Friday, April 17, 2009

ஆபத்து ! அரசியல்வாதிகளே எங்களை காப்பாற்றுங்கள் !

தாலிபான்கள் இந்தியாவிலும் விஷ விருட்சத்தை விதைக்கத் தொடங்கிவிட்டனர்

on 10-04-2009 03:37

Favoured : 1

Published in : அரசியல், அரசியல் செய்திகள்

பூஞ்ச் மாவட்டம் ஜம்மு கஷ்மீர் மாநிலம் பிப்ரவரி 4-ம் தேதி பாகிஸ்தான் எல்லை பகுதியில் இருந்து ஹிஸ்புல் முஷாகிதீன் கமேண்டோ தலைமையில் 8 பேர் கஷ்மீர் மாநிலத்திற்குள் நுழைகின்றனர். ஜம்மு கஷ்மீர் மாநிலத்தில் எல்லையில் அப்போது திடீரென பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தியது. இந்த துப்பாக்கி சூட்டில் இந்திய எல்லைபாதுகாப்பு படையின் உயர் அதிகாரி ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் ராணுவம் கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்து திடீரென துப்பாக்கியால் சுட்டதன் காரணம் பலருக்கு புரியாமல் இருக்கலாம். கடந்த கால பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய துப்பாக்கி சூட்டை எடுத்துகொண்டு பார்த்தால் ஒன்று புலப்படும். அதாவது இந்திய எல்லை பாதுகாப்பு படையினரின் கவனத்தை திசை திருப்பி தீவிரவாதிகளை இந்தியாவில் நுழைய விடுவது. பிப்ரவரி மாதமும் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய துப்பாக்கி சூட்டின்போது சுமார் 30 பேர் இந்தியாவில் நுழைந்துள்ளனர்.



இந்தியாவில் தேர்தல் நடைபெறும் சமயத்தில் இவர்கள் தேர்தலில் குழறுபடிகள் மற்றும் தீவிரவாத செயல்கள் செய்ய நுழையலாம் என்றும் அவர்களை தேடி அழிக்கும் பணியில் ஈடுபட்டார்கள். இந்த நேரத்தில் குப்வாரா மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் தீவிரவாதிகள் தங்கி இருந்த இடத்தை கண்டறிந்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது இந்த தாக்குதலில் பல தீவிரவாதிகள் கொல்லபட்டனர். இந்திய ராணுவ தரப்பில் ஒரு மேஜர் உட்பட 4 பேர் பலியானார்கள்.

தப்பி ஓடிய பிற தீவிரவாதிகளை பிடிக்கும் பணி தொடர்ந்து நடத்து வருகிறது. இந்த கும்பல் பற்றிய விசாரணையில் இவர்களில் பலர் உள்ளூர்வாசிகள் என்றும் ஒரு சில தீவிரவாதிகள் எல்லை கடந்து வந்தனர் என்றும் தெரியவந்தது. இவர்களில் ஒருவர் கூட பிப்ரவரி மாதம் இந்தியாவில் நுழைந்தவர்கள் இல்லை என்று தெரியவந்து. தீவிரவிசாரணைக்கு பிறகு உளவுத்துறைக்கு அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று கிடைத்து. அது பிப்ரவரி மாதம் இந்தியா எல்லை வழியாக கஷ்மீருக்குள் நுழைந்தவர்கள் தாலிபான்கள் என்ற தகவல். இந்த தகவல் கஷ்மீர் முதல் மந்திரிக்கும் மத்திய உள்துறை செயலகத்திற்கு தகவல் தரபட்டது. தாலிபான்கள் இந்தியாவில் நுழைந்து விட்டார்கள் அவர்களின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டன. முதற்கட்ட விசாரணையில் தாலிபான்களை பற்றி தெரிய வந்த செய்தி நம்ப முடியாதவைகளாக இருக்கின்றது. தாலிபான்களுக்கு லஷ்கர்-இ-தொய்பா போன்று இந்திய நகரங்களில் குண்டு வைப்பதோ அல்லது தாக்குதல் நடத்தும் நோக்கமோ இல்லை. ஹிஸ்புல் முசாகிதீன் போன்று தங்களது தனி ஜம்மு கஷ்மீருக்காக போராடும் நோக்கமும் இல்லை. தாலிபான் தங்களது சட்டத்தை இந்திய இஸ்லாமியர்களிடமும் மெல்ல மெல்ல திணிக்க ஆரம்பிக்கும் பணியாக அதற்கான முதல் தள நடவடிக்கைகளுக்காக இந்த 30 தாலிபான்களும் இந்தியாவில் நுழைந்துள்ளனர். ஆப்கான் பாகிஸ்தான் என வந்த தாலிபான்கள் தற்போது இந்தியாவிலும் இவர்களின் நடவடிக்கைகளை ஆரம்பித்து விட்டனர். லஷ்கர் தீவிரவாதிகளுக்கு தாலிபான்கள் இந்தியாவில் நுழைவது பிடிக்கவில்லை. தாலிபான்கள் தங்களது தீவிரவாத செயல்களுக்கு தடையாக இருப்பார்கள் என்று நினைப்பிலோ என்னவோ அவர்களை மீண்டும் ஸ்வாட் பள்ளத்தாக்கு பகுதிக்கு திரும்புமாறு லஷ்கர் தீவிரவாதியின் கமேண்டோ ஒருவர் தாலிபான் தீவிரவாதிகளுக்கு உத்தரவிட்டார். ஆனால் தாலிபான் இதற்கு எந்த பதிலும் சொல்லாமல் தவிர்த்துவிட்டது. தாலிபான் மற்றும் லஷ்கர் கமேண்டோக்களுக்கு இடையினாலான பேச்சை ஐபிஎன் லைவ் என்ற டி.வி சமீபத்தில் வெளியிட்டது. இந்த டி.வி சேனல் மும்பை தாக்குதல் தீவிரவாதிகளின் பேச்சுக்களை (நர்மன் ஹவுஸ் தாக்குதல்) வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த பேச்சு வருமாறு

லஷ்கர் கமேண்டோ : நாங்கள் முக்கியமான சில நடவடிக்கைகளை செயல் படுத்தத்திட்டமிட்டு கொண்டிருக்கிறோம். இந்த சமயத்தில் நீங்கள் ஏன் இந்தியாவிற்கு சென்றீர்கள்?

இந்தியாவில் உள்ள தாலியான் : எங்களது பிரச்சனையில் நீங்கள் தலையிட வேண்டாம்

ல க : நீங்கள் உடனே ஸ்வாட்டிற்கு திரும்புங்கள்

தா : எங்களின் நோக்கம் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை

ல க : இந்திய உளவுத்துறைக்கு நீங்கள் இந்தியாவில் நுழைந்தது தெரிந்துவிட்டது.

தா : அது பற்றி எங்களுக்கு கவலையில்லை

ல க : நிலைமை மோசமாவதற்குள் திரும்பி விடுங்கள்

தா : எங்களுக்கு அறிவுறை கூறுவதை நிறுத்திவிட்டு செய்வதை ஒழுங்காக செய்யப்பாருங்கள்

இந்த சில நிமிட பேச்சு உளவுத்துறைக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

அப்படி என்றால் கஷ்மீரில் தாலிபான்களின் ராஜ்யம் ஆரம்பித்துவிட்டதா? இனி கஷ்மீர பெண்களும் தாலிபான்களின் சட்டதிட்டங்களுக்கு உட்பட வேண்டுமா இல்லை என்றால் தற்போது ஆப்கான், பாகிஸ்தானில் நடக்கும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் ஜம்முவிலும் ஆரம்பிக்கப்போகிறதா?

எது எப்படியோ தாலிபான்கள் தங்களது விஷ விருட்சத்தின் விதைகளை இந்தியாவிலும் தூவ ஆரம்பித்து விட்டார்கள். இந்திய அரசோ தேர்தல் பரபரப்பில் இவர்களின் நடவடிக்கைகளை கண்டுகொள்ளாமல் இருக்கிறது.

No comments: