புதன்கிழமை, 7, அக்டோபர் 2009 (19:25 IST)
சென்னை:
தமிழக விஞ்ஞானி வெங்கட்ராமன் இராமகிருஷ்ணனுக்கு வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. சிதம்பரத்தில் பிறந்த இராமகிருஷ்ணன் வதோத்தராவில் வேதியல் பட்டப்படிப்பை முடித்தார்,
இங்கிலாந்தில் ஆராய்ச்சி பட்டம் பெற்ற அவருக்கு 2009 ஆம் ஆண்டுக்கான வேதியலுக்கான மதிப்பு மிக்க நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இவரோடு சேர்த்து 3 பேருக்கு வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நோபல் பரிசு பட்டயமும் சுமார் 2.25 கோடி ரூபாய் பரிசுத்தொகையும் அவருக்கு கிடைக்கும். நோபல் பரிசு பெற்றுள்ள 3 வது தமிழர் இராமகிருஷ்ணன் ஆவார்,
சர் சி.வி.இராமனும், இயற்பியலுக்கு 1983 ஆண்டு சந்திரசேகரனும் நோபல் பரிசு பெற்றுள்ளனர்.
Thursday, October 8, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment