Sunday, August 14, 2011

திமுக ஆட்சியில் உங்கள் கட்சியினர் நிலங்களை அபகரிக்கவில்லை, என்று உங்களால் உறுதியாக கூற முடியுமா?.


நில அபகரிப்பு வழக்கு விசாரிப்பது குறித்த அரசாணையை ,டிஸ்மிஸ் செய்யக்கோரி தி.மு.க.வின் சட்டப்பிரிவு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் தர்மபுரி 1தொகுதியின் தி.மு.க. எம்.பி.யுமான தாமரைச்செல்வன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதுதொடர்பாக தி.மு.க.வின் சட்டப்பிரிவு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவில், குற்ற நடவடிக்கைக்காக குறிப்பிட்ட காலவரையறையை நிர்ணயித்து அரசாணை பிறப்பிக்க முடியாது. அது சட்ட விரோதமானது. இது முழுக்க முழுக்க தி.மு.க.வினரை இலக்காக வைத்து எடுக்கப்படும் நடவடிக்கையாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தி.மு.க. எம்.பி. தாமரைச்செல்வன் தாக்கல் செய்த மனுவில், நில அபகரிப்பு தொடர்பான விவகாரங்களை விசாரிப்பதற்கென்று தனி விசாரணை முறைச்சட்டங்கள் உள்ளன. அவையெல்லாம் இருக்கும் போது, இப்படிப்பட்ட அரசாணையை குறிப்பிட்ட காலகட்டத்துக்கென்று பிறப்பிப்பது சட்ட விரோத செயலாகும். இது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையே தவிர வேறல்ல. எனவே அதை ரத்து செய்ய வேண்டும். மனு மீதான விசாரணை முடியும் வரை அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ஐயா... நீங்கள் இருவரும் கொஞ்சம் யோசித்து இந்த மனுவை தாக்கல் செய்திருக்கலாமே? கொஞ்சம் யோசித்திருந்தால், இந்த மனுவை தாக்கல் செய்திருக்க மாட்டீர்கள். அல்லது உங்கள் ஆட்சியில் நடந்த நில அபகரிப்பு விவகாரங்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால், இன்று உங்களுக்கு இந்த அவல நிலை வந்திருக்காது.
நீங்கள் இருவரும் தி.மு.க. உறுப்பினர் பதவி(!)யை கழற்றி வைத்துவிட்டு, சராசரி மனிதனாக, தமிழ்நாட்டில் சாமான்ய மனிதனாக2 இருந்து சில விஷயங்களை அணுகிப் பார்த்திருந்தால், இந்த சட்ட அரசாணை நல்லதா கெட்டதா என்று புரிந்திருக்கும்.
திமுக ஆட்சியில் உங்கள் கட்சியினர் நிலங்களை அபகரிக்கவில்லை, என்று உங்களால் உறுதியாக கூற முடியுமா?.
உங்கள் மனச்சாட்சியை தொட்டு சத்தியம் செய்ய முடியுமா. இது போல உங்கள் நிலங்களை யாரவது அபகாரிப்பு செய்து இருந்தால், உங்களுடைய வயிற்றெரிச்சல் எப்படி இருக்கும். சேலம் அங்கம்மாள் காலனி குடியிருப்போரை விரட்டி அடித்து
விட்டு, சொத்துக்களை கைப்பற்றிய திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீது, நீங்கள் சார்ந்த கட்சி ஆட்சியில் இருக்கும் போதே, புகார் வந்ததே. பத்திரிகைகள் மாய்ந்து மாய்ந்து எழுதி தள்ளியதே.அதுவும், தமிழ்நாட்டின் அதிகார மிக்க, இன்னும் சொல்லப்போனால் முதல்வராக இருந்த கலைஞரை விட பவர்புல் மந்திரியாக வலம் வந்த வீரபாண்டி ஆறுமுகத்தை எதிர்த்து, உங்கள் ஆட்சியிலே புகார் கொடுத்தார்களே, அந்த அப்பாவி மக்கள். அவர்கள் என்ன பையத்திமா? அவர்களது துணிச்சலை பார்த்தாவது, இழந்த நிலத்தை முதல்வர் மீட்டு கொடுத்திருக்கலாமே. அன்று வீரபாண்டி ஆறுமுகத்தின் மீது உங்கள் ஆட்சியில் நடைவடிக்கை எடுந்து இருந்தால், ஏன் இன்று இது போன்ற சட்டம் வந்து இருக்கப் போகிறது.
சரி போகட்டும். வீரபாண்டி ஆறுமுகத்தின் மீது நடவடிக்கை எடுக்கும் வீரம் சேலம் போலீஸூக்கும் இல்லை. அன்றைய முதல்வர் கலைஞருக்கும் இல்லை.
ஈரோடு என்.கே,.கே.பி.ராஜா என்பவர் அமைச்சராகவும் இருந்தார். மாவட்டச் செயலாளராகவும் இருந்தார். அவர் மீது நில அபகரிப்புப் புகாருடன், கடத்தல், ஆளை கட்டிப் போட்டு அடித்தல் என்று செய்தி வந்தது. அவரை ஏன் அமைச்சர் பதவியில் இருந்து தூக்கிவிட்டீர்கள். மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து இறக்கிவிட்டீர்கள். அவர் தி.மு.க.வின் இளிச்சவாயனாக இருந்தார் என்பதாலா? அல்லது கடத்தப்பட்ட நபர் துணிச்சலாக கோர்ட் படியேறி உயிருடன் இருந்ததாலா?
3
அவரை இந்த ஆட்சியில் பிடித்து சிறைக்குள் தள்ளாவிட்டால், வேறு எந்த ஆட்சியில் அவர் செய்த தவறுக்கு தண்டனை கிடைக்கும் என்று நினைக்கிறீர்கள்.
அடுத்து, வில்லிவாக்கம் முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன் பற்றி ஏதாவது தெரியுமா? 40 வருடத்துக்கு முன்பு வாங்கப்பட்ட நிலத்தை காலி செய்ய போலீஸ் அதிகாரிகள், கலெக்டர் துணையோடு வந்த நபர் பற்றி உங்களுக்கு தெரிந்திருந்தால், இந்த வேலையை செய்வீர்களா? இவர் செய்த அக்கிரமங்களை பட்டியல் போட்டால், முரசொலியில் 365 நாட்களுக்கு பக்கமே இருக்காது.
பொட்டு சுரேஷ், அட்டாக் பாண்டி, எஸ்.ஆர். கோபி இவர்களை போன்று ரவடிகளை, மோசடிகரார்களை காப்பாற்றி திமுக என்ற கட்சியை வளர்க்க முடியும் என்று நம்பினால், அதன் பிறகு உங்கள் இஷ்டம்.
இச்சட்டத்தால், பத்து சதவிகிதம் பேருக்கு சில சிக்கல்கள் வரலாம். அதுவும் இந்த ஆட்சியில், அந்த பத்து பேருக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையாவது இருக்கும்.
4
உங்கள் ஆட்சியே தொடர்ந்து வந்திருந்தால், இந்த பத்து பேரின் நிலம் பறி போவது மட்டுமின்றி யாருக்குமே நீதி கிடைத்திருக்காதே?
அதற்காவது இச்சட்டத்தை ரத்து செய்யும் மனுவை வாபஸ் வாங்கினால், உங்கள் வாரிசுகளுக்கு புண்ணியமாவது மிஞ்சும்!

No comments: