Friday, January 6, 2012

மட்டன் கோலா உருண்டை குழம்பு

வழங்கியவர் : இ. செந்தமிழ் செல்வி, பாண்டிச்சேரி.
ஆயத்த நேரம் : 20 நிமிடங்கள்.
சமைக்கும் நேரம் : 20 நிமிடங்கள்.
பரிமாறும் அளவு : 4 நபர்களுக்கு.



தேவையான சாமான்கள்:
* கொத்தின (கைமா) ஆட்டிறைச்சி - 1/2 கிலோ,
* பெரிய வெங்காயம் - 2+2,
* தேங்காய் - 1 மூடி,
* இஞ்சி - சிறு துண்டு,
* பூண்டு - 10 பல்,
* மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி,
* தனியா தூள் - 2 தேக்கரண்டி,
* சோம்பு - 1/2 தேக்கரண்டி,
* கசகசா - 2 தேக்கரண்டி,
* தக்காளி - 4,
* மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
* உருளைக்கிழங்கு - 3,
* பட்டை - சிறிது,
* கிராம்பு - 2,
* கறிவேப்பிலை - சிறிது,
* கொத்தமல்லி தழை - சிறிது,
* எண்ணெய் - 4 ஸ்பூன்,
* உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

* சோம்பு, கசகசா, தேங்காய், கிராம்பு, பட்டை, மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள்,
* இஞ்சி, பூண்டு சேர்த்து நன்றாக அரைக்கவும்.
* இறைச்சியை கழுவி சிறிது உப்பு, அரைத்த விழுதில் பாதி, 2 வெங்காயம் சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக அரைக்கவும்.
* அரைத்த விழுதுடன் சிறிது எண்ணெய் விட்டு,சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
* மீதி வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு எல்லாவற்றையும் பொடியாக நறுக்கவும்.
* பாத்திரத்தில்எண்ணெயை விட்டு காய்ந்தவுடன், நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்து வதக்கவும்.
* சிறிது நேரம் வதக்கிய பின், மீதியுள்ள தேங்காய் மசாலாவை போட்டு, கிளறி, தேவையான தண்ணீர் சேர்க்கவும்.
* கலவை நன்றாக கொதிக்கும் பொழுது, நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கு, தக்காளி, உப்பு சேர்த்து மூடி வைக்கவும்.
* கிழங்கு வெந்ததும், உருட்டி வைத்துள்ள கறி உருண்டைகளை இரண்டிரண்டாக போட்டு, உருண்டைகள் வெந்ததும் இறக்கவும்.

Note:

உருண்டைகள் கரைந்து விடுமென நினைத்தால், உருண்டைகளை லேசாக எண்ணெயில் (light fry) பொரித்து போடலாம்.