Tuesday, October 5, 2010

சாதிகள் இல்லையடி பாப்பா குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொலல் பாவம்

லண்டனுக்கு போக பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் கிளம்ப ரெடியா இருந்தது. எகானமி கிளாஸில் உக்காந்திருந்த ஒரு வெள்ளைக்கார பெண்மணி (50, 55 வயசு இருக்கும்) செம கடுப்புல இருந்தாங்க. காரணம் : அவங்க பக்கத்துல ஒரு கறுப்பினத்தவர் வந்து உக்காந்தது தான்.

ஏர் ஹோஸ்டஸை கூப்பிட்டு, "என்ன இது.. ஒரு கறுப்பருக்கு பக்கத்துல எனக்கு சீட் குடுத்திருக்கீங்க.. என்னால லண்டன் போற வரைக்கும் இந்த மாதிரி ஆள் பக்கத்துல உக்காந்து வர முடியாது.." அப்டீனாங்க.

"கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க மேடம்.."

"என்ன விளையாடறீங்களா.. நான் யார் தெரியுமா..?"ன்னு குரலை உயர்த்தி கத்த, சுத்தி உக்காந்திருங்க இவங்களை பாக்க ஆரம்பிச்சுட்டாங்க.

ஏர் ஹோஸ்டஸ் பதட்டப்பட்டு, "கொஞ்சம் இருங்க மேடம்.. வேற எங்கயாவது இடம் இருக்கானு பாக்கறேன்"னு போக, வெள்ளைக்கார பெண்மணிக்கு டென்ஷனில் மூச்சிரைக்க ஆரம்பிச்சிடுச்சு. " சீக்கிரம் வாங்க.. என்ன கொஞ்சம் கூட கஸ்டமர் சர்வீஸ் சரியில்லையே.."ன்னு புலம்ப ஆரம்பிச்சுட்டாங்க. கறுப்பினத்தவர் இது எதையும் கண்டுக்காம பேப்பர் படிச்சிட்டிருந்தார்.

ஏர் ஹோஸ்டஸ் போய் 5 நிமிஷம் ஆச்சு. விமானம் கிளம்பப் போறதா அறிவிப்பு வந்து, ரன்வே-ல ஓடி, டேக் ஆஃப் ஆயிடுச்சு.

ஏர் ஹோஸ்டஸ் வெள்ளைக்காரம்மா கிட்ட அரக்கபரக்க வந்தாங்க.

"மேடம்.. எகானமி கிளாஸ்ல எல்லா சீட்டுக்கும் ஆள் வந்துட்டாங்க.. ஒரு சீட் கூட காலி இல்லை.. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலை.. ஒரு வேளை பிசினஸ் கிளாஸ்ல இருக்குமோன்னு தேடி பாத்தேன்.. அங்கேயும் ஃபுல்.."

"எனக்கு தெரியாது.. என்னால இவர் பக்கத்துல உக்காந்து வர முடியாது.. நான் ஃப்ளைட்லேந்து இறங்கிக்கறேன்.. பைலட் கிட்ட சொல்லி விமானத்தை தரையிறக்க சொல்லுங்க.. "

"நீங்க இப்படி கோபப்படுவீங்கன்னு தெரியும் மேடம்.. நல்லவேளையா ஃபர்ஸ்ட் கிளாஸ்ல ஒரே ஒரு சீட் காலியா இருக்கு.. இதை விட அங்க சௌகர்யங்களும் அதிகம்.. நான் பைலட் கிட்ட போய் நடந்த விஷயத்தை சொல்லி, பர்மிஷன் கேட்டேன்.. அவரும் நமக்கு கஸ்டமர் சர்வீஸ் தான் முக்கியம்.. பிடிக்காத ஆள் பக்கத்துல உக்காந்துகிட்டு பிரயாணம் பண்ண சொல்றது ரொம்ப தப்புன்னு சொல்லிட்டார்.. அதனால.."

வெள்ளைக்கார பெண்மணி லைட்டா சிரிச்சுகிட்டே, தன் கைப்பையை எடுத்து தோளில் மாட்டிக் கொண்டு எழுந்திருக்க, ஏர் ஹோஸ்டஸ் அந்த கறுப்பினத்தவரிடம் "அதனால.. சார்.. நீங்க உங்க லக்கேஜை எடுத்துகிட்டு ஃபர்ஸ்ட் கிளாஸ்க்கு போயிடுங்க.. உங்களுக்கான சீட் அங்கே காத்திருக்கு..!"

இதை கேட்டதும், சுத்தி இருந்த அத்தனை பயணிகளும் எழுந்து நின்னு கை தட்ட ஆரம்பிச்சுட்டாங்க.

கறுப்பினத்தவர் எந்த சலனமும் இல்லாம பேப்பரை மடிக்க ஆரம்பிச்சார். வெள்ளைக்கார துரையம்மா தன் கைப்பைல எதையோ தேடற மாதிரி தலையை குனிஞ்சுகிட்டாங்க.. என்ன தேடியிருப்பாங்கன்னு எனக்கு தெரியலை.. உங்களுக்கு..?