Sunday, March 4, 2012

ஆட்டுக்கறி வறுவல்,

தேவையான பொருட்கள்:
கறி – 1 கிலோ
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
பட்டை – 4
லவங்கம் – 3
ஏலக்காய் – 3
கசகசா – 1 ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 3 ஸ்பூன்
மல்லித்தூள் – கால் ஸ்பூன்
சோம்பு – 1 ஸ்பூன்
இஞ்சி – 50 கிராம்
பூண்டு – 50 கிராம்
தேங்காய் – 1 கீற்று
சின்ன வெங்காயம் – கால் கிலோ (பொடியாக வெட்டவும்)
நாட்டுத் தக்காளி – கால் கிலோ (பொடியாக வெட்டவும்)
பிரியாணி இலை – 2
எண்ணெய் – 100 கிராம்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:
குக்கரில் கறியைப் போட்டு அரை தம்ளர் தண்ணீர் விட்டு உப்பு, மஞ்சள் தூள் போட்டு வேக விடவும். கறி வெந்த பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பிரியாணி இலை தாளித்து, சின்ன வெங்காயம், தக்காளி வதக்கி அரைத்த மசாலாவை ஒவ்வொன்றாகப் போட்டு நன்றாக வதக்கவும். பச்சை வாசனை போன பிறகு கறியைப் போட்டு தேவையானால் மீண்டும் உப்பு சேர்த்துக் கலந்து விடவும். தண்ணீழ் நன்றாக வற்றியதும், சிறு தீயில் வைத்து சுருள வதக்கி கடாயில் ஒட்டாமல் வரும் வரை வதக்கி கருவேப்பிலை போட்டு கிளறி இறக்கவும்.

குறிப்பு: கறியை சிறு தீயில் வைத்து அதிகம் நேரம் வதக்கினால் மசாலா கறியில் நன்றாக ஊறி இருக்கும்.
====================================================================================
SUKKA VARUVAL

தேவையான பொருட்கள்:
கறி – அரைகிலோ
சின்ன வெங்காயம் – 100 கிராம்
மிளகு – 2 ஸ்பூன்
சோம்பு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
பட்டை – 2 துண்டு
மிளகாய் – 5 (சிவப்பு)
இஞ்சி – 2 துண்டு
பூண்டு – 10 பல்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:
வெங்காயம் முதல் பூண்டு வரை உள்ள பொருட்களை நைசாக அரைத்துக் கொள்ளவும். கறியுடன் அரைத்த மசாலா, உப்பு சேர்த்து பிசறி 1 மணி நேரம் ஊற விடவும். பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி ஊற வைத்த கறியை போட்டு அரை தம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி மூடி விடவும். கறி நன்கு வெந்ததும் தீயைக் குறைத்து வைக்கவும். தண்ணீர் வற்றி நன்றாக வெந்ததும் தீயைக் குறைத்து சுருள சுருள கிளறி கருவேப்பிலைத் தூவி இறக்கவும்.

No comments: