அ.தி.மு.க அறிவித்த 23 வேட்பாளர்களில் இரண்டு வேட்பாளர்கள் நேற்று அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.
பெரம்பலூர் தொகுதி : பெரம்பலூர் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக மருதைராஜ் அறிவிக்கப்பட்டிருந்தார். திமுக சார்பில் நடிகர் நெப்போலியன் போட்டியிடுகிறார். நெப்போலியனுக்கு ஈடு கொடுத்து தேர்தலில் செலவு செய்ய முடியாத சூழ்நிலையில் மருதைராஜ் இருக்கிறார். வாடகை வீட்டில் கூடியிருக்கும் இவருக்கு பணபலம் இல்லாத சூழ்நிலையில் நெப்போலியனுக்கு ஈடுகொடுக்க முடியாது என ஜெயலலிதா முடிவு செய்து,
அவருக்குப் பதிலாக முன்னாள் அமைச்சர் கே.கே.பாலசுப்ரமணியத்தை வேட்பாளராக அறிவித்திருக்கிறார். முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த இவர், நெப்போலியனுக்கு ஈடு கொடுத்து தேர்தலில் செலவு செய்வார்.
திருவள்ளூர் தொகுதி : பெரம்பலூர் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக வக்கீல் ராஜன் அறிவிக்கப்பட்டிருந்தார். இவர் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவராகக் கருதப்படுவதால் இவரை மாற்றி மாணவர் அணியைச் சேர்ந்த இன்பராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
Friday, April 17, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment