சுவையான கை முறுக்கு செய்வதற்கான எளிய செய்முறை குறிப்பு. இந்த குறிப்பு
திருமதி. மல்லிகா பத்ரிநாத் அவர்களின் சமையல் குறிப்பைத் தழுவியது.
தேவையான பொருட்கள்
திருமதி. மல்லிகா பத்ரிநாத் அவர்களின் சமையல் குறிப்பைத் தழுவியது.
தேவையான பொருட்கள்
- அரிசி மாவு – 4 கப்
- உளுத்தம் மாவு – 1/2 கப்
- மிளகுத்தூள் – 1/2 தேக்கரண்டி
- சீரகத்தூள் – 1/2 தேக்கரண்டி
- வெண்ணெய் / நெய் – 200 கிராம்
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
- உளுத்தம்பருப்பை வெறும் வாணலியில் வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். வறுத்த உளுத்தம்பருப்பை மிக்ஸ்யில் நன்கு அரைத்து, சலித்துக் கொள்ளவும்.
- இதனுடன் அரிசி மாவு, உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- நெய்யை ஒரு பாத்திரத்தில் சேர்த்து கையால் நன்கு தேய்த்துக் கொள்ளவும். இதனுடன் மாவு கலவையை சேர்த்து நன்கு பிசறிக் கொள்ளவும்.
- மாவை 3 அல்லது 4 பகுதிகளாக பிரித்துக் கொள்ளவும்.
- முதலில் ஒரு பகுதி மாவை மட்டும் எடுத்து திக்காக பிசைந்து கொள்ளவும்.
- ஒரு ஈரத் துணியின் நடுவில் ஒரு பாட்டில் மூடியை வைத்துக் கொள்ளவும். ஒரு எலுமிச்சம்பழ அளவு உருண்டையை எடுத்துக் கொள்ளவும்.
- கட்டை விரல், ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரல் ஆகிய மூன்று விரல்களைக் கலந்து முறுக்கினை சுற்றவும்.
- கட்டை விரலாலும், ஆள்காட்டி விரலாலும் மாவினை சிறிது அழுத்திவிட்டு, பிறகு அதனைத் திருகி திருக்கி பாட்டில் மூடியைச் சுற்றிலும் சுற்றி விடவும்.
- இந்த வகை முறுக்கினை மிகவும் மெல்லியதாக சுற்றக் கூடாது. தேவையான அளவிற்கு சுற்றுகளின் எண்ணிக்கையை கூடவோ, குறைத்தோ சுற்றிக் கொள்ளலாம்.
- கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் சுற்றி வைத்துள்ள முறுக்கை கவனமாக எடுத்து, எண்ணெயில் இட்டு பொரித்தெடுக்கவும்.
- இதே போல் அடுத்த பகுதி மாவை எடுத்து பிசைந்து, சுற்றி, பொரித்து எடுக்கவும்.
- சுவையான கை முறுக்கு தயார்.
No comments:
Post a Comment