பாமகவின் பொதுக்குழு இன்று 27.07.11 சென்னையில் கூடி எடுத்த முடிவுகள் கண்டு தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளும், மக்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.அது இன்ப அதிர்ச்சி எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தை ஆட்சி செய்த கட்சிகளுக்கு மாற்றாக பாமக தலைமையில் புதிய அணியை உருவாக்கும் முடிவே இதற்கு காரணம்.
தமிழகத்தின் பெரிய கட்சிகளாக விளங்கும் அதிமுகவும் திமுகவும் மிக ரகசியமாக பட்டாசு வெடித்தும், இனிப்புக்கள் வழங்கியும் இந்த முடிவினைக் கொண்டாடியதாகவும் விவரமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. தங்கள் பெயரை வெளியிடக்கூடாது என்ற வாக்குறுதியை நம்பி ஜெயலலிதாவும் கருணா நிதியும் சொன்னது என்னவென்றால், கடைசி வரை நம் அணிக்கு வருவாரா, இல்லை எதிர் அணிக்குப் போவாரா என ஒவ்வொரு தேர்தலிலும் ரத்த அழுத்தம் ஏற்றும் ஒரு பிரச்சினை தீர்ந்ததாக மகிழ்ச்சியாகத் தெரிவித்தனர். இருவரும் ஒத்த கருத்தோடு இருந்த ஒரே விஷயம் இதுதான் என்பது பொன்னெழுத்துக்களில் பொறிக்கத்தக்க செய்தி.
மக்களும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர் என்றே நாம் பேசிய அனைவரும் கூறுகின்றனர். ஓட்டுப் போடும் வரை ஒரு அணியில் இருப்பது, போட்டவுடன் அணி மாறுவது என்றிருந்ததால் நாம் போடும் ஓட்டு எந்த அணிக்காக இருக்கும் என்று தெரியாமலேயே வாக்களித்து வந்ததாகவும், இனி அந்த குழப்பம் இல்லாமல் ஓட்டுப் போடமுடியும் என்பதாலே மகிழ்ச்சி எனவும் கூறினர். மேலும் பாமக தனியாக நிற்பதால் அவர்களுக்கு ஓட்டுப் போடாமல் விட்டுவிடுவது மிக சுலபமாகிவிட்டது எனவும் பலர் தெரிவித்தனர்.
பாமகவின் ஜிகே மணி அவருக்கே கூட தெரியாமல் ரகசியமாக அளித்த பேட்டியில் கூறியது.அடிக்கடி அணி மாறும் கட்சி என்ற அவப்பெயரை நீக்கவே மருத்துவர் ஐயா இந்த அதிரடி முடிவை எடுத்திருப்பதாகவும் இதன் பிறகு யாருமே அந்தக் குற்றச்சாட்டைக்கூற முடியாது எனவும் மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்தார். விளக்கமாகச் சொல்லும்படிக் கேட்டதற்கு அணித் தலைமையாக பாமகவே இருப்பதால் அணியிலிருந்து நீங்கவே முடியாது. அதனால் இனி அணி மாறும் பேச்சுக்கே இடமில்லை எனவும் தெரிவித்தார்.
(காப்புரிமை பெறாத செய்திகள் - இதனை யார் மீண்டும் பிரசுரித்தாலும் பாமகவின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்)
Wednesday, July 27, 2011
Monday, July 25, 2011
பூனை வெளியே வந்தாச்சு..........
இந்த வாதப்படி ராஜா சொல்லுவது சரியாக இருக்க வாய்ப்பு உள்ளது . அப்படி இருக்கும் பட்சத்தில் சோனியா , கருணாநிதி ஆகிய இருவரின் பெயர்களும் குற்றபத்திரிகயீல் முதன்மை
பெயர்களாக சேர்க்கவேண்டும். இந்த 2 ஜி பணத்தில் 90% இவர்களின் குடும்பதிற்கும் மீதி ராஜா உட்பட பலருக்கும் போக வாய்ப்பு உள்ளது.
Former Telecom Minister A Raja today sought to rope in Prime Minister Manmohan Singh and the then Finance Minister P Chidamabaram in the 2G scam case, telling a court that the issue of dilution of equity by spectrum licencees was discussed with them.
Defending himself against corruption charges in 2G scam, the 47-year-old DMK MP also submitted before Special CBI Judge O P Saini there was nothing wrong in his decision of not auctioning 2G spectrum and that he was merely following the policies pursued by his predecessors and the NDA government.
"I have implemented only what I have inherited," he said.
Senior Advocate Sushil Kumar appearing for Raja, now behind bars, said that when Home Minister Chidambaram was the Finance Minister he had told the Prime Minister that dilution of shares by the accused licencees to attract FDI did not amount to sale of licence.
Arguing that sale of equity was not sale of licence, Raja said he cannot be accused of corruption in the controversial 2G spectrum allocation.
"The matter (about sale of equity by spectrum licencees) was discussed between the Prime Minister and the then Finance Minister (P Chidambaram).
"The then Finance Minister( who is now Home Minister) had said in front of the Prime Minister that dilution of shares does not amount to sale of 2G licence as per the corporate law," asserted Raja, who even said "Let the Prime Minister deny this."
Raja further said, "When sale of equity does not amount to sale of licence, there in no question of earning profit. How can (then) be corruption there in this regard?"
Raja said if he is being prosecuted for following a certain policy then all Telecom ministers since 1993 are liable to be prosecuted and should be in jail along with him as they too followed the same policy.
"If policy pursued by me was wrong, then all former Telecom ministers since 1993 should also be in jail with me (Raja)," he said while opposing framing of charges against him.

இது தாண ராஜ வாழ்க்கை என்பது
உலகிலேயே பெரிய பணக்கார நாடான புருனே நாட்டின் சுல்தான் . இவர் தான் உலகலேயே தங்கத்தை அதிகமாக பயன்படுத்துபவர்.
The Palace
The largest and most luxurious palace in the world...
Consists of 1788 rooms with some furnished in gold and diamond-encrusted
257 bath inlaid with gold and silver
and a garage to accommodate 110 cars
The palace has 650 suites ... each furnished at not less than 150,000 thousand euros
This requires the visitor to spend 24 hours just to inspect each room for 30 seconds
The Sultan of Brunei's plane
Most luxurious aircraft in the world, inlaid with gold
The Sultan has also a Boeing 747 worth a hundred million dollars,
and then re-designed as a home at a cost of more than one hundred and twenty million dollars.
Featured add-ons such as a whirlpool bath of pure gold
He also has six small aircraft and two helicopters.
At the special request of the Sultan of Brunei, theRolls Royce company combined their car designs with that of Porsche.
This vehicle is currently in London for use during his stay in Britain
When the Sultan of Brunei's daughter married,
the legendary celebrations continued for 14 days,
at a cost of about five million dollars,
attended by more than 25 heads of state and family members.
Sultan of Brunei car inlaid with pure gold
The Princess wears a crown of diamonds
and carries a small bouquet of flowers studded with diamonds.
She also wears huge diamonds as earrings, adding sparkle to her face.
Wikipediasays he has
531 Mercedes-Benzes
367 Ferraris
362 Bentleys
185 BMWs
177 Jaguars
160 Porsches
130 Rolls-Royces
And 20 Lamborghinis
Bringing the total number of his cars to 1,932

நேர்மைக்கு தண்டனை ?
திருவனந்தபுரத்தில் பத்மநாப ஸ்வாமி ஆலயத்தில், சில ரகசிய அறைகள் இருக்கின்றன என்ற செய்தி அல்ல –
வியப்புக்குரியது அந்த ரகசிய அறைகளில் குவிந்து கிடக்கின்ற எண்ணற்ற தங்க நகைகளும், நாணயங்களும், ரத்தினம், வைரம் போன்றவை பதித்த ஆபரணங்களும் அல்ல – ஜொலிக்கின்றவை;
அந்த நகைகள், நாணயங்களின் மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாய்களையும் மீறுகிறது என்ற மதிப்பீடு அல்ல – பிரமிப்பைத் தருவது.
பத்மநாப ஸ்வாமி ஆலயம்
கற்பனைக்கு அப்பாற்பட்ட இந்த பொக்கிஷத்தில் கை வைக்க வேண்டும் என்கிற ஆசையே இல்லாத, கோவில் சொத்தை அபகரிக்கும் எண்ணமே இல்லாத, நெருப்பு போன்ற நேர்மை கொண்ட ஒரு மன்னர் பரம்பரை, 250 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கே இருந்து வந்திருக்கிறதே... அதுதான் ஜொலிக்கிறது ;
அதுதான் வியப்பைத் தருகிறது; அதுதான் பிரமிப்பை ஏற்படுத்துகிறது.
1750ஆம் ஆண்டில், முதல் மார்த்தாண்டவர்மன் என்ற மன்னர்தான், இந்த விலை மதிப்பிட முடியாத நகைகளையும், தங்க நாணயங்களையும், பத்மநாப ஸ்வாமிக்கே சமர்ப்பித்ததாகவும், அந்த மன்னர் தன்னை ‘பத்மநாப தாஸன்’ என்றே குறிப்பிட்டுக் கொண்டதாகவும் வருகிற செய்திகள் திருவிதாங்கூர் சமஸ்தான சரித்திரத்தை எடுத்துச் சொல்கின்றன.
வாயளவில் சமத்துவம் பேசாமல், தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கோவில்களைத் திறந்து விட்ட, ‘சித்திரைத் திருநாள்’ என்று அழைக்கப்பட்ட பலராம வர்மன், இந்தப் பரம்பரையைச் சார்ந்தவர்; அதற்கு உறுதுணையாக இருந்தவர் ஸர்.ஸி.பி.ராமஸ்வாமிஐயர். அதே போல, மனித உரிமை பற்றி மேடை போடாமல், மரண தண்டனையை ரத்து செய்த இந்தியாவின் முதல் ராஜ்யமாக திருவிதாங்கூரை திகழச் செய்ததும், இதே சித்திரைத் திருநாள் மன்னர்தான்.
இப்படிப்பட்ட உண்மையான முற்போக்குச் சிந்தனை உடைய இந்த மன்னர் பரம்பரையில் வந்தவர்கள் அனைவருக்கும், பத்மநாப ஸ்வாமி கோவில் பொக்கிஷத்தைப் பற்றித் தெரிந்துதான் இருந்தது. 1930ல் இந்த ரகசிய அறை ஒன்றில் இருக்கின்ற நகைகள் பற்றிய கணக்குக் கூட எடுக்கப்பட்டது. 1941ல் மலையாளக் கவிஞர் பரமேஸ்வர ஐயர், தனது புத்தகத்தில் இந்தப் பொக்கிஷம் பற்றிய விவரங்களைக் கூறியிருக்கிறார். பின்னர் 12 பகுதிகளாக வந்த, திருவிதாங்கூர் அரண்மனை சரித்திரத்திலும், இது பற்றிய விவரங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்தக் கோவில், தொடர்ந்து மன்னர் பரம்பரையின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகிறது. அங்கு இவ்வளவு பெரிய பொக்கிஷம் இருப்பதை அறிந்திருந்தும், அந்தப் பரம்பரையில் வந்த ஒரு மன்னர் கூட, இத்தனை பொக்கிஷத்தையோ, இவற்றில் ஒரு பகுதியையோ எடுத்து அயல் நாடுகளில் பதுக்கிக் கொள்ளவோ, ஸ்விட்சர்லாந்த் வங்கிகளில் கணக்கு வைத்துக் கொள்ளவோ, வர்த்தகத்தைப் பெருக்கிக் கொள்ளவோ முனையவில்லை.
அவர்கள் பகுத்தறிவாளர்கள் அல்ல. கோவில் கோபுரத்தை பீரங்கி வைத்துப் பிளப்போம் என்று முழக்கமிட்ட, பகுத்தறிவுக் கூட்டத்தைச் சாராத இந்த மன்னர் பரம்பரை, ‘கோவில் சொத்து, குல நாசம்’ என்று நம்பியது. பொதுச் சொத்து விஷத்திற்குச் சமமானது என்று உணர்ந்தது. அன்று முதல் இன்று வரை – இன்று உள்ள உத்திராடத் திருநாள், மார்த்தாண்ட வர்மன் உட்பட – எந்த மன்னரும், இந்த பொக்கிஷத்தை கபளீகரம் செய்யவில்லை.
மக்கள் சொத்து எனில், அது தங்கள் குடும்ப சொத்து; நாட்டின் வளமை என்றால், அது வாரிசுகளின் வளமை... என்று செயல்படுகிற இந்திய அரசியல்வாதிகள் – அதாவது இன்றைய அரசர்கள் – கையில் இந்த பொக்கிஷம் சிக்கியிருந்தால், என்ன கதி ஆகியிருக்கும்!
இப்போதும் சில ‘சமூக பிரக்ஞை’ உள்ளவர்கள், இதை அரசியல்வாதிகளிடம் கொண்டு போய் சேர்த்து விட வழி தேடுகிறார்கள். ‘மக்களின் ஏழ்மையை, மக்களின் துயரைப் போக்கி, மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய, இந்த பொக்கிஷம் பயன்படுத்தப்பட வேண்டும்’ என்பது அவர்கள் வாதம். அதாவது, இந்தப் பொக்கிஷத்தில் உள்ள விலையுயர்ந்த நகைகளை விற்று, கிடைக்கிற பணத்தில், ஏழைகளின் துயரை இவர்கள் தீர்த்து விடுவார்களாம்!
ஆமாம், தீர்த்து விடுவார்கள்; பொக்கிஷத்தைத் தீர்த்து விடுவார்கள். அதில் ஒரு சிறு துளி, ஏழைகளுக்குப் போய்ச் சேர்ந்தாலே அதிசயம்தான்! அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் பங்கு போட்டு கொண்டு ‘இருந்ததில், பாதிக்கு மேல் பித்தளை’ என்று அறிக்கை விட்டால் கூட வியப்பதற்கில்லை.
250 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்ட கோவில் பொக்கிஷம் – பெருமாள் சொத்து – அப்படியே இருப்பதுதான் முறை. ஆனால் அதை இனி விட்டு வைப்பார்களா என்பது சந்தேகம்தான். ஸ்விட்சர்லாந்திலும், மற்ற சில நாடுகளிலும் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தைக் கொண்டு வருகிற யோக்கியதை இல்லாத அரசியல்வாதிகளிடம், இந்த கோவில் சொத்தை ஒப்படைக்கக் கூடாது.
ஏன்?
நாட்டில் உள்ள அரசியல்வாதிகளின் சொத்துக்கள் கணக்கெடுக்கப்படட்டும்; அவற்றிலிருந்து சட்டவிரோதமாகக் கிட்டியவை ஒதுக்கப்பட்டு, அவை விற்கப்படட்டும்; அந்தப் பணம் பொது மக்களுக்குப் பயன்படுத்தப்படட்டுமே!
ஏன் அதை யாரும் வற்புறுத்தவில்லை?
சட்டம், சமூகம், தர்மம், நியாயம், பச்சாதாபம், பரிதாபம் – எல்லாம் அங்கே ஒளிந்து கொண்டு விடுகின்றனவே – ஏன்?
ஸ்விட்சர்லாந்திலும், பல அயல் நாடுகளிலும், பல அரசியல்வாதிகளிடமும், அவர்களுடைய பினாமிகளிடமும் புகுந்திருக்கிற பொக்கிஷங்கள், ஏழைகளுக்குப் பயன்படட்டும்.
சுப்ரீம் கோர்ட்டில், இன்றைய மன்னர் வாரிசு உத்திராடத் திருநாள், ‘இந்தச் சொத்து தன்னுடையதோ, தன் குடும்பத்தினரையோ சார்ந்தது அல்ல’ – என்று கூறியிருக்கிறார். ‘கோவில் சொத்தாகிய அது, தெய்வ கைங்கர்யங்களுக்கும், மக்கள் நலனுக்கும் பயன்பட வேண்டியது’ என்ற அவருடைய நேர்மையான கருத்து ஏற்கப்பட வேண்டும்;
அதை விட்டு, ‘இது பொதுச் சொத்து’ என்ற பெயரில், அரசியல்வாதிகளின் அறம் நிலையற்ற துறையிடம் இதை ஒப்படைத்து – திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர்கள் பாதுகாத்து வந்துள்ள, பெருமாள் கோவில் பொக்கிஷத்தைச் சூறையாட வேண்டாம். அது மன்னர் பரம்பரையினரின் நேர்மைக்குக் கொடுக்கப்படுகிற தண்டனை ஆகிவிடும்.

Sunday, July 24, 2011
மதுரைக்கு துணை முதல்வர் பொட்டு சுரேஷ்
மதுரை 'மதுரா கோட்ஸ்’ மில் ஊழியரான நடராஜப் பிள்ளையின் மகன் சுரேஷ் பாபு. ஆனால்,அது 20 வருடங்களுக்கு முன்பு. இப்போது, 'மதுரைக்கு துணை முதல்வர் பொட்டு சுரேஷ்’ என்று ஜெயலலிதாவே பயோடேட்டா கொடுக்கும் அளவுக்கு, தி.மு.க-வில் ஜெகஜ்ஜாலக் கில்லாடி!
ஆரம்பத்தில் இந்த சுரேஷ்பாபு, அ.தி.மு.க. அனுதாபி. நைட்டி வியாபாரம்தான் தொடக்கம். அப்போது சார் பேரே 'நைட்டி சுரேஷ்’தான். நைட்டி பிசினஸ் ஏனோ அலுத்துப்போனதால், மதுரை டவுன்ஹால் ரோட்டில் ஒரு டீக்கடை ஓரத்தில், பஜ்ஜிக் கடை போட்டார். ம்ஹூம்... அதுவும் போணி ஆகவில்லை.
'அமைதிப் படை’ படத்தில் சத்யராஜின் கேரக்டர்தான் சாருக்கு இன்ஸ்பிரேஷன். அரசியலில் இறங்கினார். 90-களில் அ.தி.மு.க. எம்.பி-க்களாக இருந்த ராஜன் செல்லப்பா, முத்துமணி ஆகியோரிடம் உதவியாளராக சேர்ந்தார். 96-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. சுறுசுறுப்பான பஜ்ஜி சுரேஷ், எப்படியோ நூல் பிடித்து அமைச்சர் பரிதி இளம்வழுதியைப் பற்றிக்கொண்டார்.
நெற்றியில் மங்களரமாக குங்குமப் பொட்டு சகிதம் சுரேஷ் செய்த 'பணிவிடை’கள் பிடித்துப்போனதால், அவரைத் தன் அருகிலேயே வைத்துக்கொண்டார் அமைச்சர். ஒரு கட்டத்தில் அங்கேயும் சிக்கலாகி, மீண்டும் மதுரைக்கு வந்தவருக்கு சென்னையில் கற்ற 'வித்தை’கள் நன்றாகவே கைகொடுத்தன.
மறைந்த பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் வீட்டில் பசை தேடி ஒட்டிக்கொண்டார். ஏற்கெனவே 'கிரம்மர்’ சுரேஷ் (இப்போது இவர் அ.தி.மு.க-வில் இருக்கிறார்!) என்பவர் பி.டி.ஆர். முகாமில் இருந்தார். பி.டி.ஆர். ஒரு முறை, ''சுரேஷைக் கூப்பிடுங்கப்பா'' என்று சொல்ல, அங்கே இருந்தவர்கள் கிரம்மரை உள்ளே அனுப்பிவிட்டார்கள். ''இவன் இல்லப்பா... அந்த பொட்டு வெச்சிருக்கிற சுரேஷைக் கூப்பிடு!'' என்றார் பி.டி.ஆர். அதில் இருந்துதான், நைட்டி சுரேஷ் என்ற பஜ்ஜி சுரேஷ், 'பொட்டு சுரேஷ்’ எனத் தமிழ் கூறும் நல்லுலகத்தால் அழைக்கப்படலானார்.
பிறகு, பி.டி.ஆரை விட்டுப் பிரிந்த பொட்டு, அழகிரிக்கு நெருக்கமான
நாகேஷிடம் ஒட்டிக்கொண்டு, அப்படியே அழகிரியின் நிழலுக்குள் நுழைந்தார். 2006-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்த ஆறேழு மாதங்கள் கழித்துத்தான் பொட்டு சுரேஷ், அழகிரியின் நம்பிக்கைக்குரிய இடத்தைப் பிடித்தார். வழக்கமாக அழகிரி மூலமாக ஏதாவது காரியத்தை முடித்தால், அதில் வரும் நன்மையை தனக்கு இவ்வளவு, அண்ணனுக்கு இவ்வளவு என்றுதான், கட்சியினர் கணக்குப் பிரிப்பார்கள். ஆனால், எவ்வளவு கிடைத்தாலும், அதை அப்படியே அழகிரியிடம் கொடுத்துவிட்டு, ''செலவுக்கு ஏதாச்சும் குடுங்கண்ணே...'' என்று பணிவான பவ்யம் காட்டுவது பொட்டு ஸ்டைல். 'இவ்வளவு விசுவாசமாக்கிடக்கிறானே’ என அழகிரி மனதில் இடம் பிடித்தார்.
மூன்று வருடங்களுக்கு முன்பு மதுரையில் அழகிரிக்கு சொந்தமான 'தயா திருமண மஹால்’ கட்டி முடிக்கப்பட்டது. பொட்டுவின் தம்பி சரவணனின் திருமணம்தான், அங்கு நடந்த முதல் விசேஷம். தமிழகம் முழுவதிலும் இருந்து வி.ஐ.பி-க்கள் திருமணத்தில் கலந்துகொண்டார்கள். மொய் வரவு மட்டும் கோடிகளில் கொட்டியது. திருமணம் முடிந்த கையோடு அந்தப் பணத்தை மூட்டையாகக் கட்டிக்கொண்டு அழகிரியின் வீட்டுக்கு போனார் பொட்டு. உறக்கத்தில் இருந்த அழகிரியை எழுப்பி, அவருக்கு எதிரில் மூட்டையை அவிழ்த்தாராம். ''என்னய்யா இதெல்லாம்?'' என்றதற்கு, ''என் தம்பி கல்யாணத்துக்கு வந்த மொய்ப் பணம்ணே. இது எனக்கு வந்த பணம் இல்லைண்ணே... எனக்கு நீங்களா பார்த்துப் போட்ட பிச்சை!'' என்று கண்ணீர் மல்க காலில் விழுந்த கதை, மதுரையில் பிரபலம்.
அழகிரி அன்றே, ''பொட்டு எது சொன்னாலும், அது நான் சொன்னதாத்தான் அர்த்தம். அவரு சொல்றதை செஞ்சு குடுங்க; எங்கிட்ட கேக்கணும்கிறது இல்லை...'' என்று முதலமைச்சரின் தனிச் செயலாளருக்கே ஆர்டர் போட்டதாக ஒரு பரபரப்பான பேச்சும் மதுரையில் உண்டு. அழகிரியை இவர் நெருங்க நெருங்க... ஏற்கெனவே அழகிரியோடு நெருக்கமாக இருந்த பலர் விலக்கிவைக்கப்பட்டார்கள்.
இதை எல்லாம்வைத்துத்தான் அழகிரி முதலமைச்சர் என்றால், பொட்டு சுரேஷ் துணை முதலமைச்சர் என்று ஜெயலலிதா பட்டம் கொடுத்தார்!
- ஜூ.வி. க்ரைம் டீம்

கிளம்பிட்டாங்க ஐயா! கிளம்பிட்டாங்க............
ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ. மீது திடுக் புகார்
திரும்பிய பக்கம் எல்லாம் தி.மு.க. பிரமுகர்கள் மீது நில அபகரிப்பு வழக்கு கள். ஆனால், வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையிலோ, அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கே.சி.வீரமணி மீது புகார் கிளம்பிக் கிடுகிடுக்கிறது.
புகார் கொடுத்த செந்தில்குமார் ஜோலார் பேட்டையை சேர்ந்தவர். அவரை சந்தித்தோம். ''நான் கடந்த மூணு வருஷமா பெப்சி டீலர்ஷிப் எடுத்து, திருப்பத்தூர், ஏலகிரி, நாட்றாம்பள்ளிக்கு சப்ளை பண்ணிட்டு வர்றேன். போன மே மாசம் நான் ஏலகிரியில் உள்ள கடைகளுக்கு சப்ளை செய்ய என்னுடைய வண்டியில் போனேன். அப்போது அங்கே இருந்த தி.மு.க. மற்றும் காங்கிரஸ்காரங்க என்கிட்ட, 'இனி கடைக்காரங்க மட்டும் இல்லை. உங்களை மாதிரி டீலர்களும் மாமூல் கொடுத்தாகணும்’னு சொன்னாங்க. 'என்னால் மாமூல் தர முடியாது’ன்னு அப்பவே கட் அண்ட் ரைட்டா சொன்னேன். உடனே அவங்க கோபமாகி, அந்த இடத்திலேயே என்னை அடிச்சாங்க. நான் ஏலகிரி போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் புகார் கொடுத்தேன். அதுக்கு பிறகுதான் எம்.எல்.ஏ. வீரமணி என்கிட்ட பிரச்னைக்கு வந்தார்.
'போலீஸ்ல கொடுத்த புகாரை வாபஸ் வாங்கு! அவங்களை மீறி நீ ஏலகிரியில் வியாபாரம் செய்ய முடியாது.’னு மிரட்டினார். என்னை அடிச்சவங்க மேல் நான் புகார் கொடுத்து இருக்கேன், எதுக்காக வாபஸ் வாங்கணும்? முடியாதுனு சொல்லிட்டேன்.
கடந்த 18-ம் தேதி இரவு எங்க வீட்டுக்கு சிலர் வந்தாங்க. 'எம்.எல்.ஏ. உன்னை கூட்டிட்டு வரச் சொன்னார், வா...’ன்னு கூப்பிட்டாங்க. நானும் எம்.எல்.ஏ. வீட்டுக்குப் போனேன். அவர் வீட்டுல ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சரோஜினி, அசோக்குமார் இருந்தாங்க.
'நான் அவ்வளவு தூரம் சொல்லியும், நீ ஏன் ஏலகிரியில் கொடுத்த கேஸை வாபஸ் வாங்கலை?’னு எம்.எல்.ஏ. என்கிட்ட கேட்டார். 'என்னை அடிச்ச துக்கு நான் புகார் கொடுத்திருக்கேன். அதை வாபஸ் வாங்கச் சொல்லி, நீங்க எதுக்கு தொல்லை கொடுக்குறீங்க?’னு கேட்டேன்.
'நீ நான் சொல்றதைக் கேட்க மாட்டேன்னு அடம்பிடிக்கிறியா? சரி... அதை நீ வாபஸ் வாங் கலைன்னா பரவாயில்லை. நாட்றாம்பள்ளியில் உனக்கு 1,200 சதுரஅடி நிலம் இருக்குல்ல... அது எனக்குத் தேவைப்படுது. அதுக்கு என்ன ரேட்டோ, அதை வாங்கிட்டு எனக்கு எழுதிக் கொடுத்துடு’ன்னு எம்.எல்.ஏ. கேட்டார். எனக்கு தூக்கி வாரிப்போட்டுச்சு. 'என்னோட நிலத்தை நான் விற்கிற ஐடியா இல்லைங்க’னு சொன்னதும் எம்.எல்.ஏ-வுக்கு கோபம் வந்துடுச்சு. 'நான் பொறுமையா இருக்கேன். என்னை சோதிக்காதே. இன்னும் 10 நாள்தான். அப்புறம் நான் மந்திரி ஆகிடுவேன். அதுக்குப் பிறகு, உன் குடும்பத்தையே காலி பண்ணிடுவேன். உன் மேலேயும் உன் குடும்பத்தார் மேலேயும் கஞ்சா கேஸ் போட்டு உள்ளே தள்ள, எனக்கு எவ்வளவு நேரம் ஆகும்? நான் சொன்னா, இந்த இன்ஸ்பெக்டர் செய்ய மாட்டார்னு நினைக்கிறியா... என்னய்யா செய்வேல்ல?’னு இன்ஸ்பெக்டரைப் பார்த்துக் கேட்டார். உடனே அவர், 'செஞ்சிடலாம் சார்’னு சொன்னார். அந்த இடத்தில் என்ன பண்றதுனு எனக்குத் தெரியலை. தப்பிச்சாப் போதும்னு தலையை ஆட்டிட்டு அங்கிருந்து கிளம்பி வந்துட்டேன். அதுக்குப் பிறகு தினமும் எனக்கு மிரட்டல் வந்துட்டே இருக்கு. தி.மு.க. ஆட்சியில் இப்படி நடந்த விஷயங்களைத் தோண்டி எடுத்துத்தான் முதல்வர் கேஸ் போடச் சொல்லி இருக்காங்க. ஆனா, அவங்க கட்சி எம்.எல்.ஏ. ஒருத்தரே இப்படி கட்டப்பஞ்சாயத்து பண்ற கொடுமையை நாங்க எங்கே போய் சொல்றது? ஜோலார்பேட்டை போலீஸ் ஸ்டேஷனே எம்.எல்.ஏ. வீட்டுலதான் நடக்குது. அப்புறம் எப்படி நான் போலீஸுக்குப் போறது?'' என்று வேதனையோடு கேட்டார்.
ஜோலார்பேட்டை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான கே.சி.வீரமணியிடம் குற்றச்சாட்டு களைச் சொல்லி விளக்கம் கேட்டோம். ''அந்த ஆளு சொல்ற மாதிரி எல்லாம் நான் மிரட்டக் கிடையாதுங்க. என்னைப்பற்றி ஜோலார்பேட்டையில் விசாரிச்சுப் பாருங்க. மக்களே உங்களுக்குச் சொல்லுவாங்க. புகார் கொடுத்தவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். அதான், என் மீது பழி போடுறார். தொகுதி மக்களை சந்திக்கவும், கட்சிப் பணி ஆற்றவுமே எனக்கு நேரம் சரியா இருக்குது. இதுல கட்டப்பஞ்சாயத்து பண்ண எங்கே நேரம் இருக்கு? எனக்குத் தேவையான அளவு சொத்து இருக்கு. நான் எதுக்கு மத்தவங்க நிலத்தை அபகரிக்க நினைக்கப்போறேன்? என்னுடைய வளர்ச்சியைப் பிடிக்காம சிலர் அவரைத் தூண்டிவிடுறாங்கனு நினைக்கிறேன். அது யாருன்னு நானே விரைவில் கண்டுபிடிக்கிறேன்...'' என்று சொன்னார்.
பிரச்னையில் சம்பந்தப்பட்டதாகச் சொல்லப்படும் ஜோலார்பேட்டை இன்ஸ்பெக் டர் ராஜேந்திரனிடம் பேசினோம். ''எம்.எல்.ஏ. வீட்டுக்கு நாங்க போனது உண்மைதான். ஆனா, அவர் சொல்ற மாதிரி எந்த சம்பவமும் அங்கே நடக்கவில்லை. எதுக்காக இப்படி ஒரு தப்பான தகவலை சொல்லி இருக்கிறார்னு விசாரிக்கிறேன்!'' என்றார்.
பிரச்னையில் ஜோலார்பேட்டை போலீஸ் சிக்கி இருப்பதால், வேறு போலீஸ் டீம் இந்த விவகாரத்தை விசாரிப்பது நல்லது!
நன்றி: ஜூனியர் விகடன்

கேப்டனுக்கு கைப்புள்ளையின் பகிங்கர கடிதம்!-- நல்ல ஜோக், நன்றி: சிநேகிதன்
அண்ணே! இது நல்லதில்லண்ணே நல்லதில்ல... ஏண்ணே எம்மேல இம்புட்டு கோவம்? அப்டி என்ன சொல்லிபுட்டேன்னு கொலவெறியோட அலையிறே நீயி... அப்டியே அடிக்கிறதா இருந்தாலும் நேர்ல வந்து அடி... யார் கேட்பா?.. வாரவன் போறவம்லாம் அடிச்சிட்டு போம்போது என் அண்ணன் நீ, உனக்கு அடிக்க உரிமையில்லையா?! நீ எம்புட்டு அடிச்சாலும் தாங்குவேம்ணே அத விட்டுட்டு சின்னபுள்ளதனமா ஆளை வச்சு அடிக்க சொல்றியே... பெரிய மனுஷன் பண்ற காரியமாயா இது?....
உனக்கும் எனக்கும் பிரச்சனை இருந்ததென்னவோ உண்மைதான், ஆனா உன்னைய தேர்தல்ல எதிர்ப்பேன்னு சும்மா ஒரு பேச்சுக்குதாண்ணே சொன்னேன். அதை நம்பி பயபுள்ளைக திடீர்னு ஒரு நா வந்து நீயும் ரவுடிதான் ஜீப்ல ஏறுன்னுட்டாங்க. நீங்க நினைக்கிற அளவுக்கு நான் ஒர்த்தில்லையான்னு சொன்னாலும் ஒருத்தன் கேக்கலையே... சரி விடு ஆனது ஆயிபோச்சு ஹிஸ்டிடில நம்ம பேரும் வரட்டும்னு நெனச்சி சரின்னு தலையாட்டுனேன்.
இன்னுமா இந்த ஊரு நம்மள நம்புதூன்னு பிரச்சாரத்துக்கு போனா... சும்மா சொல்லப்பிடாது நம்ம மக்கள் பாசக்கார பயபுள்ளைகண்ணே... போற எடம்மெல்லாம் கூட்டமா கூடி உசுப்பேத்தி விட்டுகிட்டே இருந்தாங்க. ஆனா இப்பதான் தெரியுது என்னை ரணகளமாக்கத்தான் கூடியிருக்காங்கன்னு.... ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
அப்போ அங்கே பேசுனதெல்லாம் உனக்கு கெட்டதா தெரியும். ஆனா நல்லா யோசிச்சி பார்ண்ணே. நான் உனக்கு செஞ்சது எல்லாமே நல்லதுதாண்ணே.
உன்ன குடிகாரன்னேன் எதுக்கு?... தமிழ் நாட்ல முக்குக்கு முக்கு டாஸ்மாக் கடதான் இருக்கு. நாட்டுல முக்காவாசி பேரு குடிகாரன்தான் (மன்னிச்சுகிங்கையா ஒரு ஃப்லோல வந்துடுச்சி இனிமே குடிகாரர்னே சொல்றேன் நீங்களும் கெளம்பி வந்து கும்மிராதிங்க)... நான் உன்னை குடிகாரர்னு அடையாளம் காட்ட போய்தான்...அத்தனை பேரும், ஓ நம்மாளு... இவரு செயிச்சா நமக்கும் ஏதாவது செய்வாருன்னு நினைச்சு அவன்பாட்டுக்கு "ஙங்கு ஙங்குன்னு" குத்தி தள்ளி, உன்னை ஜெயிக்கவச்சான். ஞாயப்படி எனக்கு நன்றி சொல்லி மாலை போட்டு தூக்கி வச்சி ஆடணுமாக்கும் நீ....அத விட்டுட்டு அடிக்க வர்றாராமாம் அடிக்க...
அப்புறம் எதிர் கட்சி டிவில என்னிக்காவது உன்னய காட்டியிருக்காங்களா?... ஆனா தேர்தல் ஆரம்பிச்ச நாள்ல இருந்து அவங்க தலிவர டிவில காட்னத விட உன்ன பத்தி காட்னதுதாண்ணே அதிகம். அதுக்கெல்லாம் காரணம் இந்த கைப்புள்ளங்கிறதையே மறந்துட்டு பேசுறே நீ.
நான் எதிர்த்தவன்லாம் வீணா போனதா சரித்திரமே இல்லைண்ணே. ஒத்த எம்மெல்ஏ.வா சுத்திக்கிட்டு இருந்த உனக்கு இம்புட்டு எம்மெல்ஏ எப்படிகிடைச்சாங்க அப்படிங்கிறதை யோசிச்சு பார்த்தேன்னா இம்புட்டு கோவம் வராது உனக்கு.
இது தெரிஞ்சுகிட்டுதான் நம்ம சிங்கும், ஒபாமாவும் அடுத்த எலெக்ஷனுக்கு அவங்களுக்கு எதிரா பேசச்சொல்லி இப்பவே அட்வான்ஸ் புக்கிங் பண்ணியிருக்காங்க.... வேணும்னா நீயும் ஒன்னு போட்டுக்கோ.
அத விட்டுட்டு அடிக்கணும்னு கங்கணம் கட்டிட்டு அலையிற நீயி. உனக்கு ஆசையாயிருந்த பார்டர்ல போயி தீவிரவாதியை பிடி, தெருவுல போற ரவுடியை அடி ஆனா இந்த பச்ச மண்ண போயி அடிக்கணும்னு நெனக்கிறியே வெக்கமாயில்லை... உன்னைய நினைச்சா சிப்பு சிப்பாத்தான்யா வருது.
ஆனா ஒன்னுண்ணே யார் என்னை சீண்டுனாலும், போங்கடான்னு என் வேலையை பார்த்துட்டு போயிட்டே இருந்தப்பல்லாம் இம்பூட்டு பிரச்சனை இல்லண்ணே. என்னைக்கு திரும்பி சீண்டனூம்னு நினைச்சனோ அன்னியிலிருந்துதான் பிரச்சனை. எல்லாத்தையும் சிரிக்க வச்ச எம்பொழப்பு இன்னிக்கு சிரிப்பா சிரிக்கிது...
அப்புறம் இன்னொரு விசயம்... ஸ்..ஸ்ஸ்ஸ்.. காத பக்கத்துல கொண்டா... அந்த கட்சியினாலதான் நீ செயிச்சேன்னு சொன்னேன்ல அது சும்ம பேச்சுக்கு... உன்ன உசுப்பேத்தி உடுறதுக்காகத்தான் அப்படி சொன்னேன்...
ம்ம்ம்ம்... உங்களையெல்லாம் இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே என் பொழப்பு ரணகளாமாகி கிடக்கு...

Subscribe to:
Posts (Atom)