Sunday, September 4, 2011

ரஜினி படங்களுக்கு வருகிற அதே கூட்டம் அஜீத் படத்திற்கும் வந்தது.

இதற்கு முன் அஜித் இத்தனை பெரிய வெற்றியைச் சந்திக்க வில்லை. அஜித் திரைவாழ்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய வாலி, திணா, பில்லா படங்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளியிருகிறது மங்காத்தா படம்.

கடந்த இரண்டு நாட்களில் தமிழகத்தில் மட்டும் 2.8 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது மங்காத்தா. இந்த வசூல் சாதனை இரண்டு வாரங்களுக்குத் தொடரும் என்கிறார்கள் பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரத்தில்.

இது ஒருபுறம் இருக்க அஜித் தற்போது நடித்து வரும் பில்லா இரண்டாம் பாகத்தில் மொத்தமுள்ள 5 பாடல்களில் இரண்டு பாடல்களை படம் பிடித்து முடித்து விட்டார் இயக்குனர் சக்ரி. இந்த பாடல்களில் ஒன்றை ஹைதராபாத்திலும், மற்றொரு பாடலை பாண்டிச்சேரியிலும் படமாக்கியிருகிறார்கள். யுவன் முதலில் இசையமைத்துக் கொடுத்தது இந்த இரண்டு பாடல்களைதானாம்.

இதற்கிடையில் பில்லா இரண்டாம் பாகத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பு, தூத்துகுடியில் நடைபெற இருக்கிறது. பில்லா இரண்டி கதைப்படி, தூத்துக்குடி நகரின் மாபியாவாக ரேணிகுண்டா புகழ் தீப்பேட்டி கணேஷன் நடிக்கிறார். இவரை ஒழித்துக் கட்டி தூத்துகுடி மாவட்டத்தின் மாபியா அதிகாரத்தை கைப்பற்றும் பொதுநலம் கொண்ட தாதாவாக அஜித் நடிக்கிறார்.

அஜித்தின் பூர்வீகம் பற்றி படத்தில் நெகிழ்வான விதத்தில் பிளாஷ்பேக் அமைத்திருகிறாராம் இயக்குனர். உலகத்தமிழர்கள் மகிழும் வண்ணம் பில்லா இரண்டில் இலங்கைத் தமிழ் அகதியாக வருகிறார் தல அஜித்! ஒரு சில காட்சிகளில் இலங்கையின் யாழ்மாவட்ட தமிழில் பேசவும் இருகிறாராம் அஜித்! வாவ்!
------------------------------------------------------------------------------------
மங்காத்தா படத்திற்கு வந்த முதல் நாள் கூட்டம், ஒட்டுமொத்த தமிழகத்தையும் பிரமிக்க வைத்திருக்கிறது. ரஜினி படங்களுக்கு வருகிற அதே கூட்டம் அஜீத் படத்திற்கும் வந்தது. இதையடுத்து அடுத்த சூப்பர் ஸ்டார் நாற்காலி யாருக்கு என்ற கேள்வியும், அது குறித்த விமர்சனங்களும் எழ ஆரம்பித்திருக்கிறது கோடம்பாக்கத்தில்.

அஜீத் பட வெற்றியை அவரேதான் முறியடிக்க வேண்டும் என்பது போல இதுவரை இல்லாத அளவுக்கு இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமை விற்கப்பட்டுள்ளதாம். இதன் மதிப்பு மொத்தம் 18 கோடியே 95 லட்சம் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

பந்தின் வடக்கு பக்கம் காற்றடித்தால் தெற்கு பக்கமும் வீங்கும் என்பது போல, இந்த படத்தின் விலையை கருத்தில் கொண்டு டிக்கெட் விலையை பன் மடங்கு உயர்த்தி விற்க சொல்கிறார்களாம் விநியோகஸ்தர்கள். இதற்கு அநேக தியேட்டர்கள் சம்மதித்தாலும், சென்னையில் இயங்கி வரும் கார்ப்பரேட் தியேட்டர்கள் மட்டும் கைகட்டி வாய் பொத்தி நிற்கிறதாம். அரசு நிர்ணயித்த விலையை தாண்டி விற்க முடியாது என்று இவர்கள் கூறி வருவதால் செய்வதறியாது திகைக்கிறார்களாம் விநியோகஸ்தர்கள்.

இது ஒருபுறம் இருக்க, படம் ஹிட் என்றால் திருப்பதியில் மொட்டை என்று வேண்டியிருந்த டைரக்டர் வெங்கட்பிரபு தனது பிரார்த்தனையை நிறைவேற்றிவிட்டு வந்திருக்கிறார். தயாரிப்பாளர்களுக்கு மொட்டை போட்டே பழகிய சில இயக்குனர்கள் வெங்கட் பிரபுவை பார்த்தாவது மாறுவார்களா?


No comments: