பசித்தவனுக்கு மீனை கொடுப்பதைவிட மீன் பிடிக்க கற்று கொடு; அவன் ஆயுளுக்கும் நீ உணவளித்தவனாகிறாய்!!” - இது தான் சூப்பர் ஸ்டாரின் பாலிசி. காரணம் இது உழைப்பை ஊக்குவிக்கும், வளத்தை கொண்டுவரும்.
மீனை கொடுப்பதைவிட மீன் பிடிக்க கற்று கொடு
பசித்தவனுக்கு மீன் பிடிக்க கற்று கொடு என்கின்ற இந்த அவரது கொள்கையை தனது மகள் விஷயத்தில் கூட அவர் செயல்படுத்தினார் என்பது தான் உண்மை. இந்த கொள்கைதான் அவரது அரசாங்கத்தின் கொள்கையாகவும் இருக்கும் என்று நம்பலாம். இது குறித்து ஒரு சுவையான சம்பவம் உண்டு.
சொன்னதை செய்துகாட்டிய ரஜினி
தனது வாரிசுகளின் எதிர்காலத்தை பற்றிய கேள்விக்கு 1995 லேய தூர்தர்ஷன் பேட்டியில் அவர் அளித்த பதில் தெரியுமா? ஏற்கனவே நாம் அளித்த தூர்தர்ஷன் பேட்டி தொகுப்பிலிருந்து இதை தருகிறேன். அருகில் தரப்பட்டுள்ள ஸ்கேன் கட்டிங்கை பார்க்கவும்.
சொன்னது போலவே அவர் தனது மகள் தனது சொந்தக் காலில் நிற்கும்படி செய்துவிட்டார். (மற்றவர் திருமணமாகி நல்லபடியாக செட்டில் ஆகிவிட்டார். அவரது வாழ்க்கைத்துணை பிரபல நடிகர் என்பதால் ரஜினியின் மகள் என்கின்ற அடையாளம் என்பது போய் தனுஷின் மனைவி என்று அவருக்கென்று ஒரு அடையாளம் வந்துவிட்டது. ரஜினி விரும்புவதும் இதைத் தான்.)
மகள் என்பதால் ரஜினி எந்தவித விஷேஷ சலுகையும் அளிக்கவில்லை
சௌந்தர்யா ரஜினியின் அடையாளத்திற்கு பின்னர் இருப்பது அவரது கடும் உழைப்பு. தனது மகள் என்பதால் அவருக்கு ரஜினி எந்தவித விஷேஷ சலுகையும் அளிக்கவில்லை. அனிமேஷன் படிப்பு முடித்த பிறகு, சொந்தமாக தொழில் துவங்க வங்கியில் கடன் பெற்று அந்த கடனை சரியாக ஒழுங்காக கட்டவேண்டுமே என்று வாய்ப்புகளுக்கு அலைந்து, தன் சொந்த முயற்சியால் ஆர்டர்ஸ் பிடித்து எந்த வித சிபாரிசும் இல்லாமல் அனிமேஷன் துறையில் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டவர் சௌந்தர்யா ரஜினிகாந்த். (வங்கியில் கடன் பெற்று தொழில் தொடங்கியதும், அதற்க்கு அவர் தற்போது ட்யூ கட்டி வருவதும் எத்துனை பேருக்கு தெரியும்?)
ஏழுபேருடன் துவக்கப்பட்ட ஆக்கர்
சென்னையில் சில வருடங்களுக்கு முன்பு வெறும் ஏழு பேருடன் துவக்கப்பட்ட அவரது ஆக்கர் ஸ்டூடியோஸ் இன்று பல நாடுகளில் கிளைவிட்டு நூற்றுக்கும் மேற்ப்பட்டவர்கள் பணிபுரியும்வன்னம் சுறுசுறுப்பாக இயங்கிவருகிறது. விஷுவல் டெக்னாலஜியில் ஒரு பெரும் சந்தை சக்தியாக உருவெடுதிருக்கிறது. தென்னிந்திய விஷூவல் எபெக்ட்ஸ் சந்தையில் இவரது நிறுவனம் 40% கைப்பற்றியிருப்பது சாதாரணமான விஷயம் அல்ல.
திறமையை நிரூபித்தபிறகு தான் சுல்தான்
எந்தவித சிபாரிசும் இல்லாமல் அவரது சொந்த முயற்சியில் தான் அவரது முதல் வாய்ப்பு சந்திரமுகி படத்துக்காக டைட்டில் டிசைன் செய்வதற்கு கிடைத்தது. அதற்க்கு பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தன. அதை சரியாக பயன்படுத்திக்கொண்டார்.
சௌந்தர்யா தனது திறமையை நிரூபித்தபிறகு தான் சுல்தானுக்கு கூட அவர் வாய்ப்பளித்தார். தந்தையை சமாதானம் செய்வது அவருக்கு அத்தனை எளிதாக இருக்கவில்லை.
இது குறித்து சௌந்தர்யா கூறுவதாவது :
“சுல்தான் படம் என்னுடைய பல வருட கனவு, உழைப்பின் விளைவு என்றுகூடச் சொல்லலாம். இந்தப் படத்தை இப்படித்தான் எடுக்க வேண்டும் என கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கும் மேல் நான் திட்டமிட்டேன்.
இல்லாவிட்டால் அப்பாவை அத்தனை சீக்கிரம் யாராலும் கன்வின்ஸ் பண்ணவே முடியாது. தன் மகள் என்பதற்காகவெல்லாம் எந்த வாய்ப்பையும் தந்துவிடமாட்டார் அவர்.
ஆனால் அப்பா ஒரு முறை முடிவு செய்துவிட்டால், கடவுளே நினைத்தாலும் அதை மாற்றமுடியாது. அதுதான் அவரது இயல்பு. ஆரம்பத்திலேயே இந்தப் படம் குறித்த ஒவ்வொரு காட்சிக்கும் அவருக்கு போதிய விளக்கம் கூறி அவருக்கு திருப்தி வரும் வகையில் கதையை அமைத்தேன்.”
(நன்றி: http://envazhi.com)
சௌந்தர்யா ரஜினி சொந்தமாக போராடி பிசினசில் வெற்றிக்கொடி நாட்டியது பற்றி நவம்பர் 26, 2008 தேதியிட்ட இந்தியா டுடே யில் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. அதன் ஒரு பகுதி தான் நீங்கள் அருகில் காண்பது.
இந்தியா டுடேயில் மேற்படி கட்டுரையை படித்தவுடன் சூப்பர் ஸ்டாரின் மீன் பிடிக்க கற்றுகொடு பாலிசிதான் நினைவுக்கு வந்தது. தனது சொந்த மகளின் விஷயத்தில் கூட அவர் அதை அப்ளை செய்தது எனக்கு பெரிய ஆச்சரியம். அதனால் தான் அதை உங்களுடன் பகிர்ந்துகொள்ள முடிவு செய்தேன்.
Monday, November 24, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment