Saturday, May 21, 2011

கவிழக் காரணம் கருணாநிதியே!

கருணாநிதி கவிழப்போகிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். தலை குப்புறக் கவிழ்வார் என்பதை ஜெயலலிதா உட்பட யாருமே எதிர்பார்க்கவில்லை!

எதிர்க் கட்சி என்ற பிரதான பாத்திரத்தைக்கூட இழந்து, மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டு இருக்கிறது தி.மு.க. எந்த எதிர் பார்ப்புகளும் அற்ற லட்சக்கணக்கான தொண்டர்களையும்... மாநிலத்தை ஆளும் மகத்தான பொறுப்பினையும் அண்ணா தூக்கிக் கொடுத்துவிட்டுப் போனார். மே 13-ம் தேதி தமிழக சட்டசபைக்கான முடிவுகள் வரும்போது, அறிவாலயத்து வாசலில் நின்ற அண்ணா, வெறும் கட்டாந்தரையைத்தான் பார்க்க முடிந்தது. ராணுவத்தின் துப்பாக்கி மிரட்டல்களுக்கு மத்தியில் - எமர்ஜென்ஸி நேரத்தில் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டபோதுகூட கூடினான் தொண்டன். ஆனால், மே 13 அவனே தலைமையையும் தலைமைக் கழகத்தையும் புறக்கணித்தான். அறிவாலய வளாகத்துக்கு உள்ளேயே நின்று சிலர், கருணாநிதியின் மகள் கனிமொழியையும் ஆ.ராசாவையும் விமர்சித்தனர்! அறிவாலயத்துக்கே வர முடியாமல் கோபாலபுரத்தில் முடங்கிப்போய் இருந்தார் கருணாநிதி. ''எனக்கு நல்ல ஓய்வு கொடுத்து இருக்கிறார்கள்!'' - இந்த ஒற்றை வரியை மட்டுமே கருணாநிதியால் உச்சரிக்க முடிந்தது. இந்தத் தோல்வியை அவர் முன் கூட்டியே உணர்ந்து இருப்பார். உணராத வராக இருந்தால், இத்தனை ஆண்டு அரசியல் வாழ்க்கையே அர்த்தமற்றதாகி இருக்கும். இளமைக் காலம் முதலே கருணா நிதியைப் பார்த்து வரும் பேராசிரியர் அன்பழகன் வந்தார், ''என்ன பேராசிரியரே! சந்தேகமா இருக்குன்னு நான் சொன்னேன்... பார்த்தீங்கள்ல... அதுதான் நடந்திருக்கு!'' என்று கருணாநிதி சொன்னார். இத்தனை ஆண்டுகளாகப் பேசாத அன்பழகன், அன்றும் பேசவில்லை. தொழிற்சங்கத் தலைவர் செ.குப்புசாமி உள்பட, பலரும் வாய்விட்டுக் கதறி அழுதனர். கருணாநிதியும் மனசுக்குள் அழுதிருப்பார். இந்தத் தோல்வி முழுக்க முழுக்க அவரால்தான் வந்தது!

எல்லா மனிதனுக்கும் முதலில் இருக்க வேண்டியது குற்ற உணர்ச்சி! தான் செய்யும் தவறுகளை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளத் தேவை இல்லை. தன் மனதளவிலாவது ஒப்புக்கொள்ள வேண்டுவதுதான் குற்ற உணர்ச்சி. கடந்த ஐந்து ஆண்டுகளாக கருணாநிதி, தவறு களைப் பகிரங்கமாகச் செய்தார்.

அதைக் குற்ற உணர்வு இல்லாமல் நியாயப்படுத்தினார். துளி வருத்தமும் அவரது வார்த்தைகளில் இல்லை. விமர்சனங்கள் குறித்துக் கவலையே படவில்லை. மன்னராட்சிகளில்கூட லேசான கிண்டலால் உணர்த்த 'கோமாளிகள்’ இருந்தார்கள். ஆனால், இன்று மந்திரிகளே... தந்திரிகளாக மாறி கருணாநிதியின் ஜாடிக்கு ஏற்ற மூடிகளாக உருமாறிப்போனார்கள். இவர்கள் அனைவருமே வெளி யதார்த்தங்களை மறைத்து, திரை மறைவில் தி.மு.க-வைக் கொண்டுபோய் நிறுத்தினார்கள். கட்சியில், ஆட்சியில், கருணாநிதி வீட்டில் நடந்தது எதுவுமே தொண்டனுக்குத் தெரியாது. 'எனக்கு எதுவும் தெரியாது’ என்று கருணாநிதியும் சொல்ல முடியாது.

விலைவாசி, மின்சாரம் இரண்டால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இங்கு எழுதி யாருக்கும் தெரிய வேண்டிய நிலை இல்லை. ஆனால், இவை இரண்டையும் ஒரு பிரச்னையாகவே கருணாநிதி நினைக்கவில்லை என்பதுதான் வேதனைக்கு உரியது. கோடிகளைக் கொட்டி கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்துவதற்காக... ஐந்து நாள் கூத்துக்காக... 1008 கலந்துரையாடல் கூட்டங்களை நடத்திய கருணாநிதி, 'விலைவாசி இப்படி அநியாயமாகப் போய்க்கொண்டு இருக்கிறதே... என்ன செய்யலாம்?’ என்று விவாதிக்கவே இல்லை. மின் தட்டுப்பாடு குறித்து, ஒரே ஒரு முறை விவாதித்ததாக நினைவு. ஒரு முதலமைச்சர் தீர்க்க வேண்டிய பிரச்னையாக இவை இரண்டையும் கருணாநிதி நினைக்கவே இல்லை. கேட்டால், ஆந்திரா, கர்நாடகா விலைவாசியை வாசிப்பார். மேற்கு வங்கத்தில் மின்சாரம் இல்லை, எல்லோருமே இருட்டில்தான் இருக்கிறார்கள் என்பார். விலைவாசியைக் குறைக்க முடியவில்லையே, தடை இல்லாமல் மின்சாரம் தர முடியவில்லையே என்ற ஆதங்கம் அவரது குரலில் இருந்து வெளிப்படவே இல்லை. 'இதெல்லாம் என் வேலை இல்லை’ என்று முகத்தைத் திருப்பிக்கொண்டு, பாராட்டு விழாக்களில் திளைத்தார்.

கருணாநிதி, முதல்வர். அவரது மகன் ஸ்டாலின், துணை முதல்வர். மூத்த மகன் அழகிரி, மத்திய அமைச்சர். பேரன் தயாநிதி மாறனும் மத்திய அமைச்சர். மகள் கனிமொழி, மாநிலங்களவை உறுப்பினர். பேத்தி கயல்விழி, கட்சிப் பொறுப்பில் இருக்கிறார். பேத்தி எழிலரசி, செம்மொழி மாநாட்டில் வீணை வாசிக்கிறார். திரைத் துறையில் சன் டி.வி-யின் சாம்ராஜ்யத்தைத் தொடர்ந்து, அழகிரி மகனும் ஸ்டாலின் மகனும் வந்தார்கள். அக்காள் மகன் அமிர்தம் கலைஞர் டி.வி. மூலமாக வருகிறார். தேர்தல் தொகுதிப் பொறுப்பாளர்களாக மகன் தமிழரசுவும், மகள் செல்வியும் என கருணாநிதியின் குடும்பம் அரசியலில், தொழில் துறையில், சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் கதையை எத்தனையோ முறை எழுதி ஆகிவிட்டது.

கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கருணாநிதி குடும்பத்தினர் மேடையில் அமர்ந்தபடி பார்க்க... தமிழறிஞர்கள் உட்கார இடம் இல்லாமல் நின்றபடி தவிக்கும் அளவுக்குக் குடும்ப ஆதிக்கம் தூள் கிளப்பியது. இது எங்கே வந்து நிற்கிறது தெரியுமா... கருணாநிதியின் அக்கா மகன் சொர்ணத்தின் பேத்தி மதுரம், 12-ம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்றதைப் பாராட்டிப் புகழும் படம் 'முரசொலி’யில் கால் பக்கத்தில் பிரசுரமாகி இருக்கிறது. தேர்தல் முடிவுகள் வருவதற்கு முந்தைய நாள் இது. அதாவது, குடும்பத்தின் குதூகலத்துக்காகவே கருணாநிதி இயங்கலாம். நல்ல குடும்பத் தலைவரின் பொறுப்பும் அதுதான். ஆனால் கட்சியை, ஆட்சியை, முரசொலியையும் பலியிடுகிறோமே என்ற குற்ற உணர்ச்சி கருணாநிதிக்கு இல்லை. குடும்ப ஆதிக்கம் குறித்துக் குறை சொல்லும்போது எல்லாம், 'என்ன செய்ய... எனக்குக் குடும்பம் இருக்கிறதே!’ என்றார் கருணாநிதி. 'கத்தி இருக்கிறது வெட்டுகிறேன், துப்பாக்கி இருக்கிறது சுடுவேன்’ என்று யாராவது சொன்னால் ஏற்க முடியுமா?

தனக்கு இயற்கையாக அமைந்த வாதத் திறமையையும் தமிழ் வளத்தையும், சுயநலனுக்காக மட்டுமே என்று சுருக்கினார். இது தொடர்பான கருணாநிதியின் வாக்குமூலங்கள்... புகைப்படங்கள்... விழாக்கள் அனைத்துமே தமிழக மக்கள் மத்தியில் வெறுப்பை விதைத்தன.

இந்தச் சூழ்நிலையில்தான் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு பூதாகாரமாகக் கிளம்பியது. 'ஆ.ராசா குற்றமற்றவர்... அவர் ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடம் இல்லை’ என்ற கருணாநிதியே... அவரை ராஜினாமா செய்யச் சொன்னார். ராசா கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்ட பிறகும், அவரை நியாயப்படுத்தி தீர்மானம் போட்டார். காமன் வெல்த் ஊழலில் சிக்கிய கல்மாடியை, 'போஃபர்ஸ் கறை படிந்த காங்கிரஸ்’கூட கட்சியைவிட்டு நீக்கியது. ஆனால், ராசாவை கருணாநிதி நீக்கவும் இல்லை. கொள்கை பரப்புச் செயலாளர் பதவியைப் பறிக்கவும் இல்லை. அரசியல் புரோக்கர் நீரா ராடியாவுடன், தனது துணைவி ராஜாத்தியும் மகள் கனிமொழியும் பேசியது குறித்தும் கருணாநிதி கவலைப்படவில்லை. அவரது பெயரால் உருவாக்கப்பட்ட டி.வி-யே ஸ்பெக்ட்ரம் ஊழலின் லஞ்சப் பணத்தால் வந்தது என்று சி.பி.ஐ. சொன்னபோதும் வாய் திறக்கவில்லை. மனைவி தயாளு அம்மாளை அறிவாலயத்துக்கு உள்ளேயே வந்து சி.பி.ஐ. விசாரிக்கிறது. மகள் கனிமொழி, 'கஸ்டடி குற்றவாளி’யாக நித்தமும் பாட்டியாலா நீதிமன்றத்தில் நின்றுகொண்டு இருக்கிறார்.

இது எதுபற்றியும் கருணாநிதிக்குக் குற்ற உணர்ச்சி வரவே இல்லை. 'சி.பி.ஐ. ரெய்டு நடத்துகிறதே!’ என்று கேட்டால், 'இது வழக்கமானதுதானே!’ என்கிறார் கருணாநிதி. தமிழ்நாட்டில் எல்லார் வீட்டுக்கும் பேப்பர் பையன் வந்து போவதுபோல், சி.பி.ஐ. வந்து போகிறதா என்ன? அறிவாலயத்தின் மேல் தளத்தில் சி.பி.ஐ. இருக்க... தரைத் தளத்தில் கருணாநிதி - காங்கிரஸுடன் மன சஞ்சலம் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இருக்க முடியுமானால், அது அதிர்ச்சிக்கு உரியது!

இவை அனைத்துக்கும் மேலாக, ஈழத் தமிழர் பிரச்னை! 2008 நவம்பர் மாதம் சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடத்தி, தங்கள் கட்சி எம்.பி-க்கள் பதவி விலகப்போகிறார்கள் என்று அறிவித்தது முதல்... இன்றைக்கு வரை கருணாநிதி நித்தமும் நிகழ்த்திக் காட்டிய நாடகங்களின் பின்னணியில் லட்சக்கணக்கான மனித உயிர்கள் பலியானதுதான் மிச்சம். தன்னுடைய அரசியல் அபிலாஷைகளுக்காக... தனக்கு 'தமிழினத் தலைவர்’ என்ற அங்கீகாரம் எதனால் கிடைத்ததோ, அந்தக் கொள்கையையே காவு கொடுக்க கருணாநிதி தயாரானார். கொத்துக் கொத்தாகச் செத்தது குறைந்து... தனித் தனியாகப் பலரும் மரணித்தபோது, 'மழைவிட்டாலும் தூவானம் விடாது அல்லவா’ என்று கருணாநிதி சொன்னதைப்போன்ற கல் நெஞ்ச வாக்குமூலம் உலகச் சர்வாதிகாரிகளின் வரிசையில் பொறிக்கத்தக்கது.

போர்க் குற்றவாளியாக ஐ.நா. இன்று சொல்லும் ராஜபக்ஷேவைக் கோபப்படுத்துவது மாதிரி எதுவும் பேசக் கூடாது என்று கேட்டுக்கொண்டார் கருணாநிதி. அரசியல் அதிகாரப் பதவி ஒரு மனிதரை இப்படி எல்லாமா மாற்றிவிடும் என்று சந்தேகப்படத்தக்க வார்த்தைகள் இவை.

இவை அனைத்தும் சேர்ந்துதான் தமிழக வாக்காளனின் மனசாட்சியைத் தட்டி எழுப்பி இருக்கிறது.

'உதவாது இனி தாமதம்’ என்று வாக்கு இயந்திரத்தில் அழுந்தக் குத்தி இருக்கிறார்கள்.

தனி நாடு கோரிக்கையைக் கைவிடும்போது, 'வேட்டுக்களால் தீர்மானிக்க முடியாததை, ஓட்டுக்களால் செய்ய முடியும்’ என்றார் அண்ணா. பாதை தவறிய தம்பியைப் பதம் பார்த்து இருக்கிறது ஓட்டு.

பொதுவாகவே, வீழ்ந்துபட்டவர்களை விமர்சிப்பது தவறானதுதான். ஆனால், வீழ்த்தப்பட்ட காரணங்களை உணர்ந்து சொல்வது தேவையானது. இது கருணாநிதிக்காக மட்டும் அல்ல... ஜெயலலிதாவுக்கும் சேர்த்து எழுதப்பட்ட கட்டுரை!

உளவாளிகளின் மர்ம உலகம் ..2

அத்தியாயம் 2
மொசாத் திட்டமிடத் தொடங்குகிறது!

“மொசாத்தின் நடவடிக்கைகளில் அரசியல் குறுக்கிடாமல் எங்களை எங்களது போக்கில் விடுங்கள். மொசாத்தால், அதிரடியாக ஒரு ஒப்பரேஷனை நிச்சயம் செய்ய முடியும். கடத்தப்பட்ட விமானத்திலிருந்த பணயக் கைதிகளையும் மீட்க முடியும்.” மொசாத்தின் தலைவர் இவ்வாறு கூறிவிட, இறுதியில் இஸ்ரேலியப் பிரதமர் அந்த உறுதிமொழியைக் கொடுத்தார்.

“இந்த அதிரடி நடவடிக்கையில் எந்த அரசியல் தலையீடும் இருக்காது. மொசாத் சுதந்திரமாகச் செயற்படலாம்”
மொசாத் களத்தில் இறங்கியது!

இதில் மொசாத்துக்கு இருந்த மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், கடத்தப்பட்ட விமானம் தரையிறங்கியிருக்கும் இடம்!

அது உகண்டா.

அதில் என்ன சிக்கல்? 1972ம் ஆண்டே உகண்டா அரசு இஸ்ரேலுடன் இருந்த ராஜாங்க உறவுகளைத் துண்டித்து விட்டிருந்தது. அப்போதே உகண்டாவிலிருந்த இயங்கிக் கொண்டிருந்த இஸ்ரேலியத் தூதரகம் மூடப்பட்டு, அங்கிருந்த அனைவரும் உகண்டாவை விட்டு வெளியே அனுப்பப்பட்டிருந்தார்கள்.

அதற்குப் பின்னர் எந்தவொரு இஸ்ரேலியரும் உகண்டாவுக்குள் நுழைவது என்பது நினைத்துக் கூடப் பார்க்கமுடியாத காரியமாகப் போயிருந்தது.

எனவே இந்த விமானம் உகண்டாவின் என்டபே விமான நிலையத்தில் இறக்கப்பட்டபோது, உகண்டா நாட்டிலேயே மொசாத்தின் ஏஜன்ட்கள் யாரும் இருக்கவில்லை. நிலைமை கொஞ்சம் கஷ்டமானதுதான் என்பது மொசாத்தின் தலைவருக்குப் புரிந்தது.

இது ஒரு கடினமான, அதே நேரத்தில் பல உயிர்களுடன் சம்மந்தப்பட்ட ஒப்பரேஷன். இதைச் சரியாகவும் துல்லியமாகவும் நடத்த வேண்டுமானால், அதற்கு இந்த ஒப்பரேஷனை மொசாத்தில் பணிபுரியும் மிகத் திறமைசாலியான ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மொசாத்தின் தலைவர் யோசித்தபோது, அவரது நினைவில் முதலில் தோன்றிய பெயர் டேவிட் கிம்சே!

மொசாத்தின் தலைவர் டேவிட் கிம்சேயை உடனடியாக அழைத்து இந்த ஒப்பரேஷன் பொறுப்பைக் கொடுத்தார். இந்த ஒப்பரேஷனை டேவிட் விரும்பிய வகையில் மேற்கொள்ளப் பூரண சுதந்திரமும் அவருக்குக் கொடுக்கப்பட்டது.

டேவிட் யோசித்தார்.

ஒப்பரேஷனுக்காக மொசாத்தின் உளவாளிகளை உகண்டாவுக்கு உள்ளே அனுப்ப முடியாது. உகண்டாவுக்கு அருகில் உள்ள ஏதாவது நாடு ஒன்றில் வைத்துத்தான் இந்த ஒப்பரேஷன் செயற்பட வேண்டும். அதற்கு அந்த நாடு அல்லது அந்த நாட்டின் உளவுத்துறை சம்மதிக்க வேண்டும். மொசாத்துடன் ஒத்துழைக்க வேண்டும்.
அருகில் உள்ள எந்த நாடு கைகொடுக்கும்?

உகண்டாவுக்கு அருகில் உள்ள ஒவ்வொரு நாடு பற்றியும் டேவிட்டால் அலசப்பட்டது. ஒவ்வொரு நாட்டிலும் சாதகமான அம்சங்கள் என்ன? பாதகமான அம்சங்கள் என்ன? அந்த நாட்டிலிருந்து உகண்டா எவ்வளவு தூரம்? அந்த நாட்டிலிருந்து உகண்டாவுக்குள் நுழைவதென்றால் எப்படி நுழையலாம் என்று பல விடயங்கள் கவனத்தில் எடுக்கப்பட்டன.

இறுதியில் டேவிட் தேர்ந்தெடுத்த நாடு கென்யா.

இந்தத் தகவல் மொசாத்தின் தலைவருக்குத் தெரிவிக்கப்பட்டது. மேல்மட்ட அரசியல் தொடர்புகள் மூலம் கென்யாவின் உளவுத்துறையினரின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொடுக்குமாறு அவரைக் கோரினார் டேவிட்.

மொசாத்தின் தலைவருக்கு கென்யாவின் உளவுத்துறைத் தலைமையுடன் நேரடிப் பரிச்சயம் இருந்தது. மொசாத்தின் தலைமை உடனடியாக கென்யா நாட்டு உளவுத்துறையின் தலைவரைத் தொடர்பு கொள்ள, கென்ய நாட்டு உளவுத்துறை மொசாத்துக்கு உதவுவதற்கு சம்மதித்தது.

அடுத்த கட்டமாக, மொசாத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட திறமைசாலிகளான ஆறு உளவாளிகள், கென்யத் தலைநகரான நைரோபியில் போய் இறங்கினார்கள்.

விமானத்தில் தீவிரவாத அமைப்பினரால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பணயக் கைதிகளை விடுவிக்கும் அதிரடி ஒப்பரேஷன் ஒன்றை நடாத்த மொசாத் தனது திறமைசாலிகளான 6 உளவாளிகளை அனுப்பி வைக்கிறது என்ற விபரம் கென்யாவின் உளவுத்துறைக்குத் தெரியப்படுத்தப்பட்டது. அவர்களுக்கு கென்யாவில் தேவையானவற்றைச் செய்து கொடுக்குமாறு ஒரு கோரிக்கையும் இஸ்ரேலில் இருந்து கென்யாவுக்கு ராஜதந்திர மட்டத்தில் போய்ச் சேர்ந்தது.
உளவாளிகள் தங்கவைக்கப்பட்ட வீடு

ஆறு மொசாத் உளவாளிகளும் கென்யாவின் நைரோபி நகரை அடைந்தவுடன் அவர்களை சேஃப் ஹவுஸ் என உளவு வட்டாரங்களில் குறிப்பிடப்படும் பாதுகாப்பான வீடுகளில் ஒன்றில் தங்கவைத்தார்கள் கென்ய நாட்டு உளவுத்துறை அதிகாரிகள்.

பொதுவாகவே எல்லா நாட்டு உளவுத்துறைகளும் இப்படியான சேஃப் ஹவுஸ்களை வைத்து இயக்குவது வழக்கம். வெளிப்படையாக மக்கள் குடியிருப்புகள் போலவே தோற்றமளிக்கும் இந்த வீடுகள் உளவுத்துறையினரின் பிரத்தியேக பாவனைகளுக்கானவை.

மொசாத்தின் ஸ்பை மாஸ்டர் என்று அழைக்கப்பட்ட டேவிட் கிம்சே. மொசாத்தின் சாதனை படைத்த பல ஒப்பரேஷன்களின் திட்டமிடல் இவருடையதுதான்!

நைரோபியில் இப்படியான சுமார் 20 வீடுகளை கென்யாவின் உளவுத்துறை வைத்திருந்தது. மக்கள் குடியிருப்புக்களில் கலந்திருந்த இந்த வீடுகள் தகவல் தொடர்புக்கான பாதுகாப்பான தொலைபேசி இணைப்புக்ளைக் கொண்ட வீடுகள். ஆனால், அந்த தொலைபேசி இணைப்புக்கள் கென்யாவின் தொலைத் தொடர்பு இலாகாவினால் நிர்வகிக்கப்படும் இணைப்புக்கள்.

சுருக்கமாகச் சொன்னால், அங்கிருந்து மேற்கொள்ளப்படும் எந்தத் தொலைத் தொடர்பும் கென்ய உளவுத்துறை அறியாமல் வெளியே செல்ல முடியாது!

முதலில் அனுப்பப்பட்ட ஆறு மொசாத் உளவாளிகளில் இரண்டுபேர் உளவாளிகள் மாத்திரமல்ல, அவர்கள் டெக்னீஷின்கள்கூட. அவர்கள் இதுபோன்ற ரகசிய ஒப்பரேஷன்கள் வெளிநாடுகளில் மொசாத்தால் நடாத்தப்படும்போது வெளிநாடு ஒன்றில் பாதுகாப்பான தொலைத்தொடர்பு சனல் ஒன்றை அமைப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்கள்.

அவர்கள் மூலமாக, நைரோபியில் இருந்த வீட்டுக்கும், இஸ்ரேலின் டெல்அவிவ் நகரத்துக்கும் நேரடியாக சட்டலைட் தொலைத் தொடர்பு இணைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டது.

இந்த இணைப்பு கென்யாவின் தொலைத்தொடர்பு இலாகாவுக்கு ஊடாகச் செல்லாத இணைப்பு என்பதலால், இவர்களது உரையாடல்களை கென்யாவில் யாருமே கேட்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது. அதன்பின் இந்தப் பாதுகாப்பான வீட்டிலிருந்த உளவாளிகளுக்கு உத்தரவுகள் மொசாத்தின் தலைமையகத்தில் இருந்து வரத்தொடங்கின.

அதிரடி ஒப்பரேஷனுக்காக இப்படி உகண்டாவுக்கு வெளியே கென்யாவில் முன்னேற்பாடுகள் ஒருபுறமாக நடைபெற்றுக் கொண்டிருக்க, மறுபுறத்தில் உகண்டாவில் என்ன நடந்துகொண்டிருந்தது?
என்டபே விமான நிலையத்தில்…

எயார் பிரான்ஸ் விமானத்தில் பயணம் செய்து கடத்தப்பட்ட இஸ்ரேலியப் பயணிகள், கடத்தல்காரர்களால் உகண்டாவின் என்டபே விமான நிலையத்தில் கடும் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு இருபத்து நான்கு மணிநேரமும் காவல் இருந்தது.

அதிரடித் தாக்குதல் நடாத்தப்படத் திட்டமிடப்படும் இந்த என்டபே விமான நிலையம் உகண்டாவின் தலைநகரில் இருந்தாலும், அளவில் சிறியது. அதனூடாக நடைபெறும் விமானப் போக்குவரத்தும் மிக மிகக் குறைவு. எனவே பயணிகள் நடமாட்டம் அந்த விமான நிலையக் கட்டடத்தில் பெரிதாக இருப்பதில்லை.

இதனால் விமான நிலையத்தின் ஒரு பகுதியை முழுமையாகவே கடத்தல்காரர்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் எடுத்து, பணயக்கைதிகளை அங்கே வைத்திருந்தார்கள்.

உகண்டா நாட்டின் அன்றைய தலைவர் இடி அமீன் அரசியல் ரீதியாக இஸ்ரேலுக்கு எதிரான நிலை எடுத்திருந்த காலப்பகுதி அது. இதனால், கடத்தல்காரர்களுக்கு என்டபே விமான நிலையத்தில் சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டிருந்தன.

வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்பு ஒன்று மற்றொரு நாட்டு விமானத்தைப் பயணிகளுடன் கடத்திக் கொண்டு வந்து மூன்றாவது நாடு ஒன்றில் வைத்திருக்கின்றது. இப்படியான நிலையில் விமானம் இறக்கப்பட்டிருக்கும் மூன்றாவது நாடு வழமையாகக் கடத்தல்காரர்கள்மீது ஒரு கண் வைத்திருக்கும். அவர்கள்மீது தாக்குதல் நடாத்த முடியுமா? பணயக்கைதிகளைக் காப்பாற்ற முடியுமா? என்றெல்லாம் ஆராய்ந்து கொண்டிருக்கும்.

ஆனால் உகண்டாவில் இது தலைககீழாக இருந்தது.

கடத்தல்காரர்களும், உகண்டாவின் பாதுகாப்புப் படை அதிகாரிகளும் ஒருவருக்கொருவர் நெருக்கமாக நடந்து கொண்டார்கள். அதற்கு ஒருபடி மேலேபோய், கடத்தல்காரர்கள் ஓய்வு எடுக்கும்போது உகண்டாவின் பாதுகாப்புப்படை அதிகாரிகளால் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்ட லோக்கல் ஆட்களே பணயக் கைதிகளை காவல்காத்தார்கள்.

உகண்டா அரசே கிட்டத்தட்ட கடத்தல்காரர்களின் பக்கத்தில் இருந்து செயற்படுவது போன்ற தோற்றம் ஏற்பட்டிருந்தது.

அங்கிருந்த யாருக்கும், பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியப் பணயக்கைதிகள் உட்பட, இவர்களை விடுவிக்க மொசாத் அதிரடி நடவடிக்கை ஒன்றைத் திட்டமிடுகின்றது என்ற விஷயம் தெரியாது! இதுதான் அங்கிருந்த நிலை.

உகண்டாவில் நிலைமை அப்படியிருக்க இஸ்ரேலில் மொசாத்தின் தலைமைச் செயலகத்தில் என்ன நடைபெற்றுக்கொண்டிருந்தது?
மொசாத்தின் திட்டம்

மொசாத்தின் அதிரடி மீட்பு நடவடிக்கையை திட்டமிட்டுக் கொண்டிருந்த டேவிட் கிம்சே ஒரு விஷயத்தில் உறுதியாக இருந்தார். என்னதான் கென்யா நாட்டின் முழுமையான ஒத்துழைப்பு இந்த விஷயத்தில் கிடைத்திருந்தாலும், அதிரடி மீட்பு நடவடிக்கைகளை முற்று முழுதாக கென்யா நாட்டிலிருந்து நடத்துவதில்லை என்பதில் உறுதியாக இருந்தார்.

இதற்கும் ஒரு காரணம் இருந்தது.

இரு நாடுகளுக்கிடையிலான ராஜாங்க உறவு என்ற ரீதியில் கென்யா இஸ்ரேலுக்கு ஒத்துழைப்பு கொடுத்தாலும், உள்மனதில் அவர்களுக்கும் இஸ்ரேல்மீது கோபம் இருக்கலாம். அதுவும் தங்களுக்கு அருகிலுள்ள நாடு (உகண்டா) ஒன்றில் இஸ்ரேலிய உளவுத்துறை அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளப் போகின்றது என்பதை கென்யா எந்தளவுக்கு விரும்பும் என்று ஊகிப்பது கஷ்டம்.

யார் கண்டது, சில வேளைகளில் கவிழ்த்து விட்டாலும் விடலாம்.

இது பணயக் கைதிகளாக இருக்கும் இஸ்ரேலியர்களின் உயிர் சம்மந்தப்பட்ட விஷயம் என்பது மாத்திரமல்ல. இப்படியொரு ஒப்பரேஷன் தோல்வியில் முடிந்தால் அது இஸ்ரேலுக்கு ஏற்படக்கூடிய கடும் அவமானமாகவும் இருக்கும்.

இதனால் இந்த அதிரடித் தாக்குதல் மீட்பு எப்படி நடைபெறப்போகின்றது என்ற விபரங்கள் யாருக்கும் தெரியாமல் – (கென்யா உட்பட) – இருக்கவேண்டியது அவசியம் என்று டேவிட் கிம்சீ முடிவு செய்திருந்தார்.
கொமாண்டோக்களை அனுப்ப வேண்டும்!

ஆனால் சிக்கல் என்னவென்றால், பணயக் கைதிகள் வைக்கப்பட்டிருக்கும் இடம் இருப்பது ஆபிரிக்காக் கண்டத்தில். இந்த அதிரடித் தாக்குதலுக்காகக் கொமாண்டோக்களை இஸ்ரேலில் இருந்து விமானம் மூலமாகக் கொண்டுபோய் ஆபிரிக்காவில் இறக்க வேண்டும்.

இஸ்ரேலில் இருந்து அதிரடித் தாக்குதல் ஒன்றை நடாத்த கொமாண்டோக்களை விமானமூலம் கொண்டு சென்றாலும், உகண்டாவுக்கு அருகிலுள்ள ஏதாவது ஒரு நாட்டு விமான நிலையம் ஒன்றில் வைத்து எரிபொருள் நிரப்பப்படவேண்டும்.

அந்த நாட்களில் இஸ்ரேலில் இருந்து ஆபிரிக்கா சென்று, மீண்டும் இஸ்ரேலுக்கு திரும்பிவருமளவுக்கு எரிபொருளைக் கொண்டு செல்லக்கூடிய எந்தவொரு விமானமும் இஸ்ரேலிடம் இருந்ததில்லை. தற்போது இருப்பதுபோல விமானத்துக்கு வானில் வைத்து எரிபொருள் நிரப்பும் வசதிகளும் அப்போது இருக்கவில்லை.

இஸ்ரேலுக்கு ஆபிரிக்கக் கண்டத்தில் அந்த நாட்களில் இருந்த அரசியல் உறவுகள் காரணமாக இஸ்ரேலுக்கு அந்தப் பிராந்தியத்தில் உதவக்கூடிய நாடுகள் அதிகமில்லை.

வேறு வழியில்லாமல் இதற்கும் கென்யாவிடம்தான் போகவேண்டும் என்ற நிலை.
இஸ்ரேலிய தந்திரம்

இந்த இடத்தில் இஸ்ரேல் ஒரு சிறிய தந்திரம் செய்ய முயன்றது. ஏற்கனவே உளவுத்துறையான மொசாத் மூலமாக கென்யாவில் இந்த அதிரடி நடவடிக்கைக்காக சில முன்னேற்பாடுகள் நடந்து கொண்டிருக்க, அதற்கும் இதற்கும் சம்மந்தமில்லை… இது வெறும் சிவில் விமான விவகாரம் என்று காட்டி கென்யாவிடம் அனுமதி வாங்க முயன்றது இஸ்ரேல்.

இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு மூலம் கென்யாவின் வெளிவிவகார அலுவலகத்தில் தமது விமானம் ஒன்றுக்கு நைரோபி விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்ப வேண்டும் என்று கேட்பதாக முடிவு செய்யப்பட்டது. சும்மா விமானம் ஒன்றுக்கு எரிபொருள் நிரப்பவேண்டும் என்பதைத்தவிர, வேறு எந்த விபரமும் சொல்வதில்லை என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இப்படியான கோரிக்கை கென்யா நாட்டு வெளிவிவகார அமைச்சின் அலுவலகத்தில் வைக்கப்பட்டபோது, அவர்கள் எரிபொருள் நிரப்பப்படவேண்டிய குறிப்பிட்ட இந்த விமானம் பற்றிய மேலதிக விபரங்களை கேட்கத் தொடங்கினார்கள்.

என்ன வகை விமானம் அது? விமானத்தில் என்ன இருக்கிறது? விமானம் கென்யாவில் எரிபொருள் நிரப்பிக்கொண்டு எங்கே செல்லப் போகின்றது? இப்படியான பல கேள்விகள் வந்து விழுந்தன.

இதற்கெல்லாம் இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சிடம் பதில் இல்லை.

“இந்த விபரங்களைக் கூறினால்தான் எரிபொருள் நிரப்ப அனுமதிக்கமுடியும்” என்று கென்ய வெளிவிவகார அமைச்சுக் கூறிவிட, இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு மொசாத்தைத் தொடர்பு கொண்டு, அடுத்து என்ன செய்வது என்று கேட்டது.

விஷயம் என்னவென்றால், தீவிரவாதிகள் விமானக் கடத்தல் ஒன்றின்மூலம் இஸ்ரேலியப் பணயக்கைதிகளை உகண்டாவில் கொண்டுபோய் வைத்திருக்கிறார்கள் என்ற செய்திதான் அப்போது உலகெங்கும் பரபரப்பாக அடிபட்டுக் கொண்டிருந்தது. இது கென்யாவுக்கும் நன்றாகவே தெரியும்.

அத்துடன் இஸ்ரேலிய உளவுத்துறை அதற்குள் அதிரடியாக ஏதோ செய்யப்போகின்றது என்ற விபரமும், கென்யாவுக்கு மேலதிகமாகத் தெரியும்.

அப்படியான சூழ்நிலையில் இஸ்ரேலிய விமானம் ஒன்று கென்யாவில் எரிபொருள் நிரப்ப அனுமதி கேட்கின்றதென்றால், அது நிச்சயம் இந்தப் பணயக் கைதிகளுடன் சம்மந்தமாக ஏதோ ரகசியக் ஒரு காரியம் என்பதை கென்யா ஊகித்திருந்தது. இதனால் என்ன விஷயம் என்று சரியாகத் தெரியாமல் தமது நாட்டு விமான நிலையத்தை இதற்கு உபயோகிப்பதற்கு விட கென்யா விரும்பவில்லை.

டேவிட் கிம்சீ மொசாத்தின் தலைவருடன் கலந்து ஆலோசித்தார்.

முடிவில் மொசாத்தின் மற்றொரு திட்டம் உருவாகியது.
(அடுத்த வாரம் தொடரும்)

Tuesday, May 17, 2011

உளவாளிகளின் மர்ம உலகம்

உளவாளிகளின் மர்ம உலகம்
அத்தியாயம் 1
எயார் பிரான்ஸ் விமானம் கடத்தல்

ஜூன் மாதம் 27ம் திகதி 1976ம் ஆண்டு. பாரிஸ் விமான நிலையம். சர்வதேசப் புறப்பாடுகள் பகுதி.

எயார் பிரான்ஸின் செக்இன் கவுண்டர்களில் வரிசைவரிசையாக பயணிகள் நின்றிருந்தார்கள். இஸ்ரேலின் டெல்-அவிவ் நகருக்குச் செல்லும் விமானத்துக்கான பயணிகளை செக்இன் செய்துகொண்டிருந்தார்கள் எயார் பிரான்ஸின் விமான நிலைய ஊழியர்கள்.

வழமையாக எந்தவொரு விமானமும் எந்த நாட்டுக்குப் போகின்றது என்பதைப் பொறுத்து அந்த நாட்டவர்கள்தான் பயணிகளின் எண்ணிக்கையில் பெரிய சதவிகிதம் இருப்பார்கள்.

அது போலவே இந்த விமானத்தில் பயணிக்க வந்திருந்த பயணிகளில் மிகப்பெரிய சதவிகிதமானவர்கள் இஸ்ரேலியர்கள். அதற்கு அடுத்தபடியாக கிரேக்க நாட்டவர்களும், பிரென்சுக்காரர்களும் இருந்தார்கள். இவர்களைத் தவிர மிக சொற்ப எண்ணிக்கையில் வேறு நாட்டவர்கள்.

எயார் பிரான்ஸ் விமானப் பிரான்ஸில் இருந்து கிளம்புவதால் அதில் பிரென்ச்காரர்கள் இருப்பது சரி. ஆனால் கிரேக்க நாட்டவர்கள் பிரான்சிலிருந்து இஸ்ரேலுக்குச் செல்லவுள்ள இந்த விமானத்தில் ஏன் அதிகமாக தென்படுகிறார்கள்?
விமானம் முதலில் தரையிறங்கப்போவது ஏதென்ஸ்!

அந்த நாளைய பாரிஸ் விமான நிலையம் இதுதான். தற்போது இதன் தோற்றமே தலைகீழாக மாறிவிட்டது!

காரணம், எயார் பிரான்ஸின் அந்த குறிப்பிட்ட விமானம் பாரிஸிலிருந்து நேரே இஸ்ரேல் செல்லும் விமானமல்ல. பாரிஸிலிருந்து முதலில் கிரேக்க நகரான ஏதன்ஸ் சென்று, அங்கு ஒரு மணிநேரம் நின்று பயணிகளை இறக்கி ஏற்றிக் கொண்டுதான் டெல் அவிவ் செல்லும் ரூட் அது. அதனால்தான் அதில் கிரேக்க நாட்டவர்களும் அதிகளவில் பயணிக்க வந்திருந்தனர்.

இந்த விமான ரூட்டிலுள்ள விசித்திரமான அம்சம் என்ன தெரியுமா?

விமானம் புறப்படும் பாரிஸ் விமான நிலையமும் பாதுகாப்புக் கெடுபிடி அதிகமுள்ள விமான நிலையம். விமானம் போய்ச் சேரும் இஸ்ரேலின் டெல்அவிவ் விமான நிலையத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். உலகிலேயே மிக அதிக பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் இருக்கும் விமான நிலையம் அது. இந்த இரண்டுக்கும் இடையே விமானம் இயங்கி ஏறப்போகும் ஏதன்ஸ் விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மகா மோசம்!

இப்படி ஏதென்ஸ் வழியாகச் செல்வதால் அன்றைய தினம் குறிப்பிட்ட அந்த விமானத்தைக் கடத்துவதற்கு கடத்தல்கார்கள் குறிவைத்திருந்தார்கள்.
எதையும் கடத்திக்கொண்டு போக அட்டகாசமான விமான நிலையம்!

டிப்பாச்சர் லவுன்சில் பயணிகள் விமானத்துக்குள் ஏறுமுன்...

அந்த நாட்களில் ஐரோப்பிய விமான நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் மோசமாக இருந்த விமானநிலையங்களின் முக்கியமானது, ஏதென்ஸ் விமான நிலையம். (இன்றுகூட நிலைமை அதுதான்) பாதுகாப்புச் சோதனைகளுக்குள் சிக்காமல் எந்தவொரு பொருளையும் விமானம்வரை கடத்திச் செல்லக்கூடிய அளவில் இருந்தது அங்கு நிலைமை.

இந்த எயார் பிரான்ஸ் விமானத்தைக் கடத்தத் திட்டமிட்டவர்கள் பாரிஸிலிருந்து விமானம் கிளம்பியபோதே பயணிகளாக அதற்குள் ஏறிவிட்டிருந்தார்கள். ஆனால் ஆயுதங்கள் எதுவுமில்லை. பாரிஸ் விமான நிலைய பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தாண்டி ஆயுதங்களை ரிஸ்க் எடுத்து கொண்டுசெல்ல அவர்கள் விரும்பியிருக்கவில்லை.

பயணிகளை ஏற்றிக்கொண்டு விமானம் பாரிஸ் விமான நிலையத்திலிருந்து கிளம்பியது. எயார் பிரான்சின் அந்த விமானம் எயார்பஸ் A300 ரக விமானம். ரெஜிஸ்ட்ரேஷன் F-BVGG. ரூட் இலக்கம் 139.

விமானம் முதலாவதாகத் தரையிறங்கிய ஏதென்ஸ் விமான நிலையம். இங்கு கிரேக்க தேசிய விமான நிறுவனம் ஒலிம்பிக் எயார்லைன்ஸின் விமானங்கள் அதிகம் நிற்பதைக் காணலாம்.

அதன் முதலாவது லான்டிங்காக ஏதென்ஸ் விமான நிலையத்திலும் இறங்கியது. ஏதென்ஸ் வரை பயணம் செய்த பயணிகள் விமானத்திலிருந்து இறங்கிக் கொண்டனர். டெல்அவிவ் செல்லும் பயணிகள் விமானத்துக்கு உள்ளேயே இருந்தனர்.

ஏதென்ஸ் விமான நிலையத்தில் நின்றிருந்த விமானத்தில் புதிய பயணிகள் ஏற்றப்படுவதற்கு முன்னர், துப்பரவுப் பணியாளர்கள் மூன்றுபேர் விமானத்துக்குள் ஏறி துப்பரவு செய்தார்கள்.

அந்த மூன்று பேரில் ஒரு ஆள் கடத்தற்காரர்களின் ஆள்.

அவர் துப்பரவு செய்துவிட்டு இறங்குமுன்னர் தன்னிடம் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை விமானத்தில் டாய்லட் ஒன்றில் மறைத்து வைத்துவிட்டு இறங்கினார். துப்பரவுப் பணியாளர்கள் இறங்கிய உடனேயே விமானத்தில் பின்பகுதியில் அமர்ந்திருந்த ஒருவர் டாய்லட்டுக்குச் சென்றார்.

அவர் திரும்பவும் தனது சீட்டுக்கு வந்தபோது ஆயுதங்கள் அவருடன் வந்து விட்டன.
துப்பாக்கியுடன் கடத்தல்காரர் எழுந்தார்!

ஏதென்ஸ் விமான நிலையத்தில் பயணிகள். இங்குதான் ஆயுதங்கள் எயார் பிரான்ஸ் விமானத்துக்குள் போய்ச் சேர்ந்தன!

ஏதென்ஸ் விமான நிலையத்திலிருந்து விமானம் கிளம்பியபோதே கடத்தல்காரர்களின் கைகளில் ஆயுதங்கள் வந்துவிட்டன. ஏதென்ஸிலிருந்து விமானம் கிளம்பி சுமார் அரைமணி நேரத்தின்பின், முதலாவது கடத்தல்காரர் கையில் துப்பாக்கியுடன் தனது சீட்டிலிருந்து எழுந்தார்.

அந்த நிமிடத்தில் விமானத்தின் கட்டுப்பாடு கடத்தல்காரர்களின் கைகளுக்குப் போனது. விமானம் கடத்தப்படுகிறது என்ற தகவலை துப்பாக்கி முனையில் வைக்கப்பட்டிருந்த விமானி தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துக்குத் தெரிவித்தார். கடத்தல்காரர்கள் வாடி ஹாடாட் என்ற தீவிர இஸ்லாமிய விடுதலை அமைப்பினர்.

விமானத்தைக் கடத்தியவர்கள் விஷயம் தெரியாத ஆட்களல்ல. அவர்களுக்கு விமான நகர்வுகள் பற்றி நன்றாகவே தெரிந்திருந்தது. அவர்கள் போய்ச்சேர வேண்டிய இடத்துக்கு (ஆபிரிக்கா) செல்வதற்கு விமானத்தில் எரிபொருள் போதுமானதாக இருக்காது என்பதை அறிந்து வைத்திருந்தார்கள்.

ஏதென்சில் இருந்து டெல்-அவிவ் இருக்கும் தூரத்தின் அளவிலான தூரத்திலிருக்கும் மற்றுமோர் விமான நிலையத்திற்கு விமானத்தைச் செலுத்தச் செய்வதாக திட்டம் வைத்திருந்தார்கள்.
கடத்திய விமானத்தை முதலில் தரையிறக்க…

அப்படி, அவர்கள் மனதில் வைத்திருந்த நாடு லிபியா. (காரணம் லிபியா இந்தத் தீவிரவாத அமைப்பினர்மீது ஓரளவு பரிவு வைத்திருந்த நாடுகளில் ஒன்று)

கடத்தல்காரர்கள் சொல்லிக்கொடுத்தபடி, ஏயார் பிரான்சின் விமானி தரைக் கட்டுப்பாட்டு நிலையத்தைக் தொடர்பு கொண்டு விமானத்தைக் கடத்தற்காரர்களின் உத்தரவுப்படி லிபியாவை நோக்கித் திருப்புவதாகத் தெரிவித்தார். சிறிது நேரத்தில் லிபியாவின் பென்காசி விமான நிலையத்தில் இந்த விமானம் தரையிறங்க அனுமதி கொடுக்கப்பட்டது.

அங்கே இவர்கள் கேட்டுக் கொண்டபடி விமானத்துக்கு முழுமையாக எரிபொருள் நிரப்பப்ப லிபிய அரசு சம்மதித்தது.

இதற்கிடையே எயார் பிரான்சின் விமானம் கடத்தப்பட்ட விபரம் வெளியே தெரியவந்துவிட ஊடகவியலாளர்கள் பலர் பென்காசி விமான நிலையத்துக்கு வந்துவிட்டார்கள். ஆனால் அவர்களில் யாரையும் விமானத்துக்கு அருகே செல்லவே லிபியப் பாதுகாப்புப் படையினர் அனுமதிக்கவில்லை.

விமானத்துக்கு எரிபொருள் நிரப்பும் வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில் கடத்தல்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த லிபியாவிலிருந்த பிரென்ச் தூதரகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் முயற்சி செய்தார்கள். ஆனால் அவர்களுடன் பேசமுடியாது என்று கடத்தல்காரர்கள் கூறிவிட்டார்கள்.

பென்காசி விமான நிலையம் உண்மையில் ஒரு விமான நிலையமாகக் கட்டப்பட்டதல்ல. இது ஒரு முன்னாள் அமெரிக்க ராணுவத் தளம். விமான நிலையத்திலுள்ள போஸ்ட் ஆபீஸைப் பார்த்தாலேதெரியும்.

இந்தக் கட்டத்தில் விமானத்துக்குள் ஒரு சுவாரசியமான நாடகம் நடைபெற்றது. கடத்தப்பட்ட பயணிகளில் இளம் பெண் ஒருவர் தான் கர்ப்பமுற்று இருப்பதாகத் தெரிவித்து, தனக்கு இந்த அதிர்ச்சியைத் தாங்க முடியவில்லை என்று கூறினார். அதையடுத்து மயக்கமாகி சீட்டில் சரிந்தார்.

கடத்தல்காரர்கள் தமக்குள் ஆலோசனை செய்தபின் அந்த இளம்பெண்ணை மாத்திரம் பென்காசியில் வைத்து விடுவிக்கச் சம்மதித்தனர். இப்படியாக பணயக் கைதிகளில் முதலாவதாக இந்த இளம்பெண் விடுவிக்கப்பட்டார்.

சரி. “விமானத்துக்கு உள்ளே ஒரு நாடகம் நடைபெற்றது” என்று இந்தச் சம்பவத்தை ஏன் குறிப்பிட்டோம் என்று யோசிக்கிறீர்களா? காரணம் இருக்கிறது. விடுவிக்கப்பட்ட அந்த இளம் பெண் உண்மையில் கர்ப்பிணி அல்ல. சும்மா பொய் சொல்லித் தப்பித்துக் கொண்டார்!
கடத்தல்காரர்களுக்கு முதல் பிரச்சினை

எரிபொருள் நிரப்பப்பட்ட விமானம் பென்காசி விமானநிலையத்திலிருந்து கிளம்பியபோதுதான் கடத்தியவர்கள் முதலாவது பிரச்சனையைச் சந்தித்தார்கள்.

கடத்தற்காரர்களின் திட்டம் என்னவென்றால் ஏதென்ஸ் விமான நிலையத்தைவிட்டுக் கிளம்பியவுடன் விமானம் கடத்தப்படவேண்டும். அங்கிருந்து பென்காசி சென்று எரிபொருள் நிரப்பவேண்டும். அதன்பின்னர் சூடான் நாட்டின் கார்ட்டூம் விமான நிலையத்துக்கு விமானத்தைச் சொலுத்திச் சென்று அங்கே தரையிறங்கவேண்டும்.

இந்தக் கடைசிப் பகுதியில்தான் சிக்கல்.

கடத்தப்பட்ட F-BVGG ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர் விமானம் இதுதான். கடத்தல் முடிவுக்கு வந்தபின் இந்த விமானம் உகண்டாவிலிருந்து பிரான்சுக்கு வந்து சேர்ந்தது. அதன்பின் இந்த விமானத்தை எயார் பிரான்ஸ் விற்றுவிட்டது. அதை வாங்கிய நிறுவனம் வியட்நாம் எயார்லைன்ஸ். தற்போது இந்த விமானம் TC-MNA என்ற ரெஜிஸ்ட்ரேஷனுடன் கார்கோ விமானமாக மாற்றப்பட்டுள்ளது.

விமானம் கிளம்பியபோது விமானியிடம் கார்ட்டூம் விமான நிலையம் நோக்கிச் செல்லும்படி கடத்தியவர்கள் உத்தரவிட்டிருந்தார்கள். விமானமும் அந்தத் திசையில் செலுத்தப்பட்டது. ஆனால் சூடான் நாட்டு அதிகாரிகள் இந்த விமானத்தைத் தமது நாட்டு விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதிக்க முடியாது என்று மறுத்து விட்டார்கள்.

சூடான் நாடும் தங்கள்மீது அனுதாபம் வைத்திருக்கும். எனவே அங்கே விமானத்தைத் தரையிறக்கிவிட்டு பேச்சுவார்த்தைகளை நடத்தலாம் என்று இந்த விடுதலை அமைப்பினர் வைத்திருந்த திட்டம் குழம்பிப்போனது.
எங்கே போவது என்று தெரியாமல் பறந்த விமானம்

இந்த விமானம்தான் கடத்தப்பட்ட எயார்பிரான்ஸ் விமானத்தின் இன்றைய தோற்றம். 3 தடவைகள் கைமாறி, தற்போது எம்.என்.ஜி. என்ற கார்கோ நிறுவனத்துக்குச் சொந்தமாக இருக்கிறது.

விமானம் சிறிது நேரம் எங்கே போகின்றது என்ற இலக்கு இல்லாமல் சூடான் இருந்த திசையில் பறந்து கொண்டிருந்தது. அதற்குள் கடத்தியவர்கள் தங்களுக்குள் கூடி ஆலோசித்தார்கள். ஆபிரிக்கக் கண்டத்திலுள்ள ஏதாவது ஒரு நாட்டில்தான் விமானத்தை இறக்குவது பாதுகாப்பானது என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள். சூடான் தரையிறங்க அனுமதிக்க மறுத்தபின் வேறு எங்கே செல்வது.

இரண்டாவது தேர்வாக அவர்கள் தேர்ந்தெடுத்த நாடு உகண்டா.

விமானத்தை உகண்டாவை நோக்கித் திருப்பும்படி விமானியிடம் கூறினார்கள். உகண்டா நாட்டின் தலைநகர் கம்பாலாவின் சர்வதேச விமான நிலையம் பூகோள ரீதியில் இவர்கள் முதலில் செல்லத் திட்டமிட்டிருந்த கார்ட்டும் விமான நிலையத்திலிருந்து குறைந்த பாகை வித்தியாசத்திலேயே இருக்கிறது.

எனவே சூடான் நோக்கிச் சென்ற விமானத்தை இலகுவில் உகண்டாவை நோக்கித் திசைதிருப்பிவிடலாம். கார்ட்டூம் நகருக்கும் கம்பாலா நகருக்கும் இடையிலுள்ள தூரம் வெறும் 1053 மைல்கள்தான் என்பதால் கடத்தப்பட்ட விமானத்திலுள்ள எரிபொருளும் போதுமானதாக இருக்கும்.

இப்போது விமானி தரைக் கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்புகொண்டு உகண்டாவில் தலையிறங்க அனுமதி வேண்டுமென்று கேட்டார்.

கடத்தப்பட்ட A300 ரக விமானத்திக் காக்பிட்.
இடி அமீனே நேரில் வழங்கிய அனுமதி

ஆச்சரியகரமாக உடனே அனுமதி கிடைத்தது. அதுவும் உகண்டாவின் அன்றைய தலைவர் இடி அமீன் தானே நேரடியாக அனுமதி வழங்கி ஆச்சரியப்படுத்தினார். அனுமதி கிடைத்தவுடன், எயார் பிரான்ஸ் விமானம் உகண்டாவின் தலைநகர் கம்பாலாவிலிருந்து 30 கி.மீ. தொலைவில் இருந்த என்டபே விமான நிலையத்தில் தரையிறங்கியது.

தரையிறங்கிய விமானத்தில் இருந்த பயணிகளில் இஸ்ரேலியர்களைத் தவிர மற்றய நாட்டுக்காரர்கள் அனைவரையும் கடத்தல்காரர்கள் உடனே விடுதலை செய்துவிட்டார்கள்.

அந்த எயார் பிரான்ஸ் விமானத்தின் காப்டனாகப் பணியாற்றியவர் Michel Bacos. பிரென்ச்காரரான இவரையும் கடத்தல்காரர்கள் விடுவித்தபோதும் அவர் வெளியேற மறுத்துவிட்டார். விமானத்தின் காப்டனான தனது பொறுப்பிலேயே அனைத்து விமானிகளும் இருப்பதால் அதில் ஒருபகுதியினரை விட்டுவிட்டுத் தன்னால் விடுதலையாகிச் செல்ல முடியாது என்று கூறிவிட்டார் இவர்.

இவரைப் பின்பற்றி எயார் பிரான்சின் மற்றய விமானப் பணியாளர்களும் விடுதலையாக மறுத்து, பணயக் கைதிகளுடனே தங்கிக் கொண்டனர்.

இடி அமீன் - ஆச்சரியகரமாக விமானம் தரையிறங்க அனுமதி கொடுத்தார்!

விடுதலையாக மறுத்த மற்றொருவர் அந்த விமானத்தில் பயணித்த பிரென்ச் கன்னியாஸ்திரி. துறவியான தனக்குப் பதிலாக பணயக் கைதிகளில் ஒருவரை விடுவிக்குமாறு இவர் கடத்தல்காரர்களைக் கேட்டுக்கொண்டார். ஆனால் அவரைப் பணயக் கைதியாக வைத்திருக்க கடத்தல்காரர்கள் சம்மதிக்கவில்லை.

இறுதியில் என்ன நடந்தது? அவரை வைத்திருந்தால் இது மத ரீதியான விவகாரமாகத் திரும்பிவிடும் என்று, உகண்டாவின் பாதுகாப்புப் படையினர் இந்தக் கன்னியாஸ்திரியைப் பலவந்தமாக அங்கிருந்து அப்புறப் படுத்தினர்.

இப்போது பணயக் கைதிகளாக இருந்த 105 பேரில் 85 பேர் இஸ்ரேலிய, மற்றும் இஸ்ரேலியப் பிரஜைகளில்லாத யூதர்கள். மிகுதி 20 பேரும் எயார் பிரான்ஸ் விமானச்

சிப்பந்திகள். இவர்கள் அனைவரையும் ஆயுத முனையில் வைத்துக்கொண்டு தமது கோரிக்கைகளை வெளியிட்டார்கள் கடத்தல்காரர்கள்.

எயார் பிரான்சின் விமானச் சிப்பந்திகள் (புதிய யூனிபோர்ம்)

மொத்தம் மூன்று கோரிக்கைகள். முதலாவது, இஸ்ரேலியச் சிறைகளில் இருக்கும் நாற்பது பாலஸ்தீனியர்களை விடுதலை செய்யவேண்டும். இரண்டாவது, ஐரோப்பிய நாடுகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 12 பாலஸ்தீனியர்களை விடுதலை செய்யவேண்டும்.

மூன்றாவது, கென்யா நாட்டில் நைரோபி விமான நிலையத்திலிருந்து எல்-அல் இஸ்ரேலி ஏயார்லைன்ஸின் விமானம் ஒன்று கிளம்பும்போது அதை சாம்-7 ரொக்கட்டால் அடித்து வீழ்த்த முயன்ற இரு ஜேர்மன்காரர்கள் கைது செய்யப்பட்டு கென்யாவின் சிறையில் இருக்கிறார்கள். அந்த இருவரையும் விடுதலை செய்ய வேண்டும்.

இந்த மூன்று கோரிக்கைகளையும் நிறைவேற்றத் தவறினால் பணயக் கைதிகள் அனைவரும் கொல்லப்படுவார்கள். இதற்கு கொடுக்கப்பட்ட காலக்கெடு ஜூன் மாதம் 30ம் திகதி.
பிரதமர் வைத்திருந்த ரகசியத் திட்டம்!

இஸ்ரேலில் அவசர அவசரமாக மந்திரிசபை கூடியது. பிரதமர் ரேபின் இஸ்ரேலியச் சிறைகளில் இருக்கும் பாலஸ்தீனியர்கள் 40 பேரை விடுதலை செய்யச் சம்மதிப்பதுபோலக் காட்டிக் கொண்டார். ஆனால், அதற்கு இஸ்ரேலிய உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்பதால் அதற்கு சில நாட்கள் அவகாசம் எடுக்கும் என்றும் கூறிக்கொண்டார்.

அந்த நாளைய எயார் பிரான்ஸ் விமானத்தின் இன்டீரியர். தற்போது இது புதிதாக வடிவமைக்கப்பட்டுவிட்டது. விமானச் சிப்பந்தியின் பழைய யூனிபோர்மைப் பாருங்கள்.

ஆனால், உள்ளே வேறு ஒரு திட்டம் இருந்தது.

இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத் அதிரடியாக ரகசிய ஒப்பரேஷன் ஒன்றைச் செய்து பணயக் கைதிகளை விடுவிப்பதுதான் உள்ளேயிருந்த நிஜத்திட்டம்.

இது நடந்தபோது மொசாத்தில் தலைவராக இருந்தவர் யிட்சாக் ஹோபி. அவர் பிரதமருடன் ரகசியமாக ஆலோசனைக்கு அழைக்கப்பட்டார். அப்போதுதான் இஸ்ரேல் வெளிப்படையாகக் கூறாமல் ரகசிய அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டு பணயக் கைதிகளை விடுவிக்கும் யோசனை ஒன்று தம்மிடம் இருக்கிறது எனத் தெரிவித்தார் பிரதமர்.

இந்த ஒப்பரேஷன் மிகத் துல்லியமாகத் திட்டமிடப்படவேண்டும். துரிதமாகவும் முடியவேண்டும். ஏதாவது தவறு நடந்தால் இஸ்ரேலியப் பணயக் கைதிகளின் உயிர்கள் எடுக்கப்பட்டுவிடும் என்பது மொசாத்தின் தலைவருக்கு கூறப்பட்டு அப்படியான முறையில் ஒரு ஒப்பரேஷனை நடாத்த முடியுமா என ஆலோசனை கேட்கப்பட்டது.
“இது உங்களால் முடியுமா?”

“இது உங்களால் (மொசாத்தால்) முடியுமா? அல்லது பேசாமல் கடத்தல்காரர்களின் கோரிக்கைக்கு இணங்கி எமது சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்வதைத் தவிர வேறு வழியே இல்லையா” என்று கேட்டார் பிரதமர்.

“நாங்கள் முயற்சி செய்யலாம். ஆனால் அதற்குச் சில முன்னேற்பாடுகள் செய்ய வேண்டியிருக்கும். மொசாத்தின் நடவடிக்கைகளில் அரசியல் குறுக்கிடாமல் எங்களை எங்களது போக்கில் விட்டால் அதிரடியாக ஒரு ஒப்பரேஷனை நிச்சயம் செய்ய முடியும்” என்று கூறிவிட்டு அலுவலகம் திரும்பினார் மொசாத்தின் தலைவர்.

அடுத்த சில நிமிடங்களிலேயே அவர் கேட்டிருந்த அனுமதி வந்து சேர்ந்தது.
(அத்தியாயம் 2 அடுத்தவாரம் தொடரும்)

Follow viruvirupu on Twitter
விறுவிறுப்பின் பிந்திய 10 செய்திகள்
1. திகைத்த பயணிகள் – வானில் கேட்ட இரு வெடிச் சத்தங்கள்! Tuesday 17 May 08:20 GMT
2. ‘ஸ்டாக் மார்க்கெட் புலிகள்’ இன்று விட்டிருக்கும் நிம்மதிப் பெருமூச்சு! Tuesday 17 May 04:15 GMT
3. பதவியிலிருந்தபோது ‘சுட்ட’ பணத்தைத் திருப்பிக் கொடுக்கிறேன்! Tuesday 17 May 02:21 GMT
4. எச்சரிக்கை: “லண்டனில் இன்று வெடிகுண்டு வெடிக்கலாம்” Tuesday 17 May 01:51 GMT
5. பிரிட்டனுக்குள் பின்கதவால் வேலையுடன் நுழைபவர்கள்! Tuesday 17 May 00:39 GMT
6. சர்ச்சைக்குரிய வீடியோ கேமில், பின்லேடன் கொல்லப்பட்ட வீடு! Monday 16 May 23:50 GMT
7. பெண்களுக்கான தனிப் பல்கலைக்கழகம்… உலகில் மிகப் பெரியதாக! Monday 16 May 06:35 GMT
8. ஸ்ரீலங்காவுக்கு ‘புதிய வெளிச்சம்’ காட்டுவதற்கு பிரிட்டிஷ் நிறுவனம்! Monday 16 May 03:37 GMT
9. “எச்சரிக்கை: சி.ஐ.ஏ.க்கு உளவு பார்க்கும் அனைவருக்கும் இதே கதிதான் ஏற்படும்” Sunday 15 May 14:52 GMT
10. இந்தியாவுக்குச் சாதகமாக சி.ஐ.ஏ. விடும் குத்து! Sunday 15 May 13:49 GMT
மேலதிக செய்திகள்
எமது தொடர்களில் இந்த வாரம்…
அத்தியாயம் 1
பாதுகாப்பு அதிகாரியின் கைத்துப்பாக்கி
அத்தியாயம் 1
எயார் பிரான்ஸ் விமானம் கடத்தல்
இந்த இணையத்தளத்திலுள்ள அனைத்து ஆக்கங்களும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளன. மீள்பதிவு செய்ய விரும்பின் குறிப்பிட்ட ஆக்கம் விறுவிறுப்பு.கொம் இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்டது என்பதைக் குறிப்பிட வேண்டும்.
இவற்றையும் பார்த்தீர்களா?
என்ன செய்கிறார்கள்?
“நீங்கள் இந்த நாட்டவர் இல்லையே!”
ஒரு புதுவிதமான பிரச்சினை இது. தாங்கள் எந்த நாட்டவர் என்று இவர்களுக்குத் தெரியும்... ஆனால், விஷயம் அந்த நாட்டுக்குத் தெரியாது!
தொடர்ந்து படிக்க
துப்பாக்கி தூக்கியவர்கள்
“வாழ்த்துக்கள். உங்கள் இரு மகன்களும் யுத்தத்தில் மாவீரர்கள் ஆகிவிட்டனர்”
நள்ளிரவில் வீட்டுக்கு தொலைபேசி அழைப்பு வருகின்றது. அதில் சொல்லப்படும் விஷயம் அவர்களைத் தூக்கிவாரிப் போடுகிறது!
தொடர்ந்து படிக்க
ராணுவப் புலனாய்வு
அகப்பட்ட தளபதி விஷயத்தைக் கக்கினாரா? அல்லது கதையையே திருப்பி விட்டாரா?
தீவிரவாத இயக்க ரகசியங்களை ராணுவம் உளவாளிகள் மூலம் பெறுவது வழக்கம். அதையே இயக்கத்தின் தளபதி மூலம் பெற்றால்?
தொடர்ந்து படிக்க
பொருளாதாரம்
“பொறி பறக்க” வேலை தெரிந்த நங்கைகள் ரெடி!
வெளிநாட்டில் வேலை வேண்டுமா? உங்களுக்கான சொர்க்க வாசல்கள் இன்னமும் அகலத் திறந்துதான் இருக்கின்றன!
தொடர்ந்து படிக்க
வியாபாரம்
உங்கள் ஆசைகள் டொயோட்டாவுக்கு எப்படித் தெரியும்?
டொயோட்டாவின் ரகசிய வியாபார முடிவுகள் இங்கேதான் எடுக்கப்படுகின்றன. ஜாக்கிதை.. ஊடுருவுவது அவ்வளவு சுலபமல்ல!
தொடர்ந்து படிக்க
புலனாய்வு
அதிகாலை நேரத்தில்… மலை முகட்டு ரன்வேயில்…
ஒரு வெளிநாட்டு எயார்லைன் விமானி செய்வதை, எயார் இந்தியாவின் விமானி செய்யப் போனால்? சிக்கல் இருக்கிறது!
தொடர்ந்து படிக்க
வெளிநாட்டுப் பயணம்
ஆமைக்கறி சாப்பிடுவதுதான் திட்டமா?
நீங்கள் சாதாரணமாகப் பார்க்க முடியாத ஒரு இடத்தைப் பற்றி அறிய ஆவலா? இதோ இந்த இடத்தைப் பற்றிப் படித்துப் பாருங்கள்.
தொடர்ந்து படிக்க
வெளிநாட்டுப் பயணம்
“ஓய்… நீர் இந்த எல்லை வழியாகக் கடத்தவா பார்க்கிறீர்?”
கடத்தல் செய்கிறார்கள் என்று தெரியும். கடத்தல் செய்யும் ஆட்களையும் தெரியும். சரி. எப்படிக் கடத்துகிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?
தொடர்ந்து படிக்க
வெளிநாட்டுப் பயணம்
அட.. புலியுடன் நின்று போட்டோ எடுத்தீங்களா? கில்லாடிதான் போங்கள்!
சீக்கிரம் இதைப் படித்து விடுங்கள். ஏனென்றால், நாட்டு நிலைமைகளும், காட்டு நிலைமைகளும் அடிக்கடி மாறுகின்றன.
தொடர்ந்து படிக்க
யுத்தம் நடந்த இடத்திலிருந்து
உம்மை எதிரியிடம் அனுப்பி வைக்கவா? அல்லது, நேரே இறைவனிடமே அனுப்பி வைக்கவா?
எச்சரிக்கை - இதை ஈழத் தமிழரின் இன்றைய நிலையுடன் ஒப்பிட்டால், சிலருக்கு பிளட் பிரஷர் கண்டபடி எகிறும். ஜாக்கிதை!!

ராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி?

ராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி?
அத்தியாயம் 1
பாதுகாப்பு அதிகாரியின் கைத்துப்பாக்கி



மே மாதம் 21ம் திகதி 1991ம் ஆண்டு. இரவு 8 மணி. சென்னை மீனம்பாக்கம் (பழைய) விமான நிலையம்.

இந்தியாவின் வழமையான தேர்தல் திருவிழா களைகட்டி விட்டிருந்த தினமொன்றில் இந்தத் தொடர் தொடங்குகின்றது. இந்திய நாடாளுமன்றத்துக்கும் தமிழக சட்டசபைக்கும் தேர்தலுக்காகத் திகதி குறிக்கப்பட்டு நாடு முழுவதும் தேர்தல் பரபரப்பில் ஆழ்ந்திருந்த காலம். ஆட்சியைப் பிடிப்பது யார் என்ற வேகத்துடன் தலைவர்கள் மும்முரமாக பிரசாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

மற்றய தினங்களைவிட அன்றைய இரவு சென்னை விமான நிலையம் அதிக பரபரப்பாகக் காணப்பட்டது. காரணம் அன்றைய தினம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அவர்களுடைய நட்சத்திர வேட்பாளருமான ராஜிவ் காந்தி அன்று இரவு சென்னை விமான நிலையத்தில் வந்திறங்குவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பரபரப்பான விமான நிலையத்தில் காத்திருந்த இரு எதிரிகள்!

சென்னை விமான நிலையமே ஏதோ காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்ட மைதானம் போலக் காணப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் தமிழக முக்கிய தலைவர்கள் முதல் கிராமப் பக்கத்துக் குட்டிக் காங்கிரஸ் தலைவர்கள்வரை அனைவரின் தலைகளும் அங்கே தென்பட்டன. கட்சியின் தலைவர் வந்திறங்கும் நேரத்தில் அங்கே தலையைக் காட்டாவிட்டால் நாளைக்கே கட்சிக்குள் சிக்கலாகி விடுமல்லவா?

அங்கு 70 வயதைக் கடந்த மரகதம் சந்திரசேகர் காத்துக்கொண்டிருந்தார்.

இவர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. அது மாத்திரமல்ல, அப்போது நடைபெறவிருந்த தேர்தலில் அவர் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர். தேர்தல் பிரசாரத்தின் இறுதிக்கட்டமாக ராஜிவ்காந்தி பேசவிருந்த இடங்களில் ஸ்ரீபெரும்புதூரும் ஒன்று.

மரகதம் சந்திரசேகருக்கு தமிழக காங்கிரஸ் அளவில் செல்வாக்குக் கொஞ்சம் அப்படியிப்படி இருந்தாலும் புதுடில்லி தலைமை மட்டத்தில் செல்வாக்கு அதிகம். காரணம் என்னவென்றால் ராஜிவ்காந்தியின் தாயாரும் முன்னாள் பிரதமருமான இந்திரா காந்திக்கு நெருக்கமானவராக இருந்தவர் மரகதம் சந்திரசேகர். இதனால் ராஜிவ் காந்தி மற்றும் சோனியா காந்தியுடனும் நன்கு பரிச்சயமானவர்.

இந்தச் செல்வாக்கில்தான் அவருக்கு அந்தத் தள்ளாத வயதிலும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் சார்பில் டிக்கட் கொடுக்கப்பட்டிருந்தது. அவருக்கு இருந்த முக்கியத்துவம் காரணமாகவே தனது தேர்தல் பிரச்சாரப் பயணத்தின் இறுதிக் கட்டமாக அவரது தொகுதியான ஸ்ரீபெரும்புதூரில் மேடையேறி அவருக்காகப் பிரச்சாரம் செய்ய ஒப்புக் கொண்டிருந்தார் ராஜிவ் காந்தி.

இன்று 20 ஆண்டுகளின்பின் விறுவிறுப்பு.கொம் இணையத்தளத்தில் இந்தத் தொடரைப் படிக்கத் தொடங்கியுள்ள உங்களுக்குத் தெரிந்த ஒரு விஷயம் அன்று மரகதம் சந்திரசேகருக்கோ, ராஜிவ் காந்திக்கோ தெரிந்திருக்கவில்லை. கொஞ்சம் வில்லங்கமான அந்த விஷயம், அன்றிரவு ஸ்ரீபெரும்புதூரில் மேடையேறுமுன் ராஜிவ் காந்தி ஒரு மனித வெடிகுண்டால் கொல்லப்படப்போகின்றார்!

வாழப்பாடி ராமமூர்த்தியும் கருப்பையா மூப்பனாரும்

விமான நிலையத்தில் மரகதம் சந்திரசேகருடன் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் இரு பிரதான தலைவர்களான வாழப்பாடி ராமமூர்த்தி, ஜி.கே. மூப்பனார் (இருவருமே தற்போது உயிருடன் இல்லை) ஆகியோரும் காத்திருந்தனர். இந்த இருவரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் என்றாலும் கட்சிக்குள் இரு வெவ்வேறு (எதிரெதிர்) கோஷ்டியைச் சேர்ந்தவர்கள். சுருக்கமாகச் சொன்னால் கட்சிக்குள் எதிரிகள்!

இது நடைபெற்ற காலப்பகுதியில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி கோஷ்டிகளால் பிளவுபட்டிருந்தது (இன்றும் நிலைமையில் மாற்றமில்லை. கோஷ்டித் தலைவர்கள்தான் வேறு). அன்று தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த வாழப்பாடி ராமமூர்த்தி கோஷ்டி, ஜெயலலிதாவின் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க ஆதரவு தெரிவித்தது. ஆனால், மூப்பனார் கோஷ்டி கூட்டணி ஜெயலலிதாவுடன் கூட்டணி வைக்கும் யோசனையைக் கடுமையாக எதிர்த்தது.

இருந்தபோதும் டில்லியிலுள்ள காங்கிரஸ் மேலிடம் ஜெயலலிதாவின் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்திருந்தது.

கூட்டணி அமைந்தபின் தங்களுக்குள் அடிபட்டு என்ன செய்வது? இதனால் இரு கோஷ்டிகளும் தேர்தலை முன்னிட்டு ஏதாவது ஒரு வகையில் ஒற்றுமையாக இருப்பதுபோலக் காட்டிக்கொண்டிருந்தன. இதனால் இரு கோஷ்டியினரும் அவற்றின் தலைவர்களும் அன்று ஒரே நேரத்தில் மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு வந்திருந்தனர் (வழமையாக இவர் வரும் இடத்தில் அல்லது நேரத்தில் அவர் தலையைக் காட்ட மாட்டார்!)
அன்றிரவு சென்னைக்கு ராஜிவ் காந்தி வரவேண்டிய பின்னணி என்ன?

அதைத் தெரிந்துகொள்ளக் கொஞ்சம் பழைய கதையைச் சொல்வது அவசியமாகின்றது. இந்தத் தொடர் நடைபெற்ற காலப்பகுதியில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இல்லை. ஆட்சி அதிகாரம் எல்லாமே காமராஜர் காலத்துடன் கைமாறி திராவிடக் கட்சிகளிடம் சென்றிருந்தன.

தி.மு.க.வில் அண்ணாத்துரையிடம் ஆட்சி சென்று… அவரது மறைவின்பின் கருணாநிதியிடம் ஆட்சி சென்று… இடையே அன்றைய நடிகரான எம்.ஜி.ஆர். திடீரெனத் தொடங்கிய கட்சியிடம் ஆட்சி கைமாறி… தான் இறக்கும்வரை முதல்வராகவே இருந்துவிட்டுச் சென்றிருந்தார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரின் மறைவுக்குப்பின் அவர் உருவாக்கிய அ.தி.மு.க.வைக் கைப்பற்றியிருந்தார் ஜெயலலிதா.

இதெல்லாம் நடைபெற்ற காலத்தில் காங்கிரஸ் கட்சியால் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பதைப் பற்றியே நினைத்துக்கூடப் பார்க்க முடிந்திருக்கவில்லை. இரண்டு திராவிடக் கட்சிகளில் ஒன்றுடன் மாறிமாறிக் கூட்டணி வைத்துக்கொண்டு அவற்றின் தயவில் தமிழகத்தில் அரசியலில் காலத்தை ஓட்டிக்கொண்டிருந்தது காங்கிரஸ் கட்சி.

நாங்கள் தனித்துப் போட்டியிட்டு ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற ஒரு கனவு அன்றுமுதல் இன்றுவரை காங்கிரஸ் கட்சிக்கு உண்டு. அதற்கான ஒரு சோதனைக் களமாக (எம்.ஜி.ஆர் இறந்த பிறகு) 1988 89-ல் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ், படுதோல்வியைச் சந்தித்தது.

அதற்குப்பின் தனித்துப் பலப்பரீட்சை செய்வது என்ற விபரீத விளையாட்டில் இறங்கவில்லை காங்கிரஸ்.

இப்படியான சூழ்நிலையில்தான் இந்தத் தொடர் நடைபெற்ற காலப்பகுதியில் ஜெயலலிதாவின் தலைமையிலான அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்திருந்தது காங்கிரஸ். புதிய கூட்டணியும், தேர்தல் பிரச்சாரத்துக்காக ராஜிவ்காந்தியின் தமிழக வருகையும் நல்ல விளைவை ஏற்படுத்தும் என்று ஊடகங்களால் பரவலாக எழுதப்பட்டது.
தமிழ்நாட்டில் போடப்பட்ட இரு தலைகீழ் கணக்குகள்

ஜெயலலிதாவுடனான கூட்டணிக்கு ஆதரவாக இருந்த வாழப்பாடி ராமமூர்த்தி ஒருவிதமாக கணக்குப் போட்டிருந்தார். ஜெயலலிதாவுடனான கூட்டணிக்கு எதிரான கருப்பையா மூப்பனார் அதற்குத் தலைகீழான கணக்கைப் போட்டிருந்தார்.

“சென்னைக்கு வந்துபோனால் ஓட்டு விழுவது நிச்சயம்”

தங்கள் கூட்டணி நிச்சயம் வெல்லும் என்ற நிலையில், ராஜிவ்காந்தி தமிழகம் வரத் தேவையில்லை என்று கூறினார் வாழப்பாடி. அதாவது தமிழகத்தில் அ.தி.மு.க.வுக்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது… காங்கிரஸ் ஜெயிக்க அதுவே போதும் என்று நிரூபிக்க விரும்பினார் அவர்.

வா.ரா. அப்படிச் சொன்னால் சும்மா விட்டுவிடுவாரா க.மூ?

ராஜிவ் காந்தி பிரச்சாரத்துக்கு வந்தால்தான் கூட்டணி ஜெயிக்க முடியும் என்று வெளிப்படையாகவே கூறினார் அவர். கூட்டணி ஜெயிக்கத்தான் போகிறது. அந்த வெற்றி அ.தி.மு.க.வால் கிடைத்ததாக இல்லாமல் ராஜிவ் காந்தியின் பிரச்சாரத்தால் கிடைத்ததாக இருக்கட்டுமே என்பது அவரது நிலைப்பாடு.

இதற்கிடையே மரகதம் சந்திரசேகரும் ராஜிவ் காந்தி தமிழகம் வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார். ராஜிவ் காந்தி தமிழகம் வந்து ஸ்ரீபெரும்புதூரில் மேடையேறி அவருக்காகப் பிரச்சாரம் செய்தால் தான் சுலபமாக ஜெயித்து விடலாம் என்பது அவரது கோணம். இதுதான் ராஜிவ் காந்தியின் அன்றைய தமிழக வருகைக்கான அரசியல் பின்னணி.
பாதுகாப்பு வளையம் (சில ஓட்டைகளுடன்)

விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்குச் சற்று தொலைவில் மாநில பொலிசாரின் சிறப்புப் பிரிவு பொலிசார் நின்றுகொண்டிருந்தனர். அவர்களைவிட சிவில் உடையில் மாநில உளவுப் பிரிவினரும் (கியூ பிரான்ச்) மத்திய உளவுப் பிரிவினரும் கட்சிக்காரர்களுடன் கட்சிக்காரர்களாகக் கலந்துபோய் நின்றிருந்தனர்.

ராஜிவ்காந்தி அப்போது பிரதமராக இல்லாதபோதிலும் பல்வேறு தீவிரவாத அமைப்புகளின் தாக்குதல் இலக்கில் அவர் இருந்ததால் உயர்நிலைப்பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் விடுதலைப் புலிகளின் தாக்குதல் இலக்கில் ராஜிவ் காந்தி இருப்பதாக அப்போது இந்திய உளவு அமைப்புகள் பெரிதாகக் கருதியிருக்கவில்லை.

இந்தியாவுக்குள் இருந்த காஷ்மீர் தீவிரவாதிகள் போன்ற அமைப்பினரின் தாக்குதல் இலக்கில் ராஜிவ் காந்தி இருப்பதாகவே அப்போது இந்திய உளவு அமைப்புகள் கருதியிருந்தன.
எங்கிருந்து சென்னைக்கு வந்தார் ராஜிவ்?

ராஜிவ் காந்தி அன்றிரவு சென்னை விமான நிலையத்துக்கு வருவது டில்லியிலிருந்து நேரடியாக வருவதாகத் திட்டமிடப்பட்டிருக்கவில்லை. காரணம் அவர் ஏற்கனவே நாடுதழுவிய தேர்தல் பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கியிருந்தார். தமிழகத்துக்கு வருவதற்குமுன் அருகிலுள்ள ஆந்திர மாநிலத்தில் அவரது பிரச்சாரக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அங்கே விசாகப்பட்டினத்தில் ஒரு பிரச்சாரக் கூட்டத்தில் பேசிவிட்டுத் தமிழகம் வருவதாகவே ஏற்பாடு.

இதனால் சென்னை விமான நிலையத்துக்கு ராஜிவ்காந்தியை ஏற்றிவரும் விமானம் விசாகப்பட்டினத்தில் இருந்தே வரவேண்டியிருந்தது. ராஜிவ் காந்தி டில்லியிலிருந்து நேரடியாகச் சென்னைக்கு வந்ததாகச் சில ஊடகங்கள் குழப்பியிருந்தன. அது தவறான தகவல்.

சென்னை விமான நிலையத்தில் 21ம் திகதி இரவு ராஜிவ் காந்தியை அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருப்பதற்கு முதல் தினமே (20ம் திகதி) அவர் டில்லியிலிருந்து புறப்பட்டு விட்டிருந்தார். அவர் பயணித்தது வழமையாக டில்லியிருந்து போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகள் விமானமல்ல. காங்கிரஸ் கட்சி சார்பில் வாடகைக்கு அமர்த்தப்பட்டிருந்த தில்லி விமானப்பயிற்சி கிளப்பின் விமானத்தில்தான் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் தேர்தல் பிரசாரத்துக்குச் சென்று வந்துகொண்டிருந்தார் அவர்.

20ம் திகதி டில்லியிலிருந்து அந்த விமானத்தில் புறப்பட்டு, அங்கிருந்து முதலில் ஒரிசா மாநிலம் சென்றபின், ஆந்திராவுக்குச் சென்று, தமிழ்நாடு வந்து, அங்கிருந்து கர்நாடகா சென்று பிரசாரத்தை முடித்துக்கொண்டு 22ம் திகதி டில்லி திரும்ப வேண்டும் என்பதே ராஜிவ்காந்தியின் பயணத் திட்டம். அதுவரை அந்த விமானமும் அவருடனேயே இருக்குமாறு வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்தது.

21ம் திகதி சென்னைக்கு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து ராஜிவ்காந்தியின் விமானம் வருவதை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களில் அவரது தனிப் பாதுகாப்பு அதிகாரியும் ஒருவர்.
தனிப் பாதுகாப்பு அதிகாரியின் கைத் துப்பாக்கி

ராஜிவ் காந்தியின் பாதுகாப்புக்காக அவருடன் ஒரு தனிப் பாதுகாப்பு அதிகாரியும் அவர் செல்லுமிடமெல்லாம் கூடவே செல்லுமாறு அவரது பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டிருந்தது. அந்தந்த மாநிலங்களில் கொடுக்கப்படும் விசேட பாதுகாப்புகளைவிட மேலதிகமாக இந்தத் தனிப் பாதுகாப்பு அதிகாரி செயற்படுவார். அவரிடம் ஒரேயொரு கைத் துப்பாக்கி மாத்திரமே இருக்கும்.

இங்குள்ள மற்றொரு விஷயம் இந்தத் தனிப் பாதுகாப்பு அதிகாரி எப்போதும் ஒரே நபரல்ல. பாதுகாப்பு அதிகாரி மாறிக்கொண்டே இருப்பார்.

டில்லியிலிருந்து ஒரிசா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு ராஜிவ்காந்தி சென்றபோது உடன் சென்றிருந்த பாதுகாப்பு அதிகாரியின் பெயர் ஒ.பி. சாகர். ராஜிவ் காந்தி ஆந்திராவிலிருந்து தமிழகம் வந்திறங்கியவுடன் இந்த அதிகாரி பாதுகாப்புப் பொறுப்பை மற்றொரு அதிகாரியிடம் ஒப்படைத்துவிட்டு ஓய்வெடுக்கச் சென்றுவிடுவார்.

புதிய அதிகாரியிடம் பொறுப்பை ஒப்படைப்பது என்பதில் ஓ.பி. சாகர் தன்னிடமுள்ள கைத் துப்பாக்கியைப் புதிய பாதுகாப்பு அதிகாரியிடம் ஒப்படைப்பது என்பதும் அடங்கியுள்ளது. அதாவது ராஜிவ் காந்திக்குப் பாதுகாப்புக் கொடுக்கும் நேரத்தில்தான் குறிப்பிட்ட அதிகாரியிடம் ஆயுதம் இருக்கும். பாதுகாப்புக் கடமை முடிந்த பின்னரோ அல்லது கடமை ஆரம்பிக்கும் முன்னரோ ஆயுதம் இருக்காது.

சென்னை பழைய விமான நிலையம் (அன்றைய தோற்றம்)

இதை ஏன் விலாவாரியாகச் சொல்கிறோமென்றால் 21ம் திகதி இரவு சென்னை வந்திறங்கிய ராஜிவ் காந்தியை வரவேற்ற புதிய பாதுகாப்பு அதிகாரி தனது கைத் துப்பாக்கி இல்லாத நிலையில்தான் அவருடன் செல்லப் போகின்றார். இதுதான் இந்தியத் தரப்பில் நடைபெற்ற பாதுகாப்புக் குளறுபடி நம்பர் 1.
இது எப்படி நடந்தது?

ராஜிவ் காந்தி சென்னைக்கு வருமுன் ஒரிசா மாநிலத்துக்குச் சென்றதாகக் குறிப்பிட்டிருந்தோம். ஒரிசா மாநிலத்தில் புபனேஸ்ர் நகரில் (ஒரிசாவின் தலைநகரம்) தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் அவர் பேசியிருந்தார். அங்கிருந்து ஆந்திராவின் விசாகப்பட்டினம் சென்று அங்கும் பொதுக்கூட்டங்களில் பேசினார்.

விசாகப்பட்டினத்தில் இறுதிப் பொதுக்கூட்டத்தில் ராஜிவ் பேசி முடிந்தவுடன் அவரும் அவரது குழுவினரும் விசாகப்பட்டினம் விமான நிலையத்தை நோக்கிப் புறப்பட்டனர். அங்குதான் ராஜிவ் குழுவினரை ஏற்றிவந்த தனியார் விமானம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இதுவரை எந்தப் பிரச்சினையும் இல்லை. எல்லாமே திட்டமிட்டபடி நடந்தன.

விசாகப்பட்டினம் விமான நிலையத்தை அடைந்தபோது அவரை ஏற்றிச் செல்லவேண்டிய விமானமும் புறப்படத் தயாராக இருந்தது. விமானிகளும் தயாராக இருந்தனர். விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் ராஜிவ் வந்த தனி விமானம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது விமான நிலையத்தின் சாதாரண பாதுகாப்பு மாத்திரம் வழங்கப்பட்டிருந்தது. விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏதும் செய்யப்பட்டிருக்கவில்லை.

பொதுவாக வி.ஐ.பி. பாதுகாப்பு கொடுக்கப்படும்போது சம்மந்தப்பட்ட வி.ஐ.பி. பயணிக்கும் விமானம் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்திலும் அதைச்சுற்றி பாதுகாப்புப் படையினரை நிறுத்திப் பாதுகாப்புக் கொடுப்பது வழக்கம். அதேபோல விமானத்தைச் செலுத்தும் விமானிகளும் ஒருவித கண்காணிப்பு வளையத்துக்குள்ளேயே வைக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் வெளியே சென்றுவரலாம். ஆனால் கண்காணிப்பு இருக்கும்.

விமான நிலையத்தில் தரித்து நிற்கும் நேரத்தில் அந்த விமானத்துக்குள் யாராவது ஏறி வெடிகுண்டு வைத்துவிடலாம் அல்லது விமானத்தின் என்ஜின்களில் குளறுபடி செய்துவிடலாம் என்பதற்காகவே இந்த நடைமுறை.
திடீரென விமானத்தில் கோளாறு!

இந்தக் காலப்பகுதியில் ராஜிவ் காந்தி பதவியில் இல்லாதிருந்த காரணத்தாலோ என்னவோ அப்படியான விசேட பாதுகாப்பு நடைமுறைகள் எதுவும் பின்பற்றப்பட்டிருக்கவில்லை. இதுவும் கொலை நடந்தபின் புலனாய்வாளர்களுக்குச் சில சந்தேகங்களை ஏற்படுத்தியது. காரணம் டில்லியிலிருந்து புபனேஸ்வருக்கும் அங்கிருந்து விசாகப்பட்டினத்துக்கும் எதுவிதக் கோளாறுமின்றி வந்திருந்த விமானம் சென்னைக்குப் புறப்படுமுன் பறக்க முடியாதபடி கோளாறு இருப்பதாக விமானிகளால் அறிவிக்கப்பட்டது.

ராஜிவ் காந்தி விமானத்தில் ஏறி அமரும்வரை விமானத்திலிருந்த கோளாறு கண்டுபிடிக்கப்படவில்லை. ராஜிவ்வும் அவரது குழுவினரும் ஏறி அமர்ந்து விமானம் புறப்படத் தயாரானபோதுதான் விமானத்தின் என்ஜின் இயங்குவது நிறுத்தப்பட்டு விமானத்தில் கோளாறு இருப்பதாக ராஜிவ்வுக்குச் சொல்லப்பட்டது.

ராஜிவ் காந்தியே ஒரு முன்னாள் எயார் இந்தியா விமானியாக இருந்தவர். இதனால் விமானத்தில் ஏற்படக்கூடிய கோளாறுகள் பற்றிய அறிவு அவருக்கு இருந்தது.

குறிப்பிட்ட இந்த விமானத்தைச் செலுத்திய பிரதான விமானியின் பெயர் சந்தோக். அவர் விமானத்தின் தகவல் தொடர்பு சாதனங்கள் இயங்கவில்லை என்பதால் பறக்க முடியாது எனத் தெரிவித்தார். இதையடுத்து ராஜிவ் காந்தி தானே நேரடியாக விமானத்தின் கொக்பிட்டுக்குச் சென்று அதன் சாதனங்களைப் பழுதுபார்க்க முயன்றார். ஆனால் அவராலும் விமானத்தின் தகவல் தொடர்பு சாதனத்தைச் சரிசெய்ய முடியவில்லை.

இதையடுத்து ராஜிவ் காந்தி அன்றிரவு விசாகப்பட்டினத்திலேயே தங்கிவிடுவது என்ற முடிவு எடுக்கப்பட்டது. அப்படியே நடந்திருந்தால் அன்றிரவு தமிழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டங்களில் ராஜிவ் காந்தி கலந்துகொண்டிருக்க முடிந்திராது. அன்றிரவு அவர் கொல்லப்பட்டிருக்கவும் முடியாது!

ராஜிவ் காந்தி அன்றிரவு தங்குவதற்காக அரசு சுற்றுலா விடுதியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அவரையும் அவரது குழுவினரையும் ஏற்றிக்கொண்டு சுமார் 10 வாகனங்கள் அரசு சுற்றுலா விடுதியை நோக்கிப் புறப்பட்டன. ராஜிவ் காந்திக்குப் பாதுகாப்புக் கொடுப்பதற்காக கைத்துப்பாக்கி சகிதம் இருந்த மெய்ப்பாதுகாவலர் அதிகாரியும் ராஜிவ் காந்தியுடன் சுற்றுலா விடுதியை நோக்கிப் புறப்பட்டார்.

இந்த மெய்ப்பாதுகாவலர் அதிகாரியின் பெயர் சாகர்.
அதே காரில் சாகர் ஏன் செல்லவில்லை?

இங்குள்ள முக்கிய விஷயம் என்ன தெரியுமா? ராஜில் காந்தி சென்ற வாகனத்தில் அவரது மெய்ப்பாதுகாவலர் சாகர் ஏற்றப்படவில்லை. அந்த வாகனத் தொடரணியின் தொடக்கத்தில் சென்ற வாகனம் ஒன்றில் சாகர் ஏற்றிச் செல்லப்பட்டார். ராஜிவ் காந்தி சென்ற வாகனம் வாகனத் தொடரணியின் நடுப்பகுதியில் சென்றது.

இந்த வாகனத் தொடரணி விசாகப்பட்டினம் வவீதிகளில் சுற்றுலா விடுதியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது விமான நிலையத்தில் மற்றொரு முக்கிய நிகழ்வு நடந்தது. அங்கிருந்த விமானப் பொறியாளர்கள் விமானத்தின் தகவல் தொடர்பு சாதனக் கோளாறைச் சரி செய்துவிட்டனர். விமானியும் அதை இயக்கிப் பார்த்து சரியாக வேலை செய்வதாக கிளியரன்ஸ் கொடுத்துவிட்டார்.

இந்தத் தகவல் வாகனத் தொடரணியில் சென்றுகொண்டிருந்த ராஜிவ் காந்திக்குத் தெரிவிக்கப்பட்டது.

தற்போது இருப்பதுபோன்ற செல்போன் வசதிகள் அந்த நாட்களில் இருக்கவில்லை. இதனால் விசாகப்பட்டினம் விமான நிலையத்திலிருந்த பொலிஸ் கன்ட்ரோல் ரூமில் இருந்து பொலிஸ் வயர்லெஸ் மூலம் ராஜிவ்காந்தி சென்றுகொண்டிருந்த வாகனத்தில் இருந்த வயர்லெஸ் சாதனத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விமானம் பழுதுபார்க்கப்பட்ட தகவலை அறிந்துகொண்ட ராஜிவ் காந்தி விசாகப்பட்டினத்தில் அன்றிரவு தங்கும் எண்ணத்தைக் கைவிட்டார். முன்பு திட்டமிட்டபடி சென்னைக்குச் செல்லப்போவதாகக் கூறி தான் சென்றுகொண்டிருந்த வாகனத்தை விமான நிலையத்தை நோக்கித் திருப்புமாறு கூறினார்.

இப்படியான சூழ்நிலையில் பாதுகாப்பு ஏற்பாடு நடைமுறையுடன் சென்றுகொண்டிருக்கும் ஒரு வாகனத் தொடணியில் செய்யவேண்டிய நடைமுறை என்னவென்றால் வாகனத் தொடரணியின் முன்னால் சென்றுகொண்டிருக்கும் வாகனத்துக்கு (பைலட் வாகனம்) இந்தத் தகவல் முதலில் தெரிவிக்கப்பட வேண்டும். அதையடுத்து வாகனத் தொடரணியில் சென்றுகொண்டிருக்கும் சகல வாகனங்களும் நிறுத்தப்பட வேண்டும். அதன்பின் எந்த மாற்றுப் பாதையால் வாகனத் தொடரணி செல்லப்போகின்றது என்ற விபரம் தொடரணியின் தொடக்கத்திலிருந்த வாகனத்துக்குத் தெரியப்படுத்தி அனைத்து வாகனங்களும் மாற்றுப் பாதையால் செல்ல வேண்டும். இதுதான் எங்குமுள்ள நடைமுறை.

அன்றிரவு விசாகப்பட்டினத்தில் ராஜிவ் காந்தியை ஏற்றிச் சென்ற தொடரணியில் இந்த நடைமுறை காற்றில் விடப்பட்டது.
சடுதியாக ஒரு திசைதிருப்பல்

ராஜிவ் காந்தி தனது வாகனத்தை விமான நிலையத்தை நோக்கித் திருப்புமாறு கூறியதும் அவரது வாகனம் திசை மாறி விமான நிலையத்துக்குச் செல்லும் பாதையில் ஓடத் தொடங்கியது. அவரது வாகனத்துக்கு பின்னால் வந்த மற்றய வாகனங்களும் இந்த வாகனத்தைப் பார்த்துப் பின்தொடர்ந்தன.

ஆனால்…

வாகனத் தொடரணியில் ராஜிவ் காந்தியின் வாகனத்துக்கு முன்னால் சென்று கொண்டிருந்த வாகனங்களுக்கு இந்தத் திசை திருப்பல் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. விளைவு? முன்னால் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் சுற்றுலா விடுதியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தன. அந்த வாகனங்களில் ஒன்றில்தான் ராஜிவ் காந்தியின் மெய்ப்பாதுகாப்பு அதிகாரி சாகர் தனது துப்பாக்கியுடன் சென்றுகொண்டிருந்தார்.

அடுத்த விஷயம் என்னவென்றால் முன்னால் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் சுற்றுலா விடுதியை அடைந்து நிறுத்தும்வரை தமக்குப் பின்னால் மிகுதி வாகனங்கள் (தாம் பாதுகாப்புக் கொடுத்துக் கொண்டிருந்த ராஜிவ் காந்தியின் வாகனம் உட்பட) தம்மைப் பின்தொடரவில்லை என்பதே தெரிந்திருக்கவில்லை!

ராஜிவ் காந்தி கடைசியாக விமானமேறிய விசாகப்பட்டினம் விமான நிலையம்

விமான நிலையத்துக்கு ராஜிவ்காந்தி திரும்பி வந்து பழுதுபார்க்கப்பட்ட விமானத்தில் ஏறி அமர்ந்தபோதுதான் அவருடன் பயணிக்க வேண்டிய மெய்ப்பாதுகாவல் அதிகாரி சாகர் அங்கே இல்லை என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். அவர் சுற்றுலா விடுதிவரை சென்றுவிட்டுத் திரும்பி வந்துகொண்டிருக்கும் விஷயமும் தெரிய வந்தது.

சாகர் விமான நிலையத்தை நோக்கி வந்துகொண்டிருக்கிறார் என்ற விஷயம் தெரிந்திருந்தும் ராஜிவ் காந்தியை ஏற்றிக்கொண்டு சென்னைக்குப் பறக்கத் தயாராக இருந்த விமானம் அவருக்காகக் காத்திருக்கவில்லை!

மெய்ப்பாதுகாவலர் அதிகாரி இல்லாமலேயே ராஜிவ் காந்தி சென்னையை நோக்கிப் பயணிக்கத் தொடங்கினார். சென்னை விமான நிலையத்தில் புதியதொரு மெய்ப்பாதுகாவல் அதிகாரி ராஜிவ் காந்தியின் வருகைக்காகக் காத்திருந்த போதிலும் அந்த அதிகாரி ராஜிவ் காந்தியின் பாதுகாப்புக்காகத் தன்னுடன் கொண்டு செல்லவேண்டிய கைத் துப்பாக்கி சாகருடன் விசாகப்பட்டினத்திலேயே தங்கிவிட்டது.

இந்த முக்கிய பாதுகாப்புக் குளறுபடியை ஏன் புலன்விசாரணையின்போது கூட யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை? இது சாதராணமாக நடைபெற்ற தவறா அல்லது இதன் பின்னால் யாரோ திட்டமிட்டு வேலை செய்து கொண்டிருந்தார்களா? துப்பாக்கியுடன் கூடிய தனிப் பாதுகாப்பு இல்லாமல் ராஜிவ் காந்தி அன்றிரவு சென்னையில் நடமாடவேண்டும் என்று யாரோ திட்டமிட்டுச் செயற்படுத்திய சதியா இது? இந்தக் கேள்விகளுக்கு இன்றுவரை தெளிவான பதில் இல்லை!
இதுதான் தனது கடைசி விமானப்பயணமாக இருக்கப்போகின்றது என்று கற்பனைகூடச் செய்திராத ராஜிவ் காந்தியை ஏற்றிக்கொண்டு கிளம்பிய அந்த விமானம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இரவு 8.20க்கு தரையிறங்கியது.
(2ம் அத்தியாயத்தில் தொடரும்… அது அடுத்த வாரம்

டாக்டர் புரட்சித் தலைவி இந்த 2011-2016-ம் ஆண்டிற்கான அமைச்சரவையின் முதல்கட்டப் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளார்கள்..!

ஜெயலலிதா(ஸ்ரீரங்கம்) - முதலமைச்சர்

1. பன்னீர்செல்வம் (போடிநாயக்கனூர் தொகுதி) - நிதியமைச்சர்

2. செங்கோட்டையன் (கோபிசெட்டிப்பாளையம்) - விவசாயம்

3. நத்தம் விசுவநாதன் (நத்தம்) - மின்சாரம், மதுவிலக்கு

4. கே.பி.முனுசாமி (கிருஷ்ணகிரி) - உள்ளாட்சித் துறை

5. சி.சண்முகவேலு (மடத்துக்குளம்) - தொழில்துறை

6. பி.தங்கமணி (குமாரபாளையம்) - வருவாய்த் துறை

7. கே.வி.ராமலிங்கம் (ஈரோடு மேற்கு) - பொதுப்பணித் துறை

8. வி.செந்தில்பாலாஜி (கரூர்) - போக்குவரத்து துறை

9. டாக்டர் வி.எஸ்.விஜய் (வேலூர்) - மக்கள் நல்வாழ்வுத் துறை

10. அக்ரி கிருஷ்ணமூர்த்தி (கலசப்பாக்கம்) - உணவுத் துறை

11. டி.கே.எம். சின்னய்யா (தாம்பரம்) - பிற்படுத்தப்பட்டோர் நலன்

12. வைத்தியலிங்கம் (ஒரத்தநாடு) - வீட்டு வசதித் துறை

13. சி.வி.சண்முகம் (விழுப்புரம்) - பள்ளிக் கல்வித் துறை

14. பி.பழனியப்பன் (பாப்பிரெட்டிப்பட்டி) - உயர்கல்வித் துறை

15. செல்லூர் ராஜூ (மதுரை மேற்கு) - கூட்டுறவுத் துறை

16. எடப்பாடி பழனிச்சாமி (எடப்பாடி) - நெடுஞ்சாலைகள்

17. சி.கருப்பசாமி (சங்கரன்கோவில்) - கால்நடைத் துறை

18. எஸ்.பி.சண்முகநாதன் (ஸ்ரீவைகுண்டம்) - இந்து சமய அறநிலையத் துறை

19. எம்.சி.சம்பத் (கடலூர்) - ஊரகத் தொழில் துறை

20. ஜி.செந்தமிழன் (சைதாப்பேட்டை) - செய்தி மற்றும் விளம்பரத் துறை

21. திருமதி கோகுல இந்திரா (அண்ணா நகர்) - வணிக வரித் துறை

22. திருமதி செல்வி ராமஜெயம் (புவனகிரி) - சமூக நலம்

23. பி.வி.ரமணா (திருவள்ளூர்) - கைத்தறித் துறை

24. ஆர்.பி.உதயகுமார் (சாத்தூர்) - தகவல் தொழில் நுட்பம்

25. என்.மரியம் பிச்சை (திருச்சி-மேற்கு) - சுற்றுச்சூழல் துறை

26. முக்கூர் என்.சுப்பிரமணியன் (செய்யார்) - ஆதிதிராவிடர் நலன்

27. இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) - சட்டத் துறை

28. புத்தி சந்திரன் (ஊட்டி) - சுற்றுலா துறை

29. எஸ்.டி.செல்லப்பாண்டியன் (தூத்துக்குடி) - தொழிலாளர் நலன்

30. கே.டி.பச்சைமால் (கன்னியாகுமரி) - வனத்துறை

31. எஸ்.பி.வேலுமணி (தொண்டாமுத்தூர்) - சிறப்புத் திட்ட அமலாக்கம்

32. கே.ஏ.ஜெயபால் (நாகப்பட்டினம்) - மீன் வளத் துறை

33. என்.ஆர்.சிவபதி (முசிறி) - விளையாட்டுத் துறை


Read more: http://truetamilans.blogspot.com/2011/05/blog-post_15.html#ixzz1MYFlnKKG

கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'! - எகிப்து புரட்சி இங்கேயும் நிகழ்ந்தது..

'ஈழத்து சோகம்தான் காவு வாங்கி​விட்டது!’, 'ஸ்பெக்ட்ரம் ஊழல்தான் தலை குப்புறக் கவிழ்த்துவிட்டது!’, 'கூட்டணிக் குளறுபடிதான் ஏமாற்றி​விட்டது!’ - தி.மு.க-வின் தோல்விக்கு இப்படி எத்தனையோ காரணங்கள் அடுக்கடுக்காகச் சொல்லப்பட்டாலும், அதில் மிக முக்கியமானது குடும்பப் பூசல்!

தேர்தல் களத்தில் ஜாம்பவானாக நின்று சாதித்து இருக்கவேண்டிய கருணாநிதி, கோபால​​புரத்துக்கும் சி.ஐ.டி. காலனிக்குமாக அலைந்து அலைந்தே அல்லாடிப்போனார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டும் கூட்டணிப் பூசல்களைச் சரிசெய்ய முடியாமல் கருணாநிதி போராடியதை யாரும் மறந்திருக்க முடியாது. ஆனால், கூட்டணிக் குடைச்சலைக் காட்டிலும், அவர் அப்போது அதிகமாக குமைந்துபோனது குடும்பக் குடைச்சலால்தான். 'கனிமொழி என்னைக்கு கட்சிக்கு வந்த ஆள்? குலாம் நபி ஆசாத்துடன் பேச்சுவார்த்தை நடத்த கனிமொழி எல்லாம் ஒரு ஆளா?’ என அழகிரி ஆவேசப்பட... தயாநிதி மாறன் தகிக்க... இதிலேயே நிலை குலைந்து போனார் கருணாநிதி. 'காங்கிரஸைக் கை கழுவிவிடலாம்!’ என சீனியர் மந்திரிகள் அட்வைஸ் பண்ண, 'அப்படிப் பண்ணினால் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், எப்படியும் கனிமொழியை உள்ளே தள்ளிடுவாங்களேப்பா’ எனத் தழுதழுத்தார் கருணாநிதி. குடும்பக் கவலையிலேயே காங்கிரஸுக்கு 63 தொகுதிகளை ஒதுக்கிக் கொடுத்து ஆசுவாசமானார். 'ஜெயிப்போமா... தோற்போமா?’ எனத் திணறிய ஜெயலலிதாவுக்கு முதல் நம்பிக்கையே காங்கிரஸுக்கு இத்தனைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டதுதான்!

சரி, கூட்டணிதான் அமைந்துவிட்டது. இனியாவது களத்தில் கனகச்சிதமாகச் செயல்படலாம் என கருணாநிதி நினைக்க... அதற்கும் செக் வைத்தார் ராஜாத்தி அம்மாள்.

''செல்வி, துர்கா, கயல்விழி எல்லாம் பிரசாரத்துக்குப் போகும்போது, கனிமொழி மட்டும் போகக் கூடாதா?'' எனக் கேள்வி எழுப்பினார். 'கனிமொழி பிரசாரத்துக்கு வந்தால், ஸ்பெக்ட்ரம் விஷயத்தை மக்களுக்கு நினைவூட்டுவதுபோல் ஆகிவிடும்!’ என அழகிரி தொடங்கி, கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் அபாயம் பாடினார்கள். ஆனாலும், கனிமொழியின் திடீர் பிரசாரப் பயணத் திட்டம் அறிவாலயத்தால் அறிவிக்கப்பட்டது. 'கனிமொழி எங்கே வேண்டுமானாலும் பிரசாரம் செய்யட்டும். ஆனால், மதுரைப் பக்கம் கால் வைக்கக் கூடாது. இதையும் மீறி வந்தால், தென் மாவட்டத் தோல்விக்கு நான் பொறுப்பேற்க முடியாது!’ என முழங்கினார் அழகிரி. அந்த வார்த்தைகளுக்கு ஒரு வாரம் மட்டுமே மதிப்பு இருந்தது. கருணாநிதியின் மதுரைப் பிரசாரத்தில் கனிமொழி நடுநாயகமாக நிறுத்தப்பட்டார். அழகிரிக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. 'வடிவேலுவை பிரசாரத்துக்கு இழுத்து வந்து ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை மறக்கடிக்க, நான் போராடிக்கிட்டு இருக்கேன். இவரோ, தன் மகளை முன்னிறுத்துறதா நினைச்சு, ஊரெல்லாம் ஸ்பெக்ட்ரத்தை ஞாபகப்படுத்துறார். கட்சிக்காரங்க யாரும் இனி என் பேச்சைக் கேட்க வேண்டாம். தலைமையோட வழியிலேயே நீங்களும் இஷ்டத்துக்கு செயல்படுங்க!’ என ஆவேசம் காட்டிய அழகிரி, அத்தோடு அமைதியானார். திருமங்கலம் பாணியில் தென் மாவட்டங்களில் தி.மு.க-வை வெற்றி பெறவைத்துவிடலாம் என நினைத்த அழகிரி, கனிமொழிக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தில் கடுப்பாகி, வீட்டோடு முடங்கிப்போனார்.

'சென்னையில் ஜெயிப்பது சுலபம் அல்ல’ என எண்ணி, சொந்த ஊரான திருவாரூர் பக்கம் ஒதுங்கிய கருணாநிதி, அங்கேயும் குடும்ப அல்லாட்டத்துக்கு ஆளாகிப்போனார். தந்தையின் வெற்றிக்காக தலைமகள் செல்வி திருவாரூரில் வீடு வீடாகப்பிரசாரம் செய்ய... அங்கேயும் போட்டிக்குப் போனார் கனிமொழி. அக்கா ஒரு புறம்... தங்கை ஒரு புறம்... எனப் பிரசாரம் செய்யப் பிடிக்காமல், செல்வி கோபித்தபடி திருவாரூரில் இருந்த சண்முகத்தம்மாள் வீட்டுக்குத் திரும்பினார். அங்கேயும் கனி ஆஜரானதுதான் ஹைலைட்! ஒப்புக்குச்சப்பாக கனியோடு சில வார்த்தைகள் செல்வி பேசினாலும், உள்ளுக்குள் மட்டும் கோபம் ஆறவில்லை. இதற்கிடையில், 'சென்னையில் பல தொகுதிகள் வீக்’ என உளவுத் துறை நோட் போட, தயாநிதி மாறனை தீவிரப் பிரசாரத்தில் இறக்கலாம் என முடிவு எடுத்தார் கருணாநிதி. அதற்கு எங்கே இருந்து தடை வந்ததோ... கடைசி வரை கட்சியின் உத்தரவுக்குக் காத்திருந்த தயாநிதி, ஒரு சில தொகுதிகளில் மட்டும் சுற்றிச் சுழன்று ஒதுங்கிவிட்டார்!

பல மாவட்ட நிர்வாகிகள் சுறுசுறுப்பு இழந்துபோனதற்கும் கருணாநிதியின் குடும்பப் பூசல்தான் காரணம். 'ஸ்டாலினை பிரசாரத்துக்கு அழைத்தால், அழகிரி கோபம் ஆவார்’, 'அழகிரியை அழைத்தால், ஸ்டாலின் கோபப்படுவார்’, 'கனிமொழியை அழைத்தால், இருவரையும் பகைத்த மாதிரி ஆகிவிடும்!’ என அனுமான பயத்திலேயே கட்சி நிர்வாகிகள் அல்லாடிப்போனார்கள். கட்சிக்காரர்களின் உள்ளடி வேலைகளை யாரிடம் சொல்வது என்று வேட்பாளர்களுக்குப் புரியவில்லை. 'ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதிக்கு நிச்சயம் பிரசாரத்துக்கு அழைப்பார்கள்!’ எனக் காத்திருந்தார் அழகிரி. ஆனால், கடைசி வரை அதற்கும் அழைப்பு இல்லை.

இதற்கிடையில் திருவாரூரில் பிரசாரத்தை முடித்த கருணாநிதி, மொத்தக் குடும்ப உறவுகளையும் அங்கே வைத்துக்கொண்டு, 'கனிமொழிதான் இந்தத் தேர்தலில் தீவிரமாகப் பிரசாரம் செய்தது!’ என சர்ட்டிஃபிகேட் கொடுக்க... செல்வி சினத்தோடு சென்னைக்கு வந்துவிட்டார்.

மொத்தத்தில் கருணாநிதியின் குடும்ப மோதல் பெரிதாக சந்தி சிரித்தது இந்தத் தேர்தலில்தான். ஸ்டாலின், அழகிரி ஆதரவாளர்கள் பகிரங்கமாக உள்ளடி வேலைகளை நிகழ்த்தியதும், அதைக் கண்டிக்க முடியாமல் கருணாநிதி அல்லாடியதும் கண்கூடான சாட்சி.

தேர்தல் முடிந்து, ஸ்பெக்ட்ரம் விவகாரங்களில் இருந்து கனிமொழி​யைக் காப்பாற்ற டெல்லிக்குப் போன ராஜாத்தி, ''என் மகளை உள்ளே வெச்சிட்டு, யார் யாரோ ஆளப் பார்க்குறாங்க. நான் இருக்​கும் வரை, அது நடக்காது!'' என ஆவேசமாகக் கொந்தளித்தார். கருணா​நிதியின் குடும்பக் குடுமிப் பிடி டெல்லியிலும் சிரிப்பாய் சிரித்தது... சிரிக்கிறது!

எகிப்தில் மிகப் பெரிய புரட்சி வெடிக்க முக்கியக் காரணமாக இருந்தது அங்கே நிலவிய குடும்ப ஆதிக்கம்தான். அதில் கொஞ்சமும் குறைவு இல்லாத அளவுக்கு கும்மாளமும் குடுமிப் பிடியுமாக நடந்த குடும்ப ஆதிக்கம்தான் தி.மு.க. என்னும் யானையை இந்தத் தேர்தலில் தோல்விச் சேற்றுக்குள் தள்ளியது!

ஜூனியர் விகடன் மே 18,2011

காங்கேயம் இனப் பசுக்கள்

''காங்கேயம் இனப் பசுக்கள் அதிகளவில் பால் கொடுப்பதில்லை என்பதால், இவற்றை வளர்க்க பலரும் முன்வருவதில்லை. கடந்த சில ஆண்டுகளாகத்தான் நாட்டு மாடுகளின் மகத்துவம் மக்களுக்குப் புரியத் தொடங்கியுள்ளது. பாலை விட, சாணம், சிறுநீர் போன்றவை இயற்கை விவசாயத்துக்குத் தேவைப்படுவதால், காங்கேயம் பசுக்களை விவசாயிகள் இப்போது விரும்பி வளர்க்கத் தொடங்கியுள்ளார்கள். ஆனால், தேவைக்கேற்ற அளவில் காங்கேயம் காளைகள் நம்மிடம் இல்லை என்பதுதான் உண்மை. திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் பரவலாக பொலிக்காளைகள் வளர்க்கப்படுகின்றன. சிலர் காங்கேயம் பசுக்களை பருவத்தின்போது பொலிக்காளைகள் கிடைக்காமல் போனால், வேறு இனத்துடன் இனச்சேர்க்கை செய்து விடுகிறார்கள். அதனால் தூய காங்கேயம் கன்று பிறப்பதில்லை.

அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைகளில் விண்ணப்பம் செய்தால், காங்கேயம் இனக் காளையின் விந்தணுக் குச்சிகளை (ஸ்ட்ரா) வாங்கித் தருவார்கள். ஓசூரில் உள்ள கால்நடைப் பண்ணையில் காங்கேயம் காளைகளின் விந்தணுக் குச்சிகள் கிடைக்கின்றன.

கன்றுகள் சுழியுடன் பிறந்தால், குடும்பத்துக்கு ஆகாது என்று நம்பப்படுகிறது. அறிவியல் ரீதியாக இது தவறு என்றாலும், பலர் இதை நம்புகின்றனர். அதனால், கால்நடைப் பண்ணைகளில் சுழி இல்லாத காளைகளில் இருந்து சேகரிக்கப்படும் விந்தணுக் குச்சிகளைக் கேட்டு வாங்கிக் கொள்ளலாம். நாமேகூட காளைகளைத் தேர்வு செய்து கொள்ளலாம்.''

தொடர்புக்கு: ஓசூர் கால்நடைப் பண்ணை, தொலைபேசி: 0434-4262432.

சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையம், அலைபேசி: 99944-33456.