Friday, August 5, 2011

பிழைக்க தெரிந்த விஜய்காந்த்,பிழைக்க தெரியாத குஷ்பூ

2011 தேர்தல் முன்புவரை விஜயகாந்து விஜயகாந்துன்னு ஒரு ரோசக்கார நடிகரும் சுயமரியாதை உடைய அரசியல்கட்சி தலைவருமாய் ஒருத்தர் இருந்தார்.. அந்த மனுசனை 2011 தேர்தலுக்கு பின் காணவில்லை...எதிர்கட்சி தலைவர் அளவுக்கு ஜெயலலிதா தன்னை உயர்த்துவார் என அவர் கனவிலும் நினைத்திருப்பாரா என்ன..? அதனால் விக்கித்து போய் அந்த பிரமிப்பிலேயே மனுசர் படுத்துட்டார் போல..

எத்தனையோ கூட்டத்தில் எத்தனையோ முறை பேசியும் ஒரு சீட்தான் கிடைத்தது.,ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்ததும் 29 சீட்டுக்கள் கிடைதது என்றால் ஜெயாவின் சக்தி இப்போது அவருக்கு புரிந்திருக்கும்.

அதே சமயம் கருணாநிதி ஆட்சியில் சீறி திரியும் சிங்கமாய் அவர் கர்ஜித்தது என் நினைவுக்கு வருகிறது..இன்று இந்த ஆட்சியில் எதிர்கட்சி தலைவராக இருந்தும் ஜெயா வை எதிர்த்து பேசாமல் இருக்கும் மர்மம் என்ன..?கருணாநிதி ஆட்சியில் எப்படி வேணாலும் கூவலாம்..அது தடியெடுத்தவன் தண்டல்காரன் கட்சி .ஆனா இங்க பப்பு வேகாது..ராமதாசே தி.மு.க வை விட்டு அரண்டு போய் ஓடி வந்துவிட்டார்.
ராஜதந்திரத்தில் ஜெயலலிதா வை மிஞ்ச ஆள் இல்லை.ஒருவரை கட்டம் கட்டி அடிப்பதில் கைதேர்ந்தவர்.கூட்டணியில் எவ்வளவு பலமாக இருந்தாலும் கோபம் வந்துவிட்டால் அவர் நடவடிக்கை உக்கிரமாக இருக்கும்.

இதுதான் விஜயகாந்தின் பயத்துக்கு காரணம்....தன் கட்சி வளர வேண்டுமானால் ,ஜெயா ஆட்சியில் மவுனமாக இருப்பதே ஒரே வழி என்பது அவர் தெளிவாக புரிந்திருக்கிறார்.அது மட்டுமில்லாமல் இன்னும் அஞ்சு வருசத்துக்கு ஜெயாவை ஒண்ணும் செய்யமுடியாது என்ற காரணமும் இருக்கலாம்....கருணாநிதி கட்சி மூழ்கும் கப்பல்.இனி நிரந்தர எதிர்கட்சி தலைவர் தாம் தான் என்பதில் கேப்டன் தெளிவாக இருக்கிறார்.
----------------------------------------

கேஸ் சிலிண்டர் விலையையும் இனி எண்ணை நிறுவனங்களே கவனித்துக்கொள்ளும்...என திருவாய் மலர்ந்திருக்கிறார்...மத்திய அமைச்சர் என்ன கொடுமை இது...பெட்ரோல் விலையை மாதம் ஒரு விலை உயர்த்தும் எண்ணை நிறுவனங்கள் கையில் உயிர்நாடியான சிலிண்டர் விலையை உயர்த்தும் உரிமத்தை கொடுத்தால் என்னாகும் 1000 ரூபாய் சொன்னாலும் வாங்க வேண்டி வருமே..இது ஒண்ணு போகும்..காங்கிரஸ் இந்தியா முழுவதும் உள்ள தாய்குலங்களின் வாக்கு வங்கியை பாரதிய ஜனதா வுக்கு மாற்றுவதற்கு....இனி எக்காலத்திலும் தி.மு.க போலவே காங்கிரசும் ஆட்சியை பிடிக்க முடியாது..
---------------------------------------------
ராசாத்தியம்மாளின் கணக்குபிள்ளையை கைது செய்துவிட்டார்கள்...இனி ராசாத்தியம்மாவும் கலைஞர் கூடவேதான் இருப்பார்..அவ்வளவு சோதனையான நேரம் அவருக்கு..சும்மாவா நிலமோசடி வழக்கு என்ன சாதரணமா...அதிலும் அந்தம்மா...ஹிஹி....கலைஞர் வீட்டை சுற்றி சுற்றி வரும் நிலமோசடி வழக்குகள்..எந்த நேரமும் வீட்டுக்குள் நுழையலாம்....
-----------------------------------------
தி.மு.க வின் சத்தில்லாத ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கைது ஆகியிருக்கிறார் முன்னாள் குலுக்கல் நடிகை குஷ்பூ....அரசியல் பாலபாடம் கற்க கருணாநிதியிடம் வந்த அவர் அரசியல் வரலாற்றில் முதன்முறையாக கைது ஆகியிருக்கிறார் என நினைக்கிறேன்..ஆனா அம்மணி நல்ல ராசியானவர் தான் இவர் அந்த கட்சியில் சேர்ந்தபிந்தான் அந்த கட்சி உருப்படாம போச்சி....இப்ப கைது ஆகியிருக்கிறார்..இனி முக்கிய தலைவர்களும் கைது ஆவாங்களோ என்னவோ....

No comments: