செங்கல்! என்னாங்கடா இது? மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் எப்படி முடிச்சுப் போட முடியும்?? இந்தியாவுக்கு எதிரான போருக்கும் செங்கல்லுக்கும் என்ன தொடர்பு?? இப்படி எல்லாம் கேள்விகள் உங்க மனசுல தோணும்! தோண வெக்கிறதுதான நம்ம நோக்கமே?!
ஆமாங்க, எப்பவும் ஒரு நிகழ்வுன்னா அதற்கான காரணங்களை(reason) மட்டுமே கருத்துல கொண்டு செயல்படக் கூடாது, அதற்கான நிமித்தங்களையும் (cause) ஆராயணும். அப்பத்தான் பிரச்சினைய முழுசாப் புரிஞ்சிக்க முடியும். அந்த வகையில, அதென்ன இந்த செங்கல்?
Brazil, Russia, India and China, இந்த நான்கு நாடுகளையும் சேர்த்து சொல்றது BRIC. இந்த பதத்தை 2001ம் ஆண்டுலயே வெளி உலகுக்கு அறிமுகம் செய்தது Goldman Sachsங்ற பெரிய அமெரிக்க நிறுவனம். அதாவது இந்த நாலும் வேகமாக வளர்ந்து, உலக பொருளாதாரத்தை ஆள வல்லதுன்னு சொன்னாங்க. BRICங்றதின் ஆங்கில உச்சரிப்பைத் தமிழாக்கம் செய்து சொன்னதுதான் இந்த செங்கல். என்னா வில்லத்தனம்?!
Goldman Sachsன் ஆய்வறிக்கை சொல்லுது, தற்போதைய நிலை நீடிக்கிற பட்சத்துல சீனாவும் இந்தியாவும் முறையே, உலக முதல், இரண்டாவது இடங்களைப் பொருளாதார ரீதியா 2027லயே கூட அடைய வாய்ப்பு இருக்குன்னு. இந்த சூழ்நிலையில, இந்த நான்கு நாடுகளும் Yekaterinburgல அடுத்த வாரம் ஒன்னாக் கூடி இன்றைய சூழ்நிலையப் பத்தி அலசி ஆராயப் போறாங்கங்றது முக்கியமான விசயம். குறிப்பா பொதுநாணயம் (supranational currency) உண்டு செய்யலாமான்னு கலந்துரையாடப் போறாங்களாம். அப்ப அமெரிக்க வெள்ளி (US $$)??
பொருளாதார உலகுல இதுதாங்க மனித நேயத்துக்கு எதிரான ஒன்னு, ரொம்ப கொடுமையான விசயமுங்கூட. ஒருத்தர் மேலுக்கு வரணும்ன்னா, அடுத்தவருக்கு பின்னடைவு உண்டாகணும். ஆக இந்த நான்கு நாடுகளும் மேலோங்கும் போது, பின்னடையப் போறது யார்? அவங்க தான் பாதிக்காம இருக்குறதுக்கு என்னென்ன செய்யப் போறாங்க?? கேள்விகள் நமக்குத் தோணுதே??
1. அரசியல்க் குழப்பம் விளைவித்தல் (political turmoil)
2. சுற்றுச்சூழல் பாதுகாப்பின்மை உருவாக்குதல் (environmental constraints)
3. அடிப்படை வசதிகளைத் தந்துதவாமை (resource constraints)
4. மனிதசக்தியைச் சீர்குலைத்தல் (demographic issues)
5. கட்டமைப்பில் மேன்மையுறத் தடங்கல் (infrastructure constraints)
6. இராணுவ ரீதியில முடக்கம் (possible war with neighbours)
இந்தப் பின்னணியில இந்தியாவுக்கும் சீனாவுக்கும் உறவுகள் மேம்பட வேண்டியது ரொம்ப அவசியம். இது நான் இந்தியனா இருக்குறதால எனக்கு ஏற்படுற பார்வை. சீனாக்காரன் என்ன நினைப்பான்? அட, நாமதான் உச்சம், முடிஞ்ச வரைக்கும் எதையும் அடக்கி ஆளணும்ன்னுதான் நினைப்பான். இதை மத்தவங்க சாதகமாப் பயன்படுத்தலாம். அதனால இந்தியாவோட முன்னேற்றம் தடைபட வாய்ப்பு இருக்கு.
அதனாலதான் ஒரு மூனாவது ஆளோட கட்டுரை சொல்லுது, ”The prospect of one or more BRIC nations being involved in a potentially devastating war cannot be ruled out -- a particular risk for India!”
இதுகளை எல்லாம் வெச்சிப் பாக்கும் போது, ஒன்னு மட்டும் தெளிவாத் தெரியுதுங்க. நம்ம நாட்டுக்கு வலுவான, தெளிவான தலைமை தேவை. ஊரை அடிச்சு உலையில போடுறதை விட்டுட்டு, உணர்ச்சிகரமான பரப்புரைகளை ஒழிச்சிட்டு, தொலைநோக்குப் பார்வையோட புரட்சியக் கொண்டு வர்றதுக்கு அவங்க ஒன்னு சேரணும்.
குறைந்தபட்சம் இளைஞர்களுக்கு தொலைநோக்குப் பார்வை வரணும். பாடப் புத்தகங்கள்ல இது தொடர்பான பாடங்களை உயர்நிலைப் பள்ளியிலயே வைக்கணும்.
Thursday, July 23, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment