Sunday, November 30, 2008

அரசியல் வாதிகளும் இதை படிக்கலாம்

தாஜ் ஹோட்டலில் எவ்வாறு நான்கு தீவிரவாதிகள் ஒழிக்கப் பட்டனர் என்று விளக்கும் இந்திய கமாண்டோவின் விளக்கத்தை பார்ப்போம்.

முதலில் இந்தியா கமாண்டோக்கள் தாஜ் ஹோட்டல் வந்த கதை

புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் மும்பையை பயங்கரவாதம் தாக்கியது. அப்போது கேரளாவில் இருந்த மகாராஷ்டிர முதல்வர் மும்பை வரவும் இந்த சூழ்நிலையின் பயங்கரத்தையும் முழுமையாக உணர்ந்துக் கொள்ளவும் 90 நிமிடம் பிடித்தது .பின்னர் 11.00 அளவில் மத்திய அரசிற்கு போன் பேசிய முதல்வர் கோரியது 200 கமாண்டோக்களை. உடனே அந்நேரத்தில் தூங்கி கொண்டிருந்த இந்திய கமாண்டோக்கள் எழுப்பப் பட்டனர். அவர்கள் மும்பை வரத் தயாரான போதுதான் புரிந்தது, அவ்வளவு பேரை மும்பை கொண்டுவர தேவையான சிறப்பு விமானம் சண்டிகரில் உள்ளது என்று. உடனே அந்த விமானியையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி தயார் படுத்தி டெல்லியிலிருந்து கமாண்டோக்கள் மும்பை வந்த போது நேரம் காலை 5.25 மணி. அவர்கள் தாஜ் ஹோட்டலுக்கு கொண்டு வரப்பட்டு திட்டம் தயாரிக்கப் பட்டு அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த போது நேரம் காலை 7.00 மணி. அதாவது மும்பை தாக்கப் பட்டு சுமார் ஒன்பதரை மணி நேரம் பின்னர். பாதுகாப்புத் துறை நிபுணர்கள் கூறுவது "தாக்குதல் நடைபெற்ற 30 நிம்டங்களுக்குள் பதில் தாக்குதல் நடத்தா விட்டால், எதிரிகளை அளிப்பது கடினமான காரியம் ஆகிவிடும்". (நன்றி:டைம்ஸ் ஒப் இந்தியா)

இப்படி வியாழன் காலை 7.00 மணிக்கு உள்ளே சென்ற இந்திய கமாண்டோக்கள் தீவிரவாதிகளை அழிக்க மேற்கொண்ட முயற்சிகளைப் பற்றி இங்கே பார்போம். (நன்றி: மும்பை மிர்றோர்)

தாஜ் ஹோட்டல் ஒரு மிகப் பெரிய கட்டிடம். இதில் பல நூறு சொகுசு அறைகள் உண்டு. இவை ஒவ்வொன்றும் அளவில் மிகப் பெரியவை. மேலும் பல "கூட்டம் நடத்துவற்கான" அரங்குகளும், உணவகங்களும் உண்டு. ஒவ்வொன்றும் அளவில் மிகப் பெரியவை. இந்த ஹோட்டல் இரு பிரிவுகளாக உள்ளது. அதாவது பழைய தாஜ் அரண்மனை கட்டிடம் மற்றும் புதிய தாஜ் டவர். மேலும் நூற்றுக்கணக்கான அப்பாவிகள் உள்ளே மாட்டிக் கொண்டு இருக்க, தீவிரவாதிகளை அழிக்கும் பணி மிக கடினமாகவே இருந்தது. தூரதிர்ஷ்டவசமாக, தாஜ் ஹோட்டலின் வரைபடம் கமாண்டோக்களுக்கு வழங்கப் படவில்லை. கண்காணிப்பு கேமரா அறையினையும் தீவிரவாதிகள் சேதப் படுத்தி விட்டனர். ஹோட்டலுக்குள்ளே பல இடங்களில் இவர்கள் தீ வைத்ததால், உள்ளே புகை மண்டலமாகவும் கடும் இருட்டாகவும் வேறு இருந்தது. இந்த கடினமான சூழலிலும் கூட வெற்றிகரமாக எதிரிகளை வென்ற நமது படைவீரர்களின் சாகசம் பாராட்டுக்குரியது.

இந்திய வீரர்களின் திட்டத்தின் அடிப்படை, முதலில் தீவிரவாதிகளை ஒரு குறிப்பிட்ட இடத்துக்குள் நெருக்குவது, அங்கே அவர்களுடன் சண்டை நடத்துவது, அதற்குள் உள்ளே இருப்பவர்களை காப்பாற்றி வெளியேற்றுவது. இதன் அடிப்படையில் ஒரு குழு தீவிரவாதிகளை தேடி முதல் தளத்திற்கு சென்றது. மற்றொரு குழு மேல் தளத்தில் இருந்து உள்ளே நுழைந்தது. இன்னொரு குழு உள்ளே மாட்டி கொண்டவர்களை மீட்க சென்றது. இது சொல்வதற்கு எளிதாக இருந்தாலும், உண்மையில் ஒரு மிகப் பெரிய போராட்டமாக இருந்தது. அந்த தீவிரவாதிகள் மிகுந்த போர் தேர்ச்சி பெற்றிருந்ததுடன் கட்டிடத்தின் உள்ளமைப்பு பற்றி நன்கு தெரிந்து கொண்டிருந்தனர். இதனால், அவர்களால் எளிதாக தளம் மற்றும் கட்டிடம் மாற முடிந்தது.

பலமணி நேரம், கட்டிடத்தின் அடித்தளத்தில் கழித்த இந்திய வீரர்கள் மிக நிதானமாக முதல் மாடியை நோக்கி முன்னேறினர். தீவிரவாதிகள் வீசும் குண்டுகள் மற்றும் துப்பாக்கிகளால் சுடும் சத்தம் இவற்றின் அடிப்படையிலேயே நம் வீரர்களால் அவர்கள் பதுங்கி இருக்கும் இடத்தை கணிக்க முடிந்தது. இவர்கள் முன்னேறும் போது, பின்னே வந்த மற்றொரு குழுவினர் பாதுகாப்பு தந்தனர். முதல் மாடியில் ஒவ்வொரு அறையாக இவர்கள் சோதனை இட்டனர். அப்போது, அந்த தளத்தின் முழு விவரத்தையும் அறிந்திருந்த தீவிரவாதிகள் இவர்களுடன் கண்ணாமூச்சி விளையாட்டு காட்டினர். கையெறி குண்டுகளை நம் வீரர்கள் மீது எறிந்தனர். மேலும் பல இடங்களில் தீ வைத்தனர். கிட்டத்தட்ட ஒரு நாள் முழுக்க நடை பெற்ற சண்டைக்கு பின்னர், நம் வீரர்களால், அந்த தளத்தின் முழு விவரத்தையும் அறிந்து கொள்ள முடிந்ததுடன், தீவிரவாதிகளை ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள் நெருக்க முடிந்தது.

தீவிரவாதிகளை நேரில் பார்த்த ஒரு கமாண்டோவின் கூற்றுப் படி, அந்த தீவிரவாதிகள் மிகவும் இளைய வயதினராய் இருந்தனர். ஒரு குறிப்பிட்ட நேர சண்டைக்கு பிறகு களைத்துப் போய் விட்டனர். மிகவும் பயந்து போய் கூட இருந்தனர். கைகளை தூக்கி சரணடைவது போல நடித்த ஒருவன் தப்பி ஓட முயல நம் வீரர்கள் அவனை சுட்டுக் கொன்றனர். அவன் முகத்தை கூட பார்க்க விரும்பாமல் தப்பி சென்ற மற்றொருவனை தேடும் பணியை தொடர்ந்தனர்.

இதே சமயம், உள்ளே மாட்டி கொண்டிருந்தவர்களில் (அறைகளில் தங்கி இருந்த )பலருடன் தொலை பேசி மூலம் தொடர்பு கொண்ட போலீஸார், அவர்களை அங்கேயே இருக்கும் படி அறிவுறுத்தினர். பின்னர் உள்ளே சென்ற மற்றொரு குழுவினரால் அவர்கள் பத்திரமாக காப்பாற்றப் பட்டனர்.

மேல்தளத்தின் வழியாக , உள்ளே நுழைந்த கமாண்டோக்களின் பணி இன்னும் சிரமாக இருந்தது. தீயை அணைக்க பாய்ச்சப் பட்ட நீர் ஆறாவது மாடியில் கழுத்து வரை நிரம்பி இருந்தது. கொல்லப் பட்டவர்களின் உடல்கள் நீரில் மிதந்து கொண்டிருந்தன. அவர்கள் கொல்லப் பட்டு 24 மணி நேரத்திற்கு மேல் ஆகி விட்டதால், அந்த உடல்கள் அழுகி கடும் நாற்றம் கிளம்பி இருந்தது. ஒரு கமாண்டோ கூறுகிறார். " என்னால் அந்த சூழல் எப்படி இருந்தது என்று சொல்லவே முடிய வில்லை"

இவ்வாறு ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள் தீவிரவாதிகளை நெருக்குவது அதே சமயத்தில் உள்ளே மாட்டிக் கொண்டவர்களை பத்திரமாக மீட்பது என்ற "ஆபரேஷன் சைக்ளோன்" என்ற திட்டத்தை முதல் பாதியை சிறப்பாக செயல் படுத்திய நம் வீரர்கள், ஹோட்டலுக்குள் உயிரோடு இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப் பட்டனர் என்று தெரிய வந்தவுடன், தமது தாக்குதலை தீவிரப் படுத்தினர்.

அதே சமயம் பல மணி தூங்காமல் தீவிரவாதிகள் மிகுந்த களைப்படைந்திருந்தனர். அவர்களை ஒரு நிமிடம் கூட ஓய்வெடுக்காமல் சண்டையிடச் செய்ததும் நமது வீரர்களின் போர்த்தந்திரம். ஒரு தீவிரவாதி "ரப்பா! ரெஹம் கர்!", அதாவது கடவுளே என்னைக் காப்பாற்று என்று ஒலமிட்டதாகவும் நம் கமாண்டோ தெரிவித்தார். மற்றொருவன், தாக்குதலை நிறுத்துங்கள், வெளியே வந்து விடுகிறேன் என்று கதறியதாகவும் தெரிவித்தார்.

இறுதியாக, அனைத்து அப்பாவிகளும் தப்பித்தனர் என்று உறுதி செய்து கொண்ட நம் வீரர்கள், அவர்களை நெருக்கி அறைகளுக்குள் ஒளிந்து கொள்ள செய்தனர். பின்னர், தீவிரவாதிகள் ஒளிந்து இருந்ததாக சந்தேகிக்கப் படும் அறைகளின் கதவினை குண்டுகள் கொண்டு தகர்த்தனர். உள்ளே சென்று சில குண்டுகளை மீண்டும் எறிந்தனர்.

சுமார் 50 மணி நேர போராட்டத்திற்கு பின்னர், அனைத்து தீவிரவாதிகளும் ஒழித்துக் கட்டப் பட்டனர். பின்னர் அவர்கள் உடல்களை முற்றிலும் சிதைந்த நிலையில் இவர்கள் கண்டுபிடித்தனர். அதைப் பற்றி ஒரு கமாண்டோ கூறியது. "அவர்கள் ஒரு கொடூரமான சாவை அதற்கான வலியை மெல்ல மெல்ல உணர்ந்தவாறே அடைந்தனர். அவர்கள் உடல்கள் சின்னா பின்னமாகின நிலையில் கண்டெடுக்கப் பட்டன.. ஒருவனது கண்களுக்குள்ளே கூட குண்டுகள் பாய்திருந்தன".

50 மணி நேரம் சாப்பிடாமல், தூங்காமல் போராடி தீவிரவாதிகளை ஒழித்து கட்டியது மட்டுமல்லாமல் பலரின் உயிரை காப்பாற்றிய நம் வீரர்களுக்கு வாழ்த்தும் நன்றியும் சொல்லும் அதே நேரத்தில் இந்தியாவை தாக்க நினைக்கும் தீவிரவாதிகளுக்கு ஒரு செய்தி.

"ஆயுதம் இல்லாத அப்பாவிகளை கொல்லும் பேடிகளே! ஒன்றை புரிந்துக் கொள்ளுங்கள், உங்களால் எங்கள் படை வீரர்களை ஒருநாளும் நேருக்கு நேர் சந்திக்கவே முடியாது. அதற்கு வேண்டிய ஆண்மையும் வீரமும் உங்களிடம் இல்லை. மேலும், இந்தியா எனும் வல்லரசுடன் மோதினால் உங்கள் சாவு மிகக் கொடூரமாக இருக்கும். அந்த சாவு கூட, பல ஆண்டுகள் பெருவியாதியால் வேதனைப் பட்டு இறக்கும் ஒருவனது வேதனை முழுவதும் முழுமையாக உணர்ந்த பின்னரே நிகழும். அது மட்டுமல்ல, தாய் நாட்டிற்காக உயிர்நீத்த எங்கள் அருமை வீரர் உடல்கள் முழு மரியாதையுடன் அடக்கம் செய்யப் படும் அதே வேளையில் உங்களது உடலுக்கு தெருவில் அடிப்பட்ட சொறி நாய்க்கு கிடைக்கும் மரியாதை கூட கிடைக்காது. இறப்பிலும் நாறும் கேவலமான நிலை உங்களுக்கு தேவையா என்பதை இந்தியா வருவதற்கு முன்னரே (உங்களுக்கு மூளை என்று ஒன்று இருந்தால்) முடிவு செய்து கொள்ளுங்கள்"

"மேலும், உங்களுக்கு கடவுள் நம்பிக்கை என்று ஒன்று இருந்தால் மற்றும் சொர்க்கம் நரகம் என்றவற்றின் மீதும் நம்பிக்கை இருந்தால் ஒரு செய்தி. அப்பாவிகளை கொல்லுபவனுக்கு கடவுள் இறந்த பிறகும் நரகத்தில் கடும் தண்டனை அளிப்பார் என்று எல்லா மதங்களின் புனித வேத நூல்களும் கூறுகின்றன. எனவே, இறக்கும் முன்னரும், இறந்த பின்னரும் இவ்வவளவு கடும் தண்டனை தேவையா என்று ஒரு நிமிடம் யோசியுங்கள்"

மும்பாயின் கொடுரத்தில் அடுத்த ஹிட்லர் உருவாகி வருவதை உலக நாடுகள் அறியவேண்டும் .

1933ல் ஜெர்மனியில் அடால்·ப் ஹிட்லர் அதிகாரத்துக்குவந்தது உலக அரசியலில் மட்டும் ஆழமான மாற்றங்களை உருவாக்கிய திருப்புமுனை அல்ல, உலக தத்துவஞானத்துக்கும் திருப்புமுனைதான். அந்தத் தருணம் வரை மானுடம் சந்தித்தே இராத அறவியல் கேள்விகளை எதிர்கொண்டது. யூதர்களை ஜெர்மனிய தேசியத்தின் எதிரிகளாகச் சித்தரித்து, ஜெர்மனிய தேசிய வெறியை எதிர்மறையாகத் தூண்டிவிட்டு, அதன் விசையில் அவர் அதிகாரத்தைக் கைப்பற்றினார்.

1935ல் இயற்றப்பட்ட சட்டங்கள் வழியாக யூதர்களின் இயல்பான சமூக உரிமைகள் பிடுங்கப்பட்டன. யூதர்கள் இரண்டாம்கட்ட குடிகளாக அறிவிக்கப்பட்டார்கள். அவர்களின் சொத்துரிமை தடைசெய்யப்பட்டது. அவர்கள் பிற ஜெர்மனியருடன் மனம்புரிதல் தடைசெய்யப்பட்டது. 1938 நவம்பர் 10 ஆம்தேதி யூதர்களுக்கு எதிராக ‘பொக்ரம்’ என்னும் கூட்டக்கொலை அறிவிக்கப்பட்டது. யூதர்களின் குடிகள் கொள்ளையடிக்கப்பட்டன.

1939ல் இரண்டாம் உலகப்போர் மூண்டபோது ஹிட்லர் யூதர்களை மானுட எதிரிகள் என்று அறிவித்தார். அவர்கள் பொது இடங்களில் நடமாடுவது, சேர்ந்து வழிபடுவது தடைசெய்யப்பட்டது. சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கெட்டோக்களில் மட்டுமே அவர்கள் வாழவேண்டுமென ஆணையிடப்பட்டது. 1941ல் யூதர்களில் 12 வயதுக்கு மேல் வயதான எல்லா யூதர்களும் ஆயுதத் தொழிற்சாலைகளில் கட்டாய உழைப்புக்குச் செல்லவேண்டுமென ஆணை வந்தது. ஆறு வயதுக்குமேலான எல்லா யூதர்களும் மஞ்சள்நிற அடையாள வில்லை அணிந்தாக வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டது

1941ல் போர் தனக்குச் சாதகமாக திரும்பிவிட்டது என்ற எண்ணம் ஹிட்லருக்கு உருவானதும் அவர் ‘கடைசித்தீர்வு’ ஒன்றை முன்வைத்தார். முடிந்தவரை யூதர்களை திரட்டி கொன்று ஒழிப்பதே அந்தத் தீர்வு. யூதர்கள் கூட்டம்கூட்டமாக கைதுசெய்யப்பட்டு கட்டாய உழைப்பு முகாம்களில் அடைக்கப்பட்டு அவர்களின் கடைசி துளி உழைப்பு வெளிவரும் வரை கடும் உழைப்புக்கு ஆளாக்கப்பட்டனர். பின்னர் அவர்களை விஷவாயு அறைகளில் தள்ளி கொலைசெய்தார்கள் ஹிட்லரின் சிறப்புப் படையினர்.

கொல்லப்பட்டவர்களின் மயிர் கம்பிளி தயாரிப்புக்குக் கொண்டு செல்லப்பட்டது. தோல் செருப்பு தைக்க பயன்பட்டது. எலும்புகள் பற்கள் எல்லாமே தொழிற்சாலைகளில் பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்பட்டன. ஆஷ்விட்ஸ், மாஜ்டனிக், ட்ரெப்ளின்கா, டச்சாவூ, புஷன் வால்ட், பெர்கன் -பெல்சன், செம்னோ, பெல்ஸெக், மெடானக் போன்ற கொலைமையங்களில் இரவும் பகலும் கொலை நடந்தது. 1943-44 களில் சராசரியாக மணிநேரத்துக்கு ஆயிரம்பேர் என்ற அளவில் யூதர்கள் கொல்லப்பட்டார்கள். கிட்டத்தட்ட 40 லட்சம் பேரை நாஜிகள் கொன்றார்கள். கட்டாய உழைப்பில் இறந்தவர்கள் உட்பட 57 லட்சம் பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்பது நிபுணர் கணக்கு. ஐரோப்பிய யூதர்களில் 90 சதவீதம் பேரும் இக்காலகட்டத்தில் கொல்லப்பட்டார்கள்.

பின்னர் மனித மனசாட்சியை உலுக்கியது இந்தக்கொலை வரலாறு. மனிதன் இத்தனை குரூரமானவனா என்ற கேள்வி எழுந்து வந்தது. சாதாரண மக்கள் எப்படி இந்தக்கொலைகளை ஒத்துக்கொண்டு ஹிட்லரின் அணியில் திரண்டார்கள்? எளிய படைவீரர்கள் எப்படி இந்த படுகொலைகளைச் செய்தார்கள்? அதைவிட நாஜிகளை ஆதரித்த எழுத்தாளர்களும் கலைஞர்களும் எப்படி இப்படுகொலைகளை ஏற்றுக்கொண்டார்கள்?

நாஜிகளின் படுகொலை அமைப்பில் மருத்துவர்களும் அறிவியலாளர்களும் இணைந்திருந்தார்கள். யூதர்களைக் கொல்ல சான்றிதழ் வழங்கியது மருத்துவர்களே. அறிவியலாளர்கள் யூதர்களை தங்கள் ஆய்வுக்கூடங்களில் பரிசோதனை மிருகங்களாக பயன்படுத்திக் கொண்டார்கள். அச்செய்திகள் வர வர உலகமே சுய விசாரணை செய்ய ஆரம்பித்தது. மனிதனின் மனசாட்சி பற்றிய இலட்சியவாத நம்பிக்கைகள் தகர்ந்தன. கல்வி மனிதனைப் பண்படுத்தும் என்ற பத்தொன்பதாம் நூற்றாண்டுக் கருத்து சிதைந்தது.

ரஜினியின் பிறந்த மண்ணு எது தெரியுமா ?

உணர்ச்சி மயமாகவும், உற்சாக விசிலோடும் நடந்த ரஜினியின் ரசிகர்கள் சந்திப்பில், `கிருஷ்ணகிரியிலுள்ள நாச்சிக்குப்பத்தில் உங்கள் அம்மா, அப்பா பிறந்த இடத்தில் நினைவு மண்டபம் கட்டுவீர்களா?’ என்ற கேள்வி வாசிக்கப்பட, பளிச் என்று பிரகாசமான ரஜினி, “யார்.. யார்.. இந்தக் கேள்வி கேட்டது.. அவர் வந்திருக்கிறாரா?” என்று பரவசப்பட, கேள்வி எழுதி அனுப்பிய கார்த்திகேயனை அமைதியாக உற்றுப் பார்த்துக் கொண்டேயிருந்திருக்கிறார் ரஜினி.
எங்கள் தலைவரும் பச்சைத் தமிழன்தான்” என்று தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் சந்தோஷ கூத்தாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், ரஜினியின் பூர்வீக பூமியும், அவர் பிறந்த இடமுமான நாச்சிக்குப்பத்திற்குச் சென்று வந்த ஒரு நிருபர் கிழ்கண்டவாறு எழுதுகிறார் ,


பச்சைப் பசேல் கிராமம். பழங்கால மண் சுவர், நாட்டு ஓடுகள் வேய்ந்த நேர்த்தியான வீடுகள். பெரும்பாலும் மராட்டி மொழி பேசும் ஒவ்வொரு வீட்டிலும் வீரசிவாஜியின் படம் பூஜை அறையில் உள்ளது.

ரஜினியின் தாய் மாமா துக்காராம் ராவின் குடும்பத்தினர்தான் தற்போது இங்கு இருக்கின்றனர். வீட்டின் முன் அறையில் பல குடும்ப போட்டோக்களுக்கு நடுவே தன் தாய்மாமா துக்காராமை பாசத்தோடு கட்டிக் கொண்டு ரஜினி நிற்கும் போட்டோவும் இருந்தது. 76-ல் எடுக்கப்பட்ட அந்த போட்டோ, `ரஜினியின் அப்பா ரானோஜிராவ் உடல் நிலை சரியில்லாத போது, பெங்களூரில் அவரைப் பார்க்கச் சென்றபோது எடுத்த படமாம்.

இப்போது அந்த வீட்டில் ரஜினியின் அத்தை சரஸ்வதி பாய் மட்டுமே இருக்கிறார். ரஜினியின் அம்மா, அப்பா வாழ்ந்த நாட்களை நினைவு கூர்ந்தார்.

“ரஜினியோட அப்பா பிறந்த ஊரும் இதுதான். ரஜினி பிறந்த ஊரும் இதுதான். ரஜினி அம்மா ராம்பாய் குடும்பம் இதே ஊர் பக்கத்துல இருந்தாங்க. அவங்க குடும்பமே பிழைப்புத்தேடி பெங்களூர் போய்ட்டாங்க. அப்பப்ப இங்க வந்து போவாங்க. அந்த சமயத்துலதான் ரஜினி அப்பா ரானோஜி ராவ்க்கும், ராம்பாய்க்கும் கல்யாணம் நடந்தது. வயல் வேலை தவிர, வேற எதுவும் இங்க பிழைக்க வழி கிடையாது. இருக்குற நிலத்தை வீட்ல பெரியவங்க பார்த்துப்பாங்க. புள்ளங்களை, சம்பாதிக்க பக்கத்துல இருக்குற பெங்களூருக்கு அனுப்பிடுவாங்க.

இப்பக்கூட ஒவ்வொரு வீட்டுக்கும் ஒருத்தரோ ரெண்டு பேரோ பெங்களூர்ல வேலை பார்க்குறாங்க. கிருஷ்ணகிரியில வேலை வாய்ப்புக்குவழியில்லாததால, இங்கிருந்து 70 கி.மீட்டர் தூரம் இருக்கிற பெங்களூருக்குப் போயிடுறாங்க. ரஜினி அப்பாவும் மனைவியோட பெங்களூர் போயிட்டார். அனுமந்த் நகர்ல தங்கி அவரு அப்பா போலீஸ் வேலை பார்த்தார். பிரசவத்துக்காக இங்க வந்துடுவாங்க. அப்ப ரஜினி வயித்துல இருக்கும் போது, இங்க இதே காம்பௌண்ட்ல எங்க சொந்தக்காரங்க கூடதான் ராம்பாய் இருந்தாங்க. அப்பல்லாம் ரொம்ப கஷ்டமான சூழ்நிலை. சாப்பாட்டுக்கும் அன்றாட செலவுக்கும் திண்டாட்டமா இருக்கும். அந்தக் கஷ்டமான நேரத்துலதான் ரஜினி பிறந்தார், இதே வீட்டில்” என்று வசூல் சக்ரவர்த்தியின் வரலாற்றுத் தொடக்கத்தைக் கூறினார் சரஸ்வதிபாய்.

“என்னோட கணவர் துக்காராம் மேல ரொம்பப் பிரியம் வெச்சிருந்தார் ரஜினி. அவர் இருக்குற வரைக்கும் சென்னைக்குப்போய் ரஜினியைப் பார்த்துட்டு வந்திட்டிருந்தார். அவரு சின்ன வயசுல இங்கேயே மூணு வருசம் அம்மாவோட தங்கியிருந்தார். பெங்களூர் போன பிறகு அடிக்கடி குடும்பத்தோட வருவாங்க. அவரு மெட்ராஸ் போயி சினிமாவுல சேர்ந்த பிறகு தியேட்டர்ல தான் அவரைப் பார்ப்போம்,” என்று ஏக்கத்தோடு சொன்ன சரஸ்வதி ரஜினியின் தாய்வழி சொந்தங்களை நமக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

வி.ஐ.பி. கேள்வி கேட்டு, ரஜினியிடம் `வெரிகுட்’ வாங்கிய கார்த்திக்கை சந்தித்தோம். “பல முறை தலைவரை சந்தித்துப் பேசியிருக்கேன். ஒருமுறை என்னை வீட்டுக்கு வரவழைத்து மன்றம் தொடர்பா பேசினப்ப `கிருஷ்ணகிரியிலருந்து நீங்க வர டைம் ஆறு மணி நேரமாகுமா?’னு கேட்டார். `நான் கூட கிருஷ்ணகிரி தான்… நாச்சிக்குப்பம் நான் பிறந்தது’ன்னு போகிற போக்கில் சொன்னார். அப்போது அதுபற்றி நானும் கவனிக்கலை. அந்தக் கேள்விதான் இப்போது கேட்டேன். ரொம்பவும் சந்தோசமாயிட்டார். தலைவர் சந்தோசம் தானே எங்களுக்கு சந்தோசம். இனி அவர் என்ன சொன்னாலும் செய்யத் தயாரா இருக்கோம்” என்று கார்த்திக்கின் குரலில் உற்சாகம் பீரிடுகிறது.

கடந்த 92-ல தான் புதிய மன்றம் தொடங்க தடை போட்டிருக்கிறார் ரஜினி. இதற்கும் ஒரு காரணம் கூறுகிறார்கள். தீவிர ரசிகர்களின் பெற்றோர் சிலர் `எங்க பையன் உருப்படியா வேலை செய்யாம உங்க படத்துக்கு கட்_அவுட் வைக்கிறான்’னு தொடர்ந்து புகார் வர புதிய மன்றப் பதிவை நிறுத்தச் சொல்லியிருக்கிறார் ரஜினி.

ஆனால் “ `எந்திரன்’ முடிந்தவுடன் அரசியல் பற்றி உட்கார்ந்து பேசுவோம்” என்ற ஒற்றை வார்த்தை ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கிறது.இதையெல்லாம் விட, சமீபத்தில் சென்னை வந்த அத்வானி, ரஜினியிடம் “உங்களுக்கு இருந்த ஒரே தடை கர்நாடகக்காரர் என்கிற முத்திரை. அதுதான் உடைந்து விட்டதே. இனியும் என்ன தயக்கம்? களத்தில் இறங்குங்கள்” என்று வெளிப்படையாக பேசியிருப்பதாகத் தெரிகிறது. மெளனமாக அதைக் கேட்டுக் கொண்டார் ரஜினி. இப்போது அவர் மனதில் நாச்சிக்குப்பத்தில் தாய் தந்தைக்கு நினைவு மண்டபம் கட்டும் திட்டம் ஓடிக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார்கள், அவர் முகக் குறிப்பறிந்த நெருங்கிய நண்பர்கள்

இனி நாம் செய்யவேண்டியது , நம்மை காப்பாற்றிக்கொள்ள !

மும்பையில் நடந்த கோர சம்பவத்துக்கு காரணம் இந்தியாவின் அரசியல் தலைமை சரியில்லாததே என்று Wallstreet Journal சொல்கிறது.

One reason is because India is an easy target. Its intelligence units are understaffed and lack resources. Coordination among the country's 28 state police forces is poor. The country's anti terror legal architecture is also inadequate; there is no preventive detention law, and prosecutions can take years. A lack of political leadership is to blame. Yesterday Prime Minister Manmohan Singh promised that "every perpetrator would pay the price." Yet his Congress Party has done little more than
bicker with its coalition allies over the past five years on how best to fight terrorism, as Sadanand Dhume writes here. Or it has tried to deflect responsibility by blaming Pakistan. It may pay a price for its incompetence at the national polls next year.

இந்தியாவின் geo political stability இப்போது அன்னிய முதலீட்டாளர்களுக்கு பெரும் கவலை அளிக்கக்கூடிய விஷயமாக மாறி வருவதன் அறிகுறி. இதனால் வருங்காலத்தில் அன்னிய முதலீட்டிற்கான சாதகமான சூழ்நிலைகள் சற்றே குறையக்கூடும். சரிந்து விடாது. ஆனால் முதலீட்டாளர்கள் அதிகமாக கேள்விகள் கேட்பார்கள். Business Resumption Planning முக்கிய காரணியாக அலசப்படும். அதி முக்கிய வர்த்தக செயல்பாடுகள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுவதை யாரும் விரும்ப மாட்டார்கள். இந்த இடத்தில் சைனா இந்தியாவை அடித்துச் சென்று விடும்.


இந்த முறையும் நிலையில்லாத ஒரு ஆட்சி மத்தியில் அமையுமானால் இந்தியாவின் வளர்ச்சி நிச்சயம் தடை படும். இந்தியா தீவிரவாதத்திற்கு எதிரான மென்மையான போக்கை கடைபிடித்து வருவது மிகவும் ஆபத்தான நிலைப்பாடு. இந்தியாவின் வெளியுறவு கொள்கைகள் பாகிஸ்தானுடனும் பங்களாதேஷுடனும் இன்னும் வெளிப்படையாகவும் கடுமையானதாகவும் இருக்க வேண்டும். இன்றைய தேதியில் இந்தியாவிற்கு பாகிஸ்தானுடனான உறவில் இரண்டே நிலைகள் தான் இருக்கின்றன.

அ) மிகவும் வெளிப்படையான உறவு - பாகிஸ்தான் அதன் பிரதேசங்களில் இந்திய படைகளுடன் இணைந்து தீவிரவாதத்திற்கு எதிராண தேடுதல் வேட்டையை மேற்கொள்ள வேண்டும். அதற்கு இந்திய படைகளை பாகிஸ்தானின் எல்லைக்குள் அனுமதிக்க வேண்டும் - இதற்கு நிச்சயம் பாகிஸ்தான் தற்போதைக்கு சம்மதிக்காது. ISIக்கும் IBக்கும் இடையே இன்னுமொரு உடன்படிக்கை வேண்டுமானால் கையெழுத்தாகலாம்.

ஆ) Dushman Humsaaya (பக்கத்து வீட்டு எதிரி) - இந்தியாவின் தேச நலனுக்கு பாகிஸ்தான் எதிரி என்ற பகிரங்கமான நிலைப்பாடை இந்தியா மேற்கொண்டு பாகிஸ்தானுடனான தற்போதைய வெளியுறவு கொள்கைகளில் மாற்றம் கொண்டு வந்து வர்த்தக தொடர்புகளையும் முற்றிலுமாக நிறுத்தி விட்டு, சுயேச்சையாக பாகிஸ்தானில் தேடுதல் வேட்டையை தொடர வேண்டும். இதற்கு பாகிஸ்தானுடன் போர் மேற்கொள்வது தான் ஒரே வழி. இப்போதைய பொருளாதார பின்னடைவில் இந்த நிலை மிகவும் ஆபத்தானது மட்டுமல்ல - பிற இஸ்லாமிய நாடுகளின் வெறுப்பையும் (ஏன் அமெரிக்காவே இந்த நிலைப்பாட்டை எதிர்த்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை) சம்பாதித்துக் கொள்ள வேண்டி வரும்.


மேலே சொன்ன விஷயங்களை எல்லாம் எப்படி சரி செய்ய போகிறார்கள் என்று இந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் முதலில் தெளிவாக மக்களுக்கு சொல்ல வேண்டும். அதோடு மட்டும் இல்லாமல் இந்தியாவிற்கு இப்போதைய உடனடி தேவைகள்

1) போலீஸ் துறை சீரமைக்கப்பட வேண்டும்: வெறும் லத்திகளை வைத்துக் கொண்டு தீவிரவாதத்தை எதிர்க்க முடியாது. நவின ஆயுதங்களும் தொழில் நுட்பங்களும் போலிஸ் துறைக்கு தரப்படல் வேண்டும். (சைரன் வைத்த காரில் காய்கறி வாங்குவது போல - ஏகே 47 SI பையனின் விளையாட்டு சாமானாகாமல் பார்த்துக் கொள்ளுதல் அவசியம்). 9 மாத பிள்ளைதாச்சியைப் போல வயிறை தள்ளிக்கொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்யும் போலிஸ்காரர்கள் குறைக்க (முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படும் கதை போல) நடவடிக்கை எடுக்க வழி வகை செய்ய வேண்டும். இதற்கான திட்ட விளக்கத்தை கட்சிகள் பிரதானமாக முன் வைக்க வேண்டும்.

2) தீவிரவாதத்திற்கு எதிராண கடுமையான சட்டங்கள் அமலில் இருக்க வேண்டும்: POTAவை மீண்டும் கொண்டு வருவது குறித்த தெளிவான நிலையை ஆளும் காங்கிரஸும் பிஜேபியும் இந்த தேர்தலில் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். வட கிழக்கு மாகாணங்களில் இயங்கும் தீவிரவாத இயக்கங்களையும் பிற நாடுகளை அடிதளமாகக் கொண்டு இந்தியாவில் இயங்கி வரும் தீவிரவாத இயக்கங்களையும் அந்த இயக்கத்துக்கு ஆதரவாக செயல்படும் தனிமனித உரிமையையும் தடை செய்ய வேண்டும். இது குறித்த நிலையை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் முதன்மையாக தெரிவிக்க வேண்டும்.

3) எல்லைக் காவலை தீவிரப்படுத்த வேண்டும்: இன்னும் தீவிரவாதிகள் இந்தியாவை ஆகாசமார்கமாக மட்டுமே வந்து தாக்கவில்லை. அப்படி வரவும் அதிக நேரம் பிடிக்காது. இன்னும் பல சாமானியர்களின் உயிர்களையும் சில ராணுவ வீரர்களையும் பலி கொடுக்காமல் proactive-ஆக செயல் பட்டு ரோந்துப் பணிகளையும் கண்காணிப்பையும் அதிகப்படுத்த வேண்டும்.

4) உள் நாட்டு பிரச்சனைகள் தோன்றாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்: முக்கியமாக இந்த மாதிரி குழப்ப சூழ்நிலையில் மத கலவரங்கள் வெடிக்க வாய்ப்பு உண்டு. அந்த மாதிரி மத உணர்வுகளை தூண்டி விடும்படியான அடிப்படை வாத கொள்கைகளை மக்கள் முன் எடுத்துச்செல்லாமல் நடு நிலைமையுடன் அரசியல் கட்சிகளும் மீடியாக்களும் செயல்படுதல் அவசியம்
(ராஜ் தாக்ரேவை விமர்சிக்க உங்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் - இப்போது வேண்டாம்)

5) உள் கட்டமைப்புகளை இன்னும் தீவிரப் பாதுகாப்பு கண்காணிப்பில் கொண்டு வரவேண்டும்: இன்றைய தேதியில் நமது ரயில்வே ஸ்டேஷன்களும் பேருந்து நிலையங்களும் திறந்த நிலையில் இருப்பது பாதுகாப்பை நாம் எவ்வளவு தூரம் சமரசம் செய்து கொண்டு உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதற்கு சிறந்த உதாரணம். இதைத் தவிர முக்கிய சாலைகள், மக்கள் கூடும் பொது இடங்களில் ரகசிய காமெராக்கள் பொருத்தி கண்காணிப்பில் கொண்டு வர வேண்டும். இவை மட்டுமன்றி அடிப்படை பாதுகாப்பை சமரசம் செய்து கொண்டு கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் முதலில் சீரமைக்கப்பட வேண்டும்.

Friday, November 28, 2008

சீனா வகுப்பு அறை இல் "சிங்கூர் " பாடம்....கவனயுங்கள் செங்கொடி நண்பர்களே ....உங்களால் உபகாரம் இல்லாவிட்டாலும் பரவாஇல்லை ,உபத்தரவம் வேண்டாம் .

இதென்ன மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்குமான முடிச்சு என்கிறீர்களா? இது ஒரு கதை அல்ல நிஜம். சென்ற வாரம், சீனாவில் பீஜிங் நகரில் வணிக செய்தி துறை மாணவர்களுக்காக எடுக்கப் பட்ட பாடம் இது. பாடத்தின் பெயர் வெற்றியாளர்களும் தோற்று போனவர்களும் - டாட்டா மோடோர்ஸ் மற்றும் மேற்கு வங்காளம். இந்த பாடத்தை எடுத்துக் கொண்டதற்கு, வகுப்பை நடத்தியவர் (Martin Mulligan of the Financial Times, லண்டன்) கூறும் காரணங்கள் என்ன தெரியுமா?


"உலகின் கவனம் இன்றைக்கு இருப்பது நானோ காரின் மேல். நானோ கார் ஒரு சரித்திரம். ஒரு ஆடம்பர மெர்சிடிஸ் காரின் ச்டீரியோவின் (Stereo System) செலவில் ஒரு நானோ கார் வாங்க முடியும். இது ஒரு மிகப் பெரிய சாதனை. அதே சமயத்தில் இந்த பிரச்சினை குறித்து வெவ்வேறு கருத்துகள் உலா வருகின்றன. மேலும் ஒரு காரணம். 8 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு விவசாயத்தை அதிகம் நம்பியுள்ள மாநிலத்தில் இந்த பிரச்சினை நடந்து இருப்பது. இதன் மூலம் அதிக மக்கள் தொகை மற்றும் ஏழ்மை பகுதிகளில் தொழிற்சாலைமயமாக்குவதில் உள்ள சிரமங்கள் குறித்து ஆராய முடியும்" மேலும் வேகமாக வளர்ந்து வரும் சீனாவின் வாகனத்துறை (Automobile Industry) உலக அளவில் இந்தியாவின் சாதனையான நானோ கார் குறித்த செய்திகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றது.


அவர் சொல்ல விரும்பிய ஆனால் வெளிப்படையாக சொல்ல முடியாத ஒரு காரணம் கூட உண்டு. சீனாவில் கூட இப்போது தொழிற்சாலை மற்றும் ரியல் எஸ்டேட் தேவைகளுக்காக நில கையகப் படுத்துவதற்கு விவசாயிகளிடையே கடும் எதிர்ப்பு ஏற்பட்டு உள்ளது. சமீபத்தில் கூட, சீனாவின் கிழக்கு நகரம் ஒன்றில், வன்முறை கும்பல் (விவசாயிகள்) ஒன்று அரசாங்க அலுவலகத்தை தாக்கியதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன.


இந்த பாடத்தின் இறுதியில் இது குறித்து 500 வார்த்தைகளுக்கு குறையாமல் ஒரு கட்டுரை வரையும் படி மாணவர்கள் கேட்டுக் கொள்ளப் பட்டனர் . அவர்கள் என்ன எழுதினார்கள் என்பதை பார்த்தால் கம்யூனிஸ்ட் நண்பர்கள் நிச்சயம் ஆச்சர்யப் படுவார்கள் . பெரும்பாலான மாணவர்கள், மம்தா செய்தது சரி என்றும் வங்க அரசு செய்தது தவறு என்றும் கருத்து தெரிவித்தனர். மேற்கு வங்க அரசு சரியான இழப்பீட்டு தொகையை நிலம் கொடுத்தவர்களுக்கு முன்னமே கொடுத்திருந்தால் இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்காது என்பது அவர்கள் வாதம் . மேலும், இறுதியாக வெல்லப் போவது யார் என்ற கேள்விக்கு நானோ கார்தான் என்றும் தோற்க போவது மேற்கு வங்கமே என்றும் கருத்து தெரிவித்தனர். (நன்றி: http://www.telegraphindia.com/1081124/jsp/frontpage/story_10155227.jsp)


இப்போது நம் கம்யூனிஸ்ட் நண்பர்கள் என்ன சொல்லப் போகிறார்கள்? அவர்களுடைய வைத்திய முறையைக் கொண்டே அவர்களுடைய பித்தத்திற்கு வைத்தியம் பார்த்த மம்தாவிற்கு வாழ்த்துகள் சொல்வதா? அல்லது இப்படி கட்சி அரசியல் நடத்தி கொண்டு நாட்டின் தேவைகளை காற்றில் பறக்க விடும் நமது அரசியல்வாதிகளை கண்டு பெருமூச்சு விடுவதா? ஒரு இந்திய சாதனை வேதனையாகிப் போனது மட்டுமல்லாமல் இப்படி இந்திய மானம் கப்பலேறுவதை கண்டு வெட்கப் படுவதா?

Monday, November 24, 2008

பொருளாதார நெருக்கடி: இனிமேல்தான் மோசமான நிலை வரப் போகிறது

IMF

பொருளாதார நெருக்கடி: இனிமேல்தான் மோசமான நிலை வரப் போகிறது-ஐஎம்எஃப்

ஜூரிச்:
தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி மிகப் பெரிய ஒன்றல்ல. இதை விட மோசமான நிலை இனிமேல்தான் வரும் என்று சர்வதேச நிதியமான ஐ.எம்.எஃப்பின் தலைமைப் பொருளாதார நிபுணர் ஆலிவர் பிளன்சார்ட் கூறியுள்ளார்.

மேலும், பொருளாதார நெருக்கடி இன்னும் மோசமாகும்.
தற்போது உள்ளதை விட மோசமான நிலை ஏற்படும். 2010ம் ஆண்டுக்குப் பிறகுதான் நிலைமை படிப்படியாக சரியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜூரிச்சைச் சேர்ந்த செய்தித்தாள் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ஒவ்வொரு பொருளாதார பிரச்சினைக்கும் பணம் கொடுத்து சரிக்கட்டும் அளவுக்கு ஐ.எம்.எஃப்பிடம் பணம் இல்லை என்பதை அனைவரும் முதலில் உணர வேண்டும்.

இப்போது உள்ள உலகப் பொருளாதார நெருக்கடி மிகப் பெரியதல்லை. நிலைமை இன்னும் மோசமாகவில்லை. அந்தக் கட்டம் இனிமேல்தான் வரப் போகிறது.

சகஜ நிலை திரும்ப நிறைய அவகாசம் தேவைப்படும். 2010ம் ஆண்டுக்குப் பிறகுதான் நிலைமை சரியாகும். அதன் பிறகு பொருளாதார வளர்ச்சி மீண்டும் உத்வேகம் பெறும். 2011ம் ஆண்டு நிலைமை நல்ல சூழ்நிலைக்கு மாறி விடும் என்றார் பிளன்சார்ட்.

பொருளாதார நெருக்கடியால் தத்தளித்துக் கொண்டிருக்கும் உக்ரைன், செர்பியா, பாகிஸ்தான், ஹங்கேரி, ஐஸ்லாந்து ஆகிய நாடுகளுக்கு சமீபத்தில் ஐ.எம்.எஃப் நிதியுதவி அளித்தது. அதேபோல லாத்வியாவுக்கும் அது நிதியுதவி அளிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தான் சூப்பர் ஸ்டாரின் பாலிசி

பசித்தவனுக்கு மீனை கொடுப்பதைவிட மீன் பிடிக்க கற்று கொடு; அவன் ஆயுளுக்கும் நீ உணவளித்தவனாகிறாய்!!” - இது தான் சூப்பர் ஸ்டாரின் பாலிசி. காரணம் இது உழைப்பை ஊக்குவிக்கும், வளத்தை கொண்டுவரும்.

மீனை கொடுப்பதைவிட மீன் பிடிக்க கற்று கொடு

பசித்தவனுக்கு மீன் பிடிக்க கற்று கொடு என்கின்ற இந்த அவரது கொள்கையை தனது மகள் விஷயத்தில் கூட அவர் செயல்படுத்தினார் என்பது தான் உண்மை. இந்த கொள்கைதான் அவரது அரசாங்கத்தின் கொள்கையாகவும் இருக்கும் என்று நம்பலாம். இது குறித்து ஒரு சுவையான சம்பவம் உண்டு.

சொன்னதை செய்துகாட்டிய ரஜினி

தனது வாரிசுகளின் எதிர்காலத்தை பற்றிய கேள்விக்கு 1995 லேய தூர்தர்ஷன் பேட்டியில் அவர் அளித்த பதில் தெரியுமா? ஏற்கனவே நாம் அளித்த தூர்தர்ஷன் பேட்டி தொகுப்பிலிருந்து இதை தருகிறேன். அருகில் தரப்பட்டுள்ள ஸ்கேன் கட்டிங்கை பார்க்கவும்.

சொன்னது போலவே அவர் தனது மகள் தனது சொந்தக் காலில் நிற்கும்படி செய்துவிட்டார். (மற்றவர் திருமணமாகி நல்லபடியாக செட்டில் ஆகிவிட்டார். அவரது வாழ்க்கைத்துணை பிரபல நடிகர் என்பதால் ரஜினியின் மகள் என்கின்ற அடையாளம் என்பது போய் தனுஷின் மனைவி என்று அவருக்கென்று ஒரு அடையாளம் வந்துவிட்டது. ரஜினி விரும்புவதும் இதைத் தான்.)

மகள் என்பதால் ரஜினி எந்தவித விஷேஷ சலுகையும் அளிக்கவில்லை

சௌந்தர்யா ரஜினியின் அடையாளத்திற்கு பின்னர் இருப்பது அவரது கடும் உழைப்பு. தனது மகள் என்பதால் அவருக்கு ரஜினி எந்தவித விஷேஷ சலுகையும் அளிக்கவில்லை. அனிமேஷன் படிப்பு முடித்த பிறகு, சொந்தமாக தொழில் துவங்க வங்கியில் கடன் பெற்று அந்த கடனை சரியாக ஒழுங்காக கட்டவேண்டுமே என்று வாய்ப்புகளுக்கு அலைந்து, தன் சொந்த முயற்சியால் ஆர்டர்ஸ் பிடித்து எந்த வித சிபாரிசும் இல்லாமல் அனிமேஷன் துறையில் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டவர் சௌந்தர்யா ரஜினிகாந்த். (வங்கியில் கடன் பெற்று தொழில் தொடங்கியதும், அதற்க்கு அவர் தற்போது ட்யூ கட்டி வருவதும் எத்துனை பேருக்கு தெரியும்?)

ஏழுபேருடன் துவக்கப்பட்ட ஆக்கர்

சென்னையில் சில வருடங்களுக்கு முன்பு வெறும் ஏழு பேருடன் துவக்கப்பட்ட அவரது ஆக்கர் ஸ்டூடியோஸ் இன்று பல நாடுகளில் கிளைவிட்டு நூற்றுக்கும் மேற்ப்பட்டவர்கள் பணிபுரியும்வன்னம் சுறுசுறுப்பாக இயங்கிவருகிறது. விஷுவல் டெக்னாலஜியில் ஒரு பெரும் சந்தை சக்தியாக உருவெடுதிருக்கிறது. தென்னிந்திய விஷூவல் எபெக்ட்ஸ் சந்தையில் இவரது நிறுவனம் 40% கைப்பற்றியிருப்பது சாதாரணமான விஷயம் அல்ல.

திறமையை நிரூபித்தபிறகு தான் சுல்தான்

எந்தவித சிபாரிசும் இல்லாமல் அவரது சொந்த முயற்சியில் தான் அவரது முதல் வாய்ப்பு சந்திரமுகி படத்துக்காக டைட்டில் டிசைன் செய்வதற்கு கிடைத்தது. அதற்க்கு பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தன. அதை சரியாக பயன்படுத்திக்கொண்டார்.

சௌந்தர்யா தனது திறமையை நிரூபித்தபிறகு தான் சுல்தானுக்கு கூட அவர் வாய்ப்பளித்தார். தந்தையை சமாதானம் செய்வது அவருக்கு அத்தனை எளிதாக இருக்கவில்லை.

இது குறித்து சௌந்தர்யா கூறுவதாவது :

“சுல்தான் படம் என்னுடைய பல வருட கனவு, உழைப்பின் விளைவு என்றுகூடச் சொல்லலாம். இந்தப் படத்தை இப்படித்தான் எடுக்க வேண்டும் என கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கும் மேல் நான் திட்டமிட்டேன்.

இல்லாவிட்டால் அப்பாவை அத்தனை சீக்கிரம் யாராலும் கன்வின்ஸ் பண்ணவே முடியாது. தன் மகள் என்பதற்காகவெல்லாம் எந்த வாய்ப்பையும் தந்துவிடமாட்டார் அவர்.

ஆனால் அப்பா ஒரு முறை முடிவு செய்துவிட்டால், கடவுளே நினைத்தாலும் அதை மாற்றமுடியாது. அதுதான் அவரது இயல்பு. ஆரம்பத்திலேயே இந்தப் படம் குறித்த ஒவ்வொரு காட்சிக்கும் அவருக்கு போதிய விளக்கம் கூறி அவருக்கு திருப்தி வரும் வகையில் கதையை அமைத்தேன்.”

(நன்றி: http://envazhi.com)

சௌந்தர்யா ரஜினி சொந்தமாக போராடி பிசினசில் வெற்றிக்கொடி நாட்டியது பற்றி நவம்பர் 26, 2008 தேதியிட்ட இந்தியா டுடே யில் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. அதன் ஒரு பகுதி தான் நீங்கள் அருகில் காண்பது.

இந்தியா டுடேயில் மேற்படி கட்டுரையை படித்தவுடன் சூப்பர் ஸ்டாரின் மீன் பிடிக்க கற்றுகொடு பாலிசிதான் நினைவுக்கு வந்தது. தனது சொந்த மகளின் விஷயத்தில் கூட அவர் அதை அப்ளை செய்தது எனக்கு பெரிய ஆச்சரியம். அதனால் தான் அதை உங்களுடன் பகிர்ந்துகொள்ள முடிவு செய்தேன்.

Sunday, November 23, 2008

யார் இந்த கடல் கொள்ளைகாரர்கள் ?

உலகின் மேற்கு பகுதியையும் கிழக்கு பகுதியையும் இணைக்கும் மிக முக்கிய கடல் வழிப் பாதையான ஏடன் கடல் பகுதியில் சோமாலிய நாட்டைச் சேர்ந்த கடற் கொள்ளையர்கள் பல கப்பல்களை கொள்ளையடித்தும் கடத்தியும் பன்னாட்டு கப்பல் போக்குவரத்து கம்பெனிகளின் வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் இங்கே.

மிகப் பழங்காலத்திலேயே அரேபியா கடல் பகுதியில் மிகப் பெரும் கொள்ளைகள் நடை பெற்றதாக சரித்திரக் குறிப்புகள் உள்ளன. பண்டைய சரித்திரத்தின் அடிப்படையில் எழுதப் பட்ட புகழ் பெற்ற நவீனமான கல்கியின் "பொன்னியின் செல்வன்" படித்திருக்கிறீர்களா? அதில் கூட இவர்களைப் பற்றி சில குறிப்புகள் (மூர்க்கமான புதிய வகை அரேபியா கடல் கொள்ளைக்காரர்கள்) உள்ளன. அருள்மொழி செல்வன் உத்தம சோழரை பதவியில் அமர்த்தி விட்டு இந்த கொள்ளை கும்பலை அடக்க செல்ல விரும்புவதாக ஒரு குறிப்பு கூட இருக்கும். இந்தியாவின் மேற்கு கடலோரம் இருக்கும் "வெல்ல முடியாத கடற் கோட்டையை" கட்டியவர்கள் கூட இந்த சொமாலியரே. கொள்ளை அடிக்கும் தொழில் இவர்கள் ஜீன்களிலேயே இருக்கும் போலிருக்கிறது.

சோமாலியா வடகிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள ஒரு ஏழை நாடு. இங்கு சரியான ஆட்சிமுறை அமையாததும் தொடரும் உள்நாட்டு குழப்பங்களும், எதிஒபியா- சோமாலியா சண்டையும், சோமாலியாவின் பூகோள ரீதியான நிலவமைப்பும் கடற் கொள்ளைகாரர்கள் உருவாகவும் வளரவும் முக்கிய காரணங்கள். ஐரோப்பாவையும் ஆசியாவையும் இணைக்கும் (சூயஸ் கால்வாய்) முக்கிய வழியாக ஏடன் கடல் இருப்பதால், இந்த கடல் வழியாக தினசரி ஏராளமான கப்பல்கள் பிரயானிக்கின்றன. சோமாலியா அரசின் கட்டுப்பாடு இந்த நாட்டைச் சார்ந்த கடல் பகுதியில் குறைவாக இருப்பதால், கடற் கொள்ளையர்களுக்கு நல்ல வசதியாக போய் விட்டது.

இந்த கொள்ளைகாரர்கள் பெரும்பாலும் 20 முதல் 35 வயதுக்குள் உள்ளவர்கள். இவர்கள் மூன்று வகையாக உள்ளனர். கடல் பற்றி நன்கு தெரிந்து கொண்டு கடற் கொள்ளையர்களின் கண்களாக இயங்கும் உள்ளூர் மீனவர்கள், உடல் பலத்தை காட்டும் முன்னாள் படை வீரர்கள் மற்றும் இவர்களை இயக்கும் மூளைகளான அதி நவீன தொழிற் நுட்ப வல்லுனர்கள். ஒரு முக்கிய விஷயம். இவர்கள் பல குழுக்களாக பிரிந்து கொள்ளையடித்தாலும் தமக்குள்ளே சண்டைகள் இட்டு கொள்ளுவதில்லை. என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள். Pirates of Caribbean படம் பார்த்துள்ளீர்களா? (பார்க்க வில்லையென்றால் நிச்சயம் பாருங்கள். ஜாலியான படம் ) அதில் உள்ளது போல் தமக்குள்ளே சில சட்டதிட்டங்கள் எல்லாம் கூட வைத்திருப்பார்கள் போல.

மேலும் ஒரு வேடிக்கையான தகவல். இவர்கள் வறுமை நாடான சோமாலியாவில் மிக ஆடம்பர வாழ்கை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு சமூகத்தில் மிகப் பெரிய அந்தஸ்து கூட உண்டு. சமூகத்தின் பெரிய மனிதர்களாக இவர்கள் கருதப் படுகின்றனர். (நம் நாட்டில் கூட சில சமூக கொள்ளையர்களுக்கு மிக பெரிய அந்தஸ்து உண்டுதானே?) இந்த கொள்ளையில் கிடைக்கும் பணத்தை கொண்டு அங்குள்ள தொழில் அதிபர்களுக்கு இவர்கள் கடன் கூட கொடுக்கிறார்கள். (இது மட்டுமே திவால் ஆகாத வெளி நாட்டு வங்கி).

இவர்களை அடக்க உலக நாடுகள் (குறிப்பாக நேடோ நாடுகள்) எவ்வளவோ முயற்சி செய்தும் பலிக்கவில்லை. உலக நாடுகளின் கடற்படைகள் இவர்களை துரத்தும் போதெல்லாம், தப்பி சென்று சோமாலியா கடல் எல்லைக்குள் இவர்கள் நுழைந்து விடுவதால் இவர்களை முழுமையாக அடக்க முடிய வில்லை. இதற்காக, ஜுன் 2008 இல் ஐ.நாவில் ஒரு உடன்படிக்கை ஏற்பட்டது. இதன் அடிப்படையில் சோமாலிய கடல் எல்லைக்குள்ளும் உலக நாடுகளின் கடற்படைகள் இவர்களை துரத்தி செல்ல முடியும். ஆனால் இதற்கு பிறகும் கூட, இவர்களை முழுமையாக ஒழித்துக் கட்டுவது சிரமமான காரியமாகவே இருக்கிறது. 2008 இல் மட்டுமே 92 முறை கடல் தாக்குதல்கள் நடத்தி உள்ள இவர்கள் 36 முறை கப்பல்களை கடத்தி சென்றுள்ளனர். இவற்றில் இன்னும் 17 கப்பல்கள் மீட்கப் படாமல் உள்ளன. சமீபத்தில் கூட, உலகின் மிகப் பெரிய எண்ணெய் கப்பலொன்றை (Sirius Star) இவர்கள் கடத்தி சென்று உள்ளனர்.

இந்தியா கூட ஒன்பதாவது நாடாக ஒரு போர்க்கப்பலை இங்கே நிலை நிறுத்தி உள்ளது. காரணம், இந்த கடல் பாதை வழியே தினமும் ஏராளமான இந்திய சரக்குக் கப்பல்கள் பயணம் செய்கின்றன. மேலும் வெளி நாட்டுக் கப்பல்களில் கூட ஏரளாமான இந்திய மாலுமிகள் பணியாற்றுகின்றனர். நமது கடற் படை இந்த கடல் பகுதியில் மிகச் சிறப்பாக செயல் புரிந்து வருகிறது. இந்தியக் கப்பல்களுக்கு மட்டுமன்றி வேறு நாட்டு கப்பல்களுக்கும் சிறந்த பாதுகாப்பு அளிக்கப் படுகிறது. இந்தியக் கடற்படைக்கும் இந்த கொள்ளையருக்கும் சமீபத்தில் கூட ஒரு மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு சிறு படகை கப்பலின் மீது வேகமாக மோதி விட்டு பின்னர் கப்பலிலிருந்து தாக்குதல் நடத்துவது இவர்களது பாணி. இதை திறம்பட முறியடித்த நமது கடற்படை கொள்ளையர்களின் கப்பலை மூழ்கடித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

இவர்களை முழுமையாக அடக்க ஒரு "பொன்னியின் செல்வன்" வருவானா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும்.

சோமாலிய ,உலகின் குப்பை தொட்டியா?

ஐ.நா. அனுமதியுடன் கடற்கொள்ளைக்காரர்களை வேட்டையாட போகும் இந்திய கடற்படையினர், சோமாலிய கடலில் அணு உலை, மற்றும் இரசாயன நச்சுக் கழிவுகளை திருட்டுத்தனமாக கொட்டும் பன்னாட்டு கப்பல்களையும் பிடித்து தண்டிப்பார்களா?

சோமாலியா, அரசு இல்லாத தேசம். தட்டிக் கேட்க ஆள் இல்லையென்றால் யாரும் எது வேண்டுமானாலும் செய்யலாம். தொன்னூறுகளில் சோமாலிய பிரச்சினையை தீர்க்கப் போகிறேன் சொல்லி விட்டு சென்ற "உலக பொலிஸ்காரனான" அமெரிக்கா கடைசியில் எதுவுமே செய்ய முடியாமல் அவமானத்துடன் வீடு திரும்பியது. அதற்குப் பிறகு ஆயுதக் குழுக்களின் அதிகாரப் போட்டி காரணமாக, இது வரை நிலையான அரசாங்கம் ஏற்பட இல்லை. வடக்கு பகுதி மாநிலம் மட்டும், தமக்குள் இணக்கப்பாடு கண்டு தனியாட்சி நடத்துகின்றது. "சோமாலிலாந்து" என்றழைக்கப்படும் இந்த தனி நாட்டை உலகில் யாரும் அங்கீகரிக்கவில்லை.

பிற சோமாலிய பகுதிகள் தமக்கு தெரிந்த வகையில் தப்பிப் பிழைக்கின்றன. வியாபாரிகள் தமது பாதுகாப்புக்காக சிறு ஆயுதக் குழுவை பராமரிக்க வேண்டியுள்ளது. வெளிநாடுகளில் தொழில் புரியும் சோமாலியர்கள் தங்கள் குடும்பங்களுக்கு அனுப்பும் பணம் தவிர, வேறெந்த உலக நாட்டு உதவியும் இல்லை. சோமாலியா மிக நீண்ட கடற்கரையை கொண்டுள்ளது. இருப்பினும் மீனவர்கள் வேலையின்றி கஷ்டப்படுகின்றனர். மீன்பிடிக்க கடலில் சென்றால், மீன்கள் கிடைப்பதில்லை. எல்லா மீன்களையும் பிறநாட்டு மீன்பிடி கப்பல்கள் வந்து அள்ளிக் கொண்டு போகின்றன. தனக்கென அரசாங்கமே இல்லாத சோமாலிய மீனவர்களால் இந்த அட்டூழியத்தை கைகட்டி பார்த்துக் கொண்டிருக்க தான் முடியும். அவ்வாறு தொழில் இழந்த மீனவர்கள் தான், இப்போது கடற்கொள்ளைக்காரர்களாக மாறியுள்ளனர். அப்போது ஏனென்று கேட்க வராத சர்வதேச நாடுகள், இப்போது மட்டும் கடற்கொள்ளையை கண்டிக்கிறார்களாம். இதுவன்றோ சர்வதேச நீதி!

சோமாலிய மக்களின் பிரச்சினை கடற்கொள்ளையல்ல. அவர்களின் கடலில் நடக்கும் சட்டவிரோத மீன்பிடி மட்டும் ஒரேயொரு பிரச்சினையல்ல. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளின் கப்பல்கள், அந்த நாடுகளில் அணு உலைகள் வெளியேற்றும் கழிவுகளையும், பிற இரசாயன நச்சுக் கழிவுகளையும் கொண்டு வந்து திருட்டுத்தனமாக கொட்டிவிட்டுச் செல்கின்றனர். இந்த நச்சுக் கழிவுகள் சோமாலிய கடற்கரையை மாசுபடுத்துகின்றன. இதனால் மக்களுக்கு புற்றுநோய் உட்பட, முன்பு ஒருபோதும் வராத புதிய புதிய நோய்கள் தோன்றுகின்றன. இதையெல்லாம் உலகில் யாரும் கண்டுகொள்ளவில்லை. இப்போது பன்னாட்டு நிறுவனங்களுக்கு சொந்தமான கப்பல்கள் கடத்தப்படும் போது மட்டும், முக்கிய செய்தியாக சொல்லும் ஊடகங்கள் எதுவும் சோமாலிய மக்கள் கடந்த பத்தாண்டுகளாக பட்டு வரும் துன்பம் பற்றி எடுத்தச் சொல்லவில்லை. இதனை வாசிக்கும் உங்களில் பலர் இந்த செய்தியை இப்போது தான் கேள்விப் படுகிறீர்கள்.

1998 ம் ஆண்டு வெளிவந்த Famiglia Cristiana என்ற பத்திரிகை இத்தாலி நச்சுக்கழிவுகளை சோமாலியாவில் தொடர்ந்து கொட்டிவரும் நாடுகளில் ஒன்று என்று தெரிவித்துள்ளது. இத்தாலி சோமாலியாவின் முன்னாள் காலனியாதிக்க நாடு என்பது இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது. 1992 ம் ஆண்டு இத்தாலியும் ஒரு உறுப்பினராக கைச்சாத்திட்ட "பாசல் ஒப்பந்தம்", அணு, நச்சுக் கழிவுகளை பிறிதொரு உறுப்பு நாடுகளிலோ அல்லது உறுப்பினரல்லாத நாட்டிலோ கொண்டு போய் கொட்டுவதை தடை செய்கின்றது. அணு நச்சுக் கழிவுகளை ஐரோப்பாவில் பாதுகாப்பாக ஒரு இடத்தில் அடக்கம் செய்வதற்கு, தொன் ஒன்றிற்கு ஆயிரம் டாலர் செலவாகின்றது. ஆனால் அதனை சோமாலியாவில் கொண்டு வந்து கொட்டுவதற்கோ தொன்னிற்கு வெறும் இரண்டரை டாலர்கள் தான் செலவாகின்றது! அண்மையில் கடத்தப்பட்ட உக்ரைனிய ஆயுதக்கப்பலை விடுவிக்க பேரம் பேசி கிடைத்த மில்லியன் கணக்கான பணத்தை, சோமாலியாவின் கடற்கரையை தூய்மைப்படுத்த பயன்படுத்தப் போவதாக கடற்கொள்ளையர் தெரிவித்துள்ளனர்.

Thursday, November 20, 2008

There are INDIANS as per " Dharma Sasthra"

Mohali (Punjab):
Manpreet Singh, a milkman did not hesitate even once when he found a bag full of currency notes worth Rs 3,00,000. He knew what had to be done. He carried the bag with him - straight to the police station and the money was returned to the real owner.

"Manpreet, a resident of Kartarpur village in Mohali district in Punjab, around 20 km from Chandigarh, came to us with a bag full of notes. There were bundles of Rs 1,000 notes, some keys and an identity card in the bag," Davinder Singh, investigating officer, said.

After verifying all the details and cross checking every detail we handed over the money to the real owner who resides in Sector 71 here. He had placed the bag on the roof of the car and it fell off from the roof without him realising it," Singh said.

Manpreet said: "I was returning home after delivering the milk when I saw a black coloured bag lying abandoned on the corner of the main road in Sector 71. I got suspicious on seeing the bag and opened it carefully but to my big surprise the bag was full of notes."

He added: "I did not touch the notes and immediately took the bag to the nearby police station. The owner of the bag offered me a prize of Rs 2,000 but I took only Rs 1,000 because I had to incur a loss of Rs 1,000 in the whole process because of the wastage of my milk."

Tuesday, November 18, 2008

இந்திய சாப்ட்வேர் துறையையும்,பொருளாதார நெருக்கடிகள்

டெல்லி:

கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து வளர்ச்சியை மட்டுமே கண்டு வந்த இந்திய சாப்ட்வேர் துறையில் சரிவு ஏற்பட ஆரம்பித்துள்ளதாக இன்போசிஸ் துணைத் தலைவர் நந்தன் நிலேகனி கூறியுள்ளார்.

டெல்லியில் இந்திய வர்த்தக சபையின் கூட்டத்தில் பேசிய அவர்,

சர்வதேச பொருளாதார நெருக்கடியிலிருந்து இந்திய சாப்ட்வேர் துறை தப்ப முடியாது. இதுவரை தொடர்ந்து வளர்ச்சியை மட்டுமே கண்டு வந்த இந்தத் துறையில் மந்தம் ஏற்பட்டுள்ளது உண்மை தான். விரைவில் சரிவும் ஆரம்பிக்கும். ஆனால், இதையெல்லாம் சமாளிக்கும் பலம் இந்திய சாப்ட்வேர் துறைக்கு உண்டு.

வளர்ச்சி குறையலாமே தவிர ஒரேயடியாக முடங்கிவிடாது. இதனால் இந்தத் துறையில் தொடர்ந்து வேலை வாய்ப்புகள் உருவாகிக் கொண்டு தான் இருக்கும். ஆனால், அது கடந்த 5 ஆண்டுகளில் இருந்ததைப் போல இருக்காது.

இந்த ஆண்டுக்கான இன்போசிஸ் நிறுவனத்தின் வளர்ச்சி விகிதத்தை நாங்களே குறைத்துவிட்டோம். இந்த ஆண்டில் எங்களது வருவாய் 4.72 பில்லியன் டாலர் முதல் 4.81 பில்லியன் டாலருக்குள் தான் இருக்கும்.

இது போன்ற பொருளாதார நெருக்கடிகள் எந்தத் துறையையும் விட்டு வைக்காது. ஆனால், இதை சமாளித்துக் காட்டியது தான் இந்திய சாப்ட்வேர் துறை. 2001ம் ஆண்டிலும் இதே போன்ற சரிவைத் தான் சந்தித்தோம். ஆனால், அதை வெற்றிகரமாகவே சமாளித்தோம். எங்கள் நிறுவனத்தில் ஊழியர்கள் சேர்ப்பதை நிறுத்தப் போவதி்ல்லை என்றார்.

Saturday, November 15, 2008

மன்னவ னானாலும் – மாடோட்டும்
சின்னவ னானாலும்
மண்ணில் பிறந்தாரே – முடிவில்
மண்ணுக் கிரைதானே

இந்தப்பாடல் ரத்தக்கண்ணீர் படத்தில் வருகிறது. பத்தாண்டுகளுக்கு முன் கொத்தமங்கலம் சுப்பு எழுதிய இப்பாடல் திரு. சுப்புவின் பெயர் குறிப்பிடப் படாமல் வருகிறது.

வாலி கேட்கிறார்... “அண்ணா.. ரத்தக் கண்ணீர் படத்துல உங்க பாட்டு வரிகள் வருது. ஆனா பாடலாசிரியர்கள் பெயரிலே உங்க பெயரில்லை. பெருமை வேறு யாருக்கோ போகிறதே?”

கொத்தமங்கலம் சுப்பு சொன்னார்:

“டேய்.. நாம எழுதின ஒரு பாட்ட, இன்னொருவன் தன் பாட்டுன்னு சொல்லிக்கறான்னா நீ சந்தோஷப்படணும். ஏன்னா, அடுத்தவன் தன்னுதுன்னு சொல்லிக் கொள்ள ஆசைப்படற மாதிரி – அற்புதமான பாட்டை எழுதியிருக்கேன்னு அர்த்தம். நீ மோசமான பாட்டா எழுதியிருந்தா, மத்தவன் அதத் தன்னுடையதுன்னு சொல்லிக்க மாட்டானே!”

*******************


வாலி கலந்து கொண்ட ஒரு விழாவில் திரு.அவ்வை நடராஜன் பேசினார்:

‘காற்று வாங்கப் போனேன் – ஒரு
கவிதை வாங்கி வந்தேன் –அதைக்
கேட்டு வாங்கிப் போனாள் – அந்தக்
கன்னி என்ன வானாள்?’ - என்றார் கவியரசர் கண்ணதாசன். இப்படி எழுத இன்றைக்கு யாரேனும் இருக்கிறார்களா?

பலத்த கைதட்டல்.

திருமதி. மனோரமா ஒரு பத்திரிகையில் எழுதினார்.

“‘கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா?’ – என்று கண்ணதாசன் எழுதிய மாதிரி கருத்தோட எழுதற கவிஞர்கள் இப்போ குறைஞ்சுட்டே வர்றாங்க”

இந்தப் பாடல்கள் கண்ணதாசன் எழுதியவையல்ல. கவிஞர் வாலி எழுதியது!

Friday, November 14, 2008

இது கல்யாணம் ஆகபோறவர்களுக்கு மட்டும்

25 வது திருமண நாளை வெற்றிகரமாக கொண்டாடினார்கள் அந்த தம்பதியர்.

அந்த ஊரில் மிகவும்பிரசித்திபெற்றஜோடிகள்..

காரணம்..அவர்களின் ஒற்றுமை..அவர்களது 25 ஆண்டு கால

வாழ்க்கையில் சண்டை போட்டதே இல்லை..

அதுவும் ஒரு காரணம்..ஏன் அதட்டி ஒரு வார்த்தை கூட அந்த

கணவர் பேசியதில்லை..


அந்த ஊர் தொலைக்காட்சியில் இருந்தும்,பத்திரிக்கையில்

இருந்தும் பேட்டி எடுக்க வந்திருந்தனர்.வீடு முழுவதும் மக்கள்

வெள்ளம்.


பேட்டி ஆரம்பித்தது...


ஒரு நிருபர் கேட்டார்...உங்கள் திருமண வாழ்க்கையின் வெற்றியின்

rakasiyam என்ன?..எவ்வாறு உங்களால் மனைவி மேல் கோபப் படாமல்

இருக்க முடிந்த்தது?...


அவர் கூறினார்...நானும் என் மனைவியும் திருமணம் முடிந்த உடன்

தேனிலவுக்கு சென்றோம்...


அவள் குதிரை சவாரி செல்ல விரும்பினாள்..இருவரும் ஆளுக்கு ஒரு

குதிரையில் சவாரி சென்றோம்..


என்னுடைய‌ குதிரை அமைதியாக‌ சென்றுகொண்டிருந்த‌து..அவ‌ளுடைய‌து
கொஞ்ச‌ம் ச‌ண்டித்த‌ன‌ம் செய்த‌து..சிறிது தூர‌ம் சென்ற‌தும் அந்த‌ குதிரை

அவ‌ளை கீழே த‌ள்ளிய‌து..எழுந்த‌ அவ‌ள் இது உன‌க்கு முத‌ல் சான்ஸ்

என்று கூறி ம‌றுப‌டியும் ச‌வாரியை ஆர‌ம்பித்தாள்...சிறிது தூர‌ம்

சென்ற‌தும் ம‌றுப‌டியும் அவ‌ளை அது கீழே த‌ள்ளிய‌து..ம‌றுபாடியும் அவ‌ள்
எழுந்து இது உன‌க்கு 2 வ‌து சான்ஸ் அப்ப‌டின்னுட்டு ம‌றுப‌டியும் ச‌வாரி

செய்தாள்..இந்த முறையும் அவ‌ளை அந்த‌ குதிரை கீழே த‌ள்ளிய‌து..

எழுந்த‌ அவ‌ள் அவ‌ளுடைய‌ துப்பாக்கியை எடுத்து அந்த குதிரையை

சுட்டு விட்டாள்...


என‌க்கு உட‌னே க‌டுமையான‌ கோப‌ம் வ‌ந்து அவ‌ளை நோக்கி "உன‌க்கு

அறிவு இருக்கா?...ஐந்த‌றிவு பிராணியை இப்படியா செய்வ‌து?..உன‌க்கும்

அதற்கும் என்ன‌ வித்தியாச‌ம்...ஏன் இப்ப‌டி மிருக‌ம் போல் ந‌ட‌ந்து

கொள்கிறாய்..என்று திட்டினேன்..

அதற்கு அவ‌ள் இது உனக்கு முத‌ல் சான்ஸ் என்று என்னிடம்கூறினாள்..

இது தான் எங்களது மண வாழ்கயின் ரகசியம் ...என்று கூறி முடித்தார் .

மின் உபயோகம்: கருணாநிதியை விஞ்சிய ஜெயலலிதா!

சென்னை:

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் 2 மாதத்துக்கு ரூ. 1 லட்சத்துக்கும் அதிகமான அளவுக்கு மி்ன்சாரம் பயன்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார்.

தமிழக சட்டசபையில் நேற்று மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறுகையில்,

”தமிழகத்தில் 20 மணி நேரம் மின்சாரம் இல்லை என்றெல்லாம் கூறி அ.தி.மு.க. வினர் தினந்தோறும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

நானும் இதை சொல்லக் கூடாது என்று தான் இருந்தேன், ஆனால் சொல்ல வேண்டியதாகிவிட்டது. போராட்டங்களை நடத்தி வரும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் 2 மாதத்துக்கு எவ்வளவு மின்சாரம் பயன்படுத்துகிறார்கள் என்று பார்த்தோம்.

அவருக்கு பல வீடுகள் இருந்தாலும் அந்த ஒரு வீட்டில் மட்டும் 2 மாத காலத்துக்கு மின் கட்டணமாக ரூ. 1,02,468 செலுத்தியிருக்கிறார்கள். இதற்கு எத்தனை யூனிட் மின்சாரம் செலவாகியிருக்கும் என்று கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்.

அதே நேரத்தில் முதல்வர் கருணாநிதியின் வீட்டுக்கு 2 மாதத்துக்கு ரூ. 15,000 தான் கட்டணம் வந்துள்ளது” என்றார்.

Tuesday, November 11, 2008

அறிவோமா அறிவியல்: நமது உடலியல் வினோதங்கள்!

1. நம் உடலின் ஒரு பகுதியின் பெயர் "ஆடம் ஆப்பிள்" அது என்னவென்று தெரியுமா? கழுத்து எலும்பில் தைராய்டு சுரப்பி அமைந்துள்ள கார்டிலேஜ் எலும்புதான் அது.
2. நம் உடலில் இணைப்புகள் இல்லாமலே (Joint less) இருக்கும் எலும்பு எது தெரியுமா? ஹயாய்டு (Hyoid bone) எலும்புதான்.
3. நாம் பேசும் போது 72 வகையான தசைகள் வேலை செய்கின்றன.

4. நம் தொடையில் உள்ள எலும்பு காங்க்ரிட்டை விட பலமானது.

5. நம் தும்மும் போது நம் உடலில் உள்ள எல்லா உறுப்புகளும் தனது வேலையை நிறுத்திவிடும் "இதயம் கூடத்தான்".

6. குழந்தைகள் பிறக்கும் போது முட்டியில் கிண்ணம் (knee cap) இருக்காது. பொதுவாக 2-6 வயதில்தான் உருவாகும்.

7. பெண்கள் கண் சிமிட்டுவது ஆண்களை விட இரண்டு மடங்கு அதிகம்.

8. மனிதனின் தலை சராசரியாக 4 கிலோ எடை (head wight) இருக்கும் .

9. நம் உடலில் வளராத ஒரே உறுப்பு கண் மட்டும்தான். ஆனால் காதும், மூக்கும் மனிதனின் இறுதிகாலம் வரை வளரும்.

10. மனிதனின் தலை முடியின் எண்ணிக்கை சராசரியாக 100,000 இருக்கும்.

11. நம் தலையில் 29 வகையான எலும்புகள் இருக்கின்றன.


12. நம் உடலில் மிக அதிகமான உணர்ச்சியுள்ள நரம்பு முடிச்சிகள் இருபது நமது முதுகு தண்டு வடத்தில்தான் (spine). 13. வாழ்நாளில் நமது உடலில் இருந்து உதிரும் தோலின் எடை சுமார் 18 கிலோ வரை இருக்கும்.

14. நமது இதயத்தில் உருவாகும் pressure இரத்தத்தை சுமார் 30 அடிகள் வரை சிதறி அடிக்கும் (squirt) திறனுடையது.

15. நமது உடலில் தாடி முடித்தான் மிக வேகமாக வளரும் தன்மையுடையது. வாழ்நாள் முழுவதும் நாம் தாடியை வளர்த்தால் சுமார் 30 அடிகள் வரை வளரும்.

Posted by Dr. சாரதி at 7:13 PM

கொள்ளைக்காரன் கண்டுபிடித்த வரலாற்று தடயம்

Henrich Schleimann ஒன்பதே வயது நிரம்பிய சிறுவன். The Iliad என அச்சிடப்பட்டிருந்த அப்புத்தகத்தை மூடி வைத்தான். Homer என்ற கிரேக்க குருடன் எழுதிய அந்த புத்தகத்தை பல முறை அவன் வாசித்து விட்டான்.

Schleimann தனது நண்பர்களை காணும் போது சொல்கிறான், ஒரு நாள் நிச்சயமாக நான் Troy கோட்டையை தேடிச் செல்வேன் என்று. அவனது பேச்சு எல்லோருக்கும் நகைப்புக்குள்ளாகிறது. schleimann-னின் பெற்றோரும் அவனது எண்ணத்தை அறிகிறார்கள்.
அவனை அழைத்துச் சொல்கிறார்கள். Trojan போர் என்பது ஒரு புனைவு மட்டுமே. அதில் வரும் பல கடவுளர்களும் புரட்டு விடயமே. ஒரு ஆப்பிளுக்காகவும், பெண்ணுக்காகவும் 10 வருட போர் நடந்தது என்பது கேலிக்குறியது. கதையை கதையாக மட்டுமே பார்க்க வேண்டுமெனவும் மனதை குழப்பிக் கொள்ளாமல் இருக்கவும் சொல்கிறார்கள்.


Minna Meincke எனும் அவனது பெண் தோழி மட்டுமே அவன் கருத்தை செவிமடுக்கிறாள். "நாம் பெரியவர்களானதும் திருமணம் செய்து கொள்வோம். பிறகு Henning Von Holstein-னின் அரண்மனையை தோண்டுவோம், அங்கு கிடைக்கும் செல்வங்களை விற்று துர்க்கிய நாட்டிற்குச் சென்று Troy கோட்டையை தேடுவோம்" என்கிறான். Minna-வும் சம்மதம் தெரிவிக்கிறாள்.


இளைஞனான பிறகு, Schleimann வியாபரம் செய்தும் மாலுமியாக பணி புரிந்தும் பணம் தேடுகிறான். அவனது பல தேச பயணங்களின் வாய்ப்பைப் பயன்படுத்தி ஆங்கிலம், பிரெஞ்ச், மற்றும் துர்க்கிய மொழிகளை பயின்று கொள்கிறான். St.Pettersburg எனும் ஏற்றுமதி இறக்குமதி நிறுவணத்தில் பணி புரியும் சமயம் ரஷ்ய மொழியும் கற்றும் கொள்கிறார். வியாபாரமும் நல்ல விதமாய் அமைந்ததால் இளம் பருவத்திலேயே நன்கு பணம் ஈட்டுகிறார்.


தனது இலட்சியங்களையும் மறக்காமல் அதற்கான ஆதாரங்களையும் கேமிக்கிறார்.
அதில் ஈடுபடும் முயற்சியை பொருட்டு முதல் வேளையாக Minnaவை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்து கடிதம் எழுதுகிறார்.அக்கடிதம் கிடைப்பதற்கு ஒரு மாதத்திர்கு முன்னமே Minna வேறொரு ஆடவரை திருமணம் செய்து கொண்டுவிடுகிறாள். Minna-வின் நேர்மையின்மையினால் Schleimann மிகவும் வருந்துகிறார். பிறகு ஒரு ரஸ்ய பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அத்திருமணம் நீடிக்காமல் விவாகரத்தில் முடிகிறது.


1863-ஆம் ஆண்டு Schleimann தனது 41வது வயது நிறைவடையும் சமயம் கோடிஸ்வரன் எனும் அங்கீகாரத்தைப் பெறுகிறார். சரித்திர வல்லுனர்களும் ஆய்வாளர்களும் Troy கோட்டை இல்லை என்பதையே அச்சமயம் உறுதியோடு சொன்னார்கள். அவை Scheleimann-னின் எண்ணத்தை சற்றும் சிதறடிக்கவில்லை. அதே ஆண்டு தனது கனவுகளை உறுதிபடுத்திக் கொள்ள துர்க்கி நாட்டுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
ஒரு சிலரே Troy நகரம் இருந்திருக்கக் கூடும் என்பதை நம்பினார்கள். அது Aegean எனும் கடற்கரையில் இருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் Bunarbashi எனும் மலையில் அமைந்திருக்கலாம் என கருத்துரைக்கிறார்கள். Schleimann, Bunarbashi மலைக்குச் செல்கிறார். அவ்விடம் Homer இலியட்டில் சொன்னதை போல் இல்லாதிருப்பதைக் கண்டு வருத்தமடைகிறார்.

Homer தனது கதையில் சொல்லிய புவியியல் விடயங்களை அடிப்படையாகக் கொண்டு தனது ஆராய்ச்சியில் முற்படுகிறார். அதன் அடிப்படையில் Troy கோட்டையானது Hissarlik அருகே இருக்கும் ஒரு மலையில் இருப்பதாக அறிகிறார். அந்த மலையில் இருந்து Ida மலையைக் காண முடிந்தது. அங்கே சமமான மணல் பரப்பும், எதிரியை துரத்துவதற்கு வசதியான இடமும், கடற்கறையில் இருந்து சற்று தூரத்திலும் அமைந்திருந்தது.


அவரது முயற்சிகள் வீண் போகாமல் இருக்கும் பொருட்டு தன்னை நன்முறையில் தயார்படுத்திக் கொள்ள திட்டமிடுகிறார். தொல் பொருள் ஆராய்ச்சி துறையில் தனது மேற்படிப்பை மேற்கொண்டு முனைவர் பட்டம் பெறுகிறார்.
மீண்டும் துர்க்கிக்குச் சென்று ஆராய்ச்சியை தொடரும் முன் தனது மனைவியை விவாகரத்து செய்கிறார். தன் நண்பருக்கு கடிதம் எழுதி தனக்கு ஒரு இளம் மனைவியை தேடும்படியும் அவள் Homer மற்றும் Troy ஆராய்ச்சியின் மீது பற்று கொண்டிருப்பவளாகவும் இருக்க வேண்டுமெனவும் சொல்கிறார்.

Schleimann-னின் கடிதத்தை ஏற்ற அவரது நண்பன் Sophia Engastromoners எனும் 17 வயது நிறம்பிய நங்கையை அவருக்கு அறிமுகப் படுத்துகிறார். பிறகு அவர்களிருவரும் Athens-ல் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

துர்க்கிய நாட்டு அரசாங்கத்தின் அனுமதியோடு Troy நகர ஆராய்ச்சி தொடங்குகிறது. Schleimann-னின் ஆராய்ச்சிக்கு ஆதரவளித்த சுல்த்தான் கிடைக்கும் பொருட்களில் ஒரு பங்கு துர்க்கி நாட்டு அரசாங்கத்திற்கு சேர வேண்டுமென விதியிடுகிறார்.

1871-ஆம ஆண்டு Hissarlikகில் ஆராய்ச்சி வேலைகள் தொடங்கப்படுகிறது. Schleimann-னின் பாலிய வயது கனவும் நிறைவடைகிறது. அவர் Troy கோட்டையை கண்டுபிடித்தார். அடுக்கடுக்காய் இடிந்து விழுந்தும், தீவைக்கப்பட்டு அழிக்கப்பட்டிருந்த கோட்டையை கண்டுபிடிக்கிறார். இந்த வெற்றி அவரை உலகப் புகழ் பெற செய்தது.
Schleimann-க்கு மன நிறைவு கிடைக்கவில்லை. Priam அரசனின் ஆட்சியின் போது சொல்லப்பட்டிருப்பதை போல் அந்த கோட்டை இல்லாமல் இருந்ததுவே காரணம். இலியடில் சொல்லப்பட்டிருக்கும் Troy கோட்டையின் வடிவம் கிடைக்கும் வரை தனது ஆராய்ச்சியை மேற் கொண்டார்.

வெறித்தனமாக ஆராய்ச்சியில் ஈடுப்பட்ட Schleimann-னுக்கு பேராசையும் பற்றி கொண்டது. Hissarlik-க்கு வந்த தனது இலட்சியத்தை மறந்தார். மாறாக புதயலை தேடுவதிலேயே அதிக கவனம் செலுத்தினார். கிரேக்க இராணுவத்திற்கு பயந்து Priam அரசன் தனது செல்வங்களை எங்கேனும் பதுக்கி வைத்திருக்க வேண்டுமென யூகித்தார். ஆராய்ச்சியின் முதல் குறியாக புதையல் பதுக்கிய இடத்தை அறிவதிலேயே இருந்தது.
160 வேலையாட்களுடன் இவ்வாராய்ச்சி தொடரப்பட்டது. 14 ஜூன் 1873-ஆம் ஆண்டு தொண்டப்பட்டிருந்த சுவற்றினூடே மினுமினுப்பு கதிர்களை கண்டார். ஒளி வந்த இடத்திர்கு அங்கே இருந்த குழியின் வழியே இறங்கிச் சென்று கண்ட போது அவ்வொளிக்கதிர் அங்கிருந்த பீப்பாயில் இருந்து வந்ததைக் காண்கிறார்.

மூடப்பட்டிருந்த பீப்பாய் லேசாக உடைந்திருந்ததினால் அதன் வழியே அதற்குள்ளிருந்த தங்கத்தைக் காண முடிந்தது. அந்த சம்பவத்திற்கு பிறகு அவர் எழுதிய புத்தகத்தில் பின் வருமாறு குறிப்பிட்டிருக்கிறார் Schleimann. "எனது வேலையாட்கள் தூங்கிக் கொண்டிருந்த சமயம், ஒரு பெரிய கத்தியின் துணை கொண்டு அந்த பீப்பாயை வெளியாக்கினேன். அது கடினமாகவும் பேராபத்து நிறைந்த வேலையாகவும் இருந்தது. எந்த நேரத்திலும் அந்த பாழடைந்த தூண்கள் என் மீது விழுந்திருக்கக் கூடும். ஆனல் பீப்பாயில் இருந்து வெளிவந்த தங்க ஒளி அந்த சமயத்தில் என்னை எது வேண்டுமானாலும் செய்ய தூண்டிற்று. ஆகவே அச்சமயத்தில் ஆபத்தை நான் கருதவில்லை".

Schleimann-னுக்கும் Sophia-வுக்கும் கிடைத்த முதல் புதையல் அது. அவர்கள் மகிழ்ச்சிக் கடலில் திலைத்தார்கள். அந்த புதையலுள் இரண்டு கிரிடங்கள் இருக்கக் கண்டணர். அது அரசர் மற்றும் அரசியால் உபயோகப் படுத்தியதாக இருக்கக் கூடும் என நம்பினார்கள்.
மேலும் தோண்டவும் அவ்விடத்தில் இருந்து பீங்கான் தட்டுகள், பொத்தான்கள், கயிறு மற்றும் தங்கத்திலான நூல்களும் கிடைத்தது. இது பொக கை வளையல், வெள்ளிக் கின்னங்களும், வெங்கலத்திலான ஆயுதங்களென பல பொருட்களும் கிடைத்திருக்கிறது. பேராசையின் மிதப்பில் இருந்த Schleimann எல்லா பொருட்களையும் ஜெர்மனிக்கு கடத்திச் சென்றுவிடுகிறார்.

பெருந்திருடனென கூறப்படும் Schleimann
இந்த விடயமறிந்த துர்க்கிய நாட்டு அரசாங்கம் Schleimann-னுக்கு 2000 பவுண்ட்ஸ் ஸ்தெர்லிங் அபராதம் விதித்தது. Schleimann விதிக்கப்பட்ட அபராதத்தைக் காட்டினும் 5 மடங்கு அதிகமான பணத்தை துர்க்கிய நாட்டு அரசாங்கத்திற்குக் கொடுத்தார். துர்க்கிய அரசாங்கம் அவருக்கு மீண்டும் ஆராய்ச்சியை தொடர வாய்ப்பளித்தது. அவரது நடவடிக்கைகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக் கொள்ளும் நிபந்தனையோடு.
ஆனால் Schleimann அதில் ஆர்வம் கொள்ளாமல் இம்முறை தமது ஆராய்ச்சியை கிரேக்க நாட்டில் இருக்கும் Mycenaeகின் மீது செலுத்தினார். Troy மீது படையெடுத்த Agamennon அரசனின் கோட்டையை தேடினார். அவரது அயராத முயற்சியின் பேரில் அந்தக் கோட்டையில் இருந்த புதயலைக் கண்டு பிடிக்கிறார். அவை Troy கோட்டையில் கிடைத்த புதயலை விட அதிக மதிப்பு கொண்டவையாக இருந்தது.

1878-ஆம் ஆண்டு Schleimann மீண்டும் Troy-க்கு வருகிறார். ஆரம்பத்தில் தேடிய அதே இடத்தில் மேலும் சில புதயல்கலைக் கண்டெடுக்கிறார். இடிந்து போன பல அடுக்குகளை அக்கோட்டையில் காண்கிறார். அவற்றில் ஒன்று Priam அரசனின் ஆட்சியின் போது உள்ள கோட்டையென சொல்லப்படுகிறது. Schleimann-னின் தேடலும் ஒரு நிறைவிற்கு வருகிறது.

Troy மற்றும் Mycenac-கில் கிடைத்த செல்வங்களையும் பொருட்களையும் நன்கு புணர்ந்த Schleimann 1880-ஆம் ஆண்டு தனது 58வது வயதின் போது அவற்றை ஜெர்மனில் இருக்கும் பெர்லின் பொருட்காட்சி சாலைக்கு கொடுக்கிறார். அதன் பின் 26.12.1890-இல் மரணமடைகிறார்.

இரண்டாம் உலகப் போரின் போது அவை இரஸ்ய இராணுவத்தினரால் அபகரிக்கப்படுகிறது. தற்சமயம் Troy மற்றும் Mycenac-கில் கிடைத்த பொருட்கள் யாவும் ரஸ்யாவின், Pushkin அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.

Sophia- இவர் அணிந்திருக்கும் நகைகள் TROY கோட்டையின் கண்டெடுக்கப்பட்டது
Troy ஒரு கற்பனையல்ல என்பதை நிருபித்த Schleimann-னுக்கும் Sophia-வுக்கும் உலகமே நன்றி கூறியது. ஒரு சில தரப்பினர் Schleimann-னை தொள் பொருள் ஆய்வாளர் என ஏற்க மறுத்தனர். மாறாக அவரை உலகளாவிய பெருந் திருடன் எனவும் பட்டம் சூட்டினர்.
Schleimann-னின் பேராசை போக்கினால் இன்றளவும் துர்க்கி, ஜெர்மன், ரஸ்யா, மற்றும் கிரேக்க நாட்டினருக்கிடையே ஓர் உள் புகைச்சல் இருந்த வண்ணமே இருக்கிறது. தற்சமயம் இருக்கும் சொத்துக்கள் யாவும் தன்னுடையது எனும் எண்ணம் இந்நாடுகளிடையே இருந்து வருகிறது.

Frank Calvert எனும் பிரிட்டானிய ஆராய்ச்சியாளரின் வாரிசுகள், Schleimann கண்டுபிடித்த அப்புதையளின் ஒரு பகுதி தங்களுக்குறியது எனவும் அவை அவர்களது தாத்தாவின் நில பகுதியில் எடுக்கப்பட்டிருக்கிறதெனவும் சாடியுள்ளார்கள்.
மேலும் தொடரப்பட்ட ஆராய்ச்சியில் Troy கோட்டை குறைந்தபட்சம் ஒன்பது அளவுகளை கொண்டிருக்க வேண்டுமென கூறுகிறார்கள். ஆரம்ப நிலையானது கி.மு 3000 ஆண்டும் இறுதி நிலையானது கி.மு 350 முதல் 400 ஆண்டிற்குட்பட்டதாக இருக்க வேண்டுமென குறிப்பிடுகிறார்கள். Trojan போர் கி.மு 1194 முதல் கி.மு 1184 வரை நடந்ததாகக் கூறப்படுகிறது.

Schleimann தான் கண்டுபிடித்த பொருட்கள் Agamemmon மற்றும் Priam அரசருடையது என தபது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அவருடைய அந்தத் தகவல் தவறானது என பின்னாளைய ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

Mycenace கோட்டையில் Schleimannனுக்கு கிடைத்த புதையலானது Agamemmon ஆட்சி காலத்திற்கு 200 வருடம் முற்பட்டது எனவும். Troy நகரில் கண்டெடுக்கப்பட்ட புதையல் Trojan போருக்கு 1000 வருடங்கள் முந்தயது எனவும் குறிப்பிடுகிறார்கள்.

Sunday, November 9, 2008

‘எந்திரன் படத்துக்காக ரசிகர்களிடம் நடிக்கும் தந்திரன் ரஜினி’ என சில பாவிகள் செய்யும் பிரச்சாரத்தின் பின்னால் உள்ள அயோக்கியத்தனத்தைப் புரிந்து கொள்ளவே

முதலிலேயே சொல்லிவிடுகிறோம்… இது ஒப்பீடல்ல!

செய்தி-1: மலப்புரம் அருகே ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மம்முட்டியின் சட்டையை ஆர்வமிகுதியில் பிடித்து இழுத்த ரசிகரை பலர் முன்னிலையில் பளார் என அறைந்தார் மம்முட்டி. (மலையாள மனோரமா, பிப்.13, 2008)

செய்தி-2: தூத்துக்குடி அருகே ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த சரத்குமாரைப் பார்க்க ரசிகர்கள் முண்டியடித்ததில் ஒரு ரசிகரின் கை சரத்குமார் கன்னத்தில் பட்டுவிட்டது. உடனே அவர் காலரைப் பிடித்த சரத், ‘தொலைச்சுப் போடுவேன்…’ என எச்சரித்தார் (தினமணி, ஏப்.12, 2008)

செய்தி-3: திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறப்போன விஜய்காந்த், திடீரென ஆவேசப்பட்டு தன் ரசிகர் ஒருவரை மேடையிலேயே கன்னத்தில் அறைந்தார். இதைக் கண்ட மக்களும், மீடியா பிரதிநிதிகளும் கடும் அதிர்ச்சிக்குள்ளாயினர்.

பின்னர் அன்று மாலை நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தன்னிடம் அறை வாங்கிய நபரை தனது பழைய நண்பர் என்றும், தங்களுக்குள் இது சகஜம் என்றும் அவர் கூறினார் (தினத்தந்தி, ஜூலை. 13, 2008)

செய்தி-4: லண்டனில் உள்ள கலையரங்கம் ஒன்றில் கலை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. ஆயிரக்கணக்கான மலையாள ரசிகர்கள் இதற்காகக் கூடியிருந்தார்கள்.
மலையாள பாடகர் அப்சலுடன் இணைந்து மோகன்லால் பாடல் ஒன்றைப் பாடிக்கொண்டிருந்தார். அப்போது மோகன்லாலைப் பார்த்த பரவசத்தில் ஒரு ரசிகர் மேடையேறி அவர் அருகே சென்றார். ரசித்துப் பாடிக்கொண்டிருந்த மோகன்லால், திடீரென்று தனக்கு அருகில் வந்துவிட்ட ரசிகரைப் பார்த்ததும் ஆத்திரத்துடன் அவரைத் தாக்கினார். மேடையை விட்டு வேகமாக கீழே தள்ளிவிட்டார். அந்த ரசிகர் தரையில் போய் விழுந்தார்.

பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் ஸ்தம்பித்துப் போய்விட்டனர். சில நிமிடங்கள் நிகழ்ச்சி நின்றது. பின்னர் நிகழ்ச்சி தொடர்ந்தது. தாக்கப்பட்ட ரசிகரோ மேடையின் அருகில் அழுதபடியே பரிதாபமாக நின்று கொண்டிருந்தார். கடைசிவரை அவரிடம் ஒரு பேச்சுக்குக் கூட மோகன்லால் சமாதானப்படுத்தவில்லை.

இந்த சம்பவம் மலையாளத் தொலைக்காட்சிகளில் திரும்பத் திரும்ப ஒளிபரப்பானதால் கேரளா முழுக்க அதிர்ச்சி அலை பரவியுள்ளது. இதை பார்த்த மோகன்லால் ரசிகர்களும் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர் (தட்ஸ்தமிழ், நவம்பர்.9, 2008).

-இவை சில சமீபத்திய செய்திகள்.

இதோ இப்போது நீங்கள் படிப்பதும் ஒரு செய்திதான்… ஆனால் வித்தியாசத்தைப் பாருங்கள், பெருமிதம் கொள்ளுங்கள்!

ஆகஸ்ட் 14-ம் தேதி ஐதராபாத்தின் குசேலன் சிறப்புக் காட்சி. பார்த்து முடித்துவிட்டு வெளியில் வந்தால் டிரைவரைக் காணோம். காரைத் திறக்க முடியவில்லை. ரஜினியைப் பார்த்துவிட்ட கூட்டமோ பரவசத்துடன் அவரைத் தொட்டுத் தரிசிக்க நெருக்கியது.

என்னதான் அவரைச் சுற்றி பாதுகாவலர்களும், போலீசாரும் நின்றாலும், மக்கள் வெள்ளத்துக்கு அணைபோட முடியுமா… அவரது சட்டையை, கையைத் தொட்டுப் பார்க்க ஒரு கூட்டம் முண்டியடிக்க, அமைதியாகச் சிரித்தபடி நின்றார் ரஜினி. அனைவருக்கும் கையசைத்தார். சில நிமிடங்களில் பதறியடித்தபடி டிரைவர் ஓடிவந்துவிட்டார். ரஜினி சிரித்தபடி கையாட்டி விடைபெற்றார்.

மேலே தொடருங்கள்…

தன் ரசிகர்ளை வழி நடத்துவதிலும் சரி, அவர்கள் மீது அக்கறை காட்டுவதிலும் சரி ரஜினிக்கு நிகரான நடிகரை திரையுலகில் பார்ப்பது அரிது.

தன்னைப் பார்க்க வரும் ரசிகர்கள் மற்றும் மன்ற நிர்வாகிகளிடம் அவர் பேசும் விதம், அவர்களை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைக்க அவர் ஏற்பாடு செய்யும் விதம் எல்லாமே, ஒரு பாசமிக்க மூத்த சகோதரனின் நடவடிக்கைகளுக்கு இணையாக இருக்கும்.
அவரைப் பார்க்க போயஸ் கார்டன் சென்ற பல ரசிகர்கள் இந்த அனுபவத்தை ஊரெல்லாம் சொல்லி மகிழ்ந்திருக்கிறார்கள்.

சமீபத்திய ரசிகர் மன்ற நிர்வாகிகள் சந்திப்பின்போது கூட, பேசி முடித்த கையோடு அவர் ரசிகர்களுக்குச் சொன்னது, ‘மதிய உணவு அரேஞ்ச் பண்ணியிருக்கு… சாப்பிட்டுவிட்டு போங்க… பத்திரம்… பத்திரமா வீட்டுக்குப் போங்க!’

தேவையின்றி கூட்டம் சேர்ந்து வேலை தடைபடுவதை மட்டும்தான் ரஜினி விரும்ப மாட்டாரே தவிர, ஒரு போதும் தனக்காகவே கூடும் கூட்டத்தை வெறுத்தவரில்லை. குசேலன் படத்திலேயே அதைத் தெளிவாகச் சொல்லியிருப்பார்.

‘தன் மீது கொண்ட அதீத பாசமே ரசிகர்களை இப்படியெல்லாம் நடந்து கொள்ள வைக்கிறது என்று அவருக்கும் தெரியும். அதனால்தான் அந்த மாதிரி ரசிகர்கள் பக்குவமடைய வேண்டும் என்ற நோக்கில் பல நல்ல விஷயங்களை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். அவர்கள் பக்குவப்படக் காத்திருக்கிறார்,’ என்கிறார் ரஜினியை பல வருடமாகப்பார்த்து வரும் மூத்த பத்திரிகையாளர் ராதாராஜ்.

பொறுமை, பொறுப்பு இரண்டும் இருந்தால் பெருமைக்குரிய ரசிகனாக சமுதாயத்தில் தலை நிமிர்ந்து வாழலாம் என்பது ரஜினி காட்டியிருக்கும் வழி.

யாரோடும் ரஜினியை ஒப்பிடுவதற்கல்ல இந்தப் பதிவு.

‘எந்திரன் படத்துக்காக ரசிகர்களிடம் நடிக்கும் தந்திரன் ரஜினி’ என சில பாவிகள் செய்யும் பிரச்சாரத்தின் பின்னால் உள்ள அயோக்கியத்தனத்தைப் புரிந்து கொள்ளவே இது!

ஒபாமாவின் வருகையால் இந்தியாவுக்கு என்ன லாபம்?

மாற்றம். முடியும்!

இந்த இரட்டை வார்த்தைகள்தான் பராக் ஒபாமாவின் மிகப்பெரிய முதலீடுகள். `நாடு தற்போது இருக்கும் சூழலில் இருந்து அபரிமிதமான மாற்றம் அடைய வேண்டும். அத்தகைய மாற்றத்தை சாத்தியப்படுத்த நம்மால் முடியும்!’ - இவைதான் அமெரிக்க அதிபர் பதவியை ஒபாமாவுக்கு அறுவடை செய்து கொடுத்திருக்கின்றன. கடந்த சில மாதங்களாக பிரிண்ட் மீடியா, விஷுவல் மீடியா என அனைத்திலும் நீக்கமற நிறைந்திருந்த அமெரிக்க அதிபர் தேர்தல் திருவிழா தற்போது நிறைவடைந்திருக்கிறது. ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட பராக் ஒபாமா என்ற கறுப்பு இளைஞர் வெற்றிக்கனியைச் சுவைத்து, அமெரிக்காவின் நாற்பத்துநான்காவது அதிபராகியிருக்கிறார்.

தாய் தேசமான அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியினர் உற்சாக வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கின்றனர்.தந்தை தேசமான கென்யாவில் ஒருபடி மேலே போய் அரசு விடுமுறை அறிவித்து கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இறக்கைகள் முளைக்காத குறைதான். உண்மையில் கென்யாவின் ஒவ்வொரு வீடும் கல்யாணவீடாக உருமாறி களை கட்டியிருக்கிறது. இன்னும் சில தினங்களில் வெள்ளை மாளிகைக்குள் நுழைய இருக்கிறார் ஒபாமா, துணை அதிபர் ஸ்பைடனுடன்.

`அமெரிக்காவில் அத்தனையும் சாத்தியம் என்பதை இளைஞர்கள், முதியவர்கள், கறுப்பர்கள், வெள்ளையர்கள், குடியரசுக் கட்சியினர், ஜனநாயகக் கட்சியினர், ஹிஸ்பானியர்கள், ஆசியர்கள் அத்தனை பேரும் அமெரிக்கர்கள் என்ற ஒரே குடையின்கீழ் திரண்டு வாக்குகள் மூலமாக உலகத்துக்கு உரக்கச் சொல்லியிருக்கிறீர்கள்’ என்று பெருமிதத்துடன் பேசுகிறார் பராக் ஒபாமா. நல்லது.

புது மாப்பிள்ளை அடுத்து என்ன செய்யப் போகிறார்? என்பதில்தான் ஒட்டுமொத்த உலகத்தின் கவனமும் குவிந்து கிடக்கிறது. அதேசமயம் வெள்ளை தேசத்தில் ஒரு கறுப்பரால் எப்படி அதிகார பீடத்தைக் கைப்பற்ற முடிந்தது என்ற ஆச்சரியம் இன்னமும் பலருக்கு நீங்கவே இல்லை. இதற்கான விடையைத் தெரிந்துகொள்வதற்கு முன்னால் பராக் ஒபாமாவின் பூர்வீகம் பற்றிப் பார்த்து விடலாம்.

நதிமூலம், ரிஷிமூலம்!

ஆப்பிரிக்க நாடுகளுள் ஒன்றான கென்யாவைச் சேர்ந்த இஸ்லாமியர் பராக் ஒபாமா சீனியர். இவர்தான் அமெரிக்காவின் புதிய அதிபர் பராக் ஒபாமாவின் தந்தை. தாயார் ஆன் டன்ஹாம். இவர் ஒரு வெள்ளை அமெரிக்கர். மேல்படிப்புக்காக அமெரிக்கா வந்த பராக் ஒபாமா சீனியர், டன்ஹாமைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். காதலுக்கான பரிசாக 1961-ல் கிடைத்தவர் பராக் ஹுஸைன் ஒபாமா.

அமெரிக்காவின் கலாசாரத்தோடு பின்னிப் பிணைந்ததால் ஏற்பட்ட விளைவுகளுள் ஒன்று விவாகரத்து. அது இரண்டே ஆண்டுகளில் டன்ஹாம் - ஒபாமா சீனியர் தம்பதிக்கு வந்துவிட்டது. பிறகு டன்ஹாம் இன்னொருவரைத் திருமணம் செய்துகொள்ள, ஒபாமா சீனியரும் அதே பாணியைப் பின்பற்றினார். பிறகு டன்ஹாம் இரண்டாவது கணவரையும் பிரிந்து தாய் வீட்டுக்கே வந்துவிட்டார். தாயுடன் பாட்டி வீட்டில் வளரத் தொடங்கினார் பராக் ஹுஸைன் ஒபாமா.

லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கும் ஆக்சிடென்டல் கல்லூரி, நியூயார்க்கில் இருக்கும் கொலம்பியா பல்கலைக் கழகம் ஆகியவற்றில் படித்துவிட்டு சமூக சேவகராக அவதாரம் எடுத்தார் ஒபாமா. சிகாகோவின் தெற்குப் பகுதிதான் ஒபாமாவின் சமூக சேவைக்குக் களமாக அமைந்தது. அப்போதுதான் ஒபாமாவுக்கு அரசியல் ஆர்வமும் வரத் தொடங்கியது. ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளராக இருந்த ஒபாமா 1992-ல் பில் கிளிண்டன் தேர்தலில் நின்றபோது அவருக்காகப் பிரசாரம் செய்தார்.

துல்லியமான புள்ளிவிவரம். தெளிவான பேச்சு. பிரமிக்க வைக்கும் கம்பீரம். எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து ஒபாமாவின் மதிப்பை உயர்த்தத் தொடங்கின. 1997-ல் மாநில செனட் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். 2004-ல் இல்லினாய்ஸில் இருந்து அமெரிக்க செனட்டுக்குத் தேர்வு செய்யப்பட்டார். அடுத்த குறி அதிபர் பதவி. முடியும் என்று நம்பினார். அதைச் சாதிப்பதற்கு அவர் எடுத்துவைத்த ஒவ்வோர் அடியும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவை.

மிடுக்கு நிறைந்த கறுப்பர்!

நிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. முக்கியமாக, ஒபாமா ஒரு கறுப்பர் அல்லது அரைக்கறுப்பர். ஆகவே, வெள்ளையர்கள் அவருக்கு வாக்களிக்க மாட்டார்கள். மிகப்பெரிய பிரச்னை. ஆனால் அவற்றை நுணுக்கமாக சமாளித்தார் ஒபாமா. `நான் ஒரு அமெரிக்கன். அமெரிக்காவின் எதிர்காலம் எப்படி இருக்கவேண்டும் என்பது குறித்து என்னிடம் பல நல்ல திட்டங்கள் இருக்கின்றன. அவற்றைச் செயல்படுத்த எனக்கு வாக்களியுங்கள்’ என்று கேட்டார். அத்தோடு சரி. எந்த இடத்திலும் தன்னை கறுப்பர் என்று சொல்லிக்கொள்ளவே இல்லை. அனுதாப வாக்கு சேகரிக்கவில்லை. மிடுக்குடனேயே பேசினார். மிடுக்குடனேயே பிரசாரம் செய்தார். மிடுக்குடனேயே நிதி உதவிகளையும் பெற்றார். இந்த மிடுக்குத்தான் அவருடைய மிகப்பெரிய பலமாக இருந்தது. வெள்ளையர்களின் வாக்கு வங்கி இவர் பக்கம் திரும்பியதற்கு இதுதான் முக்கியமான காரணம்.

ஒபாமா ஒரு முஸ்லிம்?

ஒபாமாவின் தந்தை ஒரு பூர்வீக முஸ்லிம். அவருடைய பெயரில்கூட ஹுஸைன் என்று இருக்கிறது. தீவிரவாதிகளுடன் ஒபாமாவுக்குத் தொடர்பு இருக்கிறது. இப்படிப் பலகதைகள் கட்டுக்கட்டாக. ஆனால் தன்னுடைய பூர்வீகத்தைப் பற்றி விரிவாக மக்களிடம் பேசினார் ஒபாமா. தான் இந்தோனேஷியாவில் படித்தது முதல் அமெரிக்கப் பாட்டியால் வளர்க்கப்பட்டது வரை அத்தனை விஷயங்களையும் பட்டவர்த்தனமாகச் சொன்னார். இதனால் கட்டுக்கதைகள் கலகலத்தன. இதில் என்ன துரதிருஷ்டம் என்றால், அவரை முஸ்லிம் என்று எல்லோரும் சொன்னபோது, `முஸ்லிமாக இருப்பது குற்றமா?’ என்று எதிர்க்கேள்வி கேட்க ஒபாமா விரும்பவில்லை. கேட்கவும் இல்லை. ஒருவேளை அந்தக் கேள்வியைக்கேட்டு, அதன் காரணமாக ஏற்படும் இழப்புகளை எதிர்கொள்ள ஒபாமா விரும்பவில்லையோ என்னவோ? திருஷ்டிப் பொட்டாக இருக்கட்டும் என்று விட்டுவிட்டார்.

என்னதான் தன்னை ஒரு கறுப்பர் என்று ஒபாமா பெருமிதத்துடன் சொல்லிக் கொள்ளாதபோதும், ஒபாமா என்ற கறுப்பர் திடுதிப்பென அதிபர் பதவிக்குப் போட்டியிட்டது, அடிமைகளாகவே நுழைந்து, அடிமைகளாக வாழ்ந்து வரும் அமெரிக்கக் கறுப்பர்கள் மத்தியில் ஒருவித பரவசத்தை ஏற்படுத்தியது. தங்களுடைய ஹீரோவாக ஒபாமாவைப் பார்த்தனர். அவர் படம் போட்ட டீ ஷர்ட்டுகளைப் போட்டுக்கொண்டனர். கைகளிலும் புஜங்களிலும் ஒபாமா டேட்டூக்களை ஒட்டிக்கொண்டனர். அமெரிக்கக் கறுப்பர்கள் மத்தியில் ஒபாமாவின் செல்வாக்கு உயரத் தொடங்கியது. அந்தச் செல்வாக்கு வாக்குகளாக உருமாறியது.

புஷ் போட்ட `பாதை’

இவை அனைத்தைக் காட்டிலும் கடந்த எட்டு ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் ஜார்ஜ் புஷ் மீது அமெரிக்கர்கள் மத்தியில் இருக்கும் வெறுப்பு ஒபாமாவுக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. போர் வெறியர், அதிரடி மனிதர், குழப்பவாதி, மக்களைப் பற்றி அதிகம் கவலைப்படாதவர், கோமாளி என்று ஜார்ஜ் புஷ் மீது இருந்த அத்தனை எதிர்மறை விஷயங்களும் மக்களின் கவனத்தை ஒபாமா மீது திருப்புவதற்கு வசதி செய்து கொடுத்தன. போதாக்குறைக்கு செப்டம்பர் 12, 2008 அன்று அமெரிக்காவில் அரங்கேறிய பொருளாதார சுனாமி ஜார்ஜ் புஷ்ஷின் கொஞ்ச நஞ்ச இமேஜையும் வாரிச் சுருட்டிக்கொண்டு சென்றுவிட்டது. அடுக்கிவைக்கப்பட்ட தீப்பெட்டிக் கோபுரம் சரிவது போல லேமேன் பிரதர்ஸ் போன்ற நிறுவனங்கள் திவாலாகின.

வாக்கும் கணக்கும்!

ஊர்கூடித் தேர் இழுத்தது போல பல்வேறு சங்கதிகளும் ஒபாமாவுக்கு ஆதரவாக இருந்ததால், தற்போது அதிகபட்ச வாக்குகள் வித்தியாசத்தில் அமெரிக்காவின் முதல் ஆப்பிரிக்க - அமெரிக்க கறுப்பர் இனத்தைச் சேர்ந்த பராக் ஒபாமா அதிபராக வெள்ளை மாளிகைக்குள் நுழைந்திருக்கிறார். மொத்தமுள்ள 538 எலக்டோரல் காலேஜ் வாக்குகளில் 270ஐப் பெறுபவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார். ஆனால் ஒபாமாவுக்கோ 364 வாக்குகள் கிடைத்துள்ளன. அவரை எதிர்த்த குடியரசுக் கட்சியின் ஜான் மெக்கையினுக்கு 163 வாக்குகளே கிடைத்துள்ளன. வாக்களித்த பெண்களில் ஒபாமாவுக்கு மட்டும் 56 சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளனர். வாக்களித்த 74 சதவிகித வெள்ளையர்களில் ஒபாமாவுக்கு 43 சதவிகிதம் பேரும் மெக்கெயினுக்கு 55 சதவிகிதம் பேரும் வாக்களித்துள்ளனர். வாக்களித்த 13 சதவிகித ஆப்பிரிக்க - அமெரிக்கர்களில் 95 சதவிகிதம் பேர் ஒபாமாவுக்கே வாக்களித்துள்ளனர். நிற்க.

ஈராக் : ப்ளஸ் புஷ் மைனஸ் புஷ்!

ஒபாமா சர்ச்சைக்குரிய விஷயங்களில் எப்படி நடந்து கொள்ளப்போகிறார் என்பதைப் பற்றிப் பார்க்கலாம். முதலில் ஈராக். ஜார்ஜ் புஷ் மற்றும் அமெரிக்காவின் இமேஜை ஆழக்குழி தோண்டிப் புதைத்த விஷயங்களுள் ஈராக்குக்கு அபரிமிதமான பங்கு உண்டு. அடிப்படையில் ஒபாமா ஒரு பரிபூரண யுத்த எதிர்ப்பாளர் அல்ல என்றாலும், ஈராக் மீதான யுத்தத்தைக் கடுமையாக எதிர்த்துக் கொண்டிருப்பவர். ஆகவே, தன்னுடைய தேர்தல் பிரசாரத்தின்போது அளித்த வாக்குறுதிகளின்படி ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படையினரைக் கொஞ்சம் கொஞ்சமாகத் திரும்பப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன.

ஒபாமா Vs ஒஸாமா!

அடுத்து, ஆப்கனிஸ்தான் யுத்தம். ஈராக் விஷயத்தில் தான் பயன்படுத்தும் அளவுகோலையே ஆப்கனிஸ்தான் விவகாரத்திலும் பயன்படுத்த ஒபாமா தயாராக இல்லை என்பதையே அவருடைய பேச்சுகள் வெளிப்படுத்துகின்றன. தாலிபன்களுக்கும் அல் காயிதாவுக்கும் எதிரான யுத்தத்தில் ஒபாமாவுக்கு ஆர்வம் அதிகம். ஆகவே, ஒபாமாவின் வருகை ஆப்கனுக்கு எதிரான, ஒஸாமாவுக்கு எதிரான, அல் காயிதாவுக்கு எதிரான யுத்தத்தின் வேகத்தை அதிகப்படுத்தும் என்பதுதான் பெரும்பாலானோரின் கணிப்பு.

பாகிஸ்தானின் எதிரி?

இதே ஒஸாமா விவகாரத்தால் பாகிஸ்தான் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார் ஒபாமா. ஜனநாயகக் கட்சியின் சார்பாகத் தேர்வாகியிருக்கும் ஒபாமாவுக்கு பாகிஸ்தானில் இருக்கும் ஜனநாயகத்தின் மீது அத்தனை பிடிப்பு கிடையாது. இதனால் நேற்றுவரை அமெரிக்கா மூலமாக பாகிஸ்தானுக்குக் கிடைத்து வந்த தார்மிக ரீதியான, ராணுவரீதியான உதவிகள் நின்று போவதற்கான வாய்ப்புகள் அதிகம். முக்கியமாக, ஆப்கன் போர் தீவிரமடைந்தால் அதன் பக்கவிளைவாக உள்நாட்டுக்குள் ஏற்படும் குழப்பங்களில்தான் பாகிஸ்தான் கவனம் செலுத்துமே தவிர, காஷ்மீர் விஷயத்தில் அதிகம் முனைப்பு காட்டாது. இதனால் காஷ்மீர் குழப்பங்கள் கணிசமான அளவுக்குக் குறையலாம் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.

அண்டை நாடுகளுடனான உறவில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த அதிபர்கள் காட்டும் கெடுபிடிகளையும், மூர்க்கத்தனத்தையும் ஜனநாயகக் கட்சியின் ஒபாமா போன்றவர்கள் பின்பற்ற மாட்டார்கள் என்பதுதான் கடந்த கால வரலாறு. ஆகவே, உலக நாடுகளுடனான உறவில் அமெரிக்கா சிறிதளவேனும் மென்மைத்தன்மையை வெளிப்படுத்தும் என்பது பரவலான எதிர்பார்ப்பு.

நமக்கு என்ன லாபம்?

இந்தியாவுடனான அமெரிக்க உறவு எப்படி இருக்கும்? ஒபாமாவின் வருகையால் இந்தியாவுக்கு என்ன லாபம்? என்ன நஷ்டம்? என்ற கேள்விகள் பலமாக அடிப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்தியாவுடன் அனுசரணையாக நடந்துகொண்ட அமெரிக்க அதிபர்களுள் முக்கியமானவர் ஜார்ஜ் புஷ். அணுசக்தி ஒப்பந்தத்துக்காக பகீரதப் பிரயத்தனம் செய்ததை யாரும் அத்தனை சுலபமாக மறந்துவிட முடியாது. அதேபோல பராக் ஒபாமாவும் நடந்துகொள்வாரா என்பது சந்தேகத்துக்கு உரியதுதான்.

ஒபாமா தலைமையிலான அமெரிக்காவுடன் இந்தியாவின் உறவு எப்படி இருக்கும் என்பது, அவர் யாரை வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப் போகிறார்? அந்த அமைச்சருக்கு இருக்கும் இந்தியா மீதான அபிமானம் எப்படிப்பட்டது? அவர் எப்படிப்பட்ட பரிந்துரைகளை இந்தியாவுக்காக ஒபாமாவிடம் முன்வைக்கப் போகிறார்? என்பன போன்ற பல விஷயங்களை உள்ளடக்கிய சங்கதி இது. எனினும், இந்தியர்கள் மீது பொதுவாக ஒபாமாவுக்கு நல்ல அபிப்ராயம் உண்டு என்பதை அவருடைய சில பேச்சுகள் வெளிப்படுத்துவதால், இந்தியாவுடன் வர்த்தக உறவுகள் மேம்படுவதற்கான வாய்ப்புகள் கணிசமான அளவில் இருக்கின்றன.

பிபிஓ என்ன ஆகும்?

அமெரிக்காவால் இந்தியர்களுக்கு அதிக பலனளிக்கக்கூடிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் பிபிஓ துறைகளில் ஏகப்பட்ட கெடுபிடிகள் வரக்கூடும். இதனால் இந்தியர்களுக்கான வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்பது இந்தியர்களுடைய பயம். அதை வலுப்படுத்தும் விதமாகவே ஒபாமாவின் பேச்சுகளும் இருக்கின்றன. ஆனால் அப்படி நினைத்த மாத்திரத்தில் பிபிஓ அவுட்ஸோர்ஸிங் என்ற வேலைப் பகிர்வை ஒபாமாவால் தடுத்து நிறுத்த முடியாது என்பதுதான் யதார்த்தம் என்கிறார்கள் தொழில்வல்லுநர்கள். வேண்டுமானால் அரசு தன்னுடைய வேலைகளை இந்தியாவுக்கோ அல்லது மற்ற நாடுகளுக்கோ அவுட் ஸோர்ஸிங் செய்யாமல் இருக்கலாம். அடுத்து, அவுட் ஸோர்ஸிங் செய்யும் தனியார் நிறுவனங்களுக்கு சிலபல கெடுபிடிகளை விதிக்கலாம் அல்லது சலுகைகளைப் பறிக்கலாம். ஆனால் நீண்டகால நோக்கில் இது பலன் தராது. அவுட் ஸோர்ஸிங் காலத்தின் கட்டாயம், குறிப்பாக அமெரிக்காவுக்கு.

வெளிவிவகாரம் எல்லாம் சரி. அமெரிக்காவின் உள்நாட்டுப் பிரச்னைகள் ஒபாமாவுக்கு முன்னால் விஸ்வரூபமெடுத்து நின்று கொண்டிருக்கின்றன. முதலில் உள்நாட்டு சவால்கள். முக்கியமாகப் பொருளாதாரச் சரிவு. இதற்காக பல்வேறு நடவடிக்கைகளைத் துணிச்சலுடன் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் ஒபாமா.

சரிந்த கோபுரங்கள் நிமிருமா?

முதல்கட்டமாக, அரசு செய்யும் அநாவசிய செலவுகளை முற்றிலுமாகக் குறைக்கும் நடவடிக்கையில் இறங்குவார். உதாரணமாக, ராணுவம், அந்நிய நாட்டின்மீது படையெடுத்தல் போன்றவற்றை படிப்படியாகக் குறைத்து, அதற்குச் செலவிடும் நிதியை, சமீபகாலமாக சப்பிரைம் கடன்களால் வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரணமாகக் கொடுக்க ஏற்பாடுகள் செய்வார். ஏழை மக்களுக்கு சுகாதாரம் மற்றும் மருத்துவம், இன்ஷூரன்ஸ் ஆகியவற்றில் பெரும் உதவிகளைச் செய்வார் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.

வழக்கமாக குடியரசுக் கட்சி அதிபர்கள் வர்த்தகக் கண்காணிப்பில் அதிக கவனம் செலுத்த மாட்டார்கள். இதுதான் தற்போதைய பொருளாதார வீழ்ச்சியின் தோற்றுவாய். அமெரிக்காவைப் பொருளாதாரச் சரிவில் இருந்து மீட்கும் வகையில் வர்த்தகக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துவார் ஒபாமா என்பது சர்வ நிச்சயம். அதேபோல பெரிய தொழில் நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும்.

Tax and Spend என்ற தங்களுடைய கொள்கையின்படி அதிக அளவில் வரிகளை விதித்து, அதன்மூலம் கிடைக்கும் நிதியைக் கொண்டு அத்தியாவசிய காரியங்களுக்குப் பயன்படுத்தும் நடவடிக்கையில் ஒபாமா அரசு தீவிரம் காட்டும். அதேசமயம், நடுத்தர மக்களுக்கு வரிச்சலுகைகளும், மேல்தட்டு மக்களுக்குக் கூடுதல் வரிவிதிப்பும் அமலுக்கு வருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன.

`அதிபர் நாற்காலி மட்டும்தான் நாம் எதிர்பார்த்த மாற்றம் அல்ல. நாம் விரும்பும் மாற்றங்களைக் கொண்டுவர அதிபர் பதவி ஒரு வாய்ப்பு’ என்று கூறியிருக்கிறார் ஒபாமா. அந்த வாய்ப்பைப் பயன்படுத்துவதற்கு நிறையச் சவால்கள் காத்திருக்கின்றன ஒபாமாவுக்கு. இனி மூச்சு விடுவதற்குக்கூட அவருக்கு நேரம் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். ஆனால் ஒபாமாவை நினைத்துப் பெருமிதம் பொங்க பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறார்கள், உலகெங்கும் வாழும் கறுப்பர்கள்!

Thursday, November 6, 2008

சிவாஜியின் சொந்த வாழ்க்கை

ரத்னமாலா கணேசன் 'என் தங்கை'நாடகத்தில் எம்ஜியாருக்கு தங்கையாக நடித்தவர் . நாடகம் திரைப்படமாக்கப்பட்ட போது போது ஈ வி சரோஜா தங்கையாக படத்தில் நடித்தார் . 'என் தங்கை' படம் 'பராசக்தி' வெளியான அதே 1952 ல் தான் .நாடகம் அதற்கு முந்தைய வருடங்களில் நடந்தது என்பதை சொல்ல வேண்டியதில்லை .
' என் தங்கை நாடக ரிகர்சல் நடக்கும்போது அங்கே அடிக்கடி தம்பி சிவாஜி கணேசன் வருவார் ' என்று எம்ஜியார் குறிப்பிட்டிருக்கிறார் .இது படிக்கும் போது மேலோட்டமாக சாதாரண வார்த்தை .ஆனால் சிவாஜி கணேசனின் அந்தரங்கத்தை நாசுக்காக எம்ஜியார் வெளிப்படுத்திய குறும்பு !

சிவாஜியின் சொந்த வாழ்க்கை பற்றி அவர் என்ன தான் பல நடிகைகளோடு நடித்தாலும் குடும்ப வாழ்க்கை யை சிறப்பாக அமைத்து கொண்டவர் என்பதாக ஒரு பிம்பம் உண்டு . எம்ஜியார் , ஜெமினி,எஸ் எஸ் ஆர் இந்த கடமையிலிருந்து வழுவியவர்கள் என்ற அபிப்பராயத்தை ஊர்ஜிதப்படுத்த இதை சொல்வார்கள் . நடிகைக்கு திருமண அந்தஸ்து கொடுத்து குடும்ப வாழ்க்கையை சிக்கலாக்கி கொள்ளாதவர் சிவாஜி என்ற அர்த்தத்தில் .

உண்மை வேறு . இந்த ரத்தினமாலாவுக்கு சிவாஜி மூலம் குழந்தைகள் உண்டு . தான் சிவாஜி கணேசனின் மனைவி தான் என்பதில் இவருக்கு மிகுந்த பிடிவாதம் இருந்தது .சென்னையில் ரத்னமாலா வீட்டில் நேம் போர்டு " ரத்னமாலா கணேசன் " என்று தான் போடப்பட்டிருந்தது .

'அழைத்தால் வருவேன் 'படத்தில் என்னோடு நடித்த ஸ்ரீராஜ் என்பவர் நடிகர் அசோகன் நாடகக்குழுவில் கதாநாயகனாக நடித்தவர் . இந்த ஸ்ரீராஜ் கூட பிறந்த மூத்த சகோதரர் தன் ராஜ் பழைய நடிகர் . அறுபதுகளில் பல படங்களில் டாக்டர் , இன்ஸ்பெக்டர் ஆகிய ரோல்கள் செய்திருக்கிறார் . இந்த தன்ராஜ் தான் ரத்னமாலா கணேசனின் மகளை திருமணம் செய்தவர் . பலரும் இவரை பற்றி குறிப்பிடும் போது ' சிவாஜி சார் மருமகன் ' என்றே சொல்வார்கள் .
சமீபத்தில் இந்த ரத்தின மாலா இறந்து விட்டார் என கேள்விப்பட்டேன் .உண்மை தானா ?



இன்னொரு பிரபலமான நடிகையையும் நடிக்கவந்த புதிதில் 'சிவாஜியின் மகள்' என்றே அழைத்தார்கள் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். அந்த பிரபல நடிகையின் தாயும் ஒரு நடிகைதான். தாய் நடிகையோடும் நடித்து பின்னர் மகள் நடிகையோடும் நடித்து சக்கை போடு போட்டார் என்றும் சொல்வார்கள்.

அந்த பிரபல நடிகை பின்னர் இப்பொழுது அரசியலிலும் வெகு பிரபலம்.

அப்ப பப்பியம்மா?