தேவையான பொருட்கள்
1/2 கப் பச்சை ஒலிவ் விதை நீக்கியது(Green Olives)
1/4 பார்ஸ்லி (Parsley)
2 மே.க எலுமிச்சம்பழ சாறு
4 சிக்கன் நெஞ்சுப் பாகம் (Chicken breast)
மிளகு தூள் தேவையான அளவு
குறிப்பு – இந்த டிஷ்ஷைத் தயார் செய்வதற்கு Electric oven தேவை.
செய்முறை:
Electric ovenஐ 390Fக்கு சூடாக்கவும்.
பச்சை ஒலிவ், பார்ஸ்லி, எலுமிச்சை சாறு, மிளகு தூள் என்பவற்றை Food Processorல் இட்டு அரைத்து எடுக்கவும். முழுமையாக அரைபடக்கூடாது.
பேக்கிங் டிஷ்ஐ எடுத்து அதில் சிக்கன் நெஞ்சுப் பாகங்களை அடுக்கி அதன் மேல் அரைத்த பேஸ்டை தடவி, Electric ovenல் வைத்து 20 நிமிடங்கள், அல்லது வேகும்வரை பேக்(bake) பண்ணி எடுக்கவும். முக்கியமாகக் கவனிக்கவும், சிக்கனில் இருந்து வெளியாகக்கூடிய நீர் முழுமையாக வற்றிப் போகும்வரை விட வேண்டும்.
இந்த டிஷ்ஷின் முக்கியத்துவமே, இதை அழகாக அடுக்கி, பரிமாற வேண்டும். சூடாகப் பரிமாறும்போது சிக்கனில் மேல் சிறிதளவு பட்டர் வைக்கவும். அது ஓரிரு நிமிடங்களில் உருகி, அப்பிடைட் ஏற்படுத்தும் வகையில் நறுமணத்தைக் கொடுக்கும்.
இதைத் தனியாகப் பரிமாற முடியாது. மைல்ட்டான ஒரு சைட் டிஷ் தேவை. தக்காளி, பேசில் இலை (Basil Leaves) ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட சலாட்டுடன் பரிமாறலாம். அத்துடன், கார்லிக் பிரட் (garlic bread) துண்டங்களும் வைக்கப்பட்டால், 5 நட்சத்திர ஹோட்டல் உணவின் லுக் அடிக்கும்!
மேட்ச் பண்ணக்கூடிய பானம் என்ன? ரெட் வைன், இதற்கு சுவையாகவும் பொருத்தமாகவும் இருக்கும்
Sunday, September 4, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment