Sunday, July 24, 2011

தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள்: ( ஜோக் )

நாளை, ஜூலை 24ம் தேதி மாலை கோவையில் நடக்கும் பொதுக்குழுவின் தீர்மான நகல் தமிழ் லீடருக்கு ரகசியமாக கிடைத்துள்ளது. இதை அனுப்பி வைத்த ‘உடன்பிறப்புக்கு’ நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இத்தீர்மானங்களை பிரத்யேகமாக வெளியிடுவதில் தமிழ் லீடர் பெருமை கொள்கிறது.
தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள்:
1. 120 தொகுதிகளில் திமுக கூட்டணி ஜெயிக்கும் என்றும், 2-ஜி வழக்கில் கனிமொழிக்கு எந்த ஆபத்தும் வராது என்றும் இறுதி வரை நம்பிக்கை அளித்து, இன்று தி.மு.க.வை முச்சந்தியில் நிறுத்தியிருக்கும் கூடுதல் டிஜிபி ஜாபர் சேட்டுக்கு இந்தப் பொதுக்குழு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
தேர்தலில் தி.மு.க. தோற்றதற்கான காரணங்களை நன்றாக ஆராய்ந்த போது, தேர்தல் நெருங்கும் நேரத்தில் பெரும்பாலான ஊடகங்கள் உண்மைச் செய்திகளை வெளியிட்டதே காரணம் என்பது தெரிய வந்தது. நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றமே என்று சொல்லும் இதழைப் போல இல்லாமல், மற்ற ஊடகங்கள் திமுகவின் ஊழல்களைப் பற்றி தொடர்ந்து எழுதி வந்ததால் மக்கள் மனதில் தி.மு.க. மீது வெறுப்பு உண்டாகியது. இதற்கு காரணமான அனைத்து ஊடகங்களையும் இந்தப் பொதுக்குழு கடுமையாக கண்டிக்கிறது.
< நில அபகரிப்பு மோசடி வழக்கில் கைது நடவடிக்கைகள் தொடங்கினால் உத்தேசமாக எடுத்த கணக்கின் படி, வெறும் 18 தி.மு.க. உறுப்பினர்கள் மட்டுமே மிஞ்சுவார்கள் என்பதால், நில அபகரிப்பு பிரிவு சட்டத்தை வாபஸ் வாங்க வேண்டும் அ.தி.மு.க. அரசின் முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களை மன்றாடி மீண்டும் மீண்டும் மன்றாடி இந்த பொதுக் குழு கேட்டுக் கொள்கிறது.
4. நில அபகரிப்பு சட்டப் பிரிவின் கீழ் முன்னாள் அமைச்சர்கள் கோசி.மணி,
வெள்ளக்கோவில் சாமிநாதன், பாளையங்கோட்டை மைதீன்கான் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யாமல் இருந்ததற்காக மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் அம்மா அவர்களுக்கு இந்தப் பொதுக்குழு தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

5. காவல்துறை தனது கடமையை சரிவரச் செய்து, நில அபகரிப்பு மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்திருந்தால், இந்தப் பொதுக்குழுவில், திமுக தலைவரும், பொதுச் செயலாளரும் மட்டுமே இருந்திருப்பார்கள். அவ்வாறு செய்யாத காரணத்தால் தான் இந்தப் பொதுக்குழுவுக்கு இத்தனை உறுப்பினர்கள் வருகை தர முடிந்தது. இதற்காக தமிழக காவல்துறைக்கு பொதுக்குழு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
6. அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரசுடன் சேர்ந்து போட்டியிட்டால் மீண்டும் கடும் தோல்வியை சந்திக்க நேரிடும் என்பதாலும், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடக் கூடிய திமுக வேட்பாளர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் இருப்பதனாலும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடாமல் அதிமுகவுக்கும் அதன் கூட்டணிக்கும் விட்டுக் கொடுக்கிறோம் என்று பொதுக்குழு தீர்மானிக்கிறது.
karunanidhi-in-pattu-vaetti-sattai7. தென் மண்டல அமைப்பை மாற்றக் கூடாது என்று அழகிரிக்கு ஆதரவாக பேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் வேறு கட்சிக்கு போக மாட்டார்கள் என்று உறுதி கொடுத்ததால் தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவியை தொடர்ந்து நீட்டிக்க இந்தப் பொதுக்குழு தீர்மானிக்கிறது.
8. ஒரு குடும்ப ஆதிக்கத்தால் திமுக தோற்கவில்லை என்று பேசிய 1823 பொதுக்குழு உறுப்பினர்களுக்கு திமுக தலைமை நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
9. நமது கட்சித் தொண்டர்கள் மீதும் நமக்கு உறுதுணையாக இருக்கும் சன் டிவி நிறுவனத்தார் மீதும் தொடரப்படும் வழக்குகளுக்கான செலவுகளை மத்திய அமைச்சர் திரு.ஜெகத்ரட்சகன் அவர்களும், கோவை லாட்டரி அதிபர் மார்ட்டின் ஆகியோர் ஏற்றுக் கொள்வதாக அளித்த வாக்குறுதிக்கு நன்றி தெரிவிக்கப்jayafast படுகிறது.
10. திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் பதவி தனக்கு வேண்டாமென்றும் திகார் சிறையில் தொடர்ந்து இருக்க சம்மதம் தெரிவித்தும் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா கடிதம் அனுப்பியிருப்பதால், அப்பதவியில் இருந்து அவர் விலக்கப்படுகிறார்.
தலைவர் கலைஞருக்கு கண்ணுக்கு கண்ணாக இருந்து பணிவிடை செய்து வரும் நித்தி என்கிற நித்யானந்தத்துக்கு அந்தப் பதவியை வழங்க பொதுக்குழு தீர்மானிக்கிறது.
11. தேர்தல் முடிவுகள் வெளியான அன்று திமுகவின் முக்கியத் தலைவர்கள் அனைவரும், கரை வேட்டிகளை அவிழ்த்து வைத்து விட்டு, மாறு வேடத்தில் சுற்றியபோதும், திமுக சார்பாக அன்று தொலைக்காட்சிகளில் பேட்டியளித்த திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் குஷ்பூ அவர்களுக்கு இப்பொதுக்குழு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
12. இந்தியா முழுவதிலும் இருக்கும் கோயில்களை மத்திய அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். பின்னர் அக்கோயில்களை நிர்வகிக்க இந்து அறநிலையத்துறை ஏற்படுத்தி, அதற்கு ஓர் கேபினட் அந்தஸ்தில் அமைச்சர் பதவி உருவாக்க வேண்டும். அப்பதவியை தி.மு.க.வுக்கு தர வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சோனியா காந்தியை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
13. வைகைப் புயல் வடிவேலுவுக்கு சிறப்பு அழைப்பு அனுப்பியும் அவருக்கு அழைப்பிதழ் போய் சேரவில்லை. மேலும், அவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தும் நடிக்க மறுத்து வருவதாக தெரிகிறது. ’தினந்தோறும் வடிவலு’ என்ற தொடர் கலைஞர் டிவியில் அவருக்காக கொண்டு வர வேண்டும் என்றும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.(அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்களின் விசில் சத்தம் விண்ணை பிளக்கிறது)
14. தி.மு.க.வின் தலைவராக இருந்து வரும் கலைஞருக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். அதற்கு பொதுக்குழு உறுப்பினர்கள் ஒருவர் கூட ஆதரவு தெரிவிக்கவில்லை. ஸ்டாலின் மனைவி துர்கா கூட, இதற்கு ஆதரவு தரவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. இதனால் கலைஞரே தொடர்ந்து தலைவராக நீடிப்பார் என்று இந்தப் பொதுக்குழு ஏகமனதாக தீர்மானிப்பதோடு, 2016ல் கருணாநிதியை ஆறாவது முறை முதல்வராக அமர்த்தியே தீர்வது என்று பொதுக்குழு தீர்மானிக்கிறது. (பலத்த கைத்தட்டல். அக்கைத்தட்டல் 27 நிமிடங்கள் 18 வினாடிகள் நீடித்தது).
-இந்த 14 தீர்மானங்கள் உள்பட 20க்கும் மேற்பட்ட தீர்மானங்களை நிறைவேற்ற பொதுக்குழு முடிவு செய்திருப்பதாக நமக்கு ஓர் உடன்பிறப்பு, அதன் விவரங்களை அப்படியே அனுப்பி வைத்திருக்கிறார்.
இத்தீர்மானங்கள், அப்படியே தி.மு.க. இயற்றப்போகும் தீர்மானங்களுடன் ஒத்துப்போனால், அது மகிழ்ச்சி அளிக்கக் கூடியதே. பொதுக்குழுவுக்கு முன்பாக, தீர்மானம் கசிந்துவிட்டதே, என்று நினைத்து தி.மு.க. தலைமை அதை மாற்றிவிட்டாலும் தமிழ் லீடருக்கு மகிழ்ச்சியே.

No comments: