Thursday, October 8, 2009

தினமலர் நாளிதழுக்குத்தடை நடிகர் சங்கம் அதிரடி தீர்மானம்!

வியாழக்கிழமை, 8, அக்டோபர் 2009 (7:59 IST)

சென்னை:

நடிகைகள் பற்றி அவதூறாக செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழை தடை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட அதிரடியான 8 தீர்மானங்களை தென்னிந்திய நடிகர்சங்கம் நிறைவேற்றியுள்ளது.

சென்னை தென்னிந்தியநடிகர் சங்க கட்டிடத்தில் தினமலர் நாளிதழ் நடிகைகள் பற்றி வெளியிட்ட அவதூறு செய்தியை கண்டித்து கண்டனக்கூட்டம் நடைபெற்றது. நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார் தலைமை வகித்தார். செயலாளர் ராதாரவி, நடிகர்கள் ரஜினி, தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த், நடிகர்கள் சூர்யா,விஜயகுமார்,சத்யராஜ்,விவேக் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள், அனைத் திரையுலக நடிகைகள் கலந்துகொண்டனர்.

இதில் நிறைவேற்றப்பட்ட அதிரடி தீர்மானங்கள் வருமாறு: நடிகை புவனேஷ்வரி காவல்துறையனரிடம் நடிகர் சங்க பெண் உறுப்பினர்கள் பற்றி தவறாக கூறியதாகவும், காவல் துறையினர் பத்திரிக்கைகளிடம் அதை கூறியதாகவும் கூறப்படுகிறது.

காவல்துறையினர் இப்படிபட்ட செய்தியை அளிக்கவில்லை என்றால், காவல்துறை பற்றி பொய்யான செய்தியை பரப்பிய, சட்ட ஒழுங்கு துறையை களங்கப்படுத்திய நாளிதழ் மீது கடுமயான நடவடிக்கை எடுத்து, அந்த பத்திரிக்கைக்கு தடை விதிக்க வேண்டும். என்றும்,

தவறான விமர்சிக்கப்பட்ட சங்க உறுப்பினர்கள் அனைவரும் அந்த நாளிதழ் மீது தனித்தனியாக மான நஷ்ட வழக்கு தொடருவது. என்றும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் இன்று முதல் அந்த நாளிதழுக்கு ஆதரவு அளிக்கக் கூடாது. என்றும்,

திரையுலகினரையும் அவர்களது குடும்பத்தினரையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி பொண்களை இழிவுபடுத்திய அந்த நாளிதழை ஏன் தடை செய்யக்கூடாது என்று பிரஸ்கவுன்சில ஆப் இந்தியா நிறுவனத்திடம் புகாh அளிப்பது.

என்றும், திரையுலகின் எந்த நிகழ்ச்சிகளுக்கும் அந்த நாளிதழை அழைக்கக் கூடாது, அவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ளக்கூடாது, திரையுலகத்தை சார்ந்த அனைத்து அமைப்புகளிடமும் இதற்கு ஆதரவு கோருவது. என்பது உள்ளிட்ட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments: