Monday, August 22, 2011

ஒரு ஊர்ல ஒரே ஒரு ஆயா!

மோனோவி என்ற கிராமம்/ நகரம்/ மாநகரத்தில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை ‘ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு.’ ஆச்சர்யமாக இருக்கிறதா? 2010 அமெரிக்க மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் எய்லர் என்ற 77 வயது மூதாட்டி மட்டும் வசிக்கிறார். 2000இல் மோனோவியில் இரண்டு நபர்கள் இருந்தார்கள் என்றும், அந்த மற்றொருவர் எய்லரின் கணவர் என்றும் புள்ளிவிவரம் சொல்கிறது. அவர் 2004ல் காலமானதால் இன்று அதன் மக்கள் தொகை ‘ஒன்று’. 1971-ல் இந்த இடத்தை எய்லர் தம்பதியர் வாங்கினார்கள்.

அந்த அம்மணி இன்று அங்கு 5000 புத்தகங்கள் கொண்ட பொது நூலகத்தை நடத்துகிறார். நெப்ராஸ்கா மாநிலத்தில் அமைந்திருக்கும் இந்த கிராமத்தின் பெயர், கிராம நிர்வாக அலுவலர், பொருளாளர் எல்லாம் நம்ம அம்மணி எய்லர்தான். அரசாங்க ஆவணங்களிலும் இந்தக் கிராமத்தின் பெயர் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இதைப் பார்க்க ஏகப்பட்ட பார்வையாளர்கள் வருகிறார்களாம். இந்தக் குறும்புக்கார பாட்டியிடம் ஊரைப் பற்றிப் பேசச் சொன்னால், தம் கணவர் இறந்த பிறகு தங்கள் ஊரில் மக்கள் தொகை 50 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது, சந்தோஷம்தானே என்று நக்கல் விடுகிறாராம்.

No comments: