மசாலா தோசை செய்திருப்பீர்கள், மைசூர் மசாலா தோசை சாப்பிட்டிருப்பீர்களா? உங்களுக்காகத்தான் இந்த மைசூர் மசாலா தோசை.
தேவையான பொருட்கள் :
பச்சரிசி - 1 கப்
அரிசி அவல் - அரை கப்
தோல் நீக்கிய உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி
மெல்லிய ரவை - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - அரை தேக்கரண்டி
செய்முறை :
அரிசியையும், வெந்தயத்தையும், பருப்பு வகைகளையும் கலந்து 2 அல்லது 3 மணி நேரம் ஒன்றாக ஊற வைக்கவும்.
அவலை தனியாக 1 மணி நேரம் ஊற வைத்து எல்லாவற்றையும் ஒன்றாக கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். மறக்காமல் உப்பு சேருங்கள்.
மாவை புளிக்க வைக்கவும். மறுநாள் காலை தோசை ஊற்றுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் தோசை மாவுடன் ரவை, சர்க்கரை இவற்றைச் சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு கூடுமானவரை மிக மெல்லியதாக தோசை ஊற்றவும்.
தோசை நன்றாக சிவந்த பிறகு எண்ணெயை சுற்றி விடவும் ( திருப்பி போட வேண்டாம் ). ஒரு டேபிள் ஸ்பூன் உருளைக்கிழங்கு மசாலா உள்ளே வைத்து சிறிது வெண்ணெயை மேலே வைக்கவும். முக்கோணமாக மடித்து தேங்காய் சட்டினி, சாம்பாருடன் சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்.
Thursday, February 9, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment