மிக்ஸ்டு ஃப்ளவர் சூப்
தேவையானவை: முருங்கைப்பூ, ஆவாரம்பூ, செம்பருத்திப்பூ (கலந்தது) - ஒரு கப், பாசிப்பருப்பு - கால் கப், மஞ்சள்தூள், மிளகுத்தூள் - தலா அரை டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பாசிப்பருப்புடன் மஞ்சள்தூள், சுத்தம் செய்த முருங்கைப்பூ, ஆவாரம்பூ, செம்பருத்திப்பூ ஆகியவற்றைச் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். வெந்ததும் வடிகட்டி... உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் கலக்கவும். கொத்தமல்லி தூவி சூடாகப் பரிமாறவும்.
அல்சர் பிரச்னை இருப்பவர்களுக்கு இது சிறந்த கை மருந்து!
- வே.சித்ரா வேடியப்பன், திருவண்ணாமலை
வேர்க்கடலை கட்லெட்
தேவையானவை: வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை - 2 கப், பொட்டுக்கடலை மாவு - அரை கப், பொடித்த வெல்லம் - ஒரு டீஸ்பூன், கடலை மாவு - அரை கப், அரிசி மாவு - கால் கப், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், உருளைக்கிழங்கு - 3, வெங்காயம் - 2, பச்சை மிளகாய் - 5, பொடியாக நறுக்கிய இஞ்சி - பூண்டு - ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - கொத்தமல்லி - கைப்பிடி அளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து மசித்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வேர்க்கடலையை மிக்ஸியில் கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து... பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, கறிவேப்பிலை முதலியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் பொடி செய்த வேர்க்கடலை, உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து சுருள வதக்கி இறக்கவும். இந்தக் கலவை ஆறியவுடன் சிறு சிறு வடைகளாகத் தட்டிக் கொள்ளவும்.
பொட்டுக்கடலை மாவு, கடலை மாவு, அரிசி மாவு, கரம் மசாலா, பொடித்த வெல்லம், உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து வைத்துக் கொள்ளவும். தட்டிய வடைகளை அதில் தோய்த்து, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். தக்காளி சாஸ் இதற்கு சரியான சைட் டிஷ்!
- சுபஸ்ரீ பரத்வாஜ், வளசரவாக்கம்
Friday, January 27, 2012
மிக்ஸ்டு ஃப்ளவர் சூப்: ............வேர்க்கடலை கட்லெட்:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment