Friday, March 2, 2012

செட்டிநாடு, நண்டு, நாட்டு, பொரியல், வறுவல்

நண்டு பொரியல்
தேவை:
பெரிய நண்டு – 5
மிளகாய் வற்றல் – 8
சீரகம் – 1 தேக்கரண்டி
வெங்காயம் – 6
உப்பு – தேவையான அளவு
மல்லி – 2 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
தேங்காய் சில் – 2

செய்முறை:
பெரிய நண்டு 6 ஐ சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். மிளகாய் வற்றல் 8, மல்லி 2 தேக்கரண்டி, சீரகம் 1 தேக்கரண்டி, கடுகு 1 தேக்கரண்டி, வெங்காயம் 6 தேங்காய் சில் 2 இவற்றை நன்கு அரைத்துக் கொள்ளவும். இதை நண்டுடன் சேர்த்துக் கொள்ளவும். தேவையான உப்பு, மஞ்சள் தூள் போட்டு பிறட்டி 15 நிமிடம் ஊற வைக்கவும். வாணலியில் 8 கரண்டி எண்ணெய் ஊற்றிக்காய்ந்ததும் நண்டைப்போட்டு சிவக்க பொரித்தெடுக்கவும்.


வறுத்த நண்டு

தேவை:
நண்டு – 5
இஞ்சி – 1 அங்குலம்
சின்ன வெங்காயம் – 50 கிராம்
மல்லி (தனியா) – 2 தேக்கரண்டி
தக்காளி – 1
சிகப்பு மிளகாய் – 10
சீரகம் – 1 தேக்கரண்டி
பூண்டு – 5 பல்
பெரிய வெங்காயம் – 3

செய்முறை:
நடுத்தரமான அளவு நண்டுகள் 5 எடுத்து ஓடு நீக்கி, சுத்தம் செய்து கொள்ளவும். 10 சிகப்பு மிளகாய்கள், 1 அங்குலம் இஞ்சி, 1 தேக்கரண்டி சீரகம், 50 கிராம் சின்ன வெங்காயம், 5 பல் பூண்டு, 2 தேக்கரண்டி மல்லி (தனியா) இவற்றை அரைத்துக் கொள்ளவும். 3 பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். 1 தக்காளியை மெல்லியதாக நறுக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் 10 தேக்கரண்டி ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை போட்டு வதக்கவும். இத்துடன் அரைத்த மசாலாவையும் சேர்த்து வதக்கி, வதங்கிய பின் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி, தேவையான உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும். தண்ணீர் கொதித்தும் நண்டுகளைப் போடவும். நண்டுகள் வெந்து நன்கு வதங்கிய பின் இறக்கவும்.

No comments: