"ராஜீவ்காந்தியைக் கொன்ற விடுதலைப் புலிகளுக்கு வால் பிடித்த கட்சிகளின் கால் பிடித்தாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று கொள்கையற்ற கூட்டணியை சோனியா அமைத்திருக்கிறார். தமிழகத்துக்குத் துரோகம் செய்யும், காவிரி நீர் தமிழகத்துக்குக் கிடைத்துவிடக் கூடாது என்பதில் கர்நாடகத்தை விட தீவிரமாகச் செயல்படுகிறவர் கருணாநிதி. அடுத்த கூட்டணிக்கு ஓடிப் போவதையே அன்றாட நடவடிக்கையாகக் கொண்டிருக்கும் ஜாதி வெறியர் ராமதாஸ். தமிழகத்தின் நலன்களைப் பற்றிக் கவலைப்படாத, வாய்ச்சவடால் வைகோ. வங்கத்தில் ஒன்று, தமிழகத்தில் ஒன்று என்று இரட்டைநிலை எடுக்கிற தத்துவப் பச்சோந்திகள் கம்யூனிஸ்டுகள். இவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு கூட்டணியை அமைத்துள்ளனர். எந்தக் கட்சியாக இருந்தாலும் தனித்தோ, கூட்டுச் சேர்ந்தோ போட்டியிடலாம். ஆனால் அதற்குப் பொதுமக்கள் நலனே முக்கியமான குறிக்கோளாக இருக்க வேண்டும்." - 2004 மார்ச் 10
Saturday, March 28, 2009
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment