சைனா மொபைல் போன்களை உபயோகம் செய்யலாமா?
தற்போது சைனா மொபைல்போன்கள் வந்து மார்கெட்களில் சக்கைப்போடு போட்டுக் கொண்டுள்ளன.
அவற்றில் இரண்டு சிம்கார்டுகள் (தமிழில் என்ன வார்த்தை?) போடும் வசதி, மேற்கொண்டு இலவச பேட்டரி ஒன்று, ஆடியோ, வீடியோ, கேமெரா, SD கார்டு மற்றும் பிராண்டடு போன்களில் உள்ள அனைத்துவசதிகளும் உள்ளது
மேலும் புளூடூத்திலிருந்து இணைய வசதி வீடியோ சாட் வரை மேலும் டீவி பார்க்கும் வசதி உள்பட உள்ளது என்றும் விரைவில் பாத்ரூம் மற்றும் டாய்லேட் வசதிகள் கூட சைனா போன்களில் வந்துவிடும் என்கிறார்கள்
ஆனால் ஒரு சாரார் மேற்படி சைனா போன்கள் ஒரு தடவை கீழே போட்டால் சுக்குநூறாக உடைந்துவிடும் என்கிறார்கள். பேட்டரி சீக்கிரம் போய்விடும் அதற்குத்தான் இன்னொரு பேட்டரியும் தருகிறார்கள் எனக்கூறுகின்றனர்.
மேலும் ஒரு சிலர் அந்த போன்களில் கதிரியக்கம் அதிகமாக உள்ளது. அதனால் காதில் உள்ள ஜவ்வு அறையில் உள்ள காது கேட்பதற்கு மிகவும் தேவையான மெல்லிய உணர்வு இழைகளை எரித்துவிடும் என்றும் அதனால் காது கேட்கும் திறன் முற்றிலும் இழந்து விடுவார்கள் என்றும் அதற்கு மருத்துவத்தில் சிகைச்சையே இல்லை என்றும் கூறுகின்றனர்.
இது எந்த அளவு உண்மை என்றும் தெரியவில்லை...
ஒருவேளை சைனாக்காரர்கள் இந்தியா நாடு வல்லரசு ஆக முடியாமல் தடுக்க தனது போன்களை குறைந்தவிலையில் விற்று இந்தியர்களை செவிடர்களாக்க முயற்சிக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.
ஆனால் இதற்காக விற்பனை ஒன்றும் குறைந்ததாக தெரியவில்லை. விற்பனை அதிகரித்துக்கொண்டுதான் உள்ளது.
அனைத்துவசதி கொண்ட கம்பெனீ போன் ஒன்று வாங்கும் விலையில் இப்போன்களை இரண்டுக்கும் மேற்பட்ட போன்களை வாங்கலாம் எனக் கூறுகின்றனர்.
இந்த விசயமெல்லாம் இப்போது எதற்கு என்று கேட்கிறிர்களா? எனக்கும் ஒரு சைனா போன் வாங்கும் ஆசை வந்து கொழுந்துவிட்டு எரிகிறது.... அதை வாங்கி எனது காதும் கருகிவிடுமோ என அச்சம் ஏற்பட்டுவிட்டது....
ஆகவே மேற்படி சைனா போன்களை வாங்கி உபயோகித்து, பயனடைந்து, அடுத்தவர்களை வயிரு எரிய வைத்துகொண்டு,அல்லது அதனால் அவஸ்தைப்பட்டு கொண்டு இருப்பவர்கள் தங்களது அனுபவங்களை பின்னுட்டமாகவோ அல்லது பதிவாகவோ கூறினால் அதை வைத்து என்னைப்போல் பலரும் பயனும் அடைவார்கள்.
உள்ளதை கூறுங்கள்... யான் பெற்ற அவஸ்தை இவ்வையகம் பெறட்டும் என எண்ணம் வேண்டாம்
Sunday, August 17, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment