என்னடாது.. டெய்லி காலைல ஓன்பது மணிக்கு ஆரம்பிச்சு, சாயங்காலம் ஆறு , ஏழு மணீ வரைக்கும் விடாம, விடாது கருப்பு போல விடாம உங்ளுக்கு லோன் வேணுமா? கிரெடிட் கார்ட் வேணுமா? ன்னு கேட்க ஆரம்பிச்சி, சரின்னு சொல்லிட்டா உங்க பெண்டாட்டி கூட இவ்வளவு கேள்வி கேட்டிருக்க மாட்டாங்க? நீங்க எங்க எங்கயெல்லாம் அக்கவுண்ட் வச்சிருக்கிங்க? எவ்வளவு லோன் போவுது? மாசம் உங்க சம்பளம் என்ன? சொத்து ஏதாவது இருக்கா? யார் பேர்ல இருக்கு?ன்னு உங்களுக்கு பொண்ணு கொடுத்த மாமனார் கூட இவ்வளவு கேள்வி கேட்க மாட்டாரு? சரி லோன் கொடுக்கிறாங்க கேட்கத்தான் செய்வாங்கன்னு சரின்னு சொல்லிட்டா? உடனே ஓரு எச்சூட்டிவை அனுப்பி அந்த பேப்பர், இந்த பேப்பர், எல்லாத்தையும் ஜெராக்ஸ் எடுத்து எதையும் பில் பண்ணாத அப்ளிக்கேஷனில் கையெழுத்து வாங்கிட்டு லோன் கொடுக்கிற மவராசனையா இப்படி சொல்லறன்னு யாராவது கேட்டா? மன்னிக்கணும்.. இதுவரைக்கும் எல்லாமே ஓகேதான். ஆனா அதுக்கப்புறம்தான் ஆரம்பிக்கும் அவங்க சுரண்டல்
1முதல் சுரண்டல்
லோன் வாங்க அப்ளிக்கேஷனெல்லாம் கொடுத்த பிறகு உங்க செக்குக்காக காத்திருப்பீங்க உங்க லோன் அமொண்ட் 1 லட்சம்ன்னு வச்சீங்கன்னா.. 5000 ரூபாய் ப்ராசஸிங்ன்னு கழிச்சுட்டு 95,000தான் தருவாங்க.. ஆனா இந்த ப்ராசஸிங் பீஸ் பத்தி எதையும்மே முடிஞ்ச வரைக்கும் அந்த் டெலிகாலர் சொல்ல மாட்டாங்க. அப்படியே சொன்னாலும் லோன் ஓகே ஆகி செக் ரெடியாயிருக்கும் போது சொல்வாங்க.. உங்க மனசு கார்பரேஷன் பார்க் ஊஞ்சல் போல சத்தத்துடன் ஆடும். வேற வழியில்லாம சரின்னுடுவீங்க.. கொஞ்சம் வேணாம்ணு சொல்லி பாருங்களேன். உடனே ஓரு பர்சண்ட் ப்ராசஸிங் பீஸ் குறையலைன்னா என் பேரை மாத்திக்கிறேன்.
2 சுரண்டல் இரண்டு
இப்போ நீங்க எடுத்த லோனை முன்கூட்டியே முடிக்கீறீங்க.. அதுக்கு pre-closing chargesனு ஓரு அமொண்ட் அதாவது இப்போ சுமார் 4லிருந்து 5 பர்சண்ட் வரைக்கும் எடுத்துப்பாங்க.. இது என்னடாது கூத்துன்னு பார்த்தா.. அதுக்கப்புறம் தான் ஆரம்பிக்குது.. ஆட்டமே.. முன்கூட்டியே முடிக்கற லோனுக்கு அந்த நாள் வரையான வட்டிய ஓரு பைசாகூட விடாம, ப்ராசஸிங், க்ளோஸிங்னு எல்லா காசையும் வாங்கிட்டு, நம்ம செக்கை திரும்ப கொடுக்கணுமில்ல ஆனா அதுக்கு ஓரு ரூல்ஸ் வச்சுருக்காங்க...அதாவது ஓரு குறிப்பிட்ட நாளுக்கு அப்புறம் க்ளோஸ் ஆகிற அக்கவுண்டின் செக்கெல்லாம் அடுத்த மாசம் நம்ம அக்கவுண்ட்டில கலக்ஷனுக்கு போட்டு நம்ம பாஸ் பண்ண சொல்லிட்டு அதுக்கப்புறம் நாம அந்த வங்கிய அணுகி நம்ம பணததை க்ளைம் பண்ணிக்கணும். அதாவது அவங்க மட்டும் அவங்க பணத்துக்கு ஓரு நாள் கூட விடாம வட்டி போட்டு வாங்கிப்பாங்க, ஆனா நம்ம பணத்த அவங்க பத்து பதினைந்து நாள் வச்சிக்கிட்டு அதுக்கு ஓரு ரூபாய் கூட வட்டி தரமாட்டாங்களாம் என்ன அநியாயம்? சரி இதுக்கு வேற வழி இல்லையான்னு கேட்டா இருக்கு. அது நம்ம பேங்கில நம்ம செக்கிற்க்கு ஸ்டாப் பேமண்ட் கொடுக்கிறது. ஆனா அதுக்கு ஓவ்வொரு பேங்க் குறைந்தபட்சம் 100 ரூபாயிலிருந்து 200 வரைக்கும் வசூலிக்கிறாங்க.. சரி அந்த காசை யாவது அவங்க திரும்ப கொடுக்கணுமில்ல.. கேட்டா அதெல்லாம் நாங்க லோன் வாங்கும் போதே.. அதில ரூல் அண்ட் ரெகுலேஷனில் போட்டிருக்கோம்ன்னு சொல்றாங்க.. சரின்னு அந்த ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷ்னை ப்பார்தா.. அதுல செக்க ஸ்டாப் பேமண்ட் கொடுக்க சொல்லி போட்டிருக்கு.. அனாஅதுக்கான சார்ஜ் க்ளேயிம் பண்ணகூடாதுனு போடல..
Monday, August 25, 2008
தனியார் வங்கிகளின் சுரண்டல் திரு விளையாடல் ............விவரம் .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment