விவசாய மகளிருக்கான மினி அரவை இயந்திரம்
கோவை கணபதியைச் சேர்ந்த விவேகானந்தனால் (94437 21341) உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு உதவியாக சென்னையைச் சேர்ந்த வில்குரோ இன்னோவேசன்ஸ் உள்ளது. மினி அரவை இயந்திரம் வாசனை திரவியப் பொருட்களான மிளகாய், கொத்தமல்லி மற்றும் கோழி தீவனம், மாட்டு தீவனம், மூலிகைகள் இவைகளை அரைக்கக்கூடியதாக உள்ளது. இந்த இயந்திரமானது ஒரு குதிரை சக்தியால் உருவாக்கப்பட்டுள்ளது.
பொதுவாக கிராமங்களில் மின்சாரமான மூன்று பேஸ்களில் கிடைப்பது அரிதாக உள்ளது. மற்றும் மின் அழுத்த குறைபாடுகள் உள்ளன. எனவே இந்த மினி அரவை இயந்திரம் விவசாய பெண்மணிகளுக்கு எடை குறைவாகவும் எளிதில் உபயோகப்படுத்தும் திறன் உள்ளதாகவும் உள்ளது. இந்த இயந்திரத்தின் உதிரி பாகங்களான பேரிங்குகள், பிளேடுகள் எளிதில் கிடைக்கக் கூடியதாகவும், வாங்கக் கூடியதாகவும் உள்ளன. இந்த மினி இயந்திரத்தின் விலை 11 ஆயிரத்து 500 ரூபாய் (மோட்டாருடன்). ஒரு குதிரைத்திறன் மோட்டாரின் விலை 5,300 ரூபாய். இரண்டு குதிரைத்திறன் மோட்டாரின் விலை 6,000 ரூபாய். மோட்டார் இல்லாமல் இயந்திரத்தின் விலை 6,500 ரூபாய்.
Thursday, March 11, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment