Thursday, August 18, 2011

நடிகர் செந்தாமரையின் நாடிஜோதிட அனுபவம்

நடிகர் ராஜேஷ் ராணி வார இதழில் எழுதி வரும் ஜோதிட தொடரில் இருந்து ஒரு பகுதி;

நடிகர் செந்தாமரை மூன்றுமுகம் படத்தில் ரஜினிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய வில்லன்...அலெக்சு..என் பேரை சொன்னா கர்ப்பத்துல இருக்குற குழந்தை கூட வாயை பொத்தும்....என போலீஸ் ஸ்டேஷனில் கால்மேல்போட்டுக்கொண்டு ரஜினியை மிரட்டுவாரே அவர்தான்....இனி ராஜேஷ் சொல்வதை பார்ப்போம்.
-------------------------------------------------------------------------------------


படப்பிடிப்பின் இடைவேளைகளில் பல விசயங்களப்பற்றி கல்ந்துரையாடும்போது செந்தாமரை அண்ணனுக்கும் ,எனக்கும் அடிக்கடி விவாதம் நடக்கும்.குறிப்பாக அவர் எண்கணிதத்தில் (நியூமராலஜி)நல்ல ஈடுபாடும்,முழு நம்பிக்கையும் உள்ளவர்,அதன்படி எதிர்காலத்தை கணித்து சொல்வார்.பலருக்கு அவர் கூறியபடியே நடந்திருக்கிறது.ஆனால் அவருக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது.எண்கணிதத்தில் மட்டும் முழு நம்பிக்கை உண்டு.

தூறல் நின்னுபோச்சு’படத்தில் நடித்த பிறகு அவருக்கு பல திரைப்படங்கள் ஒப்பந்தம் ஆனது.குறிப்பாக ரஜினியின் மூன்று முகம் ரஜினியின் மூன்றுமுகம்,அப்படியிருந்தும்,1984 -ஆம் ஆண்டு ஒருநாள் என்னிடம் ,ராஜேஷ் ஏதோ நாடி ஜோதிடம் போன்றவற்றில் நீ அதிக ஈடுபாடு கொண்டிருக்கிறாய்.எனக்கும் நாடி பார்க்க வேண்டும்.அத்ற்கு ஏற்பாடு பண்ண முடியுமா...?என்று கேட்டார்.நான் வைதீஸ்வரன் கோவிலில் உள்ள ஒருவரின் விலாசத்தை கொடுத்து அவரை நாடி பார்க்க அனுப்பி வைத்தேன்.அதன்படி பூசமுத்து என்பவரிடம் நாடி பார்த்திருக்கிறார்.நாடியில் சொந்த வீடு ,கார் போன்றவைகளை நீ வாங்குவாய்...குளிர் அறையில் தூங்குவாய்...என வந்துள்ளது.இதை கேட்டதும் ,நாடியில் நம்பிக்கையில்லாமல் திரும்பி வந்துவிட்டார்.

காரணம் அப்போது அவருக்கு சொற்ப சம்பளம்....என்னிடம் அவர்,என்ன ராஜேஷ்,சொந்த வீடு,கார்,குளிர் சாதன அறை என்று எழுதி கொடுத்துள்ளார்கள்.இதெல்லாம் என்றைக்கு நடப்பது..?என்றார் சலிப்பாக்.

சில ஆண்டுகளுக்கு பின் மாரடைப்பால் அவர் இறந்தபோது,சொந்த வீடு,கார்,குளிர் சாதன அறை எல்லாமே அவருக்கு சொந்தமாக இருந்ததை சொல்ல தேவையில்லை..!!

செந்தாமரை தி.மு.க கட்சியையை சேர்ந்தவர்.மனதில் எந்த சூது வாதும் கிடையாது.மனதில் பட்டதை அப்படியே சொல்லிவிடுவார்.1987 ஆம் ஆண்டு சென்னை கே.கே நகரில் ஒரு வீடு வாங்கினேன்.அந்த வீட்டின் கதவு இலக்கம் 43.அது என்னுடைய பிறந்த தேதிக்கு ஒத்து வராத எண்.ஆகையால் இந்த வீடு உனக்கு நிலைக்காது.சீக்கிரம் விற்றுவிடுவாய்.அதுமட்டுமில்லாமல் ..அந்த வீட்டில் ஒருநாள் கூட தூங்க மாட்டாய் என்றார்.அதன்படியே வீட்டுக்கு கூட வர முடியாமல் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த நேரம்..பிறகு பெரிய வீடாக கட்டிக்கொண்டு அந்த வீட்டை விற்று விட்டேன்.

என்னை கலைஞர்தான் தூக்கி போடுவார் என அடிக்கடி சொல்வார்.அதுபோலவே கலைஞர்தான் அவர் இறுதி சடங்கில் கலந்துகொண்டார்.ஒரு மனிதன் நினைத்தபடியே இறுதி சடங்கு நடந்தது...

Read more: http://www.astrosuper.com/2011/08/blog-post_2778.html#ixzz1VOSSUzur

No comments: