Thursday, October 22, 2009

மத்திய அரசை ஆட்டிப்படைக்கும் கேரள அதிகாரிகள்: ராமதாஸ் சாடல்

சென்னை, புதன், 21 அக்டோபர் 2009( 17:01 IST )

மத்திய அரசின் முக்கிய பணிகளில் அமர்ந்துள்ள கேரள அதிகாரிகள் மத்திய அரசை ஆட்டிப்படைத்து வருவதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாற்றியுள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், முல்லை பெரியாறு அணை விடயத்தில் சட்டத்தை மதிக்காமலும், நீதிக்கு தலை வணங்காமலும் கேரள அரசு நடந்து கொள்வதையும், அதனை தமிழகம் தலை வணங்கி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எண்ணி செயல்படுவதையும் பார்க்கும் போது, இப்பொழுது இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கிற மாநிலம் எது? என்ற சந்தேகத்திற்கு மக்கள் ஆட்பட நேரிடும் என்று முதல்வர் கருணாநிதி எச்சரித்திருக்கிறார்.

FILE
இலங்கை தமிழர் பிரச்சனையில் நடைபெற்று வந்த காரியங்களைப் பார்த்து, என்னைப் போன்றவர்கள் தொடர்ந்து சொல்லி வந்த கருத்தை இப்பொழுது முதல்வரும் உணரத் தொடங்கியிருக்கிறார் என்பதையே அவரது இந்தக் குற்றச்சாட்டு எடுத்துக்காட்டுகிறது. இதில் நமக்கு சந்தேகமே வேண்டாம். இன்று இந்தியாவை ஆண்டு கொண்டிருப்பது கேரளாதான்.

30 மாநிலங்களையும், 3 யூனியன் பிரதேசங்களையும் கொண்ட மத்திய அரசின் செயலகங்களா? அல்லது திருவனந்தபுரத்தில் உள்ள மாநில அரசின் தலைமைச் செயலகமா? என்று பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பொறாமை கொள்ளும் அளவுக்கு, இன்றைக்கு கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் டெல்லியில் நிரம்பி வழிகிறார்கள்.

இந்தியாவா? அல்லது கேரள தேசமா? என்று எண்ணும் அளவுக்கு மலையாள மொழி பேசுகிற கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் மத்திய ஆட்சி நிர்வாகத்தில் மிக முக்கியமான பொறுப்புகளில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.

அரசியல் சட்டத்தின்படி நாட்டின் முதல்குடிமகனாக விளங்குபவர் குடியரசு தலைவர். இப்போது குடியரசு தலைவராக இருக்கும் பிரதீபா பாட்டீலுக்கு செயலாளராக இருப்பவர் கிறிஸ்டி பெர்னாண்டஸ். இவர் பதவியிலிருந்து ஓய்வுபெறும் வயதை தாண்டிய நிலையில், 4 ஆண்டுகள் பதவி நீடிப்பு கொடுக்கப்பட்டு பிரதீபா பாட்டீல் பதவியில் இருக்கும் வரையில், இவரும் செயலாளராக பதவியில் நீடிப்பார் என்ற நிலைமை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்.

குடியரசு தலைவருக்கு அடுத்ததாக ஆட்சித் தலைவராக இருப்பவர் பிரதமர். பிரதமர் அலுவலகத்தில் முதன்மைச் செயலாளராக இருப்பவர் டி.கே.ஏ.நாயர். இவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று விளக்கத் தேவையில்லை. பிரதமரின் அலுவலகத்தில் இவருக்கு அடுத்தப்படியாக செயல்படும் மூத்த அதிகாரி கோபாலகிருஷ்ணன். இவரும் கேரளாவைச் சேர்ந்தவர்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவராகவும், ஆட்சியை வழி நடத்திச் செல்பவராகவும் விளங்கி வரும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் செயலாளராக இருப்பவர் வின்சென்ட் ஜார்ஜ். இவரும் கேரளாவைச் சேர்ந்தவர்.

-------------------------------------------------------------------------------------Please Read all the comments from Readers:

not only there in central goverment all over tamilnadu ,even in government jobs why this politicians are give jod for them , why tht idiets are coming here. let them go to thier place, who will take care of that to push the away from tamilnadu. now their saying munnaru is for them. and then they will say coimbatore, ooty, everything is thiers ,and our stuipied politicicans they will sit ,and still the money from ours. not only malayalees , now u can see the north indians also in tamilnadu, for tamil mens if the girl has white skin and sexy they will give the job , and all. but for our people they will not give anything. bludy fools. some one hace to takecare of this. when it will be. our young generations have to do somthing for that. whatever it si im ready for that
Reply Report Abuse
21-10-09 (11:23 PM)
Rafiq
Above news is 100% true.Even in our so called national carrier air india whether it is flying towards chennai or trichi you would find all instructions,magazines all in malayalam language.They simply ignore the fact that this flight is going to Chennai and carrying tamilians. It is very sad we are helpless and have no guts to raise our voice against them. These malayaleese people are so dominant in all field.
Reply Report Abuse
21-10-09 (09:36 PM)
raj
one can see some psus and state govt posts in tamilnadu are headed by other states people, who promote their castes and the people who come from there and leave innocent tamils in promotions. periyar shd agian come back as poilticians do not have the courage to fight. i do not understand even after 60 years we are not nationalists. we view with coloured eyes. if true nationalism previals in everyones mind we can step towards a good society
Reply Report Abuse
21-10-09 (09:30 PM)
payanthankulitamilin
தமிழ் நாட்டை ஆட்டிப்படைக்கும் மலையாள அதிகாரிகள் பட்ரி ராமதாஸ் மௌனம் சாதிப்பது நல்லதா
Reply Report Abuse
21-10-09 (09:23 PM)
J C Raj
Even in Tamilnadu itself what is happening? Look at Cine field for example. First let us rectify there before we look at the Centre. That will be an ideal thing todo it. "Vandarai vazha vaikum Tamilakam' is being cheated by many ways. If any awareness comes in the minds of people it would be a great thing in the history of Tamilnadu.

No comments: