சுவையான கொத்துக்கறி உருண்டை குழம்பு செய்வதற்கான எளிய செய்முறை குறிப்பு.
தேவையான பொருட்கள்
கொத்துக்கறி உருண்டைகளை தனியே எண்ணெயில் பொரித்தும் குழம்பில் சேர்க்கலாம்.
நன்றி : TAMIL COOK
தேவையான பொருட்கள்
- கொத்துக்கறி – 500 கிராம்
- வெங்காயம் பெரியது – 1
- மிளகாய் வற்றல் – 6
- வர கொத்தமல்லி – 2 தேக்கரண்டி
- சோம்பு – 1 தேக்கரண்டி
- தேங்காய் – 1 கப்
- கசகசா – 1 தேக்கரண்டி
- பட்டை – 1 அங்குலம்
- கிராம்பு – 3
- ஏலக்காய் – 2
- முந்திரிப்பருப்பு – 6
- எலுமிச்சம் பழம் – 1/2
- முட்டை – 1
- மல்லித்தழை, புதினா – சிறிதளவு
- நெய் – 2 தேக்கரண்டி
- எண்ணெய் – 3 தேக்கரண்டி
- மிளகாய் வற்றல், வர கொத்தமல்லி, சோம்பு, கசகசா, முந்திரிபருப்பு ஆகியவற்றை இளம் சிவப்பாக வறுத்துக் கொண்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- குக்கரில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு கொத்துக்கறியை தண்ணீரில்லாமல் போட்டு வதக்கிக் கொள்ளவும்.
- வதக்கிய கறியை மிக்ஸ்யில் போட்டு லேசாக அடித்துக் கொள்ளவும்.
- இதனுடன் அரைத்த மசாலாவில் பாதியை சேர்த்து, முட்டையையும் உடைத்து ஊற்றி நன்றாகக் கலந்து சிறு சிறு உருண்டையாக பிடித்துக் கொள்ளவும்.
- அதே குக்கரில் 2 தேக்கரண்டி நெய், 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி பட்டை, ஏலக்காய், கிராம்பு, மல்லித்தழை, புதினா, பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கி , எடுத்து வைத்துள்ள மீதமுள்ள அரைத்த மசாலாவை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
- இதனுடன் தேங்காய்ப்பால் ஊற்றி நன்றாக கலந்து கொதிக்க விடவும்.
- குழம்பு கொதிக்கும்போது செய்து வைத்துள்ள உருண்டைகளை ஒவ்வொன்றாகப் போடவும்.
- குழம்பை கிளறாமல் எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும்.
- இறக்கியவுடன் எலுமிச்சம்பழசாறு பிழிந்து விடவும்.
கொத்துக்கறி உருண்டைகளை தனியே எண்ணெயில் பொரித்தும் குழம்பில் சேர்க்கலாம்.
நன்றி : TAMIL COOK
No comments:
Post a Comment