Thursday, August 18, 2011

பேயை நீங்கள் பார்த்திருக்கீங்களா அய்யா என்று கேட்டேன்.

65 வயதான ஜோதிடர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன்..அந்த கால அனுபவங்கள் பற்றி வயதானவர்களிடம் கேட்பது எனக்கு பிடித்தமான ஒன்று.பேயை நீங்கள் பார்த்திருக்கீங்களா அய்யா என்று கேட்டேன்..அட ஏம்பா இரண்டு தடவை உயிர் தப்பி வந்த அனுபவமே இருக்கு என்றார்.இனி அவர் சொல்கிறார்..நம்புவதும் நம்பாததும் உங்கள் இஷ்டம்.
=====================================================================================
1970 ஆம் வருசம்.பெரம்பலூர் டவுனில் இருந்து என் கிராமம் குறும்பலூர் க்கு ஒத்தயடி காட்டுப்பாதையில் நானும் என் நண்பனும் சைக்கிளில் சென்று கொண்டிருந்தோம்.அவன் நன்றாக பாடுவான்..சைக்கிளை ஓட்டிக்கொண்டே பாடிக்கொண்டு வந்தான்...பயம் தெரியாம இருக்கத்தான் இந்த பாட்டெல்லாம்.நான் பின்னால் உட்கார்ந்திருந்தேன்.இரவு 10 அல்லது 11 இருக்கலாம்..லைட் இல்லாத காலம் என்பதால் 7 மணிக்கே நடுச்சாமம் மாதிரி இருக்கும்..நிலா வெளிச்சம் தான் ஒரே லைட்.


புளிய மரம் சாலையோரம் நெடுக வளர்ந்திருக்கும்...ஒரு பெண் கையில் காலி குடத்துடன் எங்கள் முன்னால் சென்றுகொண்டிருந்தாள்....பின்பக்கம் பார்க்கும் போதே நாங்கள் வாயை பிளந்துவிட்டோம்..அவ்வளவு அழகு...இடுப்பை அசைத்தப்டி அவள் நடக்கும் அழகை கண்டு எங்கள் சைக்கிள் ஸ்லோ ஆகிவிட்டது.

யாருமற்ற பாதையில்,பக்கத்தில் எதுவும் வீடுகளற்ற பகுதியில் நிலா வெளிச்சத்தில் நமீதா மாதிரி ஒரு பெண் நடந்து போனா எப்படி இருக்கும்...?என் நண்பன் செம மூடு ஆகிட்டான்..மாப்ள..வா வளைச்சிரலாம்...ரொம்ப நாள் ஆசையை தீர்த்துக்கலாம்..என்றான்....

அக்காலத்தில் பகலில் கூட பெண்கள் வெளியே வரமாட்டார்கள்..சோளக்காட்டு வழியே சோறு கொண்டு போகும் பெண்களை மாடு மேய்க்கும் இளைஞர்கள் தூக்கிக்கொண்டு போய்விடுவார்கள்..ஆசை தீர்ந்த பின் போ..என துரத்தி விடுவார்கள்..அப்பெண்களும் சோற்று பானை சேதம் ஆகாமல் தப்பித்தால் போதும் என எடுத்துக்கொண்டு போய்விடுவார்களாம்.யாரிடமும் சொல்ல மாட்டார்கள்.சொன்னால் கெட்டுப்போனவள் என சொல்லி புருசன் வேறு பெண்ணை கட்டிக்கொண்டு இவளை துரத்தி விடுவான்.இதனால் பெண் வேட்டை அக்காலத்தில் மிக அதிகம்..அதனால் எங்கு போனாலும் பெண்கள் கூட்டமாகவே செல்வார்கள்.


நிலாவெளிச்சத்தில் இந்த பெண் இவ்வளவு தைரியமாக வருகிறாளே என டவுட் வந்துருச்சி....டேய் அவசரப்படாதே இது பெண் மாதிரி தெரியல...முந்தா நாள் தூக்கு போட்டு செத்து போனாளே சாந்தி அவ மாதிரி தெரியுது என உசார் செய்தேன்..உடனே என் நண்பனுக்கு வேர்த்து கொட்டி விட்டது...

நான் உடல்கட்டு மந்திரம் உபதேசம் பெற்றதால் பயப்படவில்லை...இது பேயா இருந்தா அந்த வளைவு தாண்டினதும் இடது புறம் இருக்குற புளியமரம் பின்னாடி மறைஞ்சி போயிடும் என்றேன்.

நாங்கள் உசார் ஆனதும் அந்த பெண் நடப்பதை நிறுத்தினாள்.....திரும்பவில்லை...என் நண்பன் உசிரை கையில பிடிச்சிகிட்டு நின்னான்.என்னாகும் பார்க்கலாம் என்று நாங்களும் நின்று கொண்டோம்....வேறு வழியும் இல்லை..அந்த பெண்ணை தாண்டிதான் ஊருக்கு போயாக வேண்டும்.சைக்கிளை வேகமாக மிதித்து போயிரலாமா என கேட்டான்..உனக்கு சாமர்த்தியம் இருந்தா போ..ஆனா அவ முகத்தை பார்த்துடாதே என்றேன்...

ஏண்டா இப்படி பயமுறுத்துற என அழுதான்...கொஞ்சம் இரு என சொல்லிக்கொண்டிருந்தபோதே அந்த புளியமரம் பின்னால் அது மறைந்தது...காணவில்லை...அப்புறம் தலை தெறிக்க வீடு வந்து சேர்ந்தோம்.

அதன் பின் சில வருடங்களுக்கு பின் அதே பெரம்பலூர் குறும்பலூர் சாலையில் நான் தனியாக வந்து கொண்டிருந்தபோது....அய்யோ கொல்ல வர்றாங்க யாராவது காப்பாத்துங்க என ஒரு ஆள் மிளகாய் தோட்டத்துக்குள் ஓடினான்..நான் பதறிப்போய் பார்த்தபோது..ஒரு நாலு பேர் அரிவாளுடன்.. அவனை துரத்தி கொண்டிருந்தார்கள்..

உடனே நான் பக்கத்தில் ஒரு வீட்டின் கதவை தட்டினேன்..யாருப்பா அது..<என கதவி திறக்காமலே கேட்டார் வீட்டுக்காரர்...நான் பொன்னான் மகனுங்க...இங்கே ஊருக்கு போற வழியில ஒரு ஆளை வெட்ட நாலு பேர் துரத்துறாங்க...பாவம் அந்தாளை காப்பாத்துங்க என்றேன்...

அட..ஏம்பா நீ வேற ஒரு வருசமா இந்த பேய்க்கும்பல் இப்படித்தான் அட்டகாசம் பண்ணுது..போய் கோவில் திண்ணையில படுத்து தூங்கிட்டு போ என்றார் அசால்ட்டாக.

எனக்கு வியர்த்துவிட்டது..ஆனாலும் ஒரு குருட்டு தைரியம்...மறுபடியும் போய் என்னாச்சு ந்னு மேட்டுல நின்னு பார்க்கலாம்..என போனேன்...அந்த காட்சி அதிர செய்து துரத்தப்பட்டவன் வெட்டப்பட்டு ,ரத்தம் ஒழுக...தவழ்ந்து கொண்டே கிணறு பக்கம் போனான்..அது மொட்டை கிணறு..கிணற்றுக்குள் அப்படியே விழுந்தான்..எனக்கு அதிர்ச்சி..உடனே கிணறை நோக்கி ஓடினேன்...

கிணறை எட்டி பார்த்தேன்..கிணற்றில் தண்ணீர் தழும்பக்கூட இல்லை...சலனமே இல்லாமல் இருந்தது.

திகிலில் உறைந்து போய், வீடு வந்து சேர்ந்தேன்.

No comments: