Sunday, January 25, 2009

சத்யம் நிறுவனம் தப்பிப் பிழைக்கும்

ஒரு பொருளாதார பிரச்சினையாக மட்டுமே முதலில் கருதப் பட்ட சத்யம் விவகாரம் இப்போது அரசியல் பூச்சு பெற்று வருகின்ற நிலையில் சுமார் ஐம்பதாயிரம் ஊழியர்கள் (?) மற்றும் எண்ணற்ற சிறு முதலீட்டாளர்களின் வாழ்வாதாரமாக கருதப் படும் சத்யம் நிறுவனம் தப்பிப் பிழைக்குமா என்பது பற்றி அரசியல் மற்றும் பொருளாதார ரீதியான ஒரு அலசல்.

முதலில் அரசியல் ரீதியான அலசல்

இந்த பிரச்சினை அரசியல் வடிவம் பெற்று வருவதற்கு முக்கிய காரணம் சத்யம் (முன்னாள்) தலைவரின் கட்சி வேறுபாடற்ற அரசியல் தொடர்புகள். மென்பொருள் வளர்ச்சியில் மிகுந்த ஈடுபாடு காட்டி வந்த முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேச தலைவருமான திரு.சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப் பட்டவர் ராமலிங்க ராஜு. மென்பொருள் வளர்ச்சி என்ற பெயரில் அரசிடமிருந்து பல சலூகைகளை (மென்பொருள் தொழிலுக்கென நிலம் பெற்று அதை இவரது மகன்களின் நிறுவனங்களுக்கு தாரை வார்த்ததாக கூட குற்றச் சாட்டு உண்டு) இவரால் பெற முடிந்தது. 2003 இல் வரி தணிக்கையின் போது ராம லிங்க ராஜு சார்பாக பல பினாமி கணக்குகள் இருந்ததாக இந்திய குடியரசு கட்சியைச் சார்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் செபி கடிதம் அனுப்பியதாகக் கூறப் படுகிறது. அந்த பிரச்சினையில் இருந்து தப்பிக்க சந்திர பாபு நாயுடு அவர்களுடன் இருந்த தொடர்பு மற்றும் நாயுடுவுக்கு அப்போதைய பா.ஜ.க. அரசில் இருந்த செல்வாக்கு உதவியதாக கூறப் படுகிறது

சந்திர பாபு நாயுடுவுடன் நெருங்கிய தொடர்புகள் கொண்டிருந்த ராம லிங்க ராஜு 2004 இல் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு என்ன செய்யப் போகிறார் என்று அனைவரும் வியந்து கொண்டிருந்தனர். ஆனால் சந்திரபாபு நாயுடுவிடம் மென் பொருள் எனும் தலையைக் காட்டிக் கொண்டிருந்த ராமலிங்க ராஜு, ராஜசேகர ரெட்டி அவர்களிடம் காட்டியது அடிப்படைக் கட்டமைப்பு பணிகள் எனும் வாலை. ராஜசேகர ரெட்டி ஆட்சி பொறுப்பு ஏற்பட்ட பின்னர் வழங்கப் பட்ட பொதுத்துறை அடிப்படை கட்டமைப்பு பணிகளில் ஏறக்குறைய அனைத்து ஒப்பந்தங்களும் ராமலிங்க ராஜுவின் மகனால் நடத்தப் பெறும் மைடாஸ் நிறுவனத்திற்கே வழங்கப் பட்டது என்றும் அந்த ஒப்பந்தங்களின் அளவு சுமார் 19,000 கோடிகள் என்றும் கூறப்படுகிறது. ஹைதராபாத் மெட்ரோ பணிகள் மைடாஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப் பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்த டெல்லி மெட்ரோ தலைவர் இந்த ஒப்பந்தம் ஒரு ஊழல் என்றும் மெட்ரோ ரயில் திட்டம் வெறும் கண் துடைப்பே என்றும் இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமே ரியல் எஸ்டேட் லாபங்கள்தான் என்றும் கடந்த செப்டம்பர் மாதமே கூறியது கவனிக்கத் தக்கது.

ராஜுவின் அரசியல் தொடர்புகள் முக்கியமாக முதல்வருடன் உள்ள நெருங்கிய தொடர்புகள் ஆந்திர மாநிலத்தில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி வரும் காரணத்தினாலும் ஆந்திர பிரதேச சட்ட சபை தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளதாலும் சத்யம் முன்னாள் தலைவரை மட்டுமல்ல சத்யம் நிறுவனத்தையும் காப்பாற்றுவது ஆளுங்கட்சியின் அவசரத் தேவையாகிறது. இந்த விவகாரத்தை ஏற்கனவே கையில் எடுத்துள்ள தெலுங்கு தேசம் கட்சி, ராமலிங்க ராஜுவுக்கும் ஆந்திர முதல்வருக்கும் இடையே உள்ள தொடர்புகள் பற்றி ஆந்திர மக்கள் மத்தியில் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருவது குறிப்பிடத் தக்கது. மேலும் சென்ற தேர்தலில் மத்திய அரசு அமைக்க காங்கிரஸ்சுக்கு பெரும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த ஆந்திராவின் வாக்குகளை இழக்க விரும்பாத காங்கிரஸ் அரசு அந்த மாநிலத்தின் பெருமையாகக் கருதப் படும் சத்யம் நிறுவனம் முழுகிப் போவதையும் அந்த நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் 50,000 பேர் (?) வேலை இழப்பதையும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது என்றும் கூறப் படுகிறது. இதன் அடிப்படையிலேயே சத்யம் நிறுவனத்திற்கு தேவையான நிதி உதவிகள் செய்து தர தயாராக இருப்பதாக மத்திய வணிகத் துறை அமைச்சர் முதலில் கூறினார் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

மேலும், செபி கையில் ராஜுவை மாட்ட விடாமல் தடுப்பதற்கே அவர் அவசர அவசரமாக நீதிபதி முன் ஆஜர் செய்யப் பட்டார் என்றும் பின்னர் செபி விசாரிப்பதற்கு பல சட்டரீதியான தடங்கல்களை ஆந்திர அரசு செய்வதாகவும் பலரால் கருதப் படுகிறது. எனவே, சத்யம் நிறுவனத்தின் வீழ்ச்சியை (மற்ற நிறுவனங்களுடன் இணைந்து போவதின் மூலம் சத்யம் சுயமிழந்து போவதை) எந்த காரணத்தைக் கொண்டும் விரும்பாத மத்திய மாநில அரசுகள், புதிய சத்யம் தலைமைக்கு போதுமான உதவிகள் செய்யும் என்று முதலில் எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் நிறுவனத்தின் சந்தை மதிப்பை உயர்த்துவதற்காக கணக்கு வழக்கில் திருத்தங்கள் என்ற "கணக்கு வழக்கு மோசடி" மட்டும் ராஜு செய்தார் என்று அனைவரும் முதலில் நம்பியிருந்த நிலை மாறி நிறுவனத்தின் பணத்தை பல வகையிலும் (சொந்த கணக்குக்கு திருப்பியது, போலி வங்கி வைப்பு தொகை, போலியான ஊழியர் எண்ணிக்கை என) மிகப் பெரிய அளவில் மோசடி செய்திருப்பதாக புதிய தகவல்கள் வெளிவரவே, காங்கிரஸ் மத்திய தலைமை, இப்போது சத்யத்திற்கு நேரடியாக உதவி செய்ய தயங்குகிறது. ஆனால், சத்யத்தை விட பெரிய மய்டாஸ் விவகாரத்தினால் தனது அரசியல் எதிர்காலமே ஒரு கேள்விக் குறியாகி விட்ட நிலையில் ஆந்திர முதல்வர் சத்யத்தை உயிர்ப்பிக்க தீவிரமாக இருப்பதாக சொல்லப் படுகிறது.

மொத்தத்தில், சத்யத்தை தக்க முதலுதவி செய்து இதுவரை உயிர் பிழைக்க செய்திருப்பது "பழைய நிர்வாக குழுவை அடியோடு நீக்கி வணிக உலகில் சிறந்த பெயர் பெற்ற தீபக் பரேக் உள்ளிட்ட புதிய நிர்வாக குழு அமைத்திருக்கும்" மத்திய அரசின் நடவடிக்கைதான் என்பதை மறுக்க முடியாது.

இப்போது பொருளாதார ரீதியான அலசல்

இப்போது சத்யம் நிறுவனத்தின் தலைமை குழுவில் மத்திய அரசால் நியமிக்கப் பட்டிருக்கும் திரு. தீபக் பரேக், தொழில் முறையில் திறம்பட செயல் பட்டுக் கொண்டிருக்கும் HDFC நிறுவனத்தின் தலைவருமாவார். இவருடன் தலைமைக் குழுவில் இடம் பெற்றுள்ள மற்றவர்களும் கூட நிறுவனத்திற்கு ஒரு நம்பகத் தன்மையை ஏற்படுத்த மிகவும் உதவிகரமாக உள்ளனர்.

நிதித் தட்டுப்பாடு

இப்போது நிறுவனத்தின் உடனடி பிரச்சினை என்னவென்றால்,ரொக்க கையிருப்பு மிகக் குறைவாக இருப்பதால் அன்றாட செலவினங்களுக்கும் சம்பள பட்டுவாடாவுக்கும் நிதித் தட்டுப் பாடு ஏற்பட்டுள்ளது. மோசடிகள் நடைபெற்ற நிறுவனம் என்பதால் வங்கிகள் கடன் தர தயங்குகிறார்கள். மேற்சொன்ன அரசியல் காரணங்களால், அரசினாலும் நேரடியாக கடன் வசதிகளை செய்து தர முடிய வில்லை. நிறுவனத்தின் தலைமை நிர்வாக குழு பூர்வாங்க விசாரணையில், சத்யம் நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து பெரும் தொகை பாக்கி உள்ளது என்றும் சத்யம் நிறுவனத்தில் அசையா சொத்துகளின் மீது இதுவரை எந்த ஒரு வங்கிக் கடனும் பெறப் படவில்லை எனவும் அறியப் பட்டிருப்பதாக பத்திரிக்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன. உடனடி தேவைகளை சமாளிக்க நிறுவனத்தின் அசையா சொத்துக்களின் மீது வங்கிகளிடம் கடன் கோரலாம் என்று புதிய நிர்வாக குழு தீர்மானித்திருப்பதாக தெரிகிறது. இந்த செய்தி ஒரு புதிய நம்பிக்கையை தந்துள்ளது.

தலைமை இல்லாத நிலை

நிறுவனத்தின் மற்றொரு மிகப் பெரிய பிரச்சினை, இந்த நிறுவனத்தின் மீது ஊழல் கறை
படிந்திருப்பதால் தலைமை நிர்வாகி பொறுப்பேற்க யாரும் முன்வராதது. அதே சமயம், இந்த நிறுவனத்தை கையகப் படுத்த முடியுமா என்று இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனங்களுள் ஒன்றான லார்சன் டுப்ரோ தீவிரமான சிந்தனையில் இருப்பதாக தெரிகிறது. சத்யம் தலைமைக் குழுவிடம் சில திட்ட விவரங்களை முன்வைத்ததாகவும் தெரிகிறது. ஆனால் இறுதி முடிவு எடுக்க இன்னும் காலம் பிடிக்கும் என்றும் சொல்லப் படுகிறது. இடையில் இந்த நிறுவனம், சத்யத்தில் தனது பங்கினை நான்கு சதவீதத்திலிருந்து பன்னிரண்டு சதவீதமாக உயர்த்தி இருக்கிறது. தலைமை குழுவில் தனது பிரதிநிதியை அமர்த்த வேண்டும் என்று விரும்புவதாகவும் தெரிகிறது. இந்தியாவின் முன்னணி நிறுவனமும் சிறந்த வணிக நியதிகளை கடைப் பிடிப்பதாகவும் அறியப் படும், லார்சன் டுப்ரோ நிறுவனம் சத்யத்தின் நிர்வாகத்தை ஏற்கும் எனில் சத்யம் நிறுவனத்திற்கு நம்பகத் தன்மை கிடைக்க உதவி புரியும். மேலும் சில நிறுவனங்கள் (டெக் மகிந்திரா, ஐ.கேட் போன்றவை) கூட சத்யத்தை கையகப் படுத்த முயலுவதாகவும் வணிக வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.

வாடிக்கையாளர்கள் பின்வாங்கும் அபாயம்

தற்போது சத்யம் நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்கள் இருவர் இந்த நிறுவனத்தின் தொடர்பை முழுவதுமாக துண்டித்து விட்ட நிலையில் மேலும் பலர் இவ்வாறே செய்வார்களோ என்ற அச்சமும் நிலவி வருகிறது. அதே சமயத்தில் மென்பொருள் சேவைகளை சட்டென்று துண்டிப்பது மிகவும் கடினம் எனவே பல வாடிக்கையாளர்கள் சத்யம் சேவையை தொடர்வார்கள் என்றும் துறை விற்பன்னர்களால் கருதப் படுகிறது. ஏற்கனவே சொன்ன படி தீபக் பரேக், லார்சன் டுப்ரோ ஆகியோர் நிறுவனத்தின் நம்பகத் தன்மையை வளர்க்க உதவுவார்கள் என எதிர்பார்க்கலாம்.

சட்டரீதியான சிக்கல்

இந்திய சட்ட காவலர்களிடம் இருந்து சத்யம் மற்றும் அதன் முன்னாள் தலைவர் தப்பித்தாலும், அமெரிக்க சந்தைகளில் இதன் பங்கு வர்த்தகமாகி வருவதால், அங்குள்ள கண்காணிப்பாளர்கள் இந்நிறுவனத்திற்கும் ராஜுவிற்கும் கடும் நெருக்கடி கொடுக்கலாம் என்றும் இதில் இருந்து தப்பித்து அமெரிக்க வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வது இந்த நிறுவனத்திற்கு ஒரு பெரிய சவாலாகவே இருக்கும் என்று கருதப் படுகிறது. (சரிவர கண்காணிக்கத் தவறிய இந்திய செபி மீது கூட அமெரிக்க அரசு வழக்கு தொடரலாம் என்று கூட வதந்திகள் உள்ளன)

ஆக மொத்தத்தில் சத்யம் அபாய கட்டத்தை இன்னும் தாண்டவில்லை என்றாலும் இதைப் பிழைக்க வைக்க ஐ.சி.யு வில், லார்சென் டுப்ரோ மற்றும் தீபக் பரேக் எனும் திறமை மிக்க டாக்டர்களின் நேரடி கவனிப்பில், சத்யம் நிறுவனம் இருப்பதால் அது தப்பிப் பிழைக்கும் என்று ஓரளவு நம்பிக்கையோடு இருக்கலாம்.

பின்குறிப்பு: சத்யம் நிறுவனத்தின் தொடர்பாக லார்சென் மற்றும் தீபக் பரேக் எடுத்து வரும் நடவடிக்கைகளை கூர்மையாக கவனித்து வருபவர்கள், மிக்க துணிச்சல் இருந்தால் இந்த நிறுவனத்தின் பங்குகளில் நீண்ட கால நோக்கில் முதலீடு செய்யலாம். ஆனால், இந்த முடிவில் மிகுந்த சந்தை அபாயம் உள்ளது. முழுமையாக பணம் இழப்பதற்கும் வாய்ப்பு உள்ளது என்பதால் முதலீடு செய்த பணம் முழுமையாக போனாலும் பரவாயில்லை என்று கருதும் அளவிற்கு மட்டுமே பணம் முதலீடு செய்ய வேண்டும். இது தகவலுக்காக மட்டும். பரிந்துரை அல்ல.
Posted by Maximum India at 4:45 PM
Labels: அரசியல், செய்தியும் கோணமும், பங்கு சந்தை, பொருளாதாரம்

Wednesday, January 21, 2009

 
Posted by Picasa
 
Posted by Picasa

Saturday, January 17, 2009

Did a book predict Mumbai attack?

This metirial, I collected from www.sifynews

The detail of the book given below:

Author : Sunita Joshi-Ford , Published by Eloquent Books, New York , pages 186 paper back Price US $ 13.50 Also available as E book at Diesel E books for US $ 8.80. Also available on Amazon.com
--------------------------------------------------------------------------------------

A few months ago, aware of my interest in the subject, our Europe-based son sent us a book on Jihad, which he described as a “wake-up call for all Indians.”

My first reaction after reading the book was that it was too full of dark and far-fetched predictions about India’s future as an “Islamic Republic”.

But then came the Mumbai attacks of 26/11, and I realized that the author had accurately predicted the method of the Mumbai attack, nearly six months before the event.

Sunita Joshi Ford is not the author’s real name. It is in fact that of the protagonist of the book, and her extraordinary life amidst the continuing depredations and aspirations of Islamic extremists. It is the story, set in the all too near future, of a failing Pakistan and aggressive Islam.

By the same author: Let’s use Cricket

It starts with the capture of Osama Bin Laden in Pakistan, and the terrifying backlash which lead to nuclear attacks on Mumbai and New York.

At the time, India has fallen under fundamentalist Islam. Complacency, corruption and carelessness ensured that the takeover was swift and thorough, leaving more than one billion people bereft of their former culture and beliefs.

Among those fortunate enough to escape this tragic situation is Sunita, who is adopted by an American General. At the age of 18, she is told of the circumstances of how she came to live with them, and how her mother was probably killed for not relinquishing Sunita to become a member of a harem at the age of ten.

Stunned by this horrific revelation, Sunita dedicates her life to the pursuit of uncovering the truth of her mother’s fate. A fate that is interwoven with that of the world.

By the same author: Next steps for Kashmir | As Kashmir burns, Sonia hits the Games

The plot contains strategically placed, unexpected twists which sustain the reader’s interest throughout. The characters are developed in a multi-dimensional fashion, revealing their unique personalities and their individual agendas. The taut narrative keeps the focus on the primary story line.

But even more importantly the author, apparently well versed in international intrigues and American politics/policy, has sketched a very realistic picture of American approach to the whole question of terrorism against India.

In fact the scenario painted by the author may well be unfolding in Washington DC at this moment.

Here’s an extract:

“Things took a turn for the worse with rise of Al Qaeda in the early90s. The nuclear ‘Wal-Mart’ that AQ Khan created has already been spelt out by the Secretary of State. The 9/11 attack on the US confirmed our worst fears. In the aftermath of that attack we leaned on Pakistan to shut its proliferation efforts. In return we promised to let them keep 10 nukes to target the Indian cities of Delhi, Mumbai, Calcutta, Ahmedabad, and Poona, with a 100 % spare. These are mated with missiles and in fixed silos. We ensured that the targeting system is inflexible. As a quid pro quo, Pakistan agreed to scale down its enrichment for the rest of the Uranium to below weapons grade. Thus, as a bargain we have virtually shut this route of fissile material to the terrorists for use against the US” Admiral Snowcroft explained.

Mumbai terror attack special

Pausing for breath, he resumed, “All the Corps commanders, the real decision makers in Pakistan, are one with the General/ President on this. This is a well known ‘secret’ in the ruling circles of Pakistan. When the General/ President talks of his ideology of ‘Pakistan First’ he refers to the nukes as well. Even if the Islamists take over the country, no Pak General, howsoever Pan Islamist, will denude the Pak threat to India! When General Aslam Beg and Hamid Gul talked about nuking India, irrespective from where and by whom Pakistan was attacked, both were stating the obvious fact. Pak nukes are uni-directional, aimed at India…”

What this chilling presentation clearly tells us is that when it comes to fighting terror, the Americans are concerned only with American lives.

Read more columns

A must read in these troubled times, if we wish to ensure that our future, and that of our children, is safe and not under extremist rule.

Colonel Anil Athale, a Chhatrapati Shivaji fellow of the United Services Institute, is working on a project on internal security. He is also the coordinator of Pune based think tank Inpad, affiliated with the Bharatiya Vidya Bhavan.

The views expressed in the article are the author’s and not sify.com.

Tuesday, January 13, 2009

How we are in the hands of phishers

Its Monday morning. Ugh. Turn on your computer and check that mail! What’s this?

“In accordance with new KYC [Know Your Customer] norms, please login to your bank account by clicking on the link below and update your personal details. Thank you for your cooperation.”


Oh well – you click the link, the bank’s home page opens, you key in your user id and password and ….. ‘Network Error’! Hmmm… something wrong with the website. You try again. And then forget it – you’ll do it another time.



Ah, never mind. End of the month – you get your bank statement and …. Hey wait a minute! What are all these transfers and withdrawals? Hands shaking, you call the bank [helpline, dial 1 for English, 2 to cry, 3 to die…] and “Sorry sir, these are withdrawals you have made with your user id and password online”. But.. but “Thank you for calling the Left bank of the Ganges, you were talking to Unhelpful Kumar, have a nice day.” Nice day?



That email was a con, leading you to a fake website, a clone of your bank’s page [and a very good one], leading you on to giving your user id and password to the crook at the other end, gleefully waiting for another sucker to bite the dust.


Welcome to the world of online fraud - You’ve just been phished!


Another time, you get a call from your credit card bank, asking if you’ve made any online purchases recently. You think about it and say “I may have – a few dollars worth of magazine subscriptions or an email account payment.” Well sir, you will be pleased to learn that your online purchases at Paypal to the tune of $2150 [Rs. 1 Lakh] have been honoured by the credit card issuer.


Did’nt make that purchase? Welcome again to the world of online fraud – your card s just been misused and the bank expects you to pay!

Every time you give out your personal details [and you need to that for everything – a driver’s licence, that passport to Indian Officialdom, our famous ration card, a cellular phone, an insurance policy et al], you are inviting someone to take you for a ride. These are all the details that are needed for a paying bank to “verify” the user of your credit card or bank account.


Use your card at a restaurant, a store or worse, provide a photocopy to a hotel or vendor for “record”, you are, as the saying goes, literally asking for it. A copy of the card and your mailing address is all that’s needed to put you in the doghouse. So what do you do? Stop using your credit card or your bank account? Not a bad idea in these times, but it doesn’t work for you, does it?


A few simple precautions and a basic knowledge of the law will certainly minimize damage. Do not part with your personal information to an agent, salesperson or an indirect channel like that nice car loan agent. If you have to, provide that information directly to the authorities concerned. And for god’s sake, you NEVER need to give out your user id and password to anyone, not even to the nice guy at the bank – not even your home internet password.


Most people use easy to remember passwords – their date of birth combined with their name or that of some one close to them. A patsy for even a novice hacker! A strong, difficult to break [no such thing as unbreakable] password would have a combination of random letters, alphabets and even special characters like a +. Change your passwords regularly and don’t share them!


Do not access your bank accounts from other people’s computers; most certainly not from cybercafés and airports. Windows has an unhealthy habit of ‘remembering’ passwords and user names – note how the user name automatically gets filled into the box when you put in the first character.


Memorise your ids and passwords [I know, I know – easier said than done] or if you HAVE to write them down, please lock them away. Keep a list of your card numbers under the same lock and key, incase you have to report their loss. Try not to leave those keys around the house! If you travel, keep them with someone you trust – just like your will.


Don’t answer emails like the one above – no bank needs you to provide them with your user id and password by clicking on a link – they already have your details. Carefully check the spelling of the link – a phish ALWAYS has a different link. If it was the same as your bank’s, it would take you to the REAL page! Its safer to type in the link yourself when you want to login to your account.


If you DO get phished or conned, report it at once and DISPUTE the withdrawals or charges in writing. The Reserve Bank of India requires your bank to reverse the charges when disputed by you, pending an investigation. You do NOT need to pay them and then have your complaint heard, in spite of what the bank tells you.


Once you claim that the charges or withdrawals are fraudulent, it is for the bank to investigate and prove that the charges have indeed been incurred by you. Provided you have exercised reasonable caution, you cannot be held liable for a fraudulent withdrawal or charge.


A delay in reporting the fraud could end up making you liable – you must show that you have reported it at the first reasonably available instance. Keep the card, even after you have it blocked – you will need to produce to show that you still have it ion your own possession. Charges on a lost card are your liability till you report the loss. Some bank’s will insure you for that kind of loss or offer a limited liability plan.

If you are unfortunate enough to have a relative or friend steal and misuse your card or bank id, you will probably decide to grin and bear it – the bank isn’t going to let you off the hook.


All said and done, if you do not throw caution to the winds and exercise reasonable security, you will probably have only the headache and perhaps some heartache to contend with – a small price to pay for the freedom and flexibility that the internet gives you.

Saturday, January 10, 2009

ராமலிங்க ராஜுவின் தப்பு கணக்கு ......அவரை எங்க கொண்டுபோய் விட்டது பார்த்திர்கள ?

வெலவெலத்துப் போயிருக்கிறது மென்பொருள் துறை. ஐயாயிரத்து சொச்சம் கோடி ரூபாய் கையிருப்பில் உள்ளது என்று நேற்றுவரை சொல்லிக்கொண்டிருந்த சத்யம் கம்ப்யூட்டர் சர்வீஸஸ் நிறுவனத்தின் நிஜமான கையிருப்பு வெறும் 320 கோடி மட்டுமே என்ற ரகசியம் சமீபத்தில் அம்பலமாகி உள்ளது. அதுவும் நிறுவனத்தின் தலைவரான ராமலிங்க ராஜுவின் வாக்குமூலமாக.

ஆமாம். கணக்கு வழக்குக் குறிப்பேட்டில் சிலபல மோசமான திருத்தங்களைச் செய்து சத்யம் நிறுவனம் கடந்த சில வருடங்களில் அதிக லாபம் சம்பாதித்ததாகக் கணக்கு காட்டினேன். உண்மை அதுவல்ல. எங்களிடம் இருப்பது வெறும் முந்நூற்று இருபது கோடி மட்டுமே என்று அப்ரூவர் அவதாரம் எடுத்திருக்கிறார் ராமலிங்க ராஜு.

மேலோட்டமாகப் பார்த்தால் ஆழமான கிணறு என்பது மட்டும்தான் புரியும். கொஞ்சம் தோண்டிப்பார்த்தால் பூதமே தென்படுகிறது. பல்லாயிரக்கணக்கான பணியாளர்களுடைய வாழ்க்கையை, எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி இருக்கிறது இந்த மோசடி. கண்கட்டி வித்தை போல நடந்துள்ள இந்த மோசடிக்கதை சிக்கல்கள் நிறைந்தது. துணிச்சல் இருந்தால் கொஞ்சம் உள்ளே வாருங்கள். மனித மூளையின் விஷமத் தனத்தைத் தரிசிக்கலாம்.

இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனங்கள் என்று பட்டியல் போட்டால் முதல் ஐந்து இடங்களைப் பிடிப்பவை டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ், இன்ஃபோஸிஸ், ஹெச்.சி.எல், விப்ரோ மற்றும் சத்யம். 1987-ல் ராமலிங்க ராஜு என்பவரால் நிர்மாணிக்கப்பட்ட நிறுவனம் சத்யம்.

தேர்ந்த நிர்வாகம். திறமையான பணியாளர்கள். பிரமாதமான சேவை. எல்லாம் இருந்ததால் வாடிக்கையாளர்கள் குவியத் தொடங்கினர். மெல்ல மெல்ல வளர்ந்த சத்யம் அறுபத்தியாறு நாடுகளில் தன்னுடைய கிளைகளைப் பரப்பியது. இன்றைய தேதியில் ஐம்பத்து மூன்றாயிரம் பணியாளர்களைத் தன்னிடம் கொண்டுள்ளது சத்யம் நிறுவனம்.

ஏப்ரல் 2007 முதல் மார்ச் 2008 வரையிலான நிதியாண்டில் சத்யம் நிறுவனத்தின் மொத்த வருமானம் 8,473 கோடி ரூபாய். அதில், லாபம் என்று பார்த்தால் வரிகட்டியது போக 1687 கோடி ரூபாய். இப்படி கடந்த நான்கு நிதி ஆண்டுகளில் மட்டும் சத்யத்துக்குக் கிடைத்த லாபத்தின் மொத்த மதிப்பு 5,360 கோடி. இதுதான் கடந்த நிதியாண்டு முடிவில் சத்யம் நிறுவனம் சமர்ப்பித்த கணக்கு.

ஆனால் திடீரென இப்போது எங்கள் கையில் அவ்வளவு பணம் இல்லை. முக்கியமாக, நாங்கள் காண்பித்த எண்ணிக்கையில் ஐயாயிரம் கோடி ரூபாய் குறைகிறது, கைவசம் இருப்பது வெறும் 320 கோடி மட்டுதான் என்று அதிர்ச்சி குண்டுகளை வீசியிருக்கிறார் ராமலிங்க ராஜு. அதிர்ச்சி. குழப்பம். குளறுபடி. எங்கோ தவறு நடந்துள்ளது. தோண்டிப் பார்த்தால் பல சங்கதிகள் புதைந்து கிடப்பது அம்பலமானது.

உண்மையில் மற்ற நான்கு மென்பொருள் நிறுவனங்களைப் போல சத்யம் நிறுவனம் பெரிய அளவில் லாபம் சம்பாதிக்கவில்லை. குறைவான லாபத்தையே ஒவ்வொரு ஆண்டும் ஈட்டி வந்துள்ளது. ஆனால் பங்குச் சந்தையைப் பொறுத்தவரை அதிக வருமானம் ஈட்டும் நிறுவனம்தான் பெரிய நிறுவனம். அந்த நிறுவனத்துக்குத்தான் அதிகப் பங்கு மதிப்பு கிடைக்கும்.

கொஞ்சம் புரியும்படி பார்க்கலாமா? ராமசாமி நிறுவனத்தின் ஆண்டு வருமானம் இருபது கோடி என்று வைத்துக்கொள்வோம். அவர்களுடைய லாபம் இரண்டு கோடி. ஆனால் மாடசாமி நிறுவனத்தின் வருமானம் ஐந்து கோடி. லாபம் இரண்டு கோடி. இரண்டுமே ஒரே அளவு லாபம் சம்பாதித்தாலும், உண்மையில் எது சிறப்பான நிறுவனம்? குறைவான வருமானத்தில் அதிக லாபம் சம்பாதிக்கும் நிறுவனம்தானே. ஆனால் பங்குச் சந்தையைப் பொறுத்தவரை ராமசாமி நிறுவனத்துக்குதான் அதிக மதிப்பு. அதன் பங்கு
மதிப்புதான் அதிகம். காரணம், அவர்களுடைய வருமானம்தான் அதிகம். ஏன் இப்படி என்றால், கொஞ்சம் நிர்வாகம் கவனமாக நடந்துகொண்டால், செலவை சற்றே கட்டுப்படுத்தி, லாபத்தை அதிகரித்துவிடலாம் என்பது நம்பிக்கை.

மேலும் பங்குச்சந்தையில், ஒரே தொழிலில் இருக்கும் நான்கைந்து நிறுவனங்களை முதலீட்டாளர்கள் எப்போதும் ஒப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள்.டி.சி.எஸ், இன்ஃபோசிஸ் எல்லாம் இத்தனை சதவிகிதம் லாபம் என்கிறதே, நீங்கள் மட்டும் ஏன் வருமானமும் இல்லை, லாபமும் இல்லை என்கிறீர்கள் என்று சத்யத்தைக் கேள்விகள் கேட்பார்கள். பதில் சொல்ல முடியவில்லை என்றால், சத்யத்தின் பங்கு விலைகள் அதலபாதாளத்தில் படுத்துவிடும்.

இதுதான் சத்யம் நிறுவனத்தலைவர் ராமலிங்க ராஜுவை யோசிக்கவைத்தது. என்ன மாய மந்திர வித்தைகள் செய்தால் சத்யத்தின் பங்கு மதிப்பை உயர்த்தமுடியும் என்று யோசிக்கத் தொடங்கினார். தொழில்நுட்ப மூளை அல்லவா, நுட்பமாகவே சிந்திக்கத் தொடங்கியது. ஒத்தாசைக்கு நிதித்துறையில் பழம் தின்று கொட்டை போட்ட சில முக்கியஸ்தர்கள் வந்தனர்.

உட்கார்ந்து பேசியதில் அழகான திட்டம் இறுதி செய்யப்பட்டது. மேலும் அந்தத் திட்டம் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. சத்யம் நிறுவனத்துக்கு வெளியில் இருந்து வரவேண்டிய தொகையை உயர்த்திக் கணக்கு காட்ட வேண்டும். இது முதல்படி. அடுத்தது. சத்யம் நிறுவனத்தில் இருந்து வெளிநபருக்குச் செல்லவேண்டிய தொகையைக் குறைத்து கணக்கு காட்ட வேண்டும். இது இரண்டாவது படி. இறுதியாக, நிறுவனத்தின் கையில் இருக்கும் ரொக்கம் அல்லது சொத்து மதிப்பு உண்மையைவிட அதிகம் என்பதுபோல கணக்குகளைத் தயார் செய்வது.

வெளியில் இருந்து வரவேண்டிய பணத்தை அதிகப்படுத்திக் காட்டுவதற்காக சத்யம் தேர்வு செய்த உத்தி, போலி இன்வாய்ஸ்களைத் தயாரிப்பது. ஊர், பேர் தெரியாத நபர்களுடைய பெயரில் இன்வாய்ஸ்களைத் தயாரித்து கணக்கில் காட்டினார்கள் துணிச்சலாக. இதனால் வருமானம் மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கியது, போலியாக. ஆனால் இது சத்யம் நிர்வாகிகளுக்கும் கணக்கு வழக்குகளைக் கண்காணிப்பவர்களுக்கு மட்டும்தானே தெரியும்.

சத்யம் நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை தணிக்கை செய்யும் நிறுவனத்தின் பெயர் பிரைஸ்வாட்டர்ஹவுஸ்கூப்பர்ஸ். அவர்களுடைய வாயை எப்படி அடைத்தார்கள் அல்லது அவர்களுடைய கண்ணில் எப்படி மண்ணைத் தூவினார்கள் என்பது இன்னும் வெளியே வராத சங்கதி. அல்லது அவர்களுமே இதற்கு உடந்தையா என்பது மற்றொரு திகில் விஷயம்.

பெயரளவில் வருமானம் உச்சத்துக்கு சென்று கொண்டிருந்ததால் சத்யம் நிறுவனத்தின் பங்கு மதிப்பும் உயரத்திலேயே இருந்தது. ராமலிங்க ராஜூ எதிர்பார்த்ததும் அதுவே. மெல்ல மெல்ல சத்யம் நிறுவனத்தின் பங்குகளை விற்கத் தொடங்கினார். நிறுவனம் நல்ல நிலையில் இருப்பதாக நிதிநிலை அறிக்கைகள் சொன்னதால் ஏராளமான முதலீட்டாளர்கள் சத்யம் பங்குகளை வாங்கிக் குவித்தனர். இறுதியில் ராஜு மற்றும் குடும்பத்தினர் கையில் வெறும் ஐந்து சதவிகிதம் மட்டுமே இருந்தது. அதையும்கூட வங்கியில் அடமானம் வைத்து கூடுதலாகக் கடன் வாங்கினார் ராஜு.

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளுக்கு மேல் தாங்காது அல்லவா? சத்யம் நிறுவன கணக்கு ஏடுகளில் லாபத்தொகை ஏறிக்கொண்டே வந்தது. 5360 கோடி என்ற அளவை எட்டிய பிறகுதான் நிலைமை எல்லை கடந்துகொண்டிருக்கிறது என்பது ராமலிங்க ராஜுவுக்குப் புரிந்தது. ஐயாயிரம் கோடி உதைக்கிறதே என்று உதறல் எடுக்கத் தொடங்கியதும் அதன்பிறகுதான். மிகப்பெரிய குளறுபடியைச் செய்திருக்கிறோம். சிக்கினால் சின்னாபின்னமாகிவிடுவோம் என்ற நிலை. தண்டனை இல்லாமல் தப்பிக்க இன்னொரு குறுக்கு வழியைக் கண்டுபிடித்தார் ராஜூ. விநாச காலே விபரீத புத்தி.

இதற்கிடையில், அவருடைய இரண்டு மகன்களும் சேர்ந்து மேதாஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் (Maytas Infrastructure) மற்றும் மேதாஸ் ப்ராபர்டீஸ் (Maytas Properties) என்ற இரண்டு நிறுவனங்களை உருவாக்கியிருந்தனர். நிறுவனத்தின் பெயரான Maytasஐ திருப்பிப் போட்டால் Satyam என்று வருகிறது. சத்யம் நிறுவனத்தை அப்படியே புரட்டிப் போடும் முயற்சி என்பதற்கு இது ஒரு சமிக்ஞை. யாருக்கும் அது அப்போது புரியவில்லை.

திட்டம் இதுதான். சத்யம் நிறுவனக் கணக்கு ஏடுகளில் இடித்துக் கொண்டிருக்கும் ஐயாயிரம் கோடி ரூபாய்க்கு அந்த மேதாஸ் நிறுவனங்களை வாங்கியது போல கணக்கு காட்டிவிட்டால் தீர்ந்தது பிரச்னை. அந்த நிறுவனங்களின் அதிபர்கள் தன்னுடைய மகன்களாக இருப்பதால் டீல் முடிவதில் பிரச்னை இல்லை. பேப்பர் அளவில் நிறுவனத்தைக் கையகப்படுத்திவிடலாம், பைசா செலவில்லாமல். அதே நேரம், இல்லாத காசை இருப்பதுபோலக் காட்டி, கொடுப்பதுபோலக் கொடுத்து, தன் பேரில் உள்ள ஏமாற்றல் குற்றச்சாட்டு வெளியாகாமல் பார்த்துக்கொள்ளலாம். இங்குதான் விவகாரம் வேறு திசையில் திரும்பியது.

யார் அந்த மேதாஸ் நிறுவனம்? அவர்கள் இருக்கும் துறை என்ன? மென்பொருள் துறையில் இருக்கும் நாம் ஏன் போய் கட்டுமான நிறுவனத்தை வாங்கவேண்டும்.அப்படியே செய்வதென்றாலும், எதற்காக அந்த நிறுவனத்தை வாங்கவேண்டும்? அதுவும் ஏன் ஐயாயிரம் கோடி ரூபாய்க்கு? அந்த அளவுக்கு தகுதியான நிறுவனமா அது? தனது குடும்பமே பங்குதாரராக இருக்கும் இரு நிறுவனங்களுக்கு இடையே இப்படி கொடுக்கல் வாங்கல் செய்வதில் வெளிப்படையாக நடந்துகொள்ளவில்லையே? இது ஏன்? கேள்வி மேல் கேள்வி கேட்டனர் சத்யம் நிறுவனப் பங்குகளின் முதலீடு செய்தவர்கள். பதில் சொல்ல முடியாமல் திணறினார் ராமலிங்க ராஜு. எதிர்ப்பு வலுப்படவே அந்தத் திட்டத்தை அடுத்த நாளே கைவிடுவதாக அறிக்கை விட்டார் ராஜு.

வால் போய் கத்தி வந்த கதையாக இப்போது அடுத்த பிரச்னை எழுந்து நின்று பயமுறுத்தியது. நிறுவனத்தில் வரும் லாபத்தில் கணிசமான தொகையை முதலீட்டாளர்களுக்கு டிவிடண்ட் என்ற பெயரில் தருவது நிறுவனங்களின் வழக்கம். ஆனால் கடந்த நான்கு ஆண்டுகாலக் கணக்கை எடுத்துப் பார்த்ததில் கடந்த அதில் மூன்று ஆண்டுகளில் டிவிடண்ட் என்பதையே முதலீட்டாளர்களுக்குத் தரவில்லை சத்யம். ஐயாயிரம் கோடி ரூபாய்க்கு ஒரு நிறுவனத்தை வாங்கும் அளவுக்கு சத்யம் வலுவாக இருக்கும்போது ஏன் டிவிடண்ட் தரக்கூடாது என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

தலையே சுற்றுவது போல இருந்தது ராமலிங்க ராஜுவுக்கு. பணம் இருந்தால்தானே ஐயா, தருவதற்கு? போதாக்குறைக்கு சத்யம் நிறுவனத்தில் இயக்குனர்களாக செயல்பட்டுக் கொண்டிருந்த சிலர் தமது பதவிகளை வரிசையாக ராஜினாமா செய்தனர்.அதே நேரம் பார்த்து உலக வங்கி, சத்யம் நிறுவனத்துக்குக் கொடுத்திருந்த சேவை ஒப்பந்தங்கள் சிலவற்றை விலக்கிக்கொண்டு, சத்யம் நிறுவனத்தை எட்டு ஆண்டுகளுக்குத் தடை செய்துள்ளது என்ற தவல் கசிந்தது. ராஜுவும் குடும்பத்தினரும் கையில் வைத்திருக்கும் பங்குகளை அடமானம் வைத்து கடன் வாங்கியுள்ளனர் என்றும், இப்போது பங்கு விலை இறங்கிக்கொண்டே வருவதால் கடன் கொடுத்த வங்கிகள் அந்தப் பங்குகளை பொதுச்சந்தையில் விற்று பணம் செய்திருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகின.

இனியும் உண்மையை மூடி மறைத்தால் உயிரோடு விடமாட்டார்கள் முதலீட்டாளர்கள் என்பதால் பகிரங்கமாகக் கடிதம் எழுதிவிட்டு, தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டார் ராஜூ.

அதிர்வுகள் பலமாகக் கேட்கத் தொடங்கியுள்ளன. சத்யம் நிறுவனத்தின் பங்கு மதிப்பு, தேசியப் பங்குச்சந்தையிலும் மும்பை பங்குச்சந்தையிலும் ஒரே நாளில் 160 சொச்சம் ரூபாயிலிருந்து 75 சதவீதம் அதிரடியாகக் குறைந்து சுமார் 40 ரூபாய்க்கு வந்துள்ளது. நியூ யார்க் பங்குச்சந்தையில், இந்தப் பங்கில் வர்த்தகம் செய்வதை நேற்று தடை செய்துள்ளனர். இந்தப் பங்கின் விலை மேலும் இறங்கும் அபாயம் இருக்கிறது. இதனால் அந்தப் பங்குகளில் முதலீடு செய்தவர்களின் நிலை அதளபாதாளத்தை நோக்கிச் சென்றுகொண்டுள்ளது.

தவிரவும், நிறுவனம் பலமாகச் சேதமடைந்துள்ளதால் அதில் வேலை பார்த்துவரும் ஐம்பத்து மூன்றாயிரம் பணியாளர்களுக்கும் வேலை இழப்பு அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே பொருளாதார நெருக்கடி உலகத்தை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது. இந்திய மென்பொருள் துறையில் ஆள்குறைப்பு அதிகரித்துவருகிறது. இதில் எங்கே போய் வேலை தேடுவது?

இதன் இன்னொரு அபாயம் மோசமானது. சத்யம் போன்ற நிறுவனத்தில் அதிகச் சம்பளம் வாங்கிவந்தவர்கள், நிச்சயம் வீடு அல்லது வாகனக் கடன் வாங்கியிருப்பார்கள். இவர்கள் வேலையை இழந்தால், கடன்களை எப்படித் திரும்ப அடைப்பார்கள்? அடைக்காவிட்டால் வங்கிகளின் வருமானம் பாதிக்கப்படுமே? பக்க விளைவுகளை நினைத்துப் பதறிக்கொண்டிருக்கின்றனர் சம்பந்தப்பட்டவர்கள்.

பங்குச் சந்தை மதிப்பு சரிந்துகொண்டு இருப்பதால் இந்த நிறுவனத்தை துறையின் முக்கியப் புள்ளிகளான இன்போசிஸ், விப்ரோ, எச்.சி.எல் உள்ளிட்ட ஏதேனும் ஒரு நிறுவனம் கையகப்படுத்தி சீர் செய்ய முன்வருவார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வி. அநேகமாக எல்லா வாடிக்கையாளர்களும் தாங்களாகவே இந்நேரத்துக்குள் பிற நிறுவனங்களைத் தொடர்பு கொண்டிருப்பார்கள்.

சமஸ்கிருத வார்த்தையான சத்யத்துக்கு தமிழில் உண்மை என்று அர்த்தம். உண்மை என்றால் மனச்சாட்சிக்கு விரோதம் இல்லாமல் நடந்துகொள்வது. தான் அப்படித்தான் நடந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார் ராமலிங்க ராஜு. என்னத்தைச் சொல்வது?

Thursday, January 8, 2009

How did Satyam pull off India's biggest corporate fraud?

The government vowed to strengthen laws to prevent corporate fraud after Satyam Computer, the country's fourth-largest software company, shocked investors by revealing profits had been falsely inflated for years.

Chairman Ramalinga Raju resigned on Wednesday after revealing India's biggest corporate scandal in memory, sending the company's shares plunging nearly 80 percent.

The following is an overview of how the fraud escaped detection for so long and what compelled a soft-spoken man born into a family of farmers to risk all.

Q: How did Satyam escape detection?

A: On the face of it, New York-listed Satyam did everything by the rulebook, with an international firm auditing its books, declaration of accounts in accordance with Indian and U.S. standards, and the requisite number of independent directors with excellent credentials, including a Harvard business school professor and a former federal cabinet secretary.

Raju, in his now famous 5-page letter outlining the deception, said no other board member -- past or present -- was aware of the financial irregularities.

Regulators were blindsided, and analysts and experts say there are "systemic flaws" in accounting and audit practices.

About $1 billion, or 94 percent of the cash, on the company's books was fictitious, Raju said, and manipulation of the cash flow may be a reason why the fraud was undetected.

"Companies have manipulated P&L (profit and loss) accounts before, but cash flow is the Holy Grail -- you don't tamper with it," said Saurabh Mukherjea, an analyst at UK-based research firm Noble Group.

"Auditors generally assume if there is cash, things are OK. But there are plenty of accounting and governance loopholes."

India also lacks a culture of dissent, with shareholders and independent directors reluctant to question company founders.

Q: What was the motive?

A: India's $50-billion information technology industry -- the poster child for India's economic liberalisation and rapid growth -- expanded at a scorching pace on the back of outsourcing demand from Western firms.

At the height of the boom, top software firms Tata Consultancy Services, Infosys Technologies, Wipro and Satyam consistently reported annual 50-percent increases in profits every quarter.

Pressure to maintain this pace of growth, please investors and shareholders and justify inflated P/E multiples during a six-year bull run on the stock market have all been cited as reasons why Satyam cooked the books.

Some news reports say Raju was an aggressive investor in failed dotcoms, and the family also put money in real estate.

Raju, in his letter, said he had "not benefited in financial terms" as a result of the inflated accounts.

Q: Are there other Satyams out there?

A: Most certainly, say analysts and industry experts.

While there has been a plea from chief executives across the board against painting all of corporate India with the same brush, Noble Group estimates at least a fifth of the top 500 listed companies practice "creative accounting".

"At its most innocent it is not illegal, but account manipulation is very pervasive," said Mukherjea.

Q: What needs to be done to prevent another Satyam?

A: Tighter rules for accounting and corporate governance, including appointment of independent directors by selection committees, and greater oversight from regulatory and government authorities.

Noble Group also suggests separation of audit and consultancy functions at companies, and quicker publication of annual reports.

பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் முகமது அலி துரானி பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இஸ்லாமாபாத் : கசாப்பை பாகிஸ்தானியன் என்ற உண்மையை வெளியிட்டதால், அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் முகமது அலி துரானி பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இதற்கான உத்தரவை, பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராஸா கிலானி நேற்றிரவு பிறப்பித்த்தார்.

இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், " "முக்கிய பிரச்சினைகள் பற்றி பேசும் போது, பிரதமரை கலந்து பேசாமல் கருத்துக்களை தெரிவிக்க கூடாது. இந்த நடைமுறையை மீறியதற்காக துரானி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மும்பை தாக்குதல் நடத்திய கசாப் பாகிஸ்தானியன் என்ற நாட்டின் ரகசியத்தை வெளியிட்டதன் காரணமாகவே துரானி நீக்கப்பட்டார் என்று பாகிஸ்தானின் ஜியோ நியூஸ் சேனல் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக, மும்பையில் தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவனான கசாப் பாகிஸ்தானைச் சேர்ந்தவன் என்று அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் முகமது அலி துரானி கூறியதை செய்தி சேனல்கள் வெளியிட்டன.

அதன்பிறகே, "ஆம்... கசாப் எங்கள் நாட்டைச் சேர்ந்தவனே. இதுபற்றி தீவிரமாக விசாரணை நடத்தப்படுகிறது," என்று பாகிஸ்தான் தகவல்துறை அமைச்சர் ஷெர்ரி ரஹ்மான் ஒப்புக்கொண்டார்.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் முகமது சாதிக்கும் இந்தத் தகவலை செய்தியாளர்களிடம் உறுதி செய்தார்.

மும்பையில் கடந்த நவம்பர் 26-ம் தேதி அத்துமீறி நுழைந்து கொலை வெறித் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 160-க்கும் மேற்பட்டோரைக் கொன்றனர்.

இந்த பயங்கரவாதிகளில் கசாப் மட்டுமே உயிருடன் பிடிபட்டான். விசாரணையில் கசாப் தான் ஒரு பாகிஸ்தானை சேர்ந்தவன் என்பதை ஒப்புக் கொண்டான். தனக்கு சட்ட உதவி அளிக்கக் கோரி பாகிஸ்தான் அரசுக்கு கடிதமும் அனுப்பினான். அஜ்மல் எனது மகன்தான் என்று பரித்கோட்டில் உள்ள அவனது பெற்றோரும் ஒப்புக்கொண்டிருந்தனர்.

ஆனால், பாகிஸ்தான் அரசு மட்டும் கசாப் தமது நாட்டைச் சேர்ந்தவன் அல்ல என்று உலக நாடுகளை ஏமாற்றி வந்தது.

தற்போது, துரானி உண்மையை வெளியிட்ட பிறகு வேறு வழியின்றி பாகிஸ்தான் ஒப்புக்கொண்டது.

ஆனால், பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகரை நீக்கி விட்டு தாம் முகமூடியை ஒருபோதும் களையப் போவதில்லை என்று மீண்டும் நிரூபித்துள்ளது.