத்தது இவர்கள்தான். எனவே, இந்தத் தடவை என்ன நடந்தாலும் தங்கள் மீடியா பலத்தால் இதையே செய்வார்கள். எனவே, அவர்களை முதலில் தட்டிவைக்க அம்மா நினைக்கிறார்'' என்கிறார் அமைச்சர்களில் ஒருவர். அதனால்தான், முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷனைப் புதுப்பிக்கப் பேசினார். டி.வி. தொழிலுக்கு கேபிள் உயிர் என்பது ஜெ. கணக்கு!
அடுத்து 'சன் இன் லா' குடும்பத்தின் பக்கமும் ஜெ. முகம் திரும்பியது. சினிமாக்காரர்கள் மொத்தப் பேரையும் சினம்கொள்ளவைத்ததாக சன் பிக்சர்ஸ் மீது புகார் கொடுக்கப் புற்றீசல் மாதிரி எத்த னையோ தயாரிப்பாளர்கள் புறப்பட்டார் கள். சேலம் கந்தன் ஃபிலிம்ஸ் செல்வராஜ் முதல் 'மாப்பிள்ளை’ ஹித்தேஷ் ஜபக் வரையில் சன் பிக்சர்ஸ் ரிலீஸ் செய்த பல படங்களுக்கு எஃப்.ஐ.ஆர். போடுகிறார்கள். இன்றைய தின நிலவரப்படி... சக்சேனா சிறையில் இருந்து வெளியே வருவதற்கான வாய்ப்பு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியவில்லை. இது கலாநிதி மாறனையும் குறிவைக்கும் சுழலாகவே சுற்ற ஆரம்பித்து உள்ளது. கடந்த 13-ம் தேதி 'கலைஞர் கருணாநிதி நகர்’ காவல் நிலையத்துக்கு அவர் வந்திருக்க வேண்டும். 26-ம் தேதி வரை அவருடைய வக்கீல்கள் அவகாசம் கேட்டு உள்ளார்கள். '26-ம் தேதி வரை பார்ப்போம்’ என்கிறார் அந்தப் பகுதி டெபுடி கமிஷனர். அதற்குப் பிறகு?
மதுர... குலுங்கக் குலுங்க!
'அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த அரை நாளில் அழகிரியிடம் இருந்து மதுரை மீட்கப்படும்’ என்று மதுரையில் நின்று சபதம் போட்ட ஜெயலலிதா, அதற்கான ஆரம்ப கட்ட வேலைகளை டெல்லியில் இருந்து தொடங்கினார். அழகிரி மீதான 59 வழக்குகளுக்கான ஆவணங்கள், தமிழக அரசிடம் இருந்து டெல்லி மேலிடத்துக்குத் தரப்பட்டு உள்ளன. அதில் 17 வழக்குகள் அழகிரி நேரடியாகச் சம்பந்தப்பட்டவை என்கிறார்கள். மற்ற வழக்குகள் அழகிரியின் பெயரைச் சொல்லிக்கொண்டு, அடியாட் கள் நடத்திய அராஜகங்கள். அழகிரி முதலமைச்சர் என்றால், 'பொட்டு’ சுரேஷ் துணை முதல்வர் என்பதில் தொடங்கி, 'அட்டாக்’ பாண்டி வரை அத்தனை பேர் பெயரையும் ஜெயலலிதா மேடையில் வாசித்தார். இந்த நபர்களை வளைக்க கமிஷனர் கண்ணப்பன் தலைமையில் சிறப்புப் படை போடப்பட்டு உள்ளது. முதல் வழக்கில் 'அட்டாக்’ பாண்டி கைதாகிவிட்டார். மதுரை தினகரன் நாளிதழ் தாக்குதல் தொடங்கி... வெளிச்சத்துக்கு வராத காரியங்கள் வரை எல்லாமே ரத்த சரித்திரம். 'மொத்தத்தையும் மதுரையில் ஸ்பெஷல் கோர்ட் போட்டு விசாரிக் கலாமா?’ என்ற யோசனை யில் இருக்கிறார் ஜெ..
கொலை கொலையாய்...
இன்னும் மர்மமாக இருக் கும் சில மரணங்கள், தி.மு.க. அமைச்சர்கள் சம்பந்தப் பட்டதாகவே இருக்கின்றன. அதில் முக்கியமானது திருச்சி இரட்டைக் கொலை. ரியல் எஸ்டேட் புரோக்கர் சகோ தரர்களில் ஒருவர் விஷம் குடித்தும் இன்னொருவர் உயிரோடு எரிக்கப்பட்டும் கொல்லப்பட்ட விவகாரத் தில், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவருடைய தம்பி ராம ஜெயம் இருவர் பெயரும் பரவிக்கிடக்கிறது. இதில் சம்பந்தப்பட்டவராகச் சொல்லப்படும் திருச்சி மாவட்டத் தி.மு.க. துணைச் செயலாளர் குடமுருட்டி சேகர்... கஞ்சா வழக்கில் கைதாகி உள்ளார். இன்னும் பல தி.மு.க-வினரையே சுற்றிச் சுற்றி விசாரிக்கிறது போலீஸ். திருச்சி எல்லைக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம், தனது சொந்தத் தொகுதி என்பதால், இந்தக் கொலையை சீரியஸாகப் பார்க்கிறார் ஜெ.
சேலம் குப்புராஜ் குடும்பத்தில் ஆறு பேர் கொலையானதில், முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் உறவினர் பாரப்பட்டி சுரேஷ் கைதானார். அவரை ஜெயிலுக்குச் சென்று சந்தித்து, சர்ச்சையில் சிக்கினார் ஆறுமுகம். சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இப்போது துரித விசாரணையில் இறங்கி இருக்கும் நிலையில், ஆறு பேர் கொல்லப்பட்ட வீடு மர்மமான முறையில் எரிக்கப்பட்டுள்ளது எதிர்பாராத திருப்பம். தடயங்களை மறைக்க நடந்ததாகவே இதை சி.பி.சி.ஐ.டி. பார்க்கிறது.
முன்னாள் அமைச்சர் ஈரோடு என்.கே.கே.பி.ராஜா, சிவபாலன் என்பவரைத் தாக்கிய வழக்கில் கீழ் நீதிமன்றம் விடுதலை செய்தாலும், மேலே கொண்டுசெல்ல இன்றைய அரசு முயற்சிக்கிறது. தஞ்சைப் பகுதி தி.மு.க. மாவட்டச் செயலாளர் கொலையிலும் மர்மம் இன்னும் விடுபட வில்லை. இப்படிப் பல முடிச்சுகளை அவிழ்க்க அவசர உத்தரவுகள் போட்டு இருக்கிறார் ஜெ!
மந்திரி... தந்திரிகள்!
வருமானத்துக்கு அதிக மாக சொத்துச் சேர்த்த வழக்கு, முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் தி.மு.க. அமைச்சர்கள் கே.என். நேரு, துரைமுருகன், பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள் ளிட்ட பலர் மீது போடப்பட்டது. அடுத்து, ஆட்சி மாறியது. விசாரணைகள் முடிந்து தீர்ப்பும் வந்து சிலர் விடுதலை ஆனார் கள். இந்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் டெல்லி உச்ச நீதி மன்றத்தின் கதவுகளைத் தட்டப்போகின்றன. மேலும், 2006-11 ஆண்டு கால ஆட்சியிலும் இதுபோல் வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்தவர்கள் பட்டியலைத் தயாரிக்கச் சொல்லி இருக்கிறார் முதல்வர்.
மெகா கல்லூரிகள், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள், சாராய ஆலைகள், மணல் குவாரிகள், தொழிற்சாலைகள் எனப் பட்டவர்த்தனமாக உருவாக்கிக்கொண்ட 9 அமைச்சர்கள் மீது முதல் வரிசையில் வழக்குகள் போடப்பட உள்ளன. அதற்கான ரெய்டு நாட்கள் குறிக்கப்பட உள்ளன.
பினாமிகள் ஜாதகம்...
கருணாநிதியின் குடும்பத்தினர் மற்றும் முன்னாள் அமைச்சர்களின் பினாமிகள் பெயர்கொண்ட முதல் பட்டியல் தயாராகி உள்ளது. 100 கோடிக்கு மேல் சம்பாதித்தவர்கள் என்ற அடிப்படையில் தயாராகும் இந்தப் பட்டியலில், சென்னை, மதுரை மாநகராட்சி கவுன்சிலர்கள் சிலர் பெயர்களும் அடக்கம்.
தி.மு.க. வேஷம் போட ஆரம்பித்த கான்ட்ராக்டர்கள் முதல் இவர்களிடம் பணம் வாங்கி வட்டிக்குவிட்ட கோடீஸ்வர மார்வாடிகள் சிலர் வரை இந்தப் பட்டிய லில் வருகிறார்கள். தேர்தலுக்கு முந்தைய மாதத்திலேயே இவர்களில் சிலர் வெளி நாடுகளுக்குச் சென்று செட்டில் ஆகி விட்டார்கள். அறிவாலயத்தின் கணக்கு வழக்குகளைப் பார்த்த நபர் ஒருவரும் இந்தப் பட்டியலில் வருகிறார். விரக்தியில் இருக்கும் தி.மு.க. புள்ளிகள் மூலமாகவே இவர்கள் ஜாதகம் திரட்டப்பட்டு வருகிறது!
பணப் பாதை அடைப்பு!
எதிர்க் கட்சியாக இருக்கும்போதே ஜெயலலிதா கண்காணித்தது இ.டி.ஏ. ஸ்டார் குழுமத்தைத்தான். கருணாநிதி முதல்முறை முதல்வராக இருந்த காலம் முதல் இன்று வரை அவருக்கும் இந்தக் குழுமத்துக்குமான தொடர்புகளை வெளிப்படையாக ஜெ. போட்டு உடைத்து வந்தார். ஓமந்தூரார் அரசினர் தோட்டத் தில் புதிய தலைமைச் செயலகம் கட்டியது முதல் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் மூலமாகச் செய்வது வரை அனைத்துமே இந்த குரூப்தான் செய்து வருகிறது. ''அரசுப் பணம் இந்த குரூப் மூலமாக வெளியே போய்... மீண்டும் கருணாநிதி குடும்பத்துக்கு வருகிறது. அதைவைத்துத்தான் இவர்கள் படம் எடுக்கிறார்கள்'' என்றார் முதல்வர்.
எனவே ஜெ. செய்த முதல் காரியம், புதிய தலைமைச் செயலகத்தின் கட்டுமானத்தை நிறுத்தி விசாரணை கமிஷன் போட்டார். இனி இ.டி.ஏ-வுக்குப் போட்ட பணமும் கிடைக்காது. வர வேண்டியதும் வராது. கலைஞர் காப்பீட்டுத் திட்டமும் நிறுத்தப்பட்டது. ஆண்டுக்கு 750 கோடி வரை இதுவரை தரப்பட்டு வந்த பிரிமியம் இனி கிடைக்காது. இந்த ஒரு திட்டத்துக்காகவே அந்த நிறுவனம் வேலைக்கு எடுத்த 1,200 பேரை ஜூலை 6-ம் தேதி வீட்டுக்கு அனுப்பிவிட்டது. இவர்களைப்போலவே 'லம்ப்பாக’ லாபம் அடைந்த நிறுவனங்களைக் கண்டுபிடித்து பணப் பாதையை அடைக்க நினைக்கிறார் ஜெ.
லோக்கல் மனிதர்களுக்குக் கொக்கி!
மந்திரிகள் வி.ஐ.பி-க்களைத் தாண்டி குறிப்பிட்ட ஏரியாவில் செல்வாக்காக இருக்கும் தி.மு.க. பிரமுகர்களை அதிக ஆபத்தாக ஜெ. பார்க்கிறார். நிலபுலன்கள், கைவச கரன்சி மூலமாகக் கட்சியை உயிர்ப்புடன் வைத்திருக்கும் இந்த இரண்டாம் கட்ட மாவட்டப் பிரமுகர்கள்... அடுத்து வரும் ஆண்டுகளில் செல்வாக்குப் பெற்று, கட்சிப் பதவிகளைப் பிடிக்கப்போகிறார்கள். வரும் உள்ளாட்சித் தேர்தலில்கூட இவர்கள்தான் முக்கியப் பங்கு வகிப்பார்கள். இவர்கள் மீதான புகார்கள் தூசி தட்டப்படுகின்றன.
'உங்கள் ஊர் லோக்கல் தி.மு.க. பொறுப்பாளர்கள் செய்யும் முறைகேடுகளை தலைமைக் கழகத்துக்கு எழுதுங்கள்’ என்று சில ஆண்டுகளுக்கு முன் ஜெ. சொல்லி... மலையளவு கடிதங்கள் குவிந்தன. இந்தக் கடிதங்களை ஆதாரமாக வைத்து இவர்களுக்குக் கொக்கி போடப் போகிறார்கள்.
குடும்ப டார்கெட்!
கடந்த முறை முதல்வராக வந்ததும்... ஒருநாள் நள்ளிரவில் கருணாநிதியைத் தூக்கியதுபோன்ற சம்பவம் இனி தேவை இல்லை என்று நினைக்கிறாராம் ஜெ.
ஆனால், அவருடைய குடும்பப் பிரமுகர்கள் 10 பேருக்கு நிச்சயம் தலைவலி காத்து இருக்கிறதாம். ஸ்டாலின், அழகிரி, ராஜாத்தி அம்மாள், கலாநிதி மாறன், அழகிரியின் மருமகன்களான வெங்கடேசன், விவேக், ஸ்டாலின் மகன் உதயநிதி, அழகிரி மகன் துரை தயாநிதி... என்று பெயர்களும் சொல்லப்படுகின்றன. இதில் இடம் பெற்ற கனிமொழி, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கி, சிறையில் இருக்கிறார். தயாநிதியும் சர்ச்சைச் சுழலில் சிக்கிவிட்டார். மீதியுள்ள எட்டு பேருக்கும் வலை விரிக்கப்பட்டுள்ளனவாம்.
வளைக்கப்பட்ட மண்ணும் மனிதனும்...
தி.மு.க-வை முடக்க ஜெ. கண்டுபிடித்த அபார வழிதான், நில மோசடி வழக்குகள். போலீஸ், வருவாய் மற்றும் பத்திரப் பதிவு அதிகாரிகள், உள்ளூர் ரவுடிகள் மூவரையும் துணைக்கு வைத்துக்கொண்டு தமிழ்நாடு முழுவதும் தட்டிப்பறிக்கப்பட்ட நிலங்கள் ஏராளம். அதிகாரத்தில் இருப்பதால் புகார் சொல்ல முடியாமல் தவித்தவர்கள், ஆளும் கட்சி மாறியதும் துணிச்சலாக வெளியில் வந்தார்கள். மே 13 முதல் ஜூலை 1-ம் தேதி வரை மட்டும் தமிழகம் முழுவதும் 1,449 புகார்கள் வந்தன. இதில் சம்பந்தப்பட்டவர்கள் பெரும்பாலும் தி.மு.க. பிரமுகர்கள். இந்த நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்கவே சிறப்புப் பிரிவைப் போட்டுவிட்டார் ஜெ. 'நிலம் அபகரித்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். நிலத்தை இழந்தவர்களுக்கு நிலம் கிடைக்கும்’ என்று கொடுத்த வாக்குறுதி, பலருக்கும் பால் வார்த்தது. தி.மு.க-வினருக்கோ வேர்த்தது. கோவை மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் ஆனந்தன், திருச்சி கோ.அபிஷேகபுரம் அறிவுடை நம்பி தொடங்கி, கொடைக்கானல் நகர சபைத் தலைவர் முகமது இப்ராஹிம் என கைதுப் பட்டியல் நீள்கிறது. தி.மு.க-வினர் கதறலை அதிகப்படுத்தி இருப்பதும் இது தான்.
வதந்திகளை நம்புங்கள்!
புதருக்குள் கல்லைப் போட்டால், உள்ளே இருக்கும் பூச்சிகள் எல்லாம் வெளியே வரும் என்பார்கள். அது மாதிரியே... இவரைக் கைது பண்ணப் போறோம்... அவரை அமுக்கப்போறோம்... என்பது மாதிரியான வதந்திகளைக் கிளப்பிவிட்டு, அதனால் வெளியே வரும் தகவல்களை ரிக்கார்டு செய்ய ஆரம்பித்து உள்ளது போலீஸ்.
தி.மு.க. புள்ளிகளைச் சுற்றி வந்த கரும்புள்ளிகள் அத்தனை பேரைப்பற்றியும் இப்படிப்பட்ட வதந்திகள் திட்டமிட்டே பரப்பப்படுகின்றன. இதனால் அவர்கள் திகிலடைந்து இருக்கிறார்கள்.
அறிவாலயத்துக்கும் கருணாநிதிக்கும் 'கைது’ வதந்திகள்தான் அதிகமாக வருகின்றன. இதைக் கேள்விப்பட்டு சூடான கருணாநிதி, 'தி.மு.க. வக்கீல்கள் என்ன ஆனார்கள்?’ 'வழக்கறிஞர் அணி என்ற ஒன்று இருக்கிறதா?’ என்று கொந்தளித்துள்ளார்.
ஆளும் கட்சியாக இருக்கும்போது கான்ட்ராக்டர்கள் அணியை மட்டும் நம்பினால், எதிர்க் கட்சியாக ஆகும்போது வக்கீல் அணியைத்தான் நாட வேண்டி இருக்கும்!

Thursday, July 21, 2011
அப்டி போடு ஆத்தா
இந்திய - இலங்கை ஒப்பந்தங்களின் மூலம் இலங்கைக்கு கச்சத்தீவை தாரை வார்த்ததை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி தொடர்ந்த வழக்குக்கு வலுசேர்க்கும் விதமாக தமிழக அரசின் வருவாய்த் துறையையும் இவ்வழக்கில் சேர்த்துக்கொள்ளும்படி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இதற்கான தீர்மானத்தைக் கொண்டுவந்து அவர் ஆற்றிய உரையில், தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் வாழும் மீனவர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் கச்சத்தீவினை, 1974, 1976 ஆம் ஆண்டுகளில் போடப்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தங்களின் மூலம் இலங்கைக்கு தாரை வார்த்ததை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில், அ.இ.தி.மு.க பொதுச் செயலர் என்ற முறையில் என்னால் தொடுக்கப்பட்ட வழக்கிற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் பின்வரும் தீர்மானத்தினை இன்று இப்பேரவையில் முன்மொழிகிறேன்.
இந்திய நாட்டுக்குச் சொந்தமான ஒரு பகுதியை அந்நிய நாட்டிற்குக் கொடுப்பது தொடர்பான உடன்பாட்டை, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலோடு, இந்திய அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் மூலம் மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும் என 1960 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு முற்றிலும் முரணாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் இல்லாமல், இந்தியா , இலங்கைக்கு இடையே 1974, 1976 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட ஒப்பந்தங்கள் வாயிலாக கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஒப்பந்தங்கள், சட்டப்படி செல்லத்தக்கவை அல்ல என 2008ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலர் ஜெயலலிதாவால் வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கிற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக, கச்சத்தீவு குறித்த அனைத்து ஆவணங்களையும் தன் வசம் வைத்துள்ள தமிழக அரசின் வருவாய்த் துறை தன்னை இவ்வழக்கில் சேர்த்துக் கொள்ளும்படி, உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்று சட்டப் பேரவை தீர்மானிக்கிறது.
டெல்ஃப் தீவிற்கு தெற்கே 9 மைல் தொலைவிலும், ராமேஸ்வரத்திற்கு வடகிழக்கே 10 மைல் தொலைவிலும் உள்ள பாக் ஜலசந்தி என்ற பகுதியில் கச்சத்தீவு அமைந்துள்ளது. ஓய்வெடுப்பதற்கும், வலைகளை உலர வைப்பதற்கும், பிடிபட்ட மீன்களை இன வாரியாக வகைப்படுத்துவதற்கும், மக்கள் வசிக்காத வறண்ட கச்சத்தீவை, பரம்பரை பரம்பரையாக, தமிழக மீனவர்கள் பயன்படுத்தி வந்தனர். மீனவர்களின் புண்ணிய புரவலராக கருதப்படும் புனித அந்தோணியாருக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட கத்தோலிக்க தேவாலயம் இந்தத் தீவில் தான் உள்ளது.
இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், ராமேஸ்வரத்தை சேர்ந்த சீனிகுப்பன் படையாச்சி என்பவர் இந்த தேவாலயத்தை கட்டினார். ஒவ்வொரு ஆண்டும், மார்ச் மாத இறுதியில், வாரக் கணக்கில் நடக்கும் சமய விழாவில் கலந்து கொள்வதற்காக இந்தத் தீவிற்கு தமிழக மீனவர்கள் செல்வது வழக்கம். இது போன்ற விழாக் காலத்தில், தொழுகை நடத்துவதற்காக ராமேஸ்வரத்திற்கு அருகில் உள்ள தங்கச்சிமடத்தை சேர்ந்த கத்தோலிக்க மதகுரு கச்சத்தீவிற்கு செல்வது வழக்கம் என்று வரலாற்று பதிவேடுகள் தெரிவிக்கின்றன.
1972இல் வெளியிடப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட விவரச் சுவடி, அதற்கு முன் ராஜா ராமராவ் வெளியிட்ட ராமநாதபுர மாவட்ட மானுவல், 1915, 1929, 1933ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட ராமநாதபுர மாவட்டத்துப் புள்ளிவிவரங்கள் அடங்கிய பின்னிணைப்பு, 1899இல் ஏ.ஜெ. ஸ்டூவர்ட்டு எழுதிய சென்னை ராசதானியிலுள்ள திருநெல்வேலி மாவட்ட மானுவல் போன்ற பல்வேறு ஆதாரங்களைக் கொண்டு வெளியிடப்பட்டது.
அதில், ராமேஸ்வரத்திற்கு வட கிழக்கே, 10 மைல் தொலைவில் கச்சத்தீவு இருக்கிறது என்றும்; ஜமீன் ஒழிப்புக்கு முன்னர், ராமநாதபுரம் அரசர் இத்தீவை தனி நபர்களுக்கு குத்தகைக்கு விட்டுக் கொண்டிருந்தார் என்றும்; இந்தத் தீவின் சர்வே எண் 1250; பரப்பளவு 285.20 ஏக்கர் என்றும்; இந்தத் தீவு ராமேஸ்வரம் கர்ணத்தின் அதிகார எல்லைக்கு உட்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் வட்டத்தில் உள்ள தீவு என்று கச்சத்தீவை அது குறிக்கிறது. இவையெல்லாம், கச்சத்தீவு மீது இந்தியாவிற்கு உள்ள பறிக்க முடியாத உரிமைகளுக்கு சான்றாக விளங்குகின்றன.

இது எப்படி இருக்கு கருணாநிதி தாத்தா?
முதல்வர் ஜெயலலிதாவை இன்று இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பில் தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கைவிடுமாறு ஜெயலலிதா வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்க அயலுறவுச் செய்லர் ஹிலாரி கிளின்டன் ஜெயலலிதாவும் சந்தித்தபோது இலங்கைப் பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
இதனையடுத்து இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாசம் ஜெயலலிதாவைச் சந்தித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்தச் சந்திப்பின் போது துணைத்தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தியும் உடன் இருந்தார்.

ஜெயலலிதாவின் துணிச்சல் கருணாநிதிக்கு வந்ததா?
ஜெயலலிதா தற்போது ஆட்சியிலே அமர்ந்ததும் இலங்கை தமிழர்களுக்கு தீர்மானம் நிறைவேற்றியதும், அதனை வரவேற்று, பாராட்டி பலரும் பேசுவதிலும், அறிக்கை விடுவதிலும் நமக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால் அவர்கள் அப்படி ஜெயலலிதாவைப் பாராட்டுகின்ற நேரத்தில், தேவையில்லாமல் நம்மீது விழுந்து பிறாண்டி திருப்தி அடைய நினைக்கிறார்களே, அது சரி தானா?'' என்று முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி விரக்தியுடன் கேட்டுள்ளார்.
கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை இராணுவத்தினருக்கும் போர் உச்சகட்டத்தை அடைந்தபோது மத்திய அரசில் அங்கும் வகித்து வரும் தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் போரை நிறுத்தச் சொல்லுங்கள் என்று ஈழத் தமிழர்கள் கூக்குரல் எழுப்பியபோது செவிடன் காதில் ஊதிய சங்குபோலத்தான் இருந்தார் கருணாநிதி.
தற்போது இலங்கை தமிழர் பிரச்சனைக்காக கடந்த 1977 ஆம் ஆண்டு சென்னையிலே ஒரேநாள் அறிவிப்பில் 5 லட்சம் பேரைத் திரட்டி பிரம்மாண்டப் பேரணி நடத்தினேன், 1983ஆம் ஆண்டு சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தேன் என்று கூறும் கருணாநிதி, ஆட்சியில் இருந்தபோது 2009ஆம் ஆண்டு இலங்கை தமிழர்களுக்காக என்ன செய்தார் என்பதுதான் தற்போதைய கேள்வி.
2009ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி, அங்கே போர் தமிழர்கள் மீது சிறிலங்க் இராணுவம் உச்சக்கட்டத் தாக்குதல் நடத்தியபோது, இலங்கை தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருக்கிறேன் என்று கூறி மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் உண்ணாவிரதத்தைத் தொடங்கிய கருணாநிதி, சில மணி நேரத்திலேயே இலங்கையில் போர் நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார் என்று சொல்லிவிட்டு போராட்டத்தை முடித்துக் கொண்டு மதிய உணவுக்கு வீட்டுக்கு சென்றுவிட்டார்.
உண்ணாவிரதத்தை முடித்துவிட்டு சென்ற அடுத்த நிமிடமே பாதுகாப்பு வளையத்தில் இருந்த தமிழ் மக்களை அந்நாட்டு இராணுவம் தடை செய்யப்பட்ட குண்டுகளை கொத்துக் கொத்தாக வீசிக் கொன்றது. இலங்கையில் போர் முடிந்துவிட்டது என்று கூறினீர்கள், ஆனால் அங்கு கடுமையான தாக்குதல் நடந்து வருகிறதே என்று செய்தியாளர்கள் கருணாநிதியிடம் கேட்டபோது, “மழை விட்டுவிட்டது, ஆனால் துவானம் விடவில்லை” என்றார்.

Thursday, June 9, 2011
தி.மு.க.வை உடைக்கும் வேலையில் காங்கிரஸ்
கடந்த சில நாட்களாக தயாநிதி மாறன் பற்றிய செய்திகள் வெளியாகிய நிலையில் விரைவில் நடக்கவிருக்கும் மந்திரி சபை மாற்றத்தில் தயாநிதி நீக்கப்படுவார் என்பதும் தற்போது உறுதியாகியுள்ளது.
கனிமொழி கைது, கலைஞர் டெல்லி சென்று தனது அன்பு மகளை பார்த்த நாள் வரையிலும் தயாநிதி பற்றிய செய்திகளும், அவர் மீதான விசாரணைகளும் வேகமெடுக்காத நிலையில் திடீரென்று இந்தச் செய்திகள் பறந்து வந்ததற்கான காரணங்கள் என்ன..?
இதற்குப் பின்னணியில் இருப்பது காங்கிரஸ் கட்சிதான் என்று நான் நினைக்கிறேன். இப்போது ஜன்பத் வீட்டுக் குடும்பத்துக்காக மட்டுமே ஆட்சி செய்து வரும் மத்திய காங்கிரஸ் அரசு, தயாநிதி மாறன் செய்த முறைகேடுகள் பற்றிய சி.பி.ஐ.யின் அந்தக் கடிதத்தை வாங்கி பெட்டியில் வைத்துவிட்டு கும்பகர்ணத் தூக்கத்தில் இருப்பதாக நீங்கள் நினைத்துவிட வேண்டாம்..! சமயம் வரும்போது அதனைப் பயன்படுத்துவோம் என்று நினைத்து வைத்திருந்தார்கள். இப்போது சமயமாகிவிட, பூனைக்குட்டியும் வெளியே வந்துவிட்டது.
குற்றம் செய்தவர்களைக்கூட தங்களுக்கு சாதகமாக்கி அதன் மூலம் தங்களது ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டு பின்பு அந்த வழக்கை நிர்மூலமாக்க அத்தனை வழிகளையும் கையாண்டு கேஸ் நடத்தியதுபோலவும் ஆச்சு.. குற்றவாளிகளை தப்பிக்க வைச்ச மாதிரியும் ஆச்சு.. தாங்களும் பிழைத்துக் கொண்டது போலவும் ஆச்சு என்ற வெக்கம்கெட்ட அரசியல் பொழைப்பை காங்கிரஸ் அரசு செய்து வருகிறது..!
மத்தியில் அடுத்த பிரதமராகவும், காங்கிரஸ் கட்சியின் ஒளி விளக்காகவும் மிளிரப் போகிற ராகுல்காந்திக்கு தமிழகத்தின் மீது ஒரு கண். எப்பாடுபட்டாவது தனது ஆட்சிக் காலத்திலாவது தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலில் காங்கிரஸை உட்கார வைக்க நினைக்கிறார்..!
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்தாக வேண்டுமெனில் அதற்குத் தோதான அரசியல் சூழலை ஏற்படுத்த வேண்டும். அதன் முதல் கட்டப் பணியினைத்தான் தனது ஆட்சி அதிகாரத்தை வைத்து சில்லரைத்தனமாக இப்படி செய்து வருகிறது காங்கிரஸ் கட்சி.
இருக்கின்ற இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளான தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.வை பலவீனப்படுத்தினால் ஒழிய காங்கிரஸ் மீண்டும் தமிழகத்தில் அரியணை ஏறுவது நடவாத காரியம் என்பது காங்கிரஸ்காரர்களுக்குத் தெரியும்.
இதற்கெல்லாம் நல்லதொரு வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்குக் கிடைத்ததுதான் கடந்த கால தி.மு.க.வின் கேடு கெட்ட ஆட்சி..! தாத்தா பாராட்டுக் கூட்டங்களில் திளைத்திருக்கும் நேரத்தில் மகன்களும், மகள்களும், பேரன்களுமாக தமிழ்நாட்டைச் சுரண்டியெடுத்ததை வேடிக்கை பார்த்த காங்கிரஸ் இந்தத் தகவல்களை கொஞ்சம், கொஞ்சமாக வெளியில் விட்டு ஆழம் பார்த்தது..!
காங்கிரஸ்தான் இந்த குள்ளநரித்தனத்தைச் செய்கிறது என்பதை உணர்ந்தும், அதனைத் தடுக்க இயலாத அளவுக்கு தாத்தாவுக்கு புத்திரப் பாசம் பீடித்துக் கொண்டுவிட்டது.. தாத்தாவின் இந்த நவீன திருதராஷ்டிரன் பாசத்தை காங்கிரஸ் தற்போதுவரையிலும் நன்கு பயன்படுத்திக் கொண்டு வருகிறது..!
2-ஜி விவகாரத்தை முதலில் தமிழகத்தில் தொடர்ந்து வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கு வேண்டிய அளவுக்கான செய்திகளை வழங்கியதுகூட காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுதான்..! மீண்டும் மாறன்கள் கட்சியிலும், குடும்பத்திலும் இணைந்த பின்பு சமயம் பார்த்து நீரா ராடியாவின் டேப்புகளை ரிலீஸ் செய்தது சி.பி.ஐ.யின் உள்ளடி வேலைதான்..!
ஒரு டேப் வெளியானால்கூட சரி.. யாரோ ஒருத்தர் செய்திருக்கிறார் என்று நினைக்கலாம். ஆனால் வரிசையாக சர்ச்சைக்கிடமான விஷயங்களை மட்டுமே உள்ளடக்கிய டேப்புகளாக பார்த்து வெளியிட்டால் அதற்கு யார் காரணமாக இருக்க முடியும்..? மத்திய அரசின் தலையசைப்பு இல்லாமல் இது நடந்திருக்காது என்று இந்தியாவில் பத்திரிகை அலுவலகங்களில் பணியாற்றும் கடைக்கோடி ஊழியர்கள்கூட சொல்வார்கள்..!
பிரச்சினைகள் பெருக, பெருக தனக்கும் இதற்கும் யாதொரு சந்தர்ப்பமும் இல்லாததுபோல் காட்டிக் கொண்டது காங்கிரஸ்.. தி.மு.க.வின் குடும்ப விவகாரங்களெல்லாம் சந்தி சிரிக்கின்றவரையில் டெல்லி மேலிடம் கை கட்டி வேடிக்கை பார்த்தது. டேப்புகள் ரிலீஸ் ஆவது நின்றபாடில்லை.
பத்திரிகையாளர்கள் பர்கா தத், வீர் சங்வி, ரத்தன் டாட்டாவுடனான நீரா ராடியாவின் பேட்டிகளைப் படித்துப் பாருங்கள்..! இங்கே யாரும் ஒழுங்கில்லை என்பதைக் காட்டுவதற்காகவே அவர்களையும் இழுத்து தெருவில்விட்டார்கள் சி.பி.ஐ.யினர்.. இப்போது பத்திரிகையுலகம் ஆட்சியாளர்களை திட்ட முடியுமா..? தொழில் உலக கூட்டமைப்பினர் ரத்தன் டாட்டாவின் டிரெஸ்ஸிங்சென்ஸை ராடியா வர்ணிப்பதை படித்து பொறாமைப்படுவார்களா? அல்லது அரசைக் கண்டிப்பார்களா..?
உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் போகிறேன் என்று பகிரங்கமாகச் சொல்லிவிட்டுத்தான் பிரசாந்த் பூஷன் செய்தார். இதுவும் ஏற்கெனவே உளவுத்துறை மூலம் மத்திய அரசுக்குத் தெரியும். ஆனாலும் மெளனம் சாதித்தது..! யாரோ சிக்கப் போகிறார்கள். நமக்கென்ன என்ற எண்ணமில்லை.. சிக்கப் போவது நமது பரம்பரை எதிரிகள்.. தற்போதைய கூட்டணிக் கட்சியாக இருந்தால் என்ன? நமக்கு அரசியல் லாபம்தான் முக்கியம் என்பதில் குறியாக இருந்தது காங்கிரஸ் அரசு.
உச்சநீதிமன்றத்தில் எந்த அளவுக்குச் சொதப்ப முடியுமோ அத்தனையையும் செய்து கடைசியில் கேஸை அந்த நீதிமன்றத்திடமே விட்டுவிட்டு தான் தப்பித்துவிட்டது. எதிர்பார்த்ததுபோலவே உச்சநீதிமன்றம் தனது சாட்டையை வீசத் துவங்க.. தள்ளி நின்ற தி.மு.க.வை பிடித்திழுத்து அடி வாங்க வைத்ததும் காங்கிரஸ்தான்..!
ஆ.ராசாவை ஆரம்பத்திலேயே அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்திருந்தால் தி.மு.க.வுக்கும், காங்கிரஸுக்கும் இத்தனை கெட்ட பெயர் கிடைத்திருக்காது.. ஆனாலும் காங்கிரஸ் மானம், ரோஷம் பார்க்க மாட்டார்கள் என்பதால் இது பற்றி அவர்களுக்குக் கவலையில்லை. ஆனால் சிங்கள் டீயைக் குடித்துவிட்டு நாள் முழுக்க ஊர் முழுக்க கலைஞர் வாழ்க. தி.மு.க. வளர்க என்று போஸ்டர் ஒட்டும் உடன்பிறப்புக்களுக்கு அது இருக்கிறதே.. அந்த ஒரு தொண்டனின் தொண்டைக் குழியில் ஒரு சொட்டு தண்ணீராவது நிம்மதியாக இறங்கியிருக்கும்..! செய்யவிடவில்லையே காங்கிரஸ்..!
திட்டம் போட்டு தீட்டினார்கள்..! மன்னமோகனசிங்குக்கு முனங்கத்தான் தெரியும். பேசத் தெரியாது.. அதேபோல் லேசு பாசாகவே சொன்னார்கள். “ராசா இல்லாதிருந்தால் நன்றாக இருக்குமே.. வேறு யாராவது வரட்டுமே..” என்றார்கள்.. தங்களுடைய இயலாமையினால் தங்களிடம் கெஞ்சுகிறார்கள் என்று தப்புக் கணக்குப் போட்ட தி.மு.க. தலைமை, “அதெப்படி நாம் ராஜினாமா செய்வது.. முடியாது..” என்று முறுக்கிக் கொண்டது. இவர்கள் முறுக்குவார்கள் என்பது தெரிந்தே காங்கிரஸ் மேலும், மேலும் நீதிமன்றத்தில் குழப்பத்தை கூட்டிக் கொண்டே வந்தது..!
“ராசா ஏன் இன்னும் அவர் பதவியில் இருக்கிறார்..?” என்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் கேட்ட பின்பும்கூட நேரடியாக சொல்லாமல் ஆள் விடும் தூதுக்களில் மட்டுமே சொன்னது காங்கிரஸ்.. தானாகவே தூக்கு மேடையில் வந்து நின்ற நிலைமைக்கு தி.மு.க. வந்தவுடன், ராசா ராஜினாமா என்றானது..
பின்பு சி.பி.ஐ. விசாரணை என்ற வளையத்திற்குள் வந்தவுடன் முதல் 7 நாட்களும் கைது செய்யாமல் பாவ்லா காட்டியவர்கள் கைது தவிர்க்க முடியாதது. கோர்ட், அதிகாரிகளைத் தோண்டித் துருவுகிறது. என்ன செய்யறது..? என்று கேட்டு நோகாமல் நொங்கெடுத்துவிட்டார்கள்..!
தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில் பின்புற அலுவலகத்தில் சி.பி.ஐ.யை அனுப்பி மனைவியையும், மகளையும் விசாரிக்க வைத்தது காங்கிரஸ்..! இதெல்லாம் தங்களைத் திட்டமிட்டு செய்யப்படும் சதி என்பது தி.மு.க.வுக்கும் தெரியாமல் இல்லை. ஆனாலும் ஆட்சி, அதிகாரம், மகன், மகள்களின் பதவி ஆசை, பேரன்களின் பண ஆசை.. இதற்கெல்லாம் மையப் புள்ளியான அதிகாரத்தை விட்டுத் தர வேண்டுமா? ஆட்சியைத் துறக்க வேண்டுமா? என்றெல்லாம் யோசித்து, யோசித்து இதோ கடைசியில் தனது அருமை மகளையும் ஜெயிலுக்குள் அனுப்பிவிட்டு இன்னமும் யோசித்துக் கொண்டிருக்கிறார் தமிழர்களின் தன்மானத் தலைவர்..!
அடுத்தது யாராக இருக்கும் என்று யோசிக்க வைத்த சூழலில் இரண்டு பக்கமும் இடி கொடுப்பதைப் போல ஏர்செல் விவகாரம், மற்றும் இந்த டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் விவகாரத்தை சி.பி.ஐ. கசிய விட்டிருக்கிறது..!
இனி பத்திரிகைகள் இவைகளைப் பற்றி தினமும் செய்து வெளியிடும் சூழலில் தயாநிதிக்கும் சூழல் இறுக்கப்படும். தயாநிதி மாறன் தானாகவே பதவி விலகும் சூழலை காங்கிரஸ் அரசு உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இறுதியில் ராசாவும், கனிமொழியும் ஜாமீனில் வெளிவரும்போது உள்ளே போகும் அடுத்தச் சொந்தமாக தயாநிதி இருக்கக் கூடும்..! இதற்குக் காரணமாக உச்சநீதிமன்றத்தை கை காட்டிவிட்டு காங்கிரஸ் எளிதாகத் தப்பித்துக் கொள்ளும்.
இதையெல்லாம் தவிர்க்கத்தான் தயாநிதி மூலமாக தி.மு.க.வை உடைக்கும் வேலையில் காங்கிரஸ் முயல்வதாக தலைநகரத்து செய்திகள் கசிகின்றன..! கேடி பிரதர்ஸின் பணம், ஊடகங்களின் பலம் இவற்றை வைத்து தி.மு.க.வின் சில தலைவர்களையாவது அவர்கள் பக்கம் இழுக்க வைத்து வைகோ விலகிய சூழலை போன்று ஏற்படுத்த காங்கிரஸ் நினைப்பதாக ஒரு செய்தி உலா வருகிறது..!
தாத்தா எந்தக் காரணத்தை முன்னிட்டும் இப்போது மத்திய அரசுக்கு தரும் ஆதரவை வாபஸ் பெற மாட்டார். அப்படி வாபஸ் வாங்கினால் காங்கிரஸ்காரர்கள் யார் காலில் விழுந்தாவது தங்களது ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வார்கள். அத்தோடு இந்த ஊழல் வழக்குகளில் இருந்து தி.மு.க.வினர் தங்களைக் காப்பாற்றிக் கொள்வது பெரும்பாடுதான் என்பதை நன்கு உணர்ந்துதான் இருக்கிறார் தாத்தா. எனவே காங்கிரஸ் இழுக்கின்ற இழுப்புக்கு தாத்தா போய்தான் ஆக வேண்டும்..! இது ரொம்ப நாளைக்கு நீடிக்காது..!
தாத்தாவின் குடும்பப் பூசல்கள் பகிரங்கமாக வெடிக்கும் சூழல் ஒன்றைத்தான் காங்கிரஸ் தற்போது எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கிறது. இதற்குத் தோதாகத்தான் அழகிரியை கேடி பிரதர்ஸ் தற்போது வளைத்துப் பிடித்திருப்பதாகத் தெரிகிறது.
ஸ்டாலினுக்கு எதிராக அழகிரியை முன்னிறுத்தி அவருக்குப் பின்னால் நின்று அப்போதைக்கு வேண்டிய பணம், ஊடக பலம் ஆகியவற்றைக் கொடுத்து என்.டி.ராமராவுக்கு எதிராக சந்திரபாபு நாயுடு செய்த புரட்சியைப் போல கருணாநிதியை வீட்டிலேயே உட்கார வைக்க ஒரு திட்டமும் இருக்கிறதாம்..!
அப்படியொரு சூழலில் அதற்காக கேடி பிரதர்ஸ் சம்மதித்தால் தற்போது தயாநிதியைச் சுற்றியுள்ள வலை கொஞ்சம், கொஞ்சமாக சட்டத்தில் உள்ள ஓட்டைகளின் மூலமாகவே அறுத்தெடுக்கப்படும். இல்லையெனில் அவர்களது கழுத்திலேயே இறுக்கப்படும் என்றே நானும் நினைக்கிறேன்..!
இன்னொரு வதந்தியும் தலைநகரில் உலா வந்து கொண்டிருக்கிறது. தி.மு.க. தலைமை காங்கிரஸுடனான கூட்டணியில் இருந்து விலகும் சூழல் ஏற்பட்டால் தயாநிதி மாறன் காங்கிரஸில் சேரும் நிலைமை நிச்சயம் ஏற்படும் என்கிறார்கள். இதனை அவர்களின் குடும்பத்தினரே உணர்ந்திருக்கிறார்களாம்..
இப்போதே தயாநிதி மீது சந்தேகக் கண் கொண்டு பார்க்கத் துவங்கிவிட்டார்கள்..! தற்போது தயாநிதி மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் பற்றி தி.மு.க. தலைமை மெளனம் சாதிக்கும் அதே வேளையில் தயாநிதி மட்டுமே பதில் சொல்லி வருகிறார். கட்சிக்கும், அவருக்கும் சம்பந்தம் இல்லையோ என்று நினைக்குமளவுக்கு பிரச்சினையைக் கண்டும், காணாததுபோல் இருக்கிறது தி.மு.க. தலைமை. இல்லையெனில் இந்நேரம் கலைஞரோ, ஸ்டாலினோ இதற்கு மறுப்பு அறிக்கை வெளியிட்டிருப்பார்கள்..!
போதாக்குறைக்கு நக்கீரன் இதழில் உலக அதிசயமாக தயாநிதி மாறனின் ஊழல் பற்றிய தெஹல்கா கட்டுரையைத் தமிழாக்கம் செய்து போட்டிருப்பது பத்திரிகை வட்டாரங்களில் பரபரப்பை கூட்டியிருக்கிறது..! இது நிச்சயம் தி.மு.க. தலைமைக்குத் தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்கிறார்கள்..!
இப்போது நக்கீரனுக்கு நடுநிலைமை வேஷம் போட வேண்டிய தேவையில்லை. அப்படியிருந்தால் நீரா ராடியா டேப்புகள் பற்றியும், கனிமொழி, வோல்டாஸ், டாட்டா, ராஜாத்தி தொடர்புகள் பற்றியும் அவர்கள் எழுதியிருப்பார்கள். அதையெல்லாம் வி்ட்டுவிட்டு தயாநிதியை குறித்து எழுதியிருப்பது சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறது. அதிலும் குறிப்பாக தயாநிதி மற்றும் அவரது பி.ஏ.வின் போன் நம்பரைகூட வெளிப்படையாகக் குறிப்பிட்டு எழுதியிருப்பது என்னவோ நடக்கப் போகிறது என்கிறார்கள்..!
தொடர்ச்சியான 3-வது நக்கீரன் இதழிலும் தயாநிதி மாறனுக்கு எதிரான செய்திகளே வெளியாகியுள்ளது. இத்தனை நாட்கள் சன் குழமத்திற்கும், நக்கீரனுக்கும் இருந்த நட்பு எப்படி ஒரே நாளில் மறைந்து போயிருக்கும் என்ற குழப்பத்திற்கு வேறொரு காரணமும் சொல்கிறார்கள். ஆனந்த விகடன் குழுமத்தில் மாறன் சகோதரர்களும் கை வைத்துவிட்டதை மீடியா உலகமே தற்போது நம்பி வருகிறது. பேசியும் வருகின்றனர். இந்தக் காரணத்தினால்தான் அறிவாலய வட்டாரம் நக்கீரனை முன்னிறுத்தி தயாநிதி பற்றிய ஊழல்களை எக்ஸ்போஸ் செய்வதாகத் தோன்றுகிறது..!
நேற்றைய நிலவரப்படி விரைவில் மந்திரி பதவியை இழந்து திஹார் ஜெயிலுக்குள் நுழையப் போகும் அடுத்த வி.ஐ.பி. தயாநிதிதான் என்று உறுதியாகச் சொல்கிறார்கள்..! தயாநிதி மீதான வழக்கு கோர்ட் விசாரணைக்கு வந்தால், கலாநிதி மாறன் கோர்ட் படியேற வேண்டி வரும். ஏன் அவரே கைது செய்யப்பட்டாலும் ஆச்சரிப்படுவதற்கில்லை. அப்படியொன்றைத் தவிர்ப்பதற்காக மாறன் சகோதரர்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்..! இதோ இன்றைக்கு கனிமொழியின் ஜாமீன் மனுவும் நிராகரிக்கப்பட்டுவிட்டது. இனி சுப்ரீம் கோர்ட்டுக்கு போனாலும் கிடைக்காது என்பது தெரிந்த விஷயம்..!
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நீடிக்க உதவிகள் செய்தும், கட்சியையும், தங்களது குடும்பத்தினரையும் அழிக்கப் பார்க்கிறார்களே என்கிற கோபத்தில் தி.மு.க. இருக்கிறது..!
கலைஞர் டிவி ஆரம்பிக்கின்றவரையிலும், தி.மு.க.வின் ஊதுகுழலாகவும், ஜெயலலிதாவின் முதல் ஆட்சிக் காலத்தின் முடிவுரைக்கு உதவியும், ஸ்கூட்டரில் போய்க் கொண்டிருந்த குடும்பத்தினரெல்லாம் இன்றைக்கு ஸ்கூடா காரில் போகும் சூழலை ஏற்படுத்தி கோடி, கோடியாக கொடுத்தும் நம்மை ஓரங்கட்டி ஜெயிலுக்கு அனுப்பத் துடிக்கும் தனது சக குடும்ப உறவுகள் மீதான கோபத்தில் மாறன் சகோதரர்கள்..!
இந்த முட்டல் மோதலை எட்ட நின்று வேடிக்கை பார்த்து சமயத்துக்குக் காத்திருக்கும் குள்ள நரியாக காங்கிரஸ்..!
நாமும் வேடிக்கையை பார்ப்போம்..! இந்த மாதத்திற்குள் இந்திய அரசியலில் ஏதோவொன்று நடக்கும் என்று நம்புகிறேன்..!
Read more: http://truetamilans.blogspot.com/2011/06/blog-post_08.html#ixzz1OnDYPIeF

Subscribe to:
Posts (Atom)