Friday, January 6, 2012

சுவையான ட்ரை மட்டன் சுக்கா

தேவையான பொருட்கள் ;

மட்டன் - முக்கால் கிலோ
இஞ்சி பூண்டு விழுது - ஒன்னரை டீஸ்பூன்
கரம் மசாலா - அரைஸ்பூன்
தயிர் -1 டேபிள்ஸ்பூன்
சோம்புத்தூள் - கால்ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரைஸ்பூன்
மிள்குத்தூள் - முக்கால் ஸ்பூன்
மிளகாய்த்தூள் - முக்கால் ஸ்பூன்
சீரகத்த்தூள் - முக்கால் ஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் - 2 பெரியது
மிளகாய் - 2
மல்லி இலை - சிறிது
உப்பு - தேவைக்கு

மட்டனை சுத்தம் செய்து கழுவி சுமார் அரைமணி நேரம் தண்ணீர் வடிகெட்டவும்.
குக்கரில் மட்டன்,இஞ்சி பூண்டு விழுது,கரம்மசாலா,மஞ்சள் தூள்,உப்பு,தயிர் சேர்த்து கலந்து வைத்து மூடி 5 விசில் விசில் வைத்து சிம்மில் 5 நிமிடம் வைத்து இறக்கவும்.

மட்டனில் இப்படி தண்ணீர் சேர்க்காவிட்டாலும் ஊறி இருக்கும்.
ஊறிய தண்ணீரை வற்ற வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் மிளகாய் போட்டு வதக்கவும்.
வதக்கிய வெங்காயத்துடன் வேக வைத்த மட்டனை சேர்க்கவும்.
மட்டனுடன் அனைத்து மசாலாவும் சேர்த்து விடவும்.
மசாலாவை மட்டனுடன் சேர்த்து பிரட்டிவிடவும்.
சிறிது தண்ணீர் தெளித்து சிம்மில் மூடி போட்டு 5 நிமிடம் வைக்கவும்.
மூடியை திறந்து கட் செய்த மல்லி இலை தூவவும்.
சுவையான ட்ரை மட்டன் சுக்கா ரெடி.இதனை ப்லைன் ரைஸ், வெரைட்டி ரைஸ்,பிரியாணி,ஃப்ரைட் ரைஸ் உடன் பரிமாறலாம்.

No comments: