Saturday, August 13, 2011

அமெரிக்காவில் சுதந்திரதேவி சிலை புதுப்பிப்பு பணிக்காக ஒரு ஆண்டு மூடப்படுகிறது!




அமெரிக்காவின் நியுயார்க்கில் உள்ள சுதந்திர தேவி சிலை புதுப்பிப்பு பணிக்காக ஒரு ஆண்டு மூடப்ப்படுவதாக அமெரிக்க அறிவித்துள்ளது.

கடந்த 1886ஆம் ஆண்டு சுதந்திர தேவி சிலையை அமெரிக்காவிற்கு பிரான்ஸ் அர்ப்பணித்தது. அன்றிலிருந்து இன்று வரை அமெரிக்காவின் அடையாளமாக கருதப்படுகிறது.

மொத்தம் 305 அடி உயரத்துடன் வானை நோக்கி உயர்ந்து நிற்கும் சுதந்திர தேவி சிலையின் அழகை நாள் முழுவதும் ரசித்து கொண்டிருக்களாம். இந்த சிலையின் உச்சியிலிருந்து நியூயார்க் நகர் முழுவதையும் கண்டு ரசிக்க முடியும் என்பது இதன் கூடுதல் சிறப்பாகும்.

இந்த வரலாற்று சிறப்பு மிக்க சிலையை தற்போது புதுப்பிக்க 2 கோடியே 75 லட்சம் டாலர் செலவு ஆகும் என அமெரிக்க உள்துறை அமைச்சர் கென் சலாசர் தெரிவித்தார்.

மேலும், சுதந்திர தேவி சிலை 125 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பதாலும், இந்த உயரமான சிலையை புதுப்பிக்க மிகப்பெரும் ஏணிகள் மற்றும் எலிவெட்டர்கள் நிறுவப்படுவதாகம் அவர் தெரிவித்துள்ளார்.

சீரமைப்பு பணிக்காக சிலை மூடப்பட்டிருந்தாலும் சுதந்திரத் தீவு பகுதி பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்படிம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகழ்மிக்க சிலையை ஆண்டு தோறும் 35 லட்சம் மக்கள் பார்த்து செல்கின்றனர்.

கடந்த 2001ஆம் ஆண்டு அல்கொய்தா தாக்குதலுக்கு பின்னர் இந்த சிலையின் உள் பகுதியில் ஏற பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

No comments: