Thursday, December 30, 2010

டிராக்டர் தயாரித்த ஃபெராரி!

ஸ்கோடா என்றால் செக் மொழியில் சேதாரம் டேமேஜ்) என்று அர்த்தம்!

உலகிலேயே முதன்முதலில் விற்பனை செய்யப்பட்ட கார் பென்ஸ். 1887-ம் ஆண்டு முதல் பென்ஸ் விற்பனை செய்யப்பட்டது!

முதன்முதலில் தயாரிக்கப்பட்ட கார்களில் ஸ்டீயரிங் கிடையாது. அதற்கு பதில் லீவர்களை வைத்து காரை ஓட்டினார்கள்! அப்போது வேகமாக கார் ஓட்டுபவர்களை பிடிக்க நியூயார்க் போலீஸார் சைக்கிளில் காரைத் துரத்திப் பிடிப்பார்களாம்!

1923 ஆம் ஆண்டு கார்களில் ஆக்ஸஸரியாக முதன்முதலில் ரேடியோ சேர்க்கப்பட்டது!

புய்க் கார்தான் முதன்முதலாக தனது காரில் எலெக்ட்ரிக் டர்ன் இண்டிகேட்டர்களை அறிமுகப்படுத்தியது!

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட முதல் ஜப்பானிய கார் ஹோண்டா அகார்டு!

'ஜீப்’ என்கிற பெயர் அமெரிக்க ராணுவத்தின் ஒரு பிரிவான 'ஜி.பி’ என்கிற பெயரில் இருந்து தோன்றியதுதான்! ஜெனரல் பர்பஸ் என்பதன் சுருக்கம்தான் ஜி.பி!

உலகிலேயே மிக அதிகமான டிராஃபிக் ஜாம் 1980 ஆம் ஆண்டு பாரிஸில் நடந்தது. பாரீஸில் இருந்து லியான் நகரம் வரை நீண்ட இந்த டிராஃபிக் ஜாமின் நீளம் 175 கி.மீ!

உலகிலேயே சொகுசுக் காரான ரோல்ஸ் ராய்ஸ் அதிகம் இருக்கும் நகரம் ஹாங் காங்!

பர்ஃபாமென்ஸ் கார்களுக்குப் புகழ்பெற்ற ஃபெராரி நிறுவனம் முதன்முதலில் டிராக்டர்களைத்தான் தயாரித்தது!

கியர் லீவருக்கு அருகில் இருக்கும்படியான ஹேண்ட் பிரேக் முதன்முதலில் 1914 ஆம் ஆண்டு பக்கார்டு என்னும் காரில் அறிமுகம் செய்யப்பட்டது!

கார்களில் விண்ட்ஷீல்டு வைப்பர்களைப் பொருத்துவதற்கான ஐடியாவைக் கொடுத்தது மேரி ஆண்டர்சன் என்கிற பெண்தான்.

இப்போது செல்போன்களைத் தயாரிக்கும் நிறுவனமான மோட்டரோலா முதன்முதலில் கார்களுக்கு ரெக்கார்டர்களைத்தான் தயாரித்தது. அப்போது மார்க்கெட்டில் இந்த ரெகார்டர்கள் தயாரிப்பதில் முண்ணணியில் இருந்த விக்டரோலா நிறுவனத்துக்குப் போட்டியாக மோட்டரோலா என இந்த நிறுவனத்துக்குப் பெயர்வைக்கப்பட்டது!

உலகிலேயே முதல்முறையாக ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் ஏபிஎஸ் பிரேக்ஸுடன் வெளிவந்த கார் ஆடி க்வாட்ரோ!

ஃபெர்டினாட் போர்ஷே என்னும் டிசைன் இன்ஜினியர்தான் முதன்முதலில் ஃபோக்ஸ்வாகன் கார்களை வடிவமைத்தவர்!

விபத்து ஏற்பட்டவுடன் வெறும் 40 மில்லி செகண்டுகளில் காற்றுப்பைகள் விரிந்துவிடும்!

குட்ரிச் என்கிற டயர் நிறுவனம்தான் முதன்முதலில் ட்யூப்லஸ், ரேடியல், ரன் ஃப்ளாட் டயர்களை அறிமுகப்படுத்திய

No comments: