ஸ்வீட் கான் புதினா சூப்
தேவை:-
ஸ்வீட் கார்ன் - 1 கப்,
புதினா - கைப்பிடியளவு
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
வெங்காயத் தாள் - சிறிது
உப்பு, வெண்ணெய் - தேவைக்கு
தக்காளி சாஸ், சில்லி சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:- வேக வைத்த கார்ன், இஞ்சி, பூண்டு விழுது, புதினா, உப்பு இவற்றை மிக்ஸியில் இட்டு நைசாக அரைக்கவும். கடாயில் வெண்ணெய் போட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அதில் அரைத்த கார்ன் கலவையைப் போட்டு பச்சை வாசனை போகும்வரை சிறிது நேரம் வதக்கவும். தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி, பொங்கும் சமயம் இறக்கி வைத்து தக்காளி சாஸ், புதினா பொடி, சில்லி காஸுடன் பரிமாறவும்.
வாழை,பட்டாணி கட்லெட்
தேவை:-
வாழைக்காய் - 2
பச்சை பட்டாணி - 100 கிராம்
பச்சை மிளகாய் - 2,
மிளகாய்ப் பொடி - 1/2 ஸ்பூன்
கரம் மசாலா பொடி - 1/3 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை - கைப்பிடியளவு
உப்பு - ருசிக்கு
பிரெட் தூள் - 1 கப்
செய்முறை:- வாழைக்காயை வேக வைத்து தோலுரித்து நன்றாக மசிக்கவும். அதேப்போல் பச்சை பட்டாணியை வேக வைத்து மசிக்கவும். பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், மிளகாய்ப் பொடி சிறிது, கரம் மசாலா பொடி, நறுக்கிய கொத்தமல்லி, உப்பு, இவற்றை மசித்த வாழை, பட்டாணியில் கலந்து, சிறு சிறு வடைகளாகத் தட்டி பிரெட் துகள்களில் புரட்டி எடுத்து தோசைக் கல்லில் போட்டு ஒரு ஸ்பூன் நெய்யில் வறுத்து எடுக்கவும். ருசியான கட்லெட் தயார்!
கோரியண்டர் சீஸ் பரோட்டா
தேவை:
கோதுமை மாவு - 200 கிராம்
சீஸ் - 100 கிராம்
நெய் - பொரிக்க
பால், உப்பு - தேவைக்கு
கொத்தமல்லி தழை - கைப்பிடியளவு
இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை: கோதுமை மாவில் ஒரு ஸ்பூன் நெய், சிட்டிகை உப்பு கலந்த சிறிது பால் தெளித்துக் கெட்டியாகப் பிசைந்து 1/2 மணி நேரம் ஊற வைக்கவும். சீஸ்சை நன்றாகத் துருவி, அதில் சிறிது இஞ்சிபூண்டு விழுது, நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்துக் கலந்து வைக்கவும். பிறகு பிசைந்த மாவை சிறு பூரிகளாக இட்டு அதன் நடுவில் ஒரு ஸ்பூன் சீஸ் கலவையை வைத்து மூடி, பிறகு மாவு தொட்டு சப்பாத்திகளாக இட்டு தவாவில் போட்டு, நெய் ஊற்றி இருபுறமும் பொன்னிறமாக்கி எடுத்து, கோரி சீஸ் பரோட்டாவைப் பரிமாறவும்.
மிக்ஸட் வெஜிடபிள் கடாய்
தேவை:
தக்காளி - 2
வெங்காய் - 2
பீன்ஸ் - 100 கிராம்
காலிஃப்ளவர் துண்டுகள் - கைப்பிடியளவு
குடை மிளகாய் - 1
கேரட் - 1
உருளைக் கிழங்கு - 1
இஞ்சி, பூண்டு விழுது - 1/2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா பொடி - 1/2 டீஸ்பூன்
காரப் பொடி - 1/2 டீஸ்பூன்
தக்காளி சாஸ் - 1 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
சீரகம் - 1/2 டீஸ்பூன்
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
செய்முறை:-
எல்லா காய்கறிகளையும் பொடியாக நறுக்கி, வதக்கி, வேக வைத்து எடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், ஜீரகம், இஞ்சி பூண்டுவிழுது, கரம் மசாலா பொடி, காரப் பொடி, ஒரு ஸ்பூன் தக்காளி சாஸ், உப்பு போட்டு, வெந்த காய்கறிகளையும் போட்டு நன்றாகக் கலந்து, ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
பீட்ரூட் ரைத்தா
தேவை:
பீட்ரூட் துருவல் - 1 கப்
தயிர் - 2 கப்
கடுகு,சீரகப் பொடி -1/2 டீஸ்பூன்
உப்பு, நெய் - தேவைக்கு
புதினா- சிறிது
செய்முறை:
கெட்டித் தயிரை நன்றாக மத்தால் கடைந்து, அதில் துருவிய பீட்ரூட், சீரகப் பொடி, உப்பு போட்டு கலக்கவும். நெய்யில் கடுகு, நடுவில் கீறிய நான்கு பச்சை மிளகாய் போட்டு தாளித்து தயிரில் கொட்டிக் கலந்து, பொடியாக நறுக்கிய புதினாவைத் தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.
சாக்கோ ஆப்பிள் பை
தேவை:
ஆப்பிள் - 2
சாக்கோ சிப்ஸ் - 1 கப் (துருவிய சாக்லெட்)
கன்டென்ஸ்ட் மில்க்
குட்டிக் குட்டியாக கட் செய்த பாதம், பிஸ்தா, காஜு, கிஸ்மிஸ், ஸல்வர் ஃபாயில் கட்ஸ் - 6
செய்முறை:ஆப்பிளைத் தோலுரித்து துருவி, கன்டென்ஸ்ட் மில்க், சாக்கோ சிப்ஸ் போட்டுக் கலக்கவும். ஸில்வர் ஃபாயில் கப்பில் போட்டு கட் செய்து வைத்துள்ள உலர் பருப்புகளை அதில் இட்டு அலங்கரிக்கவும். ப்ரீஸரில் 3 மணி நேரம் வைக்கவும். பிறகு எடுத்துப் பரிமாறவும்.
Saturday, October 22, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment