Thursday, March 18, 2010

கொழுக்கட்டை செய்து விநாயக சதுர்த்தியை கோலாகலமாக கொண்டாடவேண்டும்.

கொழுக்கட்டை செய்து விநாயக சதுர்த்தியை கோலாகலமாக கொண்டாடவேண்டும். கொழுக்கட்டை செய்ய நிர்பந்தம் உள்ளவர்களும் முயன்று பார்க்கலாம்

பிடிகொழுக்கட்டை :

தேவையான பொரு‌ட்கள்

அ‌ரி‌சி - 1/2 க‌ிலோ
வெ‌ல்ல‌ம் - 1/2 ‌கிலோ
ஏல‌க்கா‌ய் - 5
தே‌ங்கா‌ய் - அரை முடி

செ‌ய்முறை

அ‌‌ரி‌சி மாவு :

ப‌ச்ச‌ரி‌சியை ந‌ன்கு சு‌த்த‌ம் செ‌ய்து த‌ண்‌ணீ‌ர் ‌வி‌ட்டு அல‌சி ‌நிழ‌லி‌ல் உல‌ர்‌த்‌தவு‌ம்.

அ‌ரி‌சி ந‌ன்கு கா‌ய்‌ந்தது‌ம் ‌மாவாக அரை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம். வெ‌ளி‌யி‌ல் கடை‌யி‌ல் கொடு‌த்து‌ம் அரை‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம்.

மாவை சு‌த்தமான கடா‌யி‌ல் கொ‌ட்டி ந‌ன்கு வறு‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம். மா‌வி‌ல் இரு‌க்கு‌ம் ஈர‌ப்பத‌ம் போகு‌ம் வரை வறு‌த்து எடு‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

வறு‌ப்பத‌ற்கு ப‌திலாக பலரு‌ம் ஆ‌வி க‌ட்டுவது உ‌ண்டு. அதாவது இ‌ட்‌லி கு‌ண்டா‌னி‌ல் வெ‌ள்‌ளை‌த் து‌ணியை‌ப் போ‌ட்டு அ‌தி‌ல் மாவை‌க் கொ‌ட்டி மூடி ‌விட வே‌ண்டு‌ம்.

5 ‌நி‌மிட‌ங்க‌ள் அடு‌ப்‌பி‌ல் வை‌த்து இற‌க்‌கினா‌ல் மாவு ந‌ன்கு வெ‌ந்து இரு‌க்கு‌ம். ஆனா‌ல் மாவு உ‌தி‌ரியாக‌த்தா‌ன் இரு‌க்க வே‌ண்டு‌ம்.

த‌ற்போது வெ‌ல்ல‌த்தை பொடியாக இடி‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம். ஒரு பா‌த்‌திர‌த்‌தி‌ல் பொடி‌த்த வெ‌ல்ல‌த்தை‌ப் போ‌ட்டு அரை ட‌ம்ள‌ர் த‌ண்‌ணீ‌ர் ‌வி‌ட்டு பாகு போல கா‌ய்‌ச்சவு‌ம்.

அத‌ற்கு‌ள் தே‌ங்காயை‌ப் பொடியாக நறு‌க்‌கி‌‌க் கொ‌ள்ளவு‌ம். ஏல‌க்காயை ச‌‌ர்‌க்கரை வை‌த்து பொடி‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம். இர‌ண்டையு‌ம் மா‌வி‌ல் கொ‌ட்டி‌க் ‌கிள‌றி‌விடவு‌ம்.

வெ‌ல்ல‌ம் ந‌ன்கு கொ‌தி‌த்தது‌ம் அதனை ‌சி‌றிது ‌சி‌றிதாக மா‌வி‌ல் ஊ‌ற்‌றி‌க் ‌கிளறவு‌ம். மாவை‌க் ‌கிளறுவத‌ற்கு ம‌த்‌தி‌ன் கா‌ம்பு அ‌ல்லது கர‌‌ண்டி‌யி‌ன் கை‌ப்‌பிடி‌ப் பாக‌த்தை‌ப் பய‌ன்படு‌த்தலா‌ம்.

மாவு எ‌ந்த இட‌த்‌தி‌லு‌ம் க‌ட்டி‌ப்போ‌ய் ‌விட‌க் கூடாது. த‌ண்‌ணீரு‌ம் அ‌திகமா‌கி‌விட‌க் கூடாது. ச‌ப்பா‌த்‌தி‌க்கு ‌பிசைவது போ‌ல் வெ‌ல்ல‌ம் த‌ண்‌ணீரை ஊ‌ற்‌றி ‌பிசை‌ந்து அதனை கொழு‌க்க‌ட்டை‌க்கு ‌பிடி‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

த‌ற்போது இ‌ட்‌லி கு‌ண்டானை த‌ண்‌‌ணீ‌ர் ஊ‌ற்‌றி ஒரு த‌ட்டு ம‌ட்டு‌‌ம் வை‌த்து அடு‌ப்‌பி‌ல் மூடி வை‌க்கவு‌ம்.

5 ‌நி‌மிட‌ங்க‌ள் க‌ழி‌த்து 10 கொழு‌க்க‌ட்டைகளை அடு‌க்‌கி மூடி ‌விடவு‌ம். ‌சி‌றிது நேர‌ம் க‌ழி‌த்து 15 கொழு‌க்க‌ட்டைகளை அடு‌க்கவு‌ம். இ‌ப்படியே ‌சி‌றிது ‌சி‌றிதாக அடு‌க்‌கி 15 ‌நி‌மிட‌ம் வேக ‌விடவு‌ம்.

இ‌ட்‌லி கு‌ண்டானை இற‌க்‌கி கொழு‌க்க‌ட்டைக‌ள் உடையாம‌ல் எடு‌த்து‌ப் ப‌ரிமாறவு‌ம்.

பரசிட்டமோல்(paracetamol)

பரசிட்டமோல்(paracetamol) எனப்படும் மாத்திரை எங்கும் எப்போதும் எவராலும் வாங்கிக் கொள்ளக் கூடிய மாத்திரை. மிகவும் குறைந்த பின்விளைவோடு காய்ச்சலைக் குறைக்கும் மற்றும் வலியினைக் குறைக்கும் வல்லமை இந்த மாத்திரைக்கு இருக்கிறது. உண்மையில் இந்த மாத்திரை மனிதனுக்குக் கிடைத்த ஒரு வரப் பிரசாதம் கூட.

இந்த மாத்திரையை தன் வாழ் நாளில் ஒருமுறையேனும் உட்கொள்ளாத நபர்கள் எவருமே இருக்க சந்தர்ப்பம் இல்லை. இதற்குக் காரணமே இந்த மாத்திரையால் ஏற்படுகிற பின்விளைவுகள் குறைவு என்பதே.

இந்த பரசிட்டமோல் சில நாடுகளில் acetaminophen என்று அழைக்கப்படும். paracetamol அல்லது acetaminophen என்பது இந்த மாத்திரையின் விஞ்ஞானப் பெயராகும். வெவ்வேறு நிறுவனங்களால் இந்த மாத்திரை தயாரிக்கப் படும் போது அந்தத் தயாரிப்புக்கு அந்த கம்பனி ஒரு குறிப்பிட்ட பெயரை வைத்துக் கொள்ளும்.

குறிப்பாக இலங்கையை எடுத்துக் கொண்டால் பரசிடமோல் என்றால் விளங்கிக் கொள்பவர்கள் குறைவானவர்களே. ஆனால் பனடோல்(panadol) என்றால் என்னவென்று தெரியாத எவரும் இலங்கையில் இருக்க முடியாது. உண்மையில் பனடோல் என்பது அந்த இந்த பரசிட்டமோல் என்ற மாத்திரையே , அதை தயாரிக்கும் ஒரு குறிப்பிட்ட கம்பனி அதன் அந்தத் தயாரிப்புக்கு வைத்துக் கொண்ட brand name பனடோல் என்பதாகும். அதேபோல இன்னுமொரு கம்பனி வைத்துக் கொண்ட பேர் பரசிட்டோல் என்பதாகும்.

அதாவது பரசிட்டோல் அல்லது பனடோல் என்பது வேறு வேறல்ல , இரண்டுமே கொண்டிருப்பது பரசிட்டமோல் என்ற பதார்த்தத்தை, ஆனால் வேறு வேறு கம்பனிகளால் தயாரிக்கப் படும் போது அவை வேறு பெயரை வைத்துக் கொள்கின்றன. அவற்றின் விலைகளும் வேறுபடுகின்றன .

இதே பல்வேறு கம்பனிகளால் தயாரிக்கப்படும் போது இந்த பரசிட்டமோல் நாட்டுக்கு நாடு வேறுபட்ட பெயர்களோடு மக்களுக்கு அறிமுகமாக இருக்கலாம்.

எந்த ஒரு வைத்தியரின் குறிப்பும் பொது சிறுவர்களுக்கு என்பதால் , இந்த மாத்திரை அடிக்கடி தற்கொலை முயற்சிகளுக்கு இலகுவாக் பயன் படுத்தப் படுகிறது.

பரிந்துரைக்கப் பட்ட அளவுகளிலே பாவிக்கப் பட்டால் இந்த மாத்திரையால் ஏற்படுகின்ற பக்க விளைவுகள் சொற்பமே.இருந்தாலும் அளவுக்கு அதிகமாக பாவிக்கப் படும் போது இதுவும் விஷமாகலாம்.

குறிப்பாக தற்கொலை செய்ய எண்ணி இந்த மாத்திரைய அளவுக்கு அதிகமாக ஒருவர் எடுத்துக் கொண்டால் முதல் நாளில் அவருக்கு எதுவும் நடைபெறாது ஆனால் தொடர்ந்து வரும் நாட்களில் அவரின் ஈரல் பழுதடைந்து முற்று முழுதாக செயலிழக்கலாம் .எனவே ஒருவர் தற்கொலை முயற்சியாக இந்த மாத்திரையை அதிகம் எடுத்துக் கொண்டால் அவரை உடனடியாக வைத்திய சாலைக்கு எடுத்துச் சென்று ஈரல் பாதிப்படையாமல் தடுக்க மருந்துகள் கொடுக்கப் பட வேண்டும்.

அதே போல நோய்கள் ஏற்படும் போதும் இது அளவுக்கதிகமாக எடுக்கப் படுமானால் அதுவும் இந்தப் பாதிப்பை ஏற்படுத்தலாம். குறிப்பாக சிறு பிள்ளைகளுக்கு அவர்களின் நிறைகளுக்கு ஏற்பவே இந்த மாத்திரை கொடுக்கப் பட வேண்டும். பெரியவர்கள் உட் கொள்ளும் அளவில் சிறுவர்களுக்கு கொடுக்கப்பட்டால் அவர்களுக்கும் ஈரல் பாதிப்பு ஏற்படலாம்.

ஆகவே ஒவ்வொருவரும் தாங்கள் எத்தனை மாத்திரை பாவிக்க வேண்டும், தங்கள் பிள்ளைகள் எத்தனை பாவிக்க வேண்டும் என்பதை அறிந்திருப்பது முக்கியமாகும்.
ந்த இடுகையில் ஒவ்வொருவருவருக்கும் தேவையான பரசிட்டமோலின் அளவை எப்படி கணிப்பது என்று பதிவிடுகிறேன்.

நான் சொல்லியது போல மாத்திரைகளின் அளவுகள் வயதை வைத்தல்ல உடலின் நிறையை வைத்தே தீர்மானிக்கப்படுகின்றது.

எவ்வாறு பரசிட்டமோலின் அளவு தீர்மானிக்கப் படுகின்றது?

ஒரு கிலோ உடல் நிறைக்கு தேவையான பரசிட்டமோலின் அளவு 15mg

அதாவது உங்கள் உடல் நிறை 65kg என்றால் உங்களுக்குத் தேவையான பரசிட்டமோலின் அளவு 975mg அதாவது உங்கள் நிறையை 15 யால் பெருக்கிக் கொள்ளுங்கள்.

பரசிட்டமோல் மாத்திரைகள் 500mg என்ற அளவிலேயே கிடைக்கும் ஆகவே நீங்கள் அண்ணளவாக இரண்டு மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.

உங்கள் நிறை 45kg என்றால் உங்களுக்குத் தேவையான அளவு 675mg. நீங்கள் ஒன்றரை மாத்திரைகளை(750mg) .அல்லது ஒரு மாத்திரையை உட்கொண்டால் போதுமானது .(மிகவும் சரியான(accurate) அளவிலே எடுக்க வேண்டியதில்லை )

உங்கள் நிறை 35kg என்றால் தேவையான அளவு 425mgஅதாவது அண்ணளவாக ஒரு மாத்திரை(500mg0 எடுத்துக் கொண்டால் போதுமானது.

நான் மேலே சொன்னது ஒரு நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய அளவாகும். இந்த அளவை ஒரு நாளைக்கு நான்கு முறை நீங்கள் எடுக்கலாம்.

Thursday, March 11, 2010

விவசாய மகளிருக்கான மினி அரவை இயந்திரம்

விவசாய மகளிருக்கான மினி அரவை இயந்திரம்
கோவை கணபதியைச் சேர்ந்த விவேகானந்தனால் (94437 21341) உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு உதவியாக சென்னையைச் சேர்ந்த வில்குரோ இன்னோவேசன்ஸ் உள்ளது. மினி அரவை இயந்திரம் வாசனை திரவியப் பொருட்களான மிளகாய், கொத்தமல்லி மற்றும் கோழி தீவனம், மாட்டு தீவனம், மூலிகைகள் இவைகளை அரைக்கக்கூடியதாக உள்ளது. இந்த இயந்திரமானது ஒரு குதிரை சக்தியால் உருவாக்கப்பட்டுள்ளது.
பொதுவாக கிராமங்களில் மின்சாரமான மூன்று பேஸ்களில் கிடைப்பது அரிதாக உள்ளது. மற்றும் மின் அழுத்த குறைபாடுகள் உள்ளன. எனவே இந்த மினி அரவை இயந்திரம் விவசாய பெண்மணிகளுக்கு எடை குறைவாகவும் எளிதில் உபயோகப்படுத்தும் திறன் உள்ளதாகவும் உள்ளது. இந்த இயந்திரத்தின் உதிரி பாகங்களான பேரிங்குகள், பிளேடுகள் எளிதில் கிடைக்கக் கூடியதாகவும், வாங்கக் கூடியதாகவும் உள்ளன. இந்த மினி இயந்திரத்தின் விலை 11 ஆயிரத்து 500 ரூபாய் (மோட்டாருடன்). ஒரு குதிரைத்திறன் மோட்டாரின் விலை 5,300 ரூபாய். இரண்டு குதிரைத்திறன் மோட்டாரின் விலை 6,000 ரூபாய். மோட்டார் இல்லாமல் இயந்திரத்தின் விலை 6,500 ரூபாய்.

சந்தன மரங்கள் மற்ற மரங்களுடன் இணைந்து வளரும்

சந்தன மரங்களை இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் சுதந்திரமாக வளர்க்க அரசின் அனுமதி உண்டு. தனியார் நிலங்களில் வளர்க்கப்படும் சந்தன மரங்களை அறுவடை செய்திட மாவட்ட வனத்துறையிடமே அனுமதி பெறவேண்டும். அறுவடை செய்த சந்தன மரக்கட்டைகளை வனத்துறையினர் நடத்தும் ஏலத்தின் மூலம் நல்ல விலைக்கு விற்பனை செய்யலாம். தனியாருக்கும் விற்பனை செய்யலாம். 20% தொகையை அரசுக்கு வரியாக செலுத்த வேண்டும். எனவே விவசாயிகளும் பொதுமக்களும் விவசாய நிறுவனங்களும் ஆர்வமுடன் சந்தன மரங்களை வளர்க்க முன்வந்துள்ளனர்.
சந்தன மரங்கள் வேலிகளிலும் தரிசு நிலங்களிலும் தானாகவே வளர்ந்து வறட்சியிலும் பசுமையாக காட்சிதரும் அழகிய தெய்வீக மரமாகும். இந்தியாவின் அனைத்து நிலப் பகுதிகளிலும் தட்ப வெப்ப நிலைகளிலும் வளம் குன்றிய பாறைப்பகுதிகளிலும் வளரக்கூடியது.
சந்தன மரங்களை வீடுகளிலும் பூங்காக்களிலும் விவசாய நிலங்களிலும் பள்ளி, கல்லூரி தொழிற்சாலை வளாகங்களிலும் வளர்ப்பதன் மூலம் 12 ஆண்டுகளுக்குப் பின் பல கோடி ரூபாய் அன்னியச் செலாவணியை ஈட்டமுடியும்.
விவசாயமாகச் செய்வதெனில் 3 மீட்டர் இடைவெளியில் சிறு குழிகள் அமைத்து ஏக்கருக்கு 450 மரங்களை வளர்க்க முடியும். சந்தன மரங்கள் மற்ற மரங்களுடன் இணைந்து வளரும் தன்மை கொண்டது. எனவே தென்னை, நெல்லி, சப்போட்டா, சவுக்கு, முருங்கை, முந்திரி, குமிழ் மலைவேம்பு, மகோகனி மற்றும் பல வகையான வன மரங்களுக்கு இடையில் ஊடுபயிராக வளர்க்கலாம். விதைகளை நேரடியாக குழிகளில் ஊன்றி குறைந்த செலவில் வளர்க்கலாம். கன்றுகளும் நடவு செய்யலாம்.
ஒரு கிலோ சந்தன மரக்கட்டை 6000 ரூபாய் வரை ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. 12 ஆண்டுகள் வளர்ந்த மரத்திலிருந்து மூன்று முதல் ஐந்து கிலோ கட்டை (வாசனை மிகுந்த வைரப்பகுதி) கிடைக்கும். 20 ஆண்டுகள் வளர்ந்த மரத்தின் மூலம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் பெறலாம்.
எனவே இனி சந்திலும் பொந்திலும் சந்தனம் வளர்ப்போம். முடிந்தால் சந்திர மண்டலத்திலும் வளர்ப்போம். இயற்கை வளம் பெருக்குவோம். தரிசு நிலங்களையும் தங்கம் விளையும் பூமி ஃயாக்குவோம். கலாமின் கனவை நனவாக்குவோம். சந்தனம், குமிழ், மலைவேம்பு, மகோகனி, ஈட்டி, சில்வர் ஓக் மற்றும் அனைத்து வகை வன மர விதைகள், கன்றுகள் வளர்ப்பு குறித்த ஆலோசனைகள் ஆய்வக முகவரியில் தொடர்பு கொண்டு பெறலாம். 98429 30674.
ஏ.சந்தனமோகன், சந்தன வளர்ச்சி ஆய்வு பண்ணை, காமநாயக்கன்பாளையம்,
பல்லடம், கோயம்புத்தூர்-641 658.

நகல் எடுக்க | எழுத்தின் அளவு: Decrease font Enlarge font |

சின்னச்சின்னவிவசாய செய்திகள்

ஆட்டுப்பண்ணை:
ஒரிஜினல் தளிசேரி ஆடுகள், பார்பரி, தோத்தாபுரி, கரோலி, பிலுலோடி போன்ற பல இன ஆடுகள் வாங்க தொடர்பு முகவரி: ""மலச்சி பண்ணைகள், கீரிப்பட்டி, ஆத்தூர்-636 107, சேலம். 93644 64433, 93602 70092. பண்ணையைப் பார்வையிட வருமுன் மொபைலில் தொடர்புகொண்டு உறுதிப்படுத்திக் கொண்டு செல்லவும்.
-------------------------------------------------------------------------------------

தமிழ்நாட்டில் எருமை வளர்ப்பு:
நாட்டு எருமைகள் ஒரு லிட்டர், 2 லிட்டர் என்று குறைந்த அளவில்தான் பால் கொடுக்கும். எனவே அதிக பால் உற்பத்திக்கான கலப்பின பசுமாடுகள் பக்கம் ஆர்வம் ஏற்படவே எருமைமாடு வளர்ப்பு குறைந்துள்ளது. பசுமாட்டைப் போல கொட்டகையில்தான் வளர்க்க வேண்டும் என்பதில்லை. எருமைகளை மரத்தடியில்கூட வளர்க்கலாம். மழை வெயிலுக்கெல்லாம் எருமை அசையாமல் நிற்கும். முரா' என்று சொல்லப்படும் டெல்லி எருமை தினமும் 12 லிட்டர் வரை பால் கொடுக்கும் திறன் கொண்டது. இது தமிழ்நாட்டு சூழலுக்கு ஏற்ற ரகம். இதன் பூர்வீகம் அரியானா மாநிலமாகும். இந்த இன எருமைகளின் உறைவிந்து குச்சி ஒன்று 15 ரூபாய்க்கு தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டை அரசு கால்நடை பண்ணையில் விற்பனை செய்யப்படுகிறது. முரா இனத்தின் உறைவிந்துவை நம் பகுதிகளில் உள்ள நாட்டு எருமைக்கு செயற்கை முறையில் கருவூட்டம் செய்யலாம். இதன்மூலம் உருவாகும் கலப்பின எருமை தினமும் 6 லிட்டர் வரை பால் கொடுக்கும். அடுத்த தலைமுறையில் பால் உற்பத்தி அதிகரித்துக் கொண்டே செல்லும். (தொடர்புக்கு: அரசு கால்நடைபண்ணை, ஈச்சங்கோட்டை, 04372-244 844).

-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்

Wednesday, March 10, 2010

“பெளத்தத்தை கொன்றொழிக்க முயற்சிக்கிறது சீனா”............ திபெத் தலைவர் தலாய் லாமா

திபெத் பிரச்சனைக்கு தான் முன்னெடுத்த அனைத்து முயற்சிகளையும் கண்டுகொள்ளாமல் தட்டிக்கழித்த சீன அரசு, திபெத்தில் புத்த மதத்தை முழுமையாக அழித்து ஒழித்துவிடும் திட்டத்துடன் செயல்பட்டு வருகிறது என்று திபெத் தலைவர் தலாய் லாமா குற்றம் சாற்றியுள்ளார்.

1959இல் திபெத்தை ஆக்கிரமிக்க சீனா மேற்கொண்ட இராணுவ ஆக்கிரமிப்பை எதிர்த்து திபெத்தியர்கள் நடத்திய போராட்டத்தின் 51வது ஆண்டு தினத்தை முன்னிட்ட ஹிமாச்சல பிரதேசம் தர்மசாலாவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தலாய் லாமா, “பெளத்தத்தை கொன்றொழிக்க முயற்சிக்கிறது சீனா” என்று நேரிடையாக குற்றம் சாற்றினார்.

திபெத்திற்கு தான் கேட்பது சுயாட்சிதான் என்றும், அதன் மூலம் தங்களுடைய ஆன்மீக வழியையும், பண்பாட்டையும், மொழியையும் திபெத்தியர்கள் காப்பாற்றிக்கொள்ள அந்த அளவிற்காவது சுதந்திரம் வேண்டும் என்பதே தனது கோரிக்கை என்று கூறினார்.

ஆனால், தனது முயற்சிகளையும் கண்டுகொள்ளாமல் தட்டிக்கழித்த சீன அரசு, திபெத்தில் ‘தேசப்பற்றுக் கல்வி’யைப் போதிக்க முயற்சித்து வருகிறது என்று கூறினார்.

“திபெத்திலுள்ள மடங்களில் உள்ள சன்யாசிகளை சிறை வைப்பது போன்று அடைத்து, அவர்கள் தங்கள் ஆன்மீகப் பணிகளை தொடர்வதற்கு தடை ஏற்படுத்தி வருகிறது. பெளத்தத்தை கொன்றொழிக்கும் முயற்சியில் நேரிடையாக ஈடுபட்டு வருகிறது. இதையெல்லாம் சீன அரசு ஏற்கிறதோ இல்லையோ, அங்கு மிக மோசமான பிரச்சனை தோன்றியுள்ளது” என்று தலாய் லாமா கூறியுள்ளார்.

“இன்றுள்ள சீனத் தலைமையின் போக்கை வைத்துப் பார்க்கும்போது. எந்தத் தீர்வும் எட்டுவதற்கான சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. ஆயினும் பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண தொடர்ந்து முயற்சிப்பது என்ற எங்கள் நிலையில் மாற்றமில்லை” என்றும் தலாய் லாமா கூறியுள்ளார்.

சீனாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடிய அந்த நிகழ்வை குறிக்கும் நாளில் தலாய் லாமாவின் உரையைக் கேட்க பல்லாயிரக்கணக்கான திபெத்தியர்கள் தர்மசாலா வந்திருந்தனர்.

Sonia expresses gratitude to Opposition for passage of Women's Reservation Bill

New Delhi, March 9 (ANI): United Progressive Alliance chairperson Sonia Gandhi expressed her delight on the passage of the Women's Reservation Bill in the Rajya Sabha and expressed her gratitude to the Opposition for its cooperation on Tuesday.

Ms. Sonia Gandhi, who watched the day-long proceedings of the Rajya Sabha over the Bill on Tuesday, said: "I am grateful to the Opposition... the BJP has supported, the Left has supported... others will also support."

On the passage of the Bill, Ms. Gandhi said: "I am happy and relieved."

Speaking over the incident of a few members of Parliament creating ruckus and literally assaulting Rajya Sabha Chairman Hamid Ansari on Monday, Ms. Gandhi said: "It was not the right thing to do. I have not witnessed such scenes."

On UPA's allies, Ms. Sonia Gandi said: "I can only say I was told all coalition... DMK has always supported, so has Sharad Pawar... I was told Mamata was very enthusiastic. I have not spoken to Mamata yet."

Asked to mention about the agitated Lalu and Mulayam, Ms. Sonia said: "When it comes to political issues, personal relations don't count for much... we must all be generous and think of the larger picture...women empowerment is a vision of Rajivji... "

"I am proud in our time..in our government, that we have a woman President and a Speaker," Sonia Gandhi told NDTV in an interview while adding: " The first step has been taken, and then corollary of it, the next step will also be taken. We are committed." (ANI)

Tuesday, March 9, 2010

‘நமது-கச்சத்-தீவு’.......இப்போது பேசாமல் எப்போது பேசுவது'

கச்சத் தீவு ஒப்பந்தம் என்பது இரு நாடுகளுக்கு இடையிலான சர்வதேச ஒப்பந்தம், தகுந்த காரணங்கள் இல்லாமல் அதனை மாற்றவும் முடியாது, திருத்தவும் முடியாது” என்று ஏதோ ஒரு மதத்தின் புனித நூலிற்கு தரப்படும் மரியாதையுடன் பேசினார் மக்களவையில் இந்திய அயலுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா.

1983ஆம் ஆண்டு முதல் சிறிலங்க கடற்படையினரால் பல நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது நமது நாட்டின் அயலுறவு அமைச்சருக்கு ‘தகுந்த காரணமாக’த் தெரியவில்லை! தமிழக மீனவர்களுக்காக எந்தக் கரிசனமும் காட்டாத அமைச்சர் கிருஷ்ணா, அதற்குக் காரணமான கச்சத் தீவு - கடல் எல்லை வரையறை ஒப்பந்தத்தத்தை காப்பாற்றுவதில் உறுதியாக நின்றார். இது இந்தியாவின் நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நடந்த நிகழ்வு, யாரும் மறந்திருக்க முடியாது.

இந்திய அரசாலும், காங்கிரஸ் கட்சியாலும் இவ்வளவு ‘ஆழமாக’ மதிக்கப்படும் கச்சத் தீவு ஒப்பந்தம் உருவான வரலாற்றை தெரிந்து கொண்டால், தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன் பிடி உரிமை பறிக்கப்படக் காரணமான கச்சத் தீவை எவ்வாறு மோசடியான வழிமுறையைக் கையாண்டு இலங்கைக்கு தாரை வார்த்தது மத்திய அரசு என்பது தெளிவாகும்.

ஆனால் இந்தத் தெளிவைப் பெற, அந்த ஒப்பந்தம் தொடர்பான உண்மைகளை வெளிகொணர முழுமையான ஒரு புத்தகம் இதுவரை இல்லாமல் இருந்தது. அந்த குறையைத் தீர்த்துள்ளது ‘நமது கச்சத் தீவு’.

மகத்தான ஆய்வுப் பணி

தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் கல்வெட்டுத் தொல்லியல் துறையில் பேராசிரியராகவும், பின் துறைத் தலைவராகவும் 16 ஆண்டுக்காலம் பணியாற்றி ஓய்வுப் பெற்ற அறிஞர் முனைவர் செ. இராசு இப்புத்தகத்தை எழுதியுள்ளார்.

‘நமது கச்சத் தீவு’ ஒரு புத்தகம் என்று கூறுவதைவிட, கச்சத் தீவுத் தொடர்பான வரலாற்று ஆவணமாகவும், அது தமிழ்நாட்டிற்கே சொந்தமானது என்பதை ஆணித்தரமாக நீரூபிக்க நீதிமன்றத்தில் முன்மொழியும் வாக்குமூலமாகவும் உள்ளது.

கச்சத் தீவு இராமநாதபுரம் சேதுபதி அரசாட்சிக்கு உட்பட்ட ஜமீன் சொத்தாகத்தான் இருந்து வந்துள்ளது என்பதற்கான பல்வேறு ஆதாரங்களை அறிஞர் இராசு தொகுத்தளித்துள்ளார்.

webdunia photo
WD
சேதுபதி சீமையின் ஆட்சி அதிகாரத்திற்கு உட்பட்டதாக 1605ஆம் ஆண்டு முதல் கச்சத் தீவு இருந்து வருவதற்கான வரலாற்றையும். ஆவணங்களை தொகுத்து வழங்கியுள்ளார் அறிஞர் இராசு.

“கி.பி.1605ஆம் ஆண்டில் மதுரை நாயக்க மன்னர்களால் சேதுபதி அரச மரபு தோற்றுவிக்கப்பட்டது. சீதையை மீட்க இராமன் செல்லும்போது கட்டிய பாலமே ‘சேது’ என்று சொல்லப்படுகிறது. அதைப் பாதுகாத்த மறவர் வழியினரே ‘சேதுபதிகள்’ என்றழைக்கப்பட்டனர்.

சேதுபதி அரசர்கட்கு அளிக்கப்பட்ட நிலப் பகுதியில் குத்துக்கால் தீவு, குருசடித் தீவு, இராமசாமித் தீவு, மண்ணாலித் தீவு, கச்சத் தீவு, நடுத் தீவு, பள்ளித் தீவு ஆகிய தீவுகளும், 69 கடற்கரைக் கிராமங்களும் சேதுபதி அரசர்க்கு உரிமையாக்கப்பட்டிருந்தன.

தளவாய் சேதுபதி காத்த தேவர் என்ற கூத்தன் சேதுபதி (1622-1635) காலத்துச் செப்பேடு ஒன்றில் தலைமன்னார் வரை சேதுபதி அதிகாரத்திற்கு உட்பட்டது என்று கூறப்பட்டுள்ளது” என்று கூறியதோடு நில்லாமல், இராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோயிலுக்கும் கச்சத் தீவிற்கும் உள்ள உறவையும் எடுத்துக் கூறியுள்ளார் அறிஞர் இராசு.

“சேதுபதிக்குரியது இராமேசுவரம் இராமநாத சுவாமி மலைவளர் காதலி அம்மை ஆலயம். அந்த ஆலயத்திற்குரிய நந்தவனம் கச்சத் தீவில் இருந்தது. அங்கிருந்து கோயில் பூசைக்கு மலர்கள் கொண்டு வரப்பட்டன. இராமேசுவரம் கோயிலுக்குக் கொடையாகக் கொடுக்கப்பட்ட கால்நடைகள் கச்சத் தீவில் மேய்சலுக்கு விடப்பட்டதன. இராமநாத சுவாமி கோயில் அபிடேகத்திற்கு பாலும், தேவையான பஞ்சகவ்யங்களும் வந்தன. இவைபற்றி இலங்கை தினகரன் நாளேட்டில் 01.05.1975 அன்று விரிவான கட்டுரை வந்துள்ளது” என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.

தமிழ்நாடு வெள்ளையரின் காலனி ஆட்சிக்கு உட்பட்டப் பிறகு, 1803ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் ஜமீன்தாரி முறை கொண்டுவரப்பட்டது. அப்போது சேதுபதி அரச வாரிசு (1795இல் முத்துராமலிங்க சேதுபதி மன்னர் பல்லாண்டுகள் சிறையில் இருந்த நிலையிலேயே மரணமுற்றதால்) இல்லாத நிலையில், அவருடைய தமக்கையான இராணி மங்களேசுவரி நாச்சியாரைக் கம்பெனியார் ஜமீன்தாரிணியாக்கினர் என்றும், அவர் 1803 பட்டம் ஏற்று 1812 வரை நிர்வாகம் செய்தார் என்ற வரலாற்றையும் பார்வைக்கு கொண்டு வந்துள்ளார்.

அதுமட்டுமல்ல, கச்சத் தீவு இராமநாதபுரம் ஜமீனுக்கு உரியது என்பதை விக்டோரியா மகாராணி தனது பிரகடணத்தில் கூறியிருந்தார் என்பதை, இலங்கை அமைச்சரவைச் செயலராக இருந்த பி.பி. பியரீஸ் என்பவர் (1936-40ஆம் ஆண்டுகளில் நில அளவைத் துறையில் இருந்தவர்) கூறி பதிவு செய்ததையும், அது இலங்கையில் இருந்து வெளிவரும் ‘டெய்லி மிர்ரர்’ நாளிதழிலும், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிலும் வெளியிடப்பட்ட ஆதாரங்களையும் இப்புத்தகத்தில் கொண்டு வந்துள்ளார்.

1880ஆம் ஆண்டு கச்சத் தீவு குத்தகைக்கு விடப்பட்ட வரலாறு மற்றும் சட்ட முக்கியத்துவம் வாய்ந்த ஒரு குத்தகை ஆவணத்தை முழுமையாக அளித்துள்ளார் கல்வெட்டறிஞர் இராசு.


‘நமது-கச்சத்-தீவு’-புத்தக-மதிப்புரை

• கம‌லி - பு‌த்தக ம‌தி‌ப்‌பீடு
• ' புத்தகம் வெளியீடு

Sunday, March 7, 2010

Becareful in BREAD eating

In many homes of our country breakfast and Bread are complementary to each other. People eat Bread in many types like someone eat bread with butter, someone with cheese spreads, with Gem, someone put in Milk. Sandwiches are made by Bread. Burgers and pizza is also Bread. We are daily aware of bread and prepare several types of his dishes and eat.

The same flour is used most bakery items by bread is made. Do you know Bread can be harmful to our health. Many times it is a serious threat. The risk appears by Potassium Bromet substance. E924a is chemical formula of Potassium Bromet.

Be safe with Potassium Bromet.

Before making the bread mix Potassium Bromet in the Flour is a common practice in India. This practice is more prevalent in many countries of the world. Although the control amount of this material is mixed with flour. But if small amount is more than this then it is not properly digesting. This may be very harmful for us.

To improve the quality of flour Potassium Bromet is mixed. It is believed that by mixing it Brad is good rise, Looks whiter and is quickly digest. But such a beautiful bread could be so dangerous. Here we can only understand this fact, in 1990 Potassium Bromet mixing in any food is banned across Europe.

In the U.S. it was banned in 1991. But in California is required to put labels on things made from flour. This clearly has to tell that Potisiam Bromet is mixed in flour. The substance is banned in Canada was in 1994.

Regarding this substance we have to not only educate them but also to draw attention of Public and the government of country. So that companies that make bakery products to stop using this substance. After all our country’s public health is concerned.

Banana, Good for health

Banana is an effective fruit for health benefits. The mixture of carbohydrates and vitamins present in banana helps an energy increase. The natural fiber in banana also gives to the many health benefits. Here are some important benefits of banana.

Vitamins and Minerals: Banana high in Vitamins, as Vitamin A is important for development of tissue in eyes and growth of the skin. Vitamin B is also present which help in calming the nervous system. Banana

Blood Pressure: Banana is a natural source of potassium. Potassium is important for the human body as it helps in body’s fluid level, body cells and controlling in blood pressure.

Ulcers: Bananas contain protease inhibitors that help eliminate bacteria in the stomach and reduce acidity. Thus problem of ulcer reduces.

Anemia: Banana rich in iron, which improve the body’s hemoglobin function. Thus banana is ideal fruit for people who are suffering from Anemia.
Depression: Banana contains amino acid (tryptophan) which converted by the body into serotonin that relaxes a person.

Constipation: Banana is high in fiber, it is perfect remedy for constipation.

Smoking: Bananas can also help people trying to give up smoking, as it contains Vitamin C, A1, B6, B12 and potassium, which help the body recover from the effects of nicotine withdrawal.

According to Research of “New England Journal of Medicine states” – A regular intake of banana in your diet can help reduce the possibility of stroke by up to 40 percent.