Thursday, April 18, 2013

கோட்டுக்கறி குழம்பு


தேவையான பொருட்கள்:

துவரரிசி - 100 கிராம்
சின்ன வெங்காயம் - 100 கிராம் (குழம்பில் போட)
பச்சைமிளகாய் - 10 மிளகாய்
பீன்ஸ் - 10 எண்ணிக்கை
உருளைகிழங்கு - 2 கிழங்கு
காரட் - 1
வாழைக்காய் - 1
மரவள்ளிகிழங்கு - 1/2 கிழங்கு
கரனகிழங்கு - 1 கிழங்கு
பரங்கிக்காய் - 1/2 கீற்று
சீரகம் - 50 சீரகம்
பச்சரிசி - 50 கிராம்
மஞ்சள் - 1/2 வில்லு
புளி - 2 எண்ணிக்கை
தக்காளி - 2 எண்ணிக்கை
பெருங்காயம் - 5 கிராம்
கடலைஎண்ணெய் - 50 மில்லி (தேவைகேற்ப)
கடுகு - 1 தேக்கரண்டி
பட்டமிளகாய் - 4 எண்ணிக்கை
கருவேப்பில்லை - 1 கொத்து
மல்லி தழை - 1 கொத்து
சின்ன வெங்கயாம் - 5 எண்ணிக்கை (தாளிப்பதற்கு)

சமைக்கும் முறை:
  1. பச்சரிசி, மஞ்சள், சீரகம் மூன்றையும் நன்றாக வறுத்து அம்மியில் வைத்து பொடியாக அடித்து கொள்ளவும்.
  2. துவரரிசியை வேக வைக்கவும்.
  3. வெந்தவுடன் பச்சைமிளகாய், வெங்காயம் நறுக்கி அதனுடன் வேக வைக்கவும்.
  4. வெந்த பின் காரட், பீன்ஸ், வாழைக்காய், மரவள்ளிகிழங்கு, கரனைகிழங்கு, பரங்கிக்காய், உருளைகிழங்கு ஆகியவற்றை சேர்த்து வேகவிடவும்.
  5. இதனுடன் புளியை கரைக்கவும்.
  6. செய்முறையில் முறை 1 இல் உள்ள பொடியை சேர்க்கவும்.
  7. நன்றாக கிளறி குழம்பை கொதிக்க விடவும்
  8. வேறொரு சட்டியில் இதமான சூட்டுடன் எண்ணையை ஊற்றி கடுவுனை சேர்த்து கடுகு வெடிக்கும் வரை காத்திருக்கவும்.
  9. கடுகு வெடித்த பிறகு பட்டமிளகாய், வெங்காயம் மற்றும் பெருங்காயபொடி இவற்றை சேர்த்து வதக்கவும்.
  10. வதக்கியபிறகு கருவேப்பில்லை, மல்லி கொத்தை போடவும்.
  11. தாளித்த இவைகளை முன்பு கொதிக்க விட்ட குழம்பில் சேர்க்கவும்.
  12. சுவையான காசாங்காடு கிராம தை பொங்கல் கோட்டுகறி குழம்பு தயார்.

1 comment:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.