Monday, April 20, 2009

பிரபாகரனுக்கு 24 மணி நேர 'கெடு ' : ராஜபக்சே

கொழும்பு (ஏஜென்சி), திங்கள்கிழமை, 20 ஏப்ரல் 2009 ( 15:42 IST )
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் அவரது முக்கிய உதவியாளர்கள் சரணடைய கடைசியாக 24 மணி நேரம் கெடு அளிப்பதாக இலங்கை அதிபர் ராஜ பக்சே இன்று அறிவித்துள்ளார்.

இந்த 24 மணி நேரத்திற்குப் பின்னர் புலிகளை இறுதியாக அழித்தொழிக்கும் நடவடிக்கையை ராணுவத்தினர் மேற்கொள்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து இன்று 35,000 க்கும் அதிகமான தமிழர்கள் தப்பித்து வந்துள்ளதாகவும், இது புலிகள் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டதையே காட்டுவதாக உள்ளதாகவும் ராஜ பக்சே கூறியுள்ளார்.

புதுக்குடியிருப்பு பகுதியி்ல் இலங்கை இராணுவத்தினர் கனரக ஆயுதங்களுடன் இன்று காலை முதல் மேற்கொண்டுவரும் மிகக் கொடூரமானத் தாக்குதலில் 988 அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு வளையத்தை நோக்கி முன்னகர்ந்த ராணுவத்தினர் அப்பகுதியில் உள்ள மக்களை கேடயமாக வைத்துக் கொண்டு முன்னேறியதாகவும், அதற்கு சம்மதிக்காத மக்களை சரமாரியாக சுட்டுத் தள்ளியதாகவும் செய்தி வெளியாகி உள்ள நிலையில், மேற்கூறிய 24 மணி நேர கெடுவுக்குப் பின்னர் புலிகளை அழிப்பதாக கூறி தமிழர்கள் மீது மிகக்கொடூர தாக்குதலை நடத்த ராஜ பக்சே திட்டமிட்டுள்ளதையே அவரது இந்த எச்சரிக்கை காட்டுவதாக தெரிகிறது.

(மூலம் - வெப்துனியா)

No comments: