Tuesday, April 21, 2009

பி .ஜெ .பி இன் தேர்தல் வாக்குறுதிகள் !

வறுமைக் கோட்டுக்கு கீழே வசிக்கும் மக்களுக்கு இரண்டு ரூபாய்க்கு அரிசி, கோதுமை வழங்கப்படும்; தேசிய பொருளாதாரத்தில் உள்ள கறுப்பு பணத்தைக் குறைக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். சுவிஸ் பாங்கில உள்ள ரூ.25 லட்சம் கோடி முதல் ரூ. 75லட்சம் கோடி வரையான கறுப்பு பணத்தை மீட்டுக் கொண்டு வர கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நாட்டின் அடிப்படைத் தேவைகளான வீட்டு வசதி, சுகாதாரம் மற்றும் சமூக நலத் திட்டஙகளுக்கு அந்த கறுப்பு பணம் பயன் படுத்தப்படும்; மாத வருவாய் பெறுபவர்களுக்கு வருமான வரி வரம்பு ஆண்டுக்கு மூன்று லட்ச ரூபாயாக உயர்த்தப்படும். பெண்கள், மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு வருமான வரி உச்ச வரம்பு 3.5 லட்ச ரூபாயாகும்.என்று பா.ஜ., அறிவித்துள்ளது. பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கை, நேற்று டில்லியில் வெளியிடப்பட் டது. இது 44 பக்கங்கள் கொண்டது. இத்தேர்தல் அறிக்கை வெளியீட்டில் எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி, கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங், தேர்தல் அறிக்கை தயாரித்த ஜோஷி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

பா.ஜ., வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

*வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு, ரேஷன் மூலமாக 35 கிலோ அரிசி மற்றும் கோதுமை கிலோ இரண்டு ரூபாய் என்ற விலையில் வழங்கப்படும்.

* தேசிய பொருளாதாரத்தில் உள்ள கறுப்பு பணத்தைக் குறைக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். சுவிஸ் பாங்கில உள்ள ரூ.25 லட்சம் முதல் ரூ. 75லட்சம் வரையான கறுப்பு பணத்தை மீட்டுக் கொண்டு வர கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நாட்டின் அடிப்படைத் தேவைகளான வீட்டு வசதி, சுகாதாரம் மற்றும் சமூக நலத் திட்டஙகளுக்கு அந்த கறுப்பு பணம் பயன் படுத்தப்படும்.

*மாத வருவாய் பெறுபவர்களுக்கு வருமான வரி வரம்பு ஆண்டுக்கு மூன்று லட்ச ரூபாயாக உயர்த்தப்படும். பெண்கள், மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு வருமான வரி உச்ச வரம்பு 3.5 லட்ச ரூபாயாகும்.

*விவசாயக்கடன் வட்டி 4 சதவீதம் வரை குறைக்கப்படும்.

*ராணுவம் மற்றும் துணை ராணுவம் ஆகியவற்றில் பணிபுரிவோருக்கு முழு வரி விலக்கு அளிக்கப்படும்.

*வாஜ்பாய் ஆட்சியின் போது உத்தரகண்ட், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட் போன்றவை உருவானது போல பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், விதர்பா, தெலுங்கானா கூர்க்கா போன்ற சிறிய மாநிலங்கள் உருவாக்கப்படும்.

*இலங்கையில் உள்நாட்டு பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசுக்கு எவ்வளவு உரிமை உள்ளதோ, அதேபோல, அங்கு வசிக்கும் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டிய கடமையும் அந்நாட்டு அரசுக்கு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

*ராமர் பாலத்தை எக்காரணம் கொண்டும் இடிக்க விடமாட்டோம். அதே சமயம், சேது கால்வாய் திட்டத்தை மாற்று வழி மூலமாக செயல்படுத்தப் படும்.

*அயோத்தியில் ராமருக்கு பிரம்மாண்டமான கோவில் அமைக்க பா.ஜ., தன்னை அர்ப்பணிக்கும். பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும்.

*காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருக்கும் விசேஷ அந்தஸ்து சட்டம் ரத்து செய்யப்படும்.

மேலும் சட்டசபைத் தேர்தலும், லோக்சபாத் தேர்தலும் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடத்தப்பட வலியுறுத்தப்பட்டிருக்கிறது. கடந்த 11 ஆண்டுகளுக்குப் பின், தனியாக தேர்தல் அறிக்கையை பா.ஜ., வெளியிட்டிருக்கிறது. இதுவரை தே.ஜ., கூட்டணிக்கான பொதுத் திட்டத்தை மட்டும் பின்பற்றியது.

பின்னர் நிருபர்களிடம் அத்வானி கூறுகையில், 'வரும் 16ம் தேதி அன்று டில்லியில் தே.ஜ., கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. ஆட்சி நடத்துவதற்கு தேவையான திட்ட அறிக்கை அப்போது தயார் செய்யப்பட்டு வெளியிடப்படும். தேசிய அளவில் மூன்றாவது அணிக்கு இடம் கிடையாது. காங்கிரஸ், பா.ஜ., ஆகியவற்றின் தயவு இல்லாமல் எந்த அணியும் ஆட்சியைப் பிடிக்க முடியாது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி சிதறி விட்டது. அந்த அணியில் தற்போது தி.மு.க., மட்டுமே உள்ளது. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. இன்று கூட கூர்க்காலாண்ட் கட்சி ஒன்று இந்த கூட்டணியில் இணைந்துள்ளது. இவ்வாறு அத்வானி கூறினார்.

No comments: