Friday, November 14, 2008

மின் உபயோகம்: கருணாநிதியை விஞ்சிய ஜெயலலிதா!

சென்னை:

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் 2 மாதத்துக்கு ரூ. 1 லட்சத்துக்கும் அதிகமான அளவுக்கு மி்ன்சாரம் பயன்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார்.

தமிழக சட்டசபையில் நேற்று மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறுகையில்,

”தமிழகத்தில் 20 மணி நேரம் மின்சாரம் இல்லை என்றெல்லாம் கூறி அ.தி.மு.க. வினர் தினந்தோறும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

நானும் இதை சொல்லக் கூடாது என்று தான் இருந்தேன், ஆனால் சொல்ல வேண்டியதாகிவிட்டது. போராட்டங்களை நடத்தி வரும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் 2 மாதத்துக்கு எவ்வளவு மின்சாரம் பயன்படுத்துகிறார்கள் என்று பார்த்தோம்.

அவருக்கு பல வீடுகள் இருந்தாலும் அந்த ஒரு வீட்டில் மட்டும் 2 மாத காலத்துக்கு மின் கட்டணமாக ரூ. 1,02,468 செலுத்தியிருக்கிறார்கள். இதற்கு எத்தனை யூனிட் மின்சாரம் செலவாகியிருக்கும் என்று கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்.

அதே நேரத்தில் முதல்வர் கருணாநிதியின் வீட்டுக்கு 2 மாதத்துக்கு ரூ. 15,000 தான் கட்டணம் வந்துள்ளது” என்றார்.

No comments: