Thursday, November 6, 2008

சிவாஜியின் சொந்த வாழ்க்கை

ரத்னமாலா கணேசன் 'என் தங்கை'நாடகத்தில் எம்ஜியாருக்கு தங்கையாக நடித்தவர் . நாடகம் திரைப்படமாக்கப்பட்ட போது போது ஈ வி சரோஜா தங்கையாக படத்தில் நடித்தார் . 'என் தங்கை' படம் 'பராசக்தி' வெளியான அதே 1952 ல் தான் .நாடகம் அதற்கு முந்தைய வருடங்களில் நடந்தது என்பதை சொல்ல வேண்டியதில்லை .
' என் தங்கை நாடக ரிகர்சல் நடக்கும்போது அங்கே அடிக்கடி தம்பி சிவாஜி கணேசன் வருவார் ' என்று எம்ஜியார் குறிப்பிட்டிருக்கிறார் .இது படிக்கும் போது மேலோட்டமாக சாதாரண வார்த்தை .ஆனால் சிவாஜி கணேசனின் அந்தரங்கத்தை நாசுக்காக எம்ஜியார் வெளிப்படுத்திய குறும்பு !

சிவாஜியின் சொந்த வாழ்க்கை பற்றி அவர் என்ன தான் பல நடிகைகளோடு நடித்தாலும் குடும்ப வாழ்க்கை யை சிறப்பாக அமைத்து கொண்டவர் என்பதாக ஒரு பிம்பம் உண்டு . எம்ஜியார் , ஜெமினி,எஸ் எஸ் ஆர் இந்த கடமையிலிருந்து வழுவியவர்கள் என்ற அபிப்பராயத்தை ஊர்ஜிதப்படுத்த இதை சொல்வார்கள் . நடிகைக்கு திருமண அந்தஸ்து கொடுத்து குடும்ப வாழ்க்கையை சிக்கலாக்கி கொள்ளாதவர் சிவாஜி என்ற அர்த்தத்தில் .

உண்மை வேறு . இந்த ரத்தினமாலாவுக்கு சிவாஜி மூலம் குழந்தைகள் உண்டு . தான் சிவாஜி கணேசனின் மனைவி தான் என்பதில் இவருக்கு மிகுந்த பிடிவாதம் இருந்தது .சென்னையில் ரத்னமாலா வீட்டில் நேம் போர்டு " ரத்னமாலா கணேசன் " என்று தான் போடப்பட்டிருந்தது .

'அழைத்தால் வருவேன் 'படத்தில் என்னோடு நடித்த ஸ்ரீராஜ் என்பவர் நடிகர் அசோகன் நாடகக்குழுவில் கதாநாயகனாக நடித்தவர் . இந்த ஸ்ரீராஜ் கூட பிறந்த மூத்த சகோதரர் தன் ராஜ் பழைய நடிகர் . அறுபதுகளில் பல படங்களில் டாக்டர் , இன்ஸ்பெக்டர் ஆகிய ரோல்கள் செய்திருக்கிறார் . இந்த தன்ராஜ் தான் ரத்னமாலா கணேசனின் மகளை திருமணம் செய்தவர் . பலரும் இவரை பற்றி குறிப்பிடும் போது ' சிவாஜி சார் மருமகன் ' என்றே சொல்வார்கள் .
சமீபத்தில் இந்த ரத்தின மாலா இறந்து விட்டார் என கேள்விப்பட்டேன் .உண்மை தானா ?



இன்னொரு பிரபலமான நடிகையையும் நடிக்கவந்த புதிதில் 'சிவாஜியின் மகள்' என்றே அழைத்தார்கள் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். அந்த பிரபல நடிகையின் தாயும் ஒரு நடிகைதான். தாய் நடிகையோடும் நடித்து பின்னர் மகள் நடிகையோடும் நடித்து சக்கை போடு போட்டார் என்றும் சொல்வார்கள்.

அந்த பிரபல நடிகை பின்னர் இப்பொழுது அரசியலிலும் வெகு பிரபலம்.

அப்ப பப்பியம்மா?

No comments: