காதலில் விழுந்தேன் திரைப்படம் மதுரையில் திரையிடப் படவில்லை , அத்திரைப்படத்தை திரையிட திட்டமிட்டிருந்த திரையரங்கு உரிமையாளர்கள் முதல்வர் மகன் திரு மு.க அழகிரி அவர்களின் பெயரை சொல்லி பேசிய சில ரவுடிகளால் மிரட்டப் பட்டதாகவும் , அதனால் அத்திரைப்படம் மதுரை மற்றும் அதை சுற்றியுள்ள நான்கு மாவட்டங்களிலும் வெளியிட முடியவில்லை என்றும், நேற்றிலிருந்து சன் டிவியின் செய்திகளிலும் , சன் நியூஸ் செய்திகளிலும் மீண்டும் மீண்டும் கூறப் பட்டு வருகிறது.
ஆனால் மதுரையில் இருந்து எனக்கு கிடைத்த தகவல் வேறு மாதிரி உள்ளது. அதாவது சன் டிவி கூறுவது போல் எந்த திரையரங்கு உரிமையாளர்களும் இந்த திரைப்படத்தை திரையிட ஒப்புகொண்டதாக தெரியவில்லை, ஏனெனில் திரைப்படம் மாநிலலத்தின் மற்ற பகுதிகளில் வெளியான அன்று வரை மதுரை நகரின் எந்த திரையரங்கு சார்பிலும் அத்திரைபடத்தை தங்கள் திரையரங்கில் திரையிடப் போவதாக , எந்த விதமான சுவரொட்டி விளம்பரங்களையோ, நாளிதழ் விளம்பரங்களையோ செய்யவில்லை ,
எப்போதுமே மதுரையில் ஒரு திரைப்படம் வெளியாகிறதென்றால் அதற்கு ஒருவாரம் முன்பிருந்தே விளம்பரங்கள் செய்யப்படும்.இந்தப் படத்தை தயாரிக்கும் சன் டிவி குழுமத்தின் பத்திரிகையான தினகரனில் கூட முதல்நாள் வரை எந்த திரையரங்கையும் குறிப்பிட்டு விளம்பரம் செய்யப்படவில்லை. திரைப்படத்தின் விளம்பரத்தில் சென்னையை சேர்ந்த திரையரங்கங்களின் பெயர்கள்தான் குறிப்படப் பட்டிருந்தது.
சன் டிவி செய்திகளில் கூறுவது போல திரையரங்கு உரிமையாளர்கள் திரையிட ஒப்புக் கொண்ண்டு கடைசி நேரத்தில் மிரட்டப் பாட்டிருந்தால் , திரைப்படம் சம்பந்தமான விளம்பரங்கள் செய்யப் பட்டிருக்கும் அது போல் எதுவும் நடக்காத போது சன் டிவி கூறுவதை எப்படி ஏற்றுக் கொள்வது என்று தெரியவில்லை ...
அப்படியே சன் டிவி கூறுவதை நாம் நம்புவோமானால் , அரசுக்கோ அல்லது திரு மு.க.அழகிரி அவர்களுக்கோ பிடிக்காதவர்களின் திரைப்படங்கள் அவர்களால் தடுக்கப்படுகிறது என்றால் பின்னர் எப்படி அவர்களை நேரடியாக எதிர்க்கும் சரத்குமார் , விஜயகாந்த் ஆகியோரின் திரைபடங்கள் மட்டும் எந்த சிக்கலும் இன்றி தமிழகம் முழுவதும் வெளியாகின்றன ?
மதுரையும் அதைச் சுற்றியுள்ள நான்கு மாவட்டங்களிலும் சன் டிவி தயாரித்த காதலில் விழுந்தேன் திரைப்படம் வெளியாகாதது எந்த அளவிற்கு மக்களை பாதிக்கும் என்று தெரியவில்லை, ஆனால் சன் டிவி தனது செய்திகளில் டெல்லியில் இன்று நடந்த குண்டுவெடிப்புக்கு ஒதுக்கிய நேரத்தை விட காதலில் விழுந்தேன் திரைப்படத்தை மதுரையில் வெளியிட முடியாதையும் ,, திரைப்படம் மக்களால் நன்றாக ரசிக்கப்படுவதாகவும், திரைப்படம் நன்றாக ஓடுவதாகவும் கூறுவதற்கு அதிக நேரம் ஒதுக்கப்பட்டு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.இதுதானேமக்களின் முக்கிய பிரச்சினை.
இதுவரை எத்தனையோ திரைப்படங்கள் தயாரிப்பாளர்கள் , விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் இடையே பிரச்சினைகள் ஏற்பட்டு சில ஊர்களில் திரையிட முடியாமலோ அல்லது தாமதமாக திரையிடப்படும் நிலையோ ஏற்பட்டது உண்டு.
இந்த திரைப்படத்தை சன் டிவி தயாரித்துள்ளதால்தான் இந்த பிரச்சனைக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததே,
இந்த விவகாரத்தில் முதல்வர் மகன் மு.க.அழகிரி அவர்களின் தலையீடு இருப்பதாக சன் டிவி மீண்டும் மீண்டும் கூறி வருவதன் மூலம் மிகவும் புத்திசாலித் தனமாக தங்களின் திரைப்படத்திற்கு விளம்பரம் தேடிக் கொள்ளும் முயற்சியாகவே எனக்குப் படுகிறது.
தன்னுடைய எதிரிகளை கூட தனது புத்திசாலித் தனத்தால் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் சன் டிவி அதிபர் கலாநிதி மாறனின் புத்திசாலித் தனத்தை கண்டிப்பாக நாம் பாராட்டியே ஆகத்தான் வேண்டும்.....
அதே நேரம் தான் தயாரித்த திரைப்படத்திற்கு மலிவான முறையில் விளம்பரம் தேடுவதும் , தன்னுடைய தனிப்பட்ட கோபதாபங்களுக்காக - எந்த விவகாரமாக இருந்தாலும் யார் பெயரை வேண்டுமானாலும் அப்பட்டமாக குறை கூறுவதும் - அவற்றிற்காக மக்களிடம் சன் டிவிக்கு உள்ள நம்பிக்கையை மீண்டும் மீண்டும் பயன்படுத்திக் கொள்வது , அந்த நம்பிக்கையை சிறுது சிறிதாக இழக்கச் செய்துவிடும் என்றே எனக்குத் தோன்றுகிறது
Sunday, September 28, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment