Sunday, November 30, 2008

இனி நாம் செய்யவேண்டியது , நம்மை காப்பாற்றிக்கொள்ள !

மும்பையில் நடந்த கோர சம்பவத்துக்கு காரணம் இந்தியாவின் அரசியல் தலைமை சரியில்லாததே என்று Wallstreet Journal சொல்கிறது.

One reason is because India is an easy target. Its intelligence units are understaffed and lack resources. Coordination among the country's 28 state police forces is poor. The country's anti terror legal architecture is also inadequate; there is no preventive detention law, and prosecutions can take years. A lack of political leadership is to blame. Yesterday Prime Minister Manmohan Singh promised that "every perpetrator would pay the price." Yet his Congress Party has done little more than
bicker with its coalition allies over the past five years on how best to fight terrorism, as Sadanand Dhume writes here. Or it has tried to deflect responsibility by blaming Pakistan. It may pay a price for its incompetence at the national polls next year.

இந்தியாவின் geo political stability இப்போது அன்னிய முதலீட்டாளர்களுக்கு பெரும் கவலை அளிக்கக்கூடிய விஷயமாக மாறி வருவதன் அறிகுறி. இதனால் வருங்காலத்தில் அன்னிய முதலீட்டிற்கான சாதகமான சூழ்நிலைகள் சற்றே குறையக்கூடும். சரிந்து விடாது. ஆனால் முதலீட்டாளர்கள் அதிகமாக கேள்விகள் கேட்பார்கள். Business Resumption Planning முக்கிய காரணியாக அலசப்படும். அதி முக்கிய வர்த்தக செயல்பாடுகள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுவதை யாரும் விரும்ப மாட்டார்கள். இந்த இடத்தில் சைனா இந்தியாவை அடித்துச் சென்று விடும்.


இந்த முறையும் நிலையில்லாத ஒரு ஆட்சி மத்தியில் அமையுமானால் இந்தியாவின் வளர்ச்சி நிச்சயம் தடை படும். இந்தியா தீவிரவாதத்திற்கு எதிரான மென்மையான போக்கை கடைபிடித்து வருவது மிகவும் ஆபத்தான நிலைப்பாடு. இந்தியாவின் வெளியுறவு கொள்கைகள் பாகிஸ்தானுடனும் பங்களாதேஷுடனும் இன்னும் வெளிப்படையாகவும் கடுமையானதாகவும் இருக்க வேண்டும். இன்றைய தேதியில் இந்தியாவிற்கு பாகிஸ்தானுடனான உறவில் இரண்டே நிலைகள் தான் இருக்கின்றன.

அ) மிகவும் வெளிப்படையான உறவு - பாகிஸ்தான் அதன் பிரதேசங்களில் இந்திய படைகளுடன் இணைந்து தீவிரவாதத்திற்கு எதிராண தேடுதல் வேட்டையை மேற்கொள்ள வேண்டும். அதற்கு இந்திய படைகளை பாகிஸ்தானின் எல்லைக்குள் அனுமதிக்க வேண்டும் - இதற்கு நிச்சயம் பாகிஸ்தான் தற்போதைக்கு சம்மதிக்காது. ISIக்கும் IBக்கும் இடையே இன்னுமொரு உடன்படிக்கை வேண்டுமானால் கையெழுத்தாகலாம்.

ஆ) Dushman Humsaaya (பக்கத்து வீட்டு எதிரி) - இந்தியாவின் தேச நலனுக்கு பாகிஸ்தான் எதிரி என்ற பகிரங்கமான நிலைப்பாடை இந்தியா மேற்கொண்டு பாகிஸ்தானுடனான தற்போதைய வெளியுறவு கொள்கைகளில் மாற்றம் கொண்டு வந்து வர்த்தக தொடர்புகளையும் முற்றிலுமாக நிறுத்தி விட்டு, சுயேச்சையாக பாகிஸ்தானில் தேடுதல் வேட்டையை தொடர வேண்டும். இதற்கு பாகிஸ்தானுடன் போர் மேற்கொள்வது தான் ஒரே வழி. இப்போதைய பொருளாதார பின்னடைவில் இந்த நிலை மிகவும் ஆபத்தானது மட்டுமல்ல - பிற இஸ்லாமிய நாடுகளின் வெறுப்பையும் (ஏன் அமெரிக்காவே இந்த நிலைப்பாட்டை எதிர்த்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை) சம்பாதித்துக் கொள்ள வேண்டி வரும்.


மேலே சொன்ன விஷயங்களை எல்லாம் எப்படி சரி செய்ய போகிறார்கள் என்று இந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் முதலில் தெளிவாக மக்களுக்கு சொல்ல வேண்டும். அதோடு மட்டும் இல்லாமல் இந்தியாவிற்கு இப்போதைய உடனடி தேவைகள்

1) போலீஸ் துறை சீரமைக்கப்பட வேண்டும்: வெறும் லத்திகளை வைத்துக் கொண்டு தீவிரவாதத்தை எதிர்க்க முடியாது. நவின ஆயுதங்களும் தொழில் நுட்பங்களும் போலிஸ் துறைக்கு தரப்படல் வேண்டும். (சைரன் வைத்த காரில் காய்கறி வாங்குவது போல - ஏகே 47 SI பையனின் விளையாட்டு சாமானாகாமல் பார்த்துக் கொள்ளுதல் அவசியம்). 9 மாத பிள்ளைதாச்சியைப் போல வயிறை தள்ளிக்கொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்யும் போலிஸ்காரர்கள் குறைக்க (முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படும் கதை போல) நடவடிக்கை எடுக்க வழி வகை செய்ய வேண்டும். இதற்கான திட்ட விளக்கத்தை கட்சிகள் பிரதானமாக முன் வைக்க வேண்டும்.

2) தீவிரவாதத்திற்கு எதிராண கடுமையான சட்டங்கள் அமலில் இருக்க வேண்டும்: POTAவை மீண்டும் கொண்டு வருவது குறித்த தெளிவான நிலையை ஆளும் காங்கிரஸும் பிஜேபியும் இந்த தேர்தலில் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். வட கிழக்கு மாகாணங்களில் இயங்கும் தீவிரவாத இயக்கங்களையும் பிற நாடுகளை அடிதளமாகக் கொண்டு இந்தியாவில் இயங்கி வரும் தீவிரவாத இயக்கங்களையும் அந்த இயக்கத்துக்கு ஆதரவாக செயல்படும் தனிமனித உரிமையையும் தடை செய்ய வேண்டும். இது குறித்த நிலையை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் முதன்மையாக தெரிவிக்க வேண்டும்.

3) எல்லைக் காவலை தீவிரப்படுத்த வேண்டும்: இன்னும் தீவிரவாதிகள் இந்தியாவை ஆகாசமார்கமாக மட்டுமே வந்து தாக்கவில்லை. அப்படி வரவும் அதிக நேரம் பிடிக்காது. இன்னும் பல சாமானியர்களின் உயிர்களையும் சில ராணுவ வீரர்களையும் பலி கொடுக்காமல் proactive-ஆக செயல் பட்டு ரோந்துப் பணிகளையும் கண்காணிப்பையும் அதிகப்படுத்த வேண்டும்.

4) உள் நாட்டு பிரச்சனைகள் தோன்றாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்: முக்கியமாக இந்த மாதிரி குழப்ப சூழ்நிலையில் மத கலவரங்கள் வெடிக்க வாய்ப்பு உண்டு. அந்த மாதிரி மத உணர்வுகளை தூண்டி விடும்படியான அடிப்படை வாத கொள்கைகளை மக்கள் முன் எடுத்துச்செல்லாமல் நடு நிலைமையுடன் அரசியல் கட்சிகளும் மீடியாக்களும் செயல்படுதல் அவசியம்
(ராஜ் தாக்ரேவை விமர்சிக்க உங்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் - இப்போது வேண்டாம்)

5) உள் கட்டமைப்புகளை இன்னும் தீவிரப் பாதுகாப்பு கண்காணிப்பில் கொண்டு வரவேண்டும்: இன்றைய தேதியில் நமது ரயில்வே ஸ்டேஷன்களும் பேருந்து நிலையங்களும் திறந்த நிலையில் இருப்பது பாதுகாப்பை நாம் எவ்வளவு தூரம் சமரசம் செய்து கொண்டு உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதற்கு சிறந்த உதாரணம். இதைத் தவிர முக்கிய சாலைகள், மக்கள் கூடும் பொது இடங்களில் ரகசிய காமெராக்கள் பொருத்தி கண்காணிப்பில் கொண்டு வர வேண்டும். இவை மட்டுமன்றி அடிப்படை பாதுகாப்பை சமரசம் செய்து கொண்டு கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் முதலில் சீரமைக்கப்பட வேண்டும்.

No comments: