Thursday, March 11, 2010

சின்னச்சின்னவிவசாய செய்திகள்

ஆட்டுப்பண்ணை:
ஒரிஜினல் தளிசேரி ஆடுகள், பார்பரி, தோத்தாபுரி, கரோலி, பிலுலோடி போன்ற பல இன ஆடுகள் வாங்க தொடர்பு முகவரி: ""மலச்சி பண்ணைகள், கீரிப்பட்டி, ஆத்தூர்-636 107, சேலம். 93644 64433, 93602 70092. பண்ணையைப் பார்வையிட வருமுன் மொபைலில் தொடர்புகொண்டு உறுதிப்படுத்திக் கொண்டு செல்லவும்.
-------------------------------------------------------------------------------------

தமிழ்நாட்டில் எருமை வளர்ப்பு:
நாட்டு எருமைகள் ஒரு லிட்டர், 2 லிட்டர் என்று குறைந்த அளவில்தான் பால் கொடுக்கும். எனவே அதிக பால் உற்பத்திக்கான கலப்பின பசுமாடுகள் பக்கம் ஆர்வம் ஏற்படவே எருமைமாடு வளர்ப்பு குறைந்துள்ளது. பசுமாட்டைப் போல கொட்டகையில்தான் வளர்க்க வேண்டும் என்பதில்லை. எருமைகளை மரத்தடியில்கூட வளர்க்கலாம். மழை வெயிலுக்கெல்லாம் எருமை அசையாமல் நிற்கும். முரா' என்று சொல்லப்படும் டெல்லி எருமை தினமும் 12 லிட்டர் வரை பால் கொடுக்கும் திறன் கொண்டது. இது தமிழ்நாட்டு சூழலுக்கு ஏற்ற ரகம். இதன் பூர்வீகம் அரியானா மாநிலமாகும். இந்த இன எருமைகளின் உறைவிந்து குச்சி ஒன்று 15 ரூபாய்க்கு தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டை அரசு கால்நடை பண்ணையில் விற்பனை செய்யப்படுகிறது. முரா இனத்தின் உறைவிந்துவை நம் பகுதிகளில் உள்ள நாட்டு எருமைக்கு செயற்கை முறையில் கருவூட்டம் செய்யலாம். இதன்மூலம் உருவாகும் கலப்பின எருமை தினமும் 6 லிட்டர் வரை பால் கொடுக்கும். அடுத்த தலைமுறையில் பால் உற்பத்தி அதிகரித்துக் கொண்டே செல்லும். (தொடர்புக்கு: அரசு கால்நடைபண்ணை, ஈச்சங்கோட்டை, 04372-244 844).

-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்

No comments: