டெல்லி:
கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து வளர்ச்சியை மட்டுமே கண்டு வந்த இந்திய சாப்ட்வேர் துறையில் சரிவு ஏற்பட ஆரம்பித்துள்ளதாக இன்போசிஸ் துணைத் தலைவர் நந்தன் நிலேகனி கூறியுள்ளார்.
டெல்லியில் இந்திய வர்த்தக சபையின் கூட்டத்தில் பேசிய அவர்,
சர்வதேச பொருளாதார நெருக்கடியிலிருந்து இந்திய சாப்ட்வேர் துறை தப்ப முடியாது. இதுவரை தொடர்ந்து வளர்ச்சியை மட்டுமே கண்டு வந்த இந்தத் துறையில் மந்தம் ஏற்பட்டுள்ளது உண்மை தான். விரைவில் சரிவும் ஆரம்பிக்கும். ஆனால், இதையெல்லாம் சமாளிக்கும் பலம் இந்திய சாப்ட்வேர் துறைக்கு உண்டு.
வளர்ச்சி குறையலாமே தவிர ஒரேயடியாக முடங்கிவிடாது. இதனால் இந்தத் துறையில் தொடர்ந்து வேலை வாய்ப்புகள் உருவாகிக் கொண்டு தான் இருக்கும். ஆனால், அது கடந்த 5 ஆண்டுகளில் இருந்ததைப் போல இருக்காது.
இந்த ஆண்டுக்கான இன்போசிஸ் நிறுவனத்தின் வளர்ச்சி விகிதத்தை நாங்களே குறைத்துவிட்டோம். இந்த ஆண்டில் எங்களது வருவாய் 4.72 பில்லியன் டாலர் முதல் 4.81 பில்லியன் டாலருக்குள் தான் இருக்கும்.
இது போன்ற பொருளாதார நெருக்கடிகள் எந்தத் துறையையும் விட்டு வைக்காது. ஆனால், இதை சமாளித்துக் காட்டியது தான் இந்திய சாப்ட்வேர் துறை. 2001ம் ஆண்டிலும் இதே போன்ற சரிவைத் தான் சந்தித்தோம். ஆனால், அதை வெற்றிகரமாகவே சமாளித்தோம். எங்கள் நிறுவனத்தில் ஊழியர்கள் சேர்ப்பதை நிறுத்தப் போவதி்ல்லை என்றார்.
Tuesday, November 18, 2008
இந்திய சாப்ட்வேர் துறையையும்,பொருளாதார நெருக்கடிகள்
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
This is true
Post a Comment